Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanimara Thoppu
Thanimara Thoppu
Thanimara Thoppu
Ebook195 pages1 hour

Thanimara Thoppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனிமனிதர் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல விபரீத உண்மைச் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளரின் கற்பனையும் கலந்து புனையப்பட்ட நாவல். வாழ்க்கையில் சோர்ந்திருக்கும் எவருக்கும் நம்பிக்கையூட்டும் கதையமைப்பு. நாகாலாந்த் கவர்னர் மேதகு இலா. கணேசன், எழுத்தாளர் சிவசங்கரி போன்ற பல ஆளுமைகளின் பாராட்டுதல்களைப் பெற்ற நாவல்.

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580142310864
Thanimara Thoppu

Read more from Sl Naanu

Related to Thanimara Thoppu

Related ebooks

Reviews for Thanimara Thoppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanimara Thoppu - SL Naanu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தனிமரத் தோப்பு

    Thanimara Thoppu

    Author:

    SL நாணு

    SL Naanu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sl-naanu

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    சமர்ப்பணம்

    எனது தாயாருக்கும் தகப்பனாருக்கும்

    1

    இன்று

    விடிகாலை மணி மூணே கால்...

    மாடி அறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த விஸ்வத்தை எழுப்பி கீழே வரவழைத்து...

    மின்னல் வேகத்தில் அவர் சற்றும் எதிர்பாராதது நடந்து விட்டது...

    அது நடந்திருக்கிறது என்று அவருக்குள் இறங்குவதற்கே பல கணங்கள் பிடித்தன...

    ஏன்... ஏன்...

    மனதில் கேள்வி எழுந்தாலும் அதற்கான விடை கிடைக்கவில்லை...

    வெளியில் இருந்த இருட்டை விட அதிகம் அவர் மனதைப் பற்றிக் கொண்டது...

    இது நிஜமா இல்லை கனவா?

    கண்களைக் கசக்கினார்...

    திறந்து கிடக்கும் வாசக் கதவு நடந்தது நிஜம் என்று அடித்துச் சொன்னது...

    சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார்...

    அவருடைய இத்தனை வருட போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும், சாதனைகளுக்கும், அர்த்தம் இல்லாமல் போய் விட்டதோ?

    போராட்டங்கள்... தியாகங்கள்... சாதனைகள்...

    அவர் வாழ்வில் ஏராளம்... ஏராளம்...

    ஏதோ தோன்றியவராக எழுந்து மொபைலை எடுத்து மகனின் எண்ணைத் தட்டினார்...

    மறுமுனையில் ரிங் அடித்தும் பேசவில்லை...

    இன்னொரு எண்... வேறு ஒரு எண்...

    உகும்... எதற்கும் பதிலில்லை... செய்வதறியாத குழப்பம்...

    விஸ்வம் மறுபடியும் சோபாவில் சாய்ந்தார்...

    அவர் மனதில் கொஞ்சம் படபடப்பு...

    விடிந்தால் ஊர் உலகம் புருவம் உயர்த்தும்... வீட்டு வேலைக்கு வருபவள், பால் பேக்கட் போடுபவர், காய்கறி விற்பவள்... இவர்களுடைய ஆர்வம் கலந்த கற்பனை திறன் விபரீதங்கள் பேசும்... அக்கம் பக்கம் துக்கம் விசாரிக்கும்... உடன் பிறப்புகள் கவலைப்படும்... மற்ற உறவுகள் கவலைப் படுவது போல் பாசாங்கு செய்து மனதுக்குள் மகிழும்...

    முக்கியமாக அவர் அப்பாவிடம் எப்படிச் சொல்லப் போகிறார்... விஷயம் தெரிந்தால் உடைந்து போய் விடுவாரே...

    எதிரே சுவரில் ஒரு வாரத்துக்கு முன்னால் எடுக்கப் பட்ட போட்டோ... தங்க நிற பிரேமுக்குள் புதுப் பொலிவுடன்...

    சென்ற வாரம் நடந்த அவருடைய சஷ்டியப்த பூர்த்தி அன்று எடுத்தது... போட்டொகிராபரிடம் சொல்லி அன்றே ப்ரிண்ட் போட்டு பிரேம் பண்ணிக் கொண்டு வர ஏற்பாடு பண்ணியிருந்தார்...

    போட்டோவில் நடுநாயகமாக விஸ்வமும் சுசீலாவும்...

    சுசீலா புது பட்டு மடிசாரில் கழுத்தில் மாலையுடன்... அவளுக்குப் பிடிக்குமென்று மாம்பழ நிறத்தில் சிவப்பு பார்டரில் தேடிப் பிடித்து விஸ்வம் மடிசார் வாங்கியிருந்தார்... கைகளில் காத்திரமாக தங்க வளையல்கள்... அதுவும் சஷ்டியப்த பூர்த்திக்கு முன்னால் அவளுக்கு அவர் வாங்கிக் கொடுத்தது... சந்தோஷமாகத் தானே வாங்கி கைகளில் அடுக்கிக் கொண்டாள்... அப்போது கூட அவரிடம் எதுவும் சொல்லவில்லையே... லேசான சலிப்புக் கூடத் தெரியவில்லையே...

    அப்புறம் எப்படி திடீரென்று...

    இது திடீரென்று எடுத்த முடிவா?

    இருக்காது... நிச்சயம் இருக்காது...

    இவ்வளவு கச்சிதமாக நடந்தேறியிருக்கிறது... நிச்சயமாக ஏற்கனவே திட்டமிட்டது தான்... இதன் சூத்ரதாரி...

    மறுபடியும் போட்டோவைப் பார்த்தார்...

    சுசீலாவுக்கு அருகில் அவர்...

    பஞ்ச கச்சத்துடன் நெற்றியில் விபூதிப் பட்டை... புருவங்களுக்கு மத்தியில் கொஞ்சம் மேலே குங்குமப் புள்ளி... கழுத்தில் மாலையுடன்...

    பின்னால் மகன் விஷ்வக்... மருமகள் காயத்ரி... பேரன் அநிருத்... மகள் வித்யா... மருமகன் வெள்ளையப்பன்...

    எல்லோருடைய முகத்திலும் சந்தோஷச் சிரிப்பு...

    அது உண்மையிலேயே சந்தோஷச் சிரிப்பு தானா?...

    நாடகத்தின் கடைசிக் கட்டக் காட்சிக்கான முத்தாய்ப்போ அந்தச் சிரிப்பு?...

    நாடகம்...

    ஹும்... நன்றாகத் தான் நடித்திருக்கிறார்கள்

    மெதுவாக எழுந்து சுற்றிப் பார்த்தார்...

    மகன் தங்கியிருந்த அறை வெறுமையாக இருந்தது...

    மகள் ஒரு நாள் முன்பே உடமைகளை அள்ளிக் கொண்டு கிளம்பியிருக்க வேண்டும்...

    கடந்த மூன்று நாட்களாக விஸ்வம் சென்னையில் இருக்கவில்லை... சஷ்டியப்த பூர்த்தி நடந்த இரண்டாவது நாள் அவசர வேலையாக டெல்லிக்குப் பயணம்... நேற்று இரவு தான் திரும்பியிருந்தார்... மூன்று நாட்களின் கடும் உழைப்பு அசதியைத் தர எல்லோரிடமும்...

    காலைல பார்க்கலாம். குட் நைட்

    சொல்லிவிட்டு மாடியில் தன் அறைக்கு படுக்கச் சென்றார்...

    அப்போது கூட மற்றவர்களிடம் எந்த வித சலனமும் தெரியவில்லை... ரொம்பவே இயல்பாக இருந்தார்கள்...

    அப்பா

    தோள்பட்டை உலுக்கப் பட்டதும் திடுக்கிட்டு விழித்தார்...

    விஷ்வக்...

    திரும்பி கடிகாரத்தைப் பார்த்தார்...

    விடிகாலை மூணு பத்து...

    என்னடா?

    கொஞ்சம் கீழ வா

    அவருக்கு பகீரென்றது.

    இந்த காலை வேளையில் மகன் எழுப்புகிறான் என்றால் யாருக்காவது உடம்பு...

    ஐயோ அவருடைய சுசீலாவுக்கு ஏதாவது...

    பதறியபடி எழுந்து அவனுடன் கீழே வந்தவருக்கு அதிர்ச்சி...

    கதவு திறந்திருக்க வாசலில் பெரிய கார் காத்திருந்தது...

    ஹாலில் சுசீலாவும் தயாராக நின்றிருந்தாள்...

    விஸ்வம் புரியாமல் அவர்களைப் பார்த்தார்...

    விஷ்வக் கொஞ்சம் கடுமையாக...

    நாங்க லண்டன் கிளம்பறோம்... அம்மாவும் எங்கூட வரா...

    விஸ்வத்துக்கு மேலும் அதிர்ச்சி...

    மனைவியைப் பார்த்தார். அவள் அவர் பார்வையைத் தவிர்த்தாள்...

    விஷ்வக் தொடர்ந்தான்...

    இனிமே உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... போன் பண்ணற வேலைலாம் வேண்டாம்... பி ஆப் யுவர் ஓன்... குட் பை

    அம்மாவை அழைத்துக் கொண்டு காரில் ஏறிக் கொள்ள...

    அப்போது தான் கவனித்தார்... மருமகள் காயத்ரி ஏற்கனவே காரில் அமர்ந்திருந்தாள்... இன்னதென்று உணரும் முன்பே கார் உயிர் பெற்று அவர் பார்வையிலிருந்து மறைந்தது...

    ஏன்... ஏன் திடீரென்று இப்படி...

    ஒரு வாரம் முன்னால் அவருடைய சஷ்டியப்த பூர்த்தி விழாவில் எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள்...

    விஸ்வத்துக்கு பெரிய இடத்து சம்பந்தமெல்லாம் தண்ணி பட்ட பாடு... அவர் ஒரு தேர்ந்த சார்டர்ட் அகௌண்டண்ட் என்ற முகவரியே அவரை பல முக்கியஸ்தர்களுடன் இணையச் செய்தது... பல தொழிலதிபர்கள், இசை நாட்டியக் கலைஞர்கள், இலக்கியவாதிகள்... இவ்வளவு ஏன்... சில மாநில ஆளுநர்களே அவருக்கு நெருக்கமானவர்கள்தான்... இவரின் அழைப்பை மதித்து அவர்கள் எல்லோரும் விஸ்வத்தின் சஷ்டியப்த பூர்த்திக்கு வந்திருந்தார்கள்... அவர்களையெல்லாம் மகனும், மருமகளும், மகளும், மருமகனும் சந்தோஷமாக வரவேற்று... உபசரித்து... உறவினர்களிடம் சிரித்து சிரித்துப் பேசி...

    வந்திருந்தவர்கள் எல்லோரும் இப்படியும் ஒரு குடும்பமா என்று வாய் பிளந்தார்கள்... நெருக்கமானவர்கள் சந்தோஷப்பட்டார்கள்...

    இவ்வளவு ஏன்... விஸ்வத்துக்கே தன் வாரிசுகளை நினைத்துப் பெருமை... முக்கியமாக மகனை நினைத்து...

    நேற்று இரவு வரை அந்த சந்தோஷம் அவரிடமிருந்தது...

    ஆனால் இப்போது சட்டென்று எல்லாம் மாயமாகத் தொலைந்து விட்டது...

    சோர்ந்து போனவராக தன் அறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்தார்...

    பக்கத்து மேஜையில் பேப்பர் வெய்ட் அழுத்தத்தில் ஒரு காகிதம்...

    பரபரப்போடு எடுத்துப் பார்த்தார்...

    கிறுக்கலான கையெழுத்தில்...

    உன்னை நிம்மதியா இருக்க விட மாட்டேன்

    2

    அன்று

    சென்னைத் தெருக்களில் நெரிசல்கள் இல்லாத அந்தக் காலம்...

    மௌண்ட் ரோடிலிருந்த அலுவலகத்திலிருந்து தி.நகர் அகஸ்தியர் கோவிலைத் தொட்டு இருக்கும் ராஜா தெருவுக்கு வழக்கமாக சிவராமன் நடந்ததான் வருவார்... அதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று நடப்பது தேக ஆரோக்யம்... இரண்டாவது தினமும் பஸ் டிக்கெட் வாங்கச் செலவாகும் சில அணாக்கள் குடும்பச் செலவுத் தேவைகளுக்கு உபரியாக உபயோகப்படும்... காலையில் கண்டிப்பாக பஸ் பிடித்து விடுவார்...

    மனைவி லலிதா... நான்கு மகன்கள்... ஒரு மகள்... என்று சிவராமன் குடும்பம் கொஞ்சம் விஸ்தாரமானது... பிரபல சினிமா கம்பெனியில் சிவராமனுக்கு டைபிஸ்ட் உத்யோகம்... சொற்பமான சம்பளம்... அதில் வீட்டு வாடகை கொடுத்து அத்தியாவசிய மளிகை வாங்கவே இழுத்தடிக்கும்... அதற்காகவே அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பிறகும் ஒரு செகண்ட்-ஹாண்ட் டைப்ரைட்டரில் ஜாப்-டைப்பிங் செய்வார்... அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த வக்கீல் ஒருவர் தினமும் சிவராமனுக்கு வேலை கொடுப்பார்... அதோடு இதர சில வேலைகளும் வரும்... எப்படியும் மாதம் இருநூறு முன்னூறுக்கு சிவராமன் வழி செய்வார்... அது மாத பட்ஜட்டில் விழும் துண்டை முழுதுமாக அடைக்காவிட்டாலும் காலை நனைத்து விட்டு சட்டென்று விலகும் கடல் அலைகளைப் போல் ஒரு தற்கால அனுசரிப்பு கொடுக்கும்.

    சிவராமனுக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரே வரம் அவர் மனைவி லலிதா... ஒல்லியான தேகம்... நடு வகிடு எடுத்து படிய வாரிய முடி... வகிடின் விளிம்பில் குங்குமக் கீற்று... நெற்றியில் அகலமான பொட்டு... எலுமிச்சை நிறம்... எட்டுக்கல் பேசரி போட்டால் எடுப்பாய் இருந்திருக்க வேண்டிய மூக்கில் சின்ன தங்கப் பொட்டு... காதில் அதே மாதிரி ஒரு பொட்டுத் தோடு... கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தொங்கும் தாலி... கொஞ்சம் சாயம் துறந்த சுங்கிடிச் சேலையில் மடிசார்... இல்லாமையை வெளிக்காட்டாமல் எப்போதும் உதட்டில் மலர்ந்திருக்கும் புன்சிரிப்பு...

    லலிதாவுக்கு வாழ்க்கையில் இரண்டே இரண்டு தான் பிரதானம்... ஒன்று அவள் குடும்பம்... குழந்தைகள்... இரண்டாவது அகஸ்தியர் கோவில்... தினமும் காலையிலும் மாலையிலும் அகஸ்தியர் கோவில் சன்னதிகளுக்கு முன் நீர் தெளித்து சுத்தம் செய்து கோலம் போடுவதை ஒரு கைங்கர்யமாகவே கொண்டிருந்தாள்... இதனால் அவளுக்கு கோலம் மாமி என்ற அடையாளமும் உண்டு...

    லலிதாவிடமிருந்த இன்னொரு குணம்... இல்லாத இயலாமையை குழந்தைகள் முன் காட்ட மாட்டாள்... குழந்தைகளுக்கு எந்தவித குறையும் வைக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பாள். சாதாரண ரசம் சாதம் போட்டாலும் பெரிய விருந்தே சாப்பிட்ட உணர்வை அந்த ரசம் குழந்தைகளுக்குக் கொடுக்கும்... அவ்வளவு கைப் பக்குவம்... அதோடு அன்போடும் பாசத்தோடும் அவள் அவர்களுக்கு அளிக்கும் பாங்கு...

    குழந்தைகள் யாருக்காவது பிறந்த நாளோ... இல்லை வீட்டில் ஏதாவது முக்கிய சந்தோஷ விஷயம் நடந்து விட்டாலோ... வீட்டில் இருக்கும் வஸ்துக்களை வைத்து எப்படியாவது ஒரு இனிப்பு தயாரித்து விடுவாள்... அது புது மாதிரியாகவும் இருக்கும்... அவ்வளவு ருசியாகவும் இருக்கும்...

    "மாசக் கடைசி... வீட்டுல எதுவும் இருக்காதே...

    Enjoying the preview?
    Page 1 of 1