Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aranmanai Vanam - Sirukathai Thoguppu Muthal Paagam
Aranmanai Vanam - Sirukathai Thoguppu Muthal Paagam
Aranmanai Vanam - Sirukathai Thoguppu Muthal Paagam
Ebook203 pages1 hour

Aranmanai Vanam - Sirukathai Thoguppu Muthal Paagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குறும்படம் எடுப்பதற்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதுதான் இச்சிறுகதைத் தொகுப்பு. இந்திரநீலன் சுரேஷ் அவர்களுடைய பேனா பல இடங்களில் சித்து விளையாடியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இந்த நூல், படிப்பதற்கு மட்டுமல்ல எப்பொழுதெல்லாம் வாழ்க்கையின் வெறுமையிலிருந்து விடுபட வேண்டுமா அப்பொழுதெல்லாம் இந்த நூலில் உள்ள ஒரு கதையைப் படித்தால் போதுமானது. புதிய உற்சாகம் பிறக்கும்..!

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580174310629
Aranmanai Vanam - Sirukathai Thoguppu Muthal Paagam

Related to Aranmanai Vanam - Sirukathai Thoguppu Muthal Paagam

Related ebooks

Reviews for Aranmanai Vanam - Sirukathai Thoguppu Muthal Paagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aranmanai Vanam - Sirukathai Thoguppu Muthal Paagam - Indiraneelan Suresh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அரண்மனை வனம் - சிறுகதைத் தொகுப்பு முதல் பாகம்

    Aranmanai Vanam - Sirukathai Thoguppu Muthal Paagam

    Author:

    இந்திரநீலன் சுரேஷ்

    Indiraneelan Suresh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indiraneelan-suresh

    பொருளடக்கம்

    நூலாசிரியர் பற்றி...

    அணிந்துரை

    முன்னுரை

    என்னுரை

    1. 27 ஆம் தலைமுறை

    2. காட்டு வெளியினிலே...

    3. அம்மாவின் பிறை

    4. நினைவுகள் அழிவதில்லை...

    5. அரண்மனை வனம்

    6. யாரடி நீ மோகினி...?

    7. ‘காதலுக்கு அவசியம்...’

    8. ‘தனது’

    9. வானில் கிடைத்த வார்த்தைகள்...

    10. கனகாம்பரம்

    11. ஸ்வேதா, UKG-B

    12. நாற்றங்கால்

    13. துண்டு சீட்டு

    14. எச்சுமி பாட்டி

    15. சாலையில் ஒரு சம்பவம்

    16. வாழ்வெனும் ஊஞ்சல்

    17. உள்ளதில் அள்ளிக் கொஞ்சம்...

    18. ‘ஜில்லி’

    19. வேண்டுவது வேண்டாமை

    20. அவள்

    21. கல்யாண வைபோகமே...

    22. ‘ஜிமிக்கி கம்மல்’

    23. மின்னி

    சமர்ப்பணம்

    பார்வதி - லலிதா

    [எனக்கு உயிர் கொடுத்தவள்,

    என்னிடம் உயிராய் இருப்பவள்]

    நூலாசிரியர் பற்றி...

    இந்திரநீலன் சுரேஷ் (சுரேஷ் குமார் அரங்கநாதன்), சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘மின் மற்றும் மின்னணுவியல்’ பயின்ற இவர், புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில், பொறியாளராக, நிர்வாக மேலாளராக, இந்தியா, வளைகுடா மற்றும் ஐக்கிய ராஜ்யம் (UK) எனப் பல பகுதிகளில் பணிபுரிந்திருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட 30’க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணித்துள்ளார்

    கலைமகள், கல்கி, கணையாழி, அமுதசுரபி, குங்குமம், ராணி, தினமணி கதிர், மஞ்சரி, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், நவீன விருட்சம் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். பூபாளம் இலக்கிய சிற்றிதழின் வெள்ளி விழா மலருக்குச் சிறப்பாசிரியராக பணியாற்றியுள்ளார்.

    கலைமகள் பப்ளிகேஷன்ஸ் வெளியீடான இவரது ‘அரண்மனை வனம்’ என்கிற சிறுகதைத் தொகுப்பு நூல் திருப்பூர் தமிழ்ச் சங்கம் நடத்திய இலக்கிய விருதுகள் போட்டியில் 2021-22 ஆம் ஆண்டு ‘சிறந்த சிறுகதைத் தொகுப்பு நூல் வரிசையில் ‘முதல் பரிசு’ பெற்றுள்ளது. பல உள்நாடு மற்றும் அயல்நாடு அமைப்புகளில் பேச்சாளராகவும், நெறியாளராகவும் இருந்து வருகிறார்

    கலைமகள் 90 ஆவது ஆண்டு விழா, கா-ஸ்ரீ -ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டி, இலக்கியப்பீடம் வெள்ளிவிழா ஆண்டு சிறுகதைப் போட்டி, அமரர் சேஷசாயி நினைவு - உரத்த சிந்தனை சிறுகதைப் போட்டி, ‘கலைமகள் - சீனியர் சிட்டிசன் பீரோ’ வெள்ளிவிழா ஆண்டு சிறுகதைப் போட்டி, ஸ்வர்ண கமலம் இதழ் - அமரர் சுஜாதா சிறுகதைப் போட்டி, குவிகம் குறும் புதினம் - 2023 போன்ற பல போட்டிகளில் இவரது கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றுள்ள.

    அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் அளித்த ‘பன்னாட்டு தமிழுறவு’ விருது, உறவுச் சுரங்கம் & ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய தமிழ் விருது பெற்றவர்.

    அணிந்துரை

    ‘அரண்மனை வனம்’ என்னும் தலைப்பில் சிறுகதைத் தொகுப்பு நூல் ஒன்றினை திரு இந்திரநீலன் சுரேஷ் அவர்கள் வெளிக் கொணர்ந்து உள்ளார். இந்தக் கதைகளைப் படிக்கும் பொழுது நம்மை அறியாமல் ஒரு உற்சாகம் ஏற்படுகிறது. இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கும்பொழுது தொய்வு ஏற்படாமல் ( விறுவிறுப்பாகச் சிறுகதைகள் எழுதப்பட்டு இருப்பதால் ) நம்மால் முழுமூச்சுடன் கதைகளைப் படிக்க முடிகிறது! கதாசிரியரின் திறமைக்கு இது எடுத்துக்காட்டாகும்.

    இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள சில கதைகள் குடும்பப்பாங்கானவை, சில கதைகள் புராணக்கதைகளை ஞாபகப்படுத்துகின்றன, சில கதைகளில் காதல் ரசமும் உண்டு. சரித்திர ரீதியாகச் சிந்திக்கிற திறமையும் இந்திரநீலன் சுரேஷ் அவர்களிடம் இருப்பதை அறியமுடிகிறது.

    கதைகளைக் கட்டுக்கோப்பாக, மிகச்சரியான கதை தளத்தைத் தேர்வு செய்து, திறமையான சொல்லாடல்களுடன் கொண்டு சென்றிருக்கும் விதமும் பாராட்டத்தக்கதாகும்.

    குறும்படம் எடுப்பதற்கு இன்று பலபேர் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். சரியான கதை அவர்களுக்குக் கிடைக்காமல் போனது கூட ஒரு காரணமாக இருக்கலாம். எதைச் சொல்லவேண்டும் என்று தெரியாமல் கூட குறும்படம் எடுப்பவர்கள் திணறலாம் ; அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதுதான் இச்சிறுகதைத் தொகுப்பு. இது என்னுடைய பார்வை!!

    சில கதைகள் நீண்டும், சில கதைகள் அளவில் குறைந்தும் காணப்படுகின்றன.

    ஆனால் எல்லா கதைகளும் சிறுகதை இலக்கணத்திற்கு உட்பட்டு வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் எதார்த்தத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.

    நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் வல்லவராகத் திகழ்கிறார் இந்திர நீலன் சுரேஷ். பெரிய உயர்தர பல்நோக்கு, உலகளாவிய நிறுவனங்களில் தன்னுடைய திறமையைச் சரியான பாதையில் கொண்டு சென்று முத்திரை பதித்திருக்கும் இவர் சிறுகதைகளிலும் நல்ல கதாபாத்திரங்களைப் படைத்து, நமக்கு விருந்து படைத்திருக்கிறார் என்று சொல்லலாம். இச்சிறுகதைத் தொகுப்பு நூலைப் படிக்கும் பொழுது அதை உணர்வீர்கள்.

    ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதை தளத்துடன், புதிய ரசனைகளுடன் வாசகரை வாசிக்கும் பயிற்சிக்கு உறுதுணையாக்கும் முயற்சியில் எழுதப்பட்டுள்ளது.

    அமெரிக்கா, இலண்டன் எனத் தொழில் நிமித்தமாக இந்த இரு நாடுகளிலும் இருந்துகொண்டு, இலக்கியம் செய்து கொண்டிருப்பவர் - லண்டன் ஐக்கிய ராஜ்ஜிய சபையுடன் கல்வித் துறை சம்பந்தமாகத் தனது சேவையையும் திறம்பட ஆற்றி வருகிறார். பல நண்பர்களை அமெரிக்காவிலும் லண்டனிலும் இன்னும் பல வெளிநாடுகளிலும் பெற்றிருக்கும் இந்த மனிதர் ‘சான்றோர் சந்திப்பு’ எனும் நிகழ்ச்சியைக் கடந்த இரண்டு வருடங்களாக இணையத்தின் மூலமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    ‘காதலுக்கு அவசியம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதை இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த தியானம் உன்னை அயன் வெளியில் நிறுத்தும்...! பகலில் நட்சத்திரங்களைப் பார்க்கலாம்... ஸ்பேஸ்...ஸுக்கும், லைட்டுக்குமுள்ள இடைவெளியில் பட்டாம் பூச்சி பறப்பதைப் பார்க்கலாம்...! - நீ காற்று பலூனில் பறந்து இருக்கிறாயா? இது போன்ற உரையாடல்கள் இன்றைய இளைஞர்களைக் கவரும். படிக்கவைக்க இதுபோன்ற வார்த்தை ஜாலங்கள் முக்கியமானவை. ‘காதலுக்கு அவசியம், வீட்டுக்கு ஒரு பெரியவர்’ என்கிற ஒரு தத்துவத்தையும் இந்தக் கதையில் சொல்லியிருக்கிறார் சுரேஷ்.

    ‘தர்மம் தலைகாக்கும்’ என்பது பழமொழி. தர்மம் சரியான பெண்ணையும் தேடிக் கொடுக்கும் என்பது சுரேஷின் புதுமொழி! ; கதாநாயகன் பல பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்குகிறான். அவன் சென்னைக்குத் திரும்பி வரும் வழியில் அம்மாவிடமிருந்து போன் ஒன்று வருகிறது. பெண் வீட்டில் உன்னை ஓகே சொல்லிவிட்டார்கள்... என்று! இது ஒரு சின்ன கதை தான். ஆனால், இந்தக் கதையில் பல ரகசியங்கள் அடங்கி இருக்கின்றன. ‘அன்னை அகிலாண்டேஸ்வரி காபி கிளப்’ என்ற நீளமான பெயர் இருந்தால் என்ன? மனசு சுத்தமாக, அடுத்தவர்களுக்கு உதவும் தன்மை கொண்டதாக அமைந்தால் எல்லாம் சுபம் தான்.

    இந்த கதையும் அந்த வகையைச் சார்ந்தது தான்!!

    அழகு சாதனங்கள் விற்பனை... இப்படிச் சொல்லிவிட்டு உனக்குப் பொருத்தமான வேலை தாண்டி என்கிறாள் தோழி... வாடி நீயும் கோயிலுக்கு... என்று அழைக்கிறாள். வர அவள் முயற்சி செய்யவில்லை. நான் வரலை... என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்கிறாள். ஏன் சாமி பிடிக்காதா? என்று அவள் கேட்ட பொழுது இல்லை, சாமிக்கு என்னை ரொம்ப பிடிக்கும்... இன்னொரு நாள் கோவிலுக்கு வருகிறேன்... என்று சொல்லும் உரையாடல் சுரேஷுக்கு திரைக்கதையும் நன்றாக எழுத வரும் என்பதைச் சுட்டிக் காட்டுவதாகவே நான் உணர்கிறேன்.

    ஊர்மிளையின் பார்வையில் ராமாயண காட்சிகளைக் கற்பனை கதையாகத் தந்துள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அரண்மனை வனம் என்னும் இந்த சிறுகதையின் மூலம் தான் எனக்கும் திரு இந்திர நீலன் அவர்களுக்கும் உள்ள நட்பு இறுக்கமானது. கலைமகளில் அவர் எழுதிய முதல் சிறுகதை இது. சீதாதேவி பட்டாபிஷேகத்திற்குக் கிளம்புவதில் துவங்கிய கதை லட்சுமணன் காட்டுக்குச் செல்வதைச் சுட்டி, காட்டில் கண் அசராமல் லக்ஷ்மணன் காவல் காத்த விவரத்தைச் சொல்லி, அவரிடமிருந்து தான் பிரிந்ததை ஊர்மிளை நாசூக்காகச் சொல்ல வைத்து, அடுத்த முறை உன்னைப் பிரியாமல் பார்த்துக்கொள்வேன் என்று சீதை சொல்கிற அந்த கடைசி வரி கதையைப் படிப்பவர்களுக்கு - புதிய வெளிச்சத்தைக் கொடுக்கும். இது ஒரு கற்பனைக் கதைதான். புராணக் கதையின் சாயல் இதில் தெரிகிறது. இந்தக் கதையில் உளவியல் பார்வையும் இருக்கிறது. சுரேஷ் அவர்கள் தன்னுடைய இறக்கையைப் பல தளங்களிலும் பதித்திருக்கிறார் என்பதற்காகவே இக்கதையை, உதாரணத்திற்கு இந்த அணிந்துரையில் நான் சொல்ல முன் வந்தேன்.

    உம் பேரு...? ‘மின்னி’...! அதன் பூனைக்கண் விழிகளில் வைடூரியத்தின் மினுக்கல்... சற்று செம்பட்டை படிந்த தலைமுடி கீற்றுக்கள் காற்றில் பரவி முகத்தில் விழ, அந்தக் கொத்தை இடக்கையால் தள்ளும் அலட்சியம், ஒரு மைக்ரோ வினாடிக்குள் ரோஜாப் பூவாய்...’வசு ‘வைக் கவர்ந்தாள் மின்னி. கதையின் தலைப்பே சற்று வித்தியாசமானது அது என்ன மின்னி என்று ஆராய்ச்சி செய்கிறவர்கள் இக்கதைத் தொகுப்பு நூலை வாங்கிப் படித்தால் தான் புரியும்!!

    கற்பனை கதாபாத்திரங்கள் என்று சில கதாபாத்திரங்களை நம்மால் நம்ப முடியவில்லை. ரத்தமும் சதையுமாக இப்பூவுலகில் உலாவிக் கொண்டிருக்கும் சில நிஜ மனிதர்களை அடையாளம் காட்டுவதைப் போன்று தான், சில கதாபாத்திரங்களை உலாவ விட்டிருக்கிறார் இந்திரநீலன் சுரேஷ் என்றால் அது மிகையல்ல.

    இது ஒரு சிறுகதை சுரங்கம். சுரங்கத்திற்குள் உள்ளே நுழையுங்கள். இங்கே பல வைர வைடூரியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அள்ளிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சிறுகதையும் உங்களுக்கு ஒவ்வொரு செய்தியைச் சொல்லும். 27 தலைமுறைகள் என்ன...? வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் போல் பல மின்மினிப் பூச்சிகளை உங்களுக்குப் படம் பிடித்துக் காட்டும் இந்த நூல்...!!

    இந்திரநீலன் சுரேஷ் அவர்களுடைய பேனா பல இடங்களில் சித்து விளையாடியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இந்த நூல், படிப்பதற்கு மட்டுமல்ல எப்பொழுதெல்லாம் வாழ்க்கையின் வெறுமையில் இருந்து விடுபட வேண்டுமா அப்பொழுதெல்லாம் இந்த நூலில் உள்ள ஒரு கதையைப் படித்தால் போதுமானது. புதிய உற்சாகம் பிறக்கும்...!

    வாழ்த்துகளுடன்,

    கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

    ஆசிரியர் கலைமகள்.

    முன்னுரை

    அன்பார்ந்த சுரேஷ்குமார்

    சிறுகதைகள் எழுதவும் வாசிக்கவும் எதனால் இத்தனை ஆர்வம் என்று என்னிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு நான் சொன்ன பதில், தான் காணும் ஒரு அற்புதமான காட்சியின் ஜீவனை ஒரு சிறந்த புகைப்படக்காரர் தனது கேமரா மூலம் சட்டென ஒரு புகைப்படத்திற்குள் அடக்கிக் கொள்கிறார். அந்த புகைப்படம் என்றென்றும் அந்நிகழ்வின் அடையாளமாக நம் நினைவில் இருந்து கொண்டிருக்கும். ஒரு ஒற்றைப் புகைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு முழுநீள வீடியோவைக் காட்டிலும் வீரியம் மிக்கது. உலகப் புகழ் பெற்ற, பரிசுகள் பெற்ற பல புகைப்படங்களே இதற்கு உதாரணம். அதேபோலத்தான் என்னைப் பாதிக்கும் சம்பவங்களை நான் நல்ல சிறுகதைகளாகப் பதிந்து வைக்க விரும்புகிறேன். என்னைப்போலவே தன்னைப் பாதித்த விஷயங்களைத்தானே மற்றவர்களும் சிறுகதைகளாகப் பதிந்து வைத்திருப்பார்கள் அல்லவா? அதனால்தான் அவற்றையும் ஆர்வமாக வாசிக்க விரும்புகிறேன். மற்றவர்கள் எடுத்த சிறந்த புகைப்படங்களை நாம் ரசித்துப் பார்ப்பதில்லையா? அதுபோல்தான் என்று பதிலுரைத்தேன்.

    ஒவ்வொரு எழுத்தாளருக்குள்ளும் ஒரு சிறந்த வாசகனும் இருந்தால் மட்டுமே அந்த எழுத்தாளனும், அவனது எழுத்துகளும் சிறக்க முடியும். தவிர ஒரு சிறந்த எழுத்தாளன் மற்றொரு எழுத்தாளரிடம் ஒருபோதும் பொறாமை கொள்ளமாட்டான் என்பார் நண்பர் பாலகுமாரன் என்னிடம். அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1