Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pachayanam
Pachayanam
Pachayanam
Ebook170 pages8 hours

Pachayanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘பாச்சாயணம்’ன்னு ஒரு கதை எழுதியிருக்கேன். படிச்சுட்டு நீங்க வாழ்த்துரை தரணும்னு எஸ்.எல்.நாணு கேட்டுக் கொண்டதுமே மனசுல ஓடின விஷயம், குடும்பங்களை வெச்சுக் கதை எழுதறதை விட்டுட்டு பாச்சா, பல்லியையெல்லாம் வெச்சுக் கதை எழுத ஆரம்பிச்சுட்டாரா இந்த மனுஷன்...? என்பதுதான். கிருஷ்ணசாமியை கிச்சான்னு கூப்டற மாதிரி பார்த்தசாரதியை பாச்சான்னு கூப்டுவாங்கன்னு கதையைப் படிச்சப்பறம்தான் புரிஞ்சது. குண்டலகேசி, மண்டோதரிங்கற மாதிரி பேர்களை ஏன் யாருக்கும் வெக்கறதில்லைங்கறதும் புரிஞ்சது. ஒரு முழு நாவலையும் புன்னகை விலகாத உதடுகளோடு படிக்க வைக்கறதுங்கறது ஒரு அரிய கலை. எஸ்.எல். நாணு அதில் பிஎச்டியே செஞ்சிருக்கார்.

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580142309214
Pachayanam

Read more from Sl Naanu

Related to Pachayanam

Related ebooks

Related categories

Reviews for Pachayanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pachayanam - SL Naanu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாச்சாயணம்

    Pachayanam

    Author:

    SL நாணு

    SL Naanu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sl-naanu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    அணிந்துரை

    என்னுரை

    நூலாசிரியரைப் பற்றி...

    கபாலீஸ்வரர் vs கேசவப் பெருமாள்

    பாச்சாவும் சேஷாவும்

    மாருதிய காப்பாத்தின கபாலி

    பூட்டுக் கேத்த சாவி

    நடுத் தெரு வீட்டுக்கு வந்த நெருக்கடி

    அஷ்டமத்துல சனி

    ஜோ ஜோ ஜோ பாச்சா...

    ஜானகி பாட்டியோட அடாவடி பிடிவாதம்

    அந்தர் பல்டி

    பாச்சாவுக்குக் கால் கட்டு

    நடிகன் பாச்சா

    பல்லாயணம்

    பாச்சா கல்யாண குழப்போகமே

    வாழ்த்துரை

    பாலகணேஷ்,

    23/2, திருவள்ளுவர் சாலை,

    கைகான்குப்பம்,

    சென்னை - 600087.

    கைபேசி: 7010924442

    ‘பாச்சாயணம்’ன்னு ஒரு கதை எழுதியிருக்கேன். படிச்சுட்டு நீங்க வாழ்த்துரை தரணும்னு எஸ்.எல்.நாணு கேட்டுக் கொண்டதுமே மனசுல ஓடின விஷயம், குடும்பங்களை வெச்சுக் கதை எழுதறதை விட்டுட்டு பாச்சா, பல்லியையெல்லாம் வெச்சுக் கதை எழுத ஆரம்பிச்சுட்டாரா இந்த மனுஷன்...? என்பதுதான். கிருஷ்ணசாமியை கிச்சான்னு கூப்டற மாதிரி பார்த்தசாரதியை பாச்சான்னு கூப்டுவாங்கன்னு கதையைப் படிச்சப்பறம்தான் புரிஞ்சது. குண்டலகேசி, மண்டோதரிங்கற மாதிரி பேர்களை ஏன் யாருக்கும் வெக்கறதில்லைங்கறதும் புரிஞ்சது.

    ஒரு முழு நாவலையும் புன்னகை விலகாத உதடுகளோடு படிக்க வைக்கறதுங்கறது ஒரு அரிய கலை. எஸ்.எல். நாணு அதில் பிஎச்டியே செஞ்சிருக்கார். மெல்லிய புன்முறுவல், அகன்ற முறுவல், வாய்விட்ட சிரிப்பு... இப்படி எல்லா வெரைட்டியையும் உங்க வாய் செஞ்சிடும் இந்த ‘பாச்சாயண’த்தைப் படிக்கறப்ப. கிரேஸிமோகனின் எழுத்தைப்போல நல்ல ப்ளோவுல இந்த கதைத் தொடரை எழுதித் தள்ளிருக்கார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள் முதல்ல.

    கதையில ஒரு புதுமையையும் (தெரிஞ்சோ, தெரியாமலோ) செஞ்சிருக்கார் மனுஷர். கல்யாணப் பையன், அவன் குடும்பம் ஒரு பக்கம், கல்யாணப் பொண்ணு, அவ குடும்பம் மறுபக்கம். இதுல மாப்பிள்ளைப் பையனை ஹீரோவா வெச்சு, அவன் பாயிண்ட் ஆஃப் வ்யூவுல கதையை நகர்த்தறார், இயல்பா அவன் குடும்பமும் கதைக்குள்ள வந்துடுது. ஆனால் ஹீரோயின், கடைசிவரை பெயராகவும், டெலிபோனில் பேசுவதன் மூலம் அவள் குணாதிசயம் விளக்கப்படுகிறவளாவும் வர்றாளே தவிர, நேரிடியாக் காட்சி தரலை கடைசிக் காட்சி வரையில. அவளோட அப்பாகூட கௌரவ வேஷத்துல தலைகாட்டற பிரபல நடிகர் மாதிரி ஒரு சீன்ல வந்து பேசிட்டுப் போறார். ஆனா கதாநாயகி கடைசிவரை கதைக்குள்ள எண்ட்ரி ஆகவே இல்லை. இந்த வித்தியாசமான டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ஹாட்ஸ் ஆஃப் நாணு ஸாரே...

    நகைச்சுவையை எழுத்தில் கொண்டுவரும்போது சிரிக்க வைப்பதில் பெரும்பங்கு வகிக்கற ஒரு விஷயம் வார்த்தை விளையாட்டு. ‘மிஸ்டர் ஆராவமுதன்’ என்பதை ‘மிஸ்டர் ஆராவது மூதன்’ என்று அழைப்பது, ‘தாய் மாமன்’ என்பதை ‘நாய் மாமன்’ என்று அழைப்பது போன்ற சின்னச் சின்னதான விளையாட்டுகள்கூட படிக்கையில் உத்தரவாதமாக புன்னகையைக் கொண்டு வந்துவிடும். இந்த நாவலில் சரளமாக வந்து விழுந்திருக்கின்றன அத்தகைய ‘பன்ச்’கள். ரசிச்ச எல்லாத்தையும் குறிப்பிட ஆரம்பிச்சேன்னா, அதுவே குறுநாவல் அளவுக்கு நீண்டுடும்ங்கறதால அதை உங்ககிட்டயே விட்டுட்றேன்.

    தவிர, நகைச்சுவையில் ‘சுயபகடி’ அப்டிங்கற ஒரு விஷயமும் ரொம்பவே ரேர். நகைச்சுவையில் ஊறினவங்கதான் அதை சிம்பிளாப் பண்ண முடியும். நாணு அதையும் சுலபமாக் கையாண்டிருக்கார். வாயில நுழையும்படியான பேரை வெச்சுக்கணும்னா வாழைப்பழம்னுதான் வெச்சுக்கணும்ன்னு அரதப்பழசான நாடக ஜோக்கைச் சொல்லி சிரிச்சான் செங்கல்-அப்டிங்கற வரிகள் நான் சொன்னதுக்குச் சாட்சி.

    வெஸ்டர்ன் டாய்லட் எபிஸோட், பாச்சா தூக்கம் வராம தவிக்கற எபிஸோட்... இந்தச் சமாச்சாரங்களெல்லாம் மத்தியதரக் குடும்பங்கள்ல நடக்கற இயல்பான, நாம கவனிக்கத் தவறுகிற விஷயங்கள். மிக நுணுக்கமாக் கவனிச்சு, இயல்பான உரையாடல்களோட இந்தப் பகுதிகளை அமர்க்களமா எழுதிருக்கார் நாணு. நடுத்தர வீட்ல முதமுதலா ஏஸி மிஷின் வாங்கற அமர்க்களத்தையும் ஒரு சாப்டர் எழுதிருக்கலாம். ஒருவேளை... ‘ஜுனியர் பாச்சாயணம்’ எழுதறப்ப அதுல சேர்ப்பாராயிருக்கும்.

    இந்த மாதிரி இன்னும் நிறைய விஷயங்களை யோசிச்சுச் சேத்துட்டே போகலாம், புத்தகமும் அகராதிப் புத்தகம் மாதிரி கைல பிடிக்க முடியாத அளவுக்குப் பெரிசா வந்துடும். ஆனா, என்னைப் பொறுத்த வரையில நகைச்சுவை நாவல்ங்கறது திருப்பதி கோவில் லட்டு, பழனி பஞ்சாமிர்தம் மாதிரி... நிறையக் கிடைச்சுண்டே இருந்தா திகட்டிடும். அளவாச் சாப்ட்டா ரசனை உச்சத்துல இருக்கும். அதுனால நகைச்சுவை நாவல்ங்கற 120, 150 பக்கம் தாண்டக்கூடாதுங்கறது என் கருத்து. நாணு இந்த விஷயத்துலயும் கச்சிதமாச் செஞ்சிருக்கார். சிரிச்சு சிரிச்சு சிரிப்பு தீர்றதுக்குள்ள நாவல் முடிஞ்சுடறது. அந்த வகைலயும் எனக்கு மிகத் திருப்தியாருந்தது இந்தப் ‘பாச்சாயணம்’.

    இப்ப என்னதான்யா சொல்ல வர்ற...?ன்னு கேட்டீங்கன்னா... என் உரையைக் கூட்டிக் கழிச்சுப் பாத்தா கிடைக்கற வாக்கியம் இதுதான்... -படியுங்க, சிரியுங்க. சிரிப்பே வரலைன்னா நீங்க ரெண்டாவது நரசிம்மராவ்ன்னு அறிவிச்சுடலாம் தெகிரியமா. ஹி... ஹி...

    நீண்ட நாளைக்கப்பறம் ரசிச்சு, சிரிச்சுப் படிக்கறதுக்கும், அதைப் பத்தி ரெண்டு வரி எழுதறதுக்கு (எதே, உங்கூர்ல இதான் ரெண்டு வரியாய்யா...!) வாய்ப்புத் தந்ததுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் டியர் நாணு ஸார். இந்தச் சிரிக்க வைக்கும் பணியை விடாமல் நீங்க தொடரணும்னு ஒரு ரெக்வெஸ்ட் வெச்சுட்டு, நான் உத்தரவு வாங்கிக்கறேன்.

    என்றும் அன்புடன்,

    பாலகணேஷ்.

    அணிந்துரை

    நந்து சுந்து

    (S.NANDA KUMAR)

    APT.G 4 - Y.S.ENCLAVE

    134 A - ARCOT ROAD

    VIRUGAMBAKKAM

    CHENNAI – 600092

    MOBILE : 9443181615

    தான் ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும் அதற்கு நான் அணிந்துரை ஒன்று வழங்க வேண்டும் என்றும் நாணிக் கோணிக் கேட்டுக் கொண்டார் நாணு. நானும் சம்மதித்தேன்.

    காரணம் உள்ளது. நாணு அவர்களின் நகைச்சுவை எழுத்தை மற்ற வாசகர்கள் படிப்பதற்கு முன் நான் படித்து விடலாம் என்பதே அது.

    பாச்சாயணம். இது தான் புத்தகத்தின் தலைப்பு.

    பாச்சா பற்றிய கதை. நன்கு கவனிக்கவும். பாச்சா. பாட்ஷா அல்ல. பாட்ஷாவுக்கும் இதற்கும் Bathing ப்ராப்தி கூட இல்லை. ஆனால் அடிக்கடி கதையில் கபாலி வருகிறார். மயிலை கபாலி.

    ஐய்யங்கார் ஆன பாச்சாவுக்கு கபாலீஸ்வரன் மீது தீராக்காதல். கதையில் இது ஒரு சுவாரஸ்யமான knot. கடைசி வரை இந்த knot எந்த விதமான அடி பிறழ்தலும் இல்லாமல் அழகாகக் கொண்டு போகப்படுகின்றது.

    முதல் அத்தியாயத்தில் பாச்சாவுக்கும் திருச்சியில் இருக்கும் கோதைக்கும் கல்யாணம் நிச்சயம் செய்யப்படுகிறது.

    அவர்கள் திருமணம் முடிவதற்குள் பாச்சாவுக்கு ஏற்படும் பல்வேறு இனிய இடைஞ்சல்கள் தான் கதை.

    கோதை கையில் கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ரிமோட் ஒன்று உள்ளது. அதை வைத்து திருச்சியிலிருந்து பாச்சாவை இயக்குவதெல்லாம் ரசிக்கும் படி உள்ளது.

    இன்றைய நாட்டு நடப்புகளைப் பற்றியும் பல்வேறு துறைகளைப் பற்றியும் நாணு அவர்களுக்கு நிறைய தெரிந்திருக்கிறது. அவைகளை சாமர்த்தியமாக கதையில் புகுத்தி நம்மை சிரிக்க வைக்கிறார்.

    பல இடங்களில் வார்த்தைப் பிரயோகங்கள் பளீர் என இருக்கின்றன.

    பொண்ணு மாப்பிள்ளை ஒரே கோத்திரத்துல இருக்கக் கூடாது. ஓ.கே. ஒரே பேங்க்ல வேலை செய்யலாமா? என்பது டாப் க்ளாஸ்.

    விஷ்ணு சகஸ்ராமம் கேட்டு நாய் தன் நாய்ஸை குறைத்துக் கொள்வதும் ஆங்கிரி பாட்டி ஜாங்கிரிப் பாட்டி ஆவதும் வித்தியாசமான கற்பனைகள்.

    வழக்கம் போல கடைசி அத்தியாயத்தில் திருமணம் முடிந்து விடுகிறது. இதை சந்தோஷ முடிவாகவோ அல்லது சோகமான முடிவாகவோ ஏற்றுக் கொள்வது வாசகர்கள் கையில் உள்ளது.

    இந்த புத்தகத்தில் இன்னொரு விசேஷம். ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து ஏதோ ஒரு அத்தியாயத்தைப் படித்தாலும் ரசிக்கலாம். தொடர்ச்சி தவறிப் போகாது. ஒவ்வொரு அத்தியாயமும் Stand alone. ஆனால் தொடர்ச்சியும் உண்டு.

    இப்படிப்பட்ட அழகான நகைச்சுவைக் கதையை எழுதி புத்தக வடிவில் கொணர்ந்த நாணு அவர்களுக்குப் பாராட்டுகள்.

    அன்பன்

    நந்து சுந்து

    என்னுரை

    இதுவரை நான் இருபத்தியேழு மேடை நாடகங்கள், பல தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள், ஏராளமான சிறுகதைகள், ஐந்து குறுநாவல்கள், ஒரு நாவல், அனுபவத் தொடர் என்று முனைந்திருக்கிறேன்... இருந்தாலும் ஒரு முழு நீள நகைச்சுவைத் தொடர் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதில் ரொம்ப நாளாகவே இருந்தது. விபரீத ஆசை என்று என் மனதின் ஒரு மூலை எச்சரித்தாலும் துணிந்து முயற்சியில் இறங்கி விட்டேன்... அதன் விளைவு தான் பாச்சாயணம்

    இந்தத் தொடரை எழுதுவதற்கு முன் ஒரு விஷயத்தில் தீர்மானமாக இருந்தேன்... இந்தத் தொடரில் உருகவப் படுத்தப் படாத நகைச்சுவையை அளிக்க வேண்டும்... அதே சமயத்தில் இயல்பாக ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களாகவும் இருக்க வேண்டும்... அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேனா என்று இந்தத் தொடரைப் படிக்கும் நீங்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும் யுவர் ஆனர்...

    என் பெற்றோரை நினைக்காமல் என் பொழுது விடிவதில்லை... சாய்வதில்லை... அவர்களின் ஆசிகள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை... அவர்களை மனதில் சுமந்து தான் எந்தப் பணியிலும் இறங்குகிறேன்... இதிலும் அவர்கள் துணை இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.

    நகைச்சுவை இயல்பாக இருக்கவேண்டும்... திணிக்கப் பட்டிருக்கக் கூடாது என்ற பாடத்தை நான் எனது குருநாதர் திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களிடமிருந்து தான் கற்றேன்... அதைத் தான் இன்று வரை என் நாடகங்களிலும் கதைகளிலும் பின் பற்றுகிறேன்...

    Enjoying the preview?
    Page 1 of 1