Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Latchiya Paravaigal
Latchiya Paravaigal
Latchiya Paravaigal
Ebook292 pages1 hour

Latchiya Paravaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நாவலுக்கு "லட்சியப் பறவைகள்" என்ற பெயர் ரொம்பவும் பொருத்தமாக அமைந்து விட்டது என்று சொல்வேன். ஒரு சமூக நாவலுக்கான கச்சிதமான தலைப்பு. இதில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு லட்சியங்களைக் கொண்டவர்களாய்த் தங்களை அமைத்துக் கொண்டு இடைவிடாது, சுணக்கமின்றிச் செயல்பட்டு மேலெழுகிறார்கள்.

முதியோர் இல்லம் நடத்தும் தேவகி, சிறந்த திரைப்பட இயக்குநராக, தரமான திரைப்படங்களைத் தயாரிப்பவனாக, மேலெழுந்து வர வேண்டும் என்று தன்னைக் கடுமையான முயற்சிக்கு உள்ளாக்கிக் கொள்ளும் பிரபு, ஒழுக்கமும், நேர்மையும், மற்றவருக்காக உண்மையாக உழைப்பதும்தான் தன்னை முன்னிறுத்தும் என்கிற மேன்மையான நடத்தையும், செயல்பாடும் உள்ளவனாக வரும் பாலன், அந்த தேவகிக்கும், இந்த பாலனுக்கும் தந்தையாக அமைந்திருக்கக் கூடியவர்களின் விடாமுயற்சி, கடுமையான உழைப்பில் வந்த தொழில் முன்னேற்றம் என இந்த நாவலின் கதாபாத்திரங்கள் அத்தனை பேருமே வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக நகர்த்திச் செல்வதும், தொடர்ந்து முன்னேறுவதுமான நடவடிக்கைகளை உள்ளடக்கியவர்களாக இருத்தல், படிக்கும் வாசக மனதை உற்சாகத்திலும், ஊக்கத்திலும், கொண்டு செலுத்தும் என்பது நிச்சயம்.

முதியோர்களின் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்வதும், அந்த முதியோர் இல்லத்திற்கு வந்து சேர்ந்த பணியாளர்களின் வாழ்வியலைக் கருணையோடு தரிசிப்பதும் இந்நாதவலில் ஊடாடும் இன்னொரு தனிச்சிறப்பு.

பல சமூக நாவல்கள் ஒரு குடும்பம் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்னைகள், அதில் தோன்றும் சிக்கல்கள், அதனால் தோன்றும் சுணக்கங்கள், அதன்பின்னான முனைப்பான செயல்பாடுகள், அந்தச் செயல்பாடுகளின் மூலமாகக் கிடைக்கும் வெற்றிகள் அல்லது எதிர்பாராத தோல்விகள் என்று பயணித்து, இறுதியில் இரண்டில் ஒன்றிலான முடிவினை எட்டி தங்கள் கதைகளை முடித்துக் கொள்ளும் விதமாய் அமைந்திருக்கும்.

ஆனால் இந்த நாவலை நான் எழுதத் துவங்கும்போதே, கடைசியில் "சுபம்" என்கின்ற தீர்மானத்தோடேதான் ஆரம்பித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக ஆக்கி, ஊக்கமான செயல்பாடும், சோர்வடையாத மனமும், எதிர்ப்படும் சிக்கல்களைத் துணிந்து எதிர்கொண்டு தீர்க்கும் மனோதிடமும் கொண்ட கதாபாத்திரங்களாய்த்தான் அமைக்க வேண்டும், அம்மாதிரிக் கதாபாத்திரங்களூடே நம்பிக்கையும், நகைச்சுவையும், கலா ரசனையும், மிளிர வேண்டும் என்று நினைத்தேதான் சம்பவங்களைக் கோர்த்துக் கொண்டும், அதன் ரசனையைக் கூட்டிக் கூட்டிச் சுவை சேர்த்தும், பக்கங்களைக் கடந்து சென்றேன். நல்ல சிந்தனையே இந்நாவலின் அடிப்படை.

ஏறக்குறைய நான் நினைத்தவிதமாகவே, வாசக மனங்களின் ரசனையை எடை போட்டு, விறுவிறுப்பும், ஆழமும் கொண்டதாகவே இந்நாவலை அமைத்திருக்கிறேன். இரண்டு நண்பர்களின், இரண்டு குடும்பங்களின் கதைகள் அடுத்தடுத்துக் காட்சிப்படுத்தப்பட்டு நடைபோடுகிறது இந்நாவல். இருவேறு விதமான குடும்பக் கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறை அனுபவங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் கடந்து செல்வது ஸ்வாரஸ்யம் மிக்கதாகவே வாசகர்களுக்கு அமையும்.

ஒரு குடும்பத்தின் கதை என்றில்லாமல், செய்யும் தொழிலில் பாகஸ்தர்களாக இருந்து, பிரிந்த இரு வேறு பெரியவர்களின் குடும்பங்களின் கதையாகவும், ஒன்றன்பின் ஒன்றாய் அவர்களின் செயல்பாடுகளை விவரிப்பதாயும், பெற்றெடுத்த பிள்ளைகளின் நேர்மையான லட்சியங்களை உள்ளடக்கியதாகவும், அந்த லட்சியங்கள் காலத்தால் கனிந்து மெருகேறும்போது, ஒரு அனுபவ முதிர்ச்சியின் அடையாளமாய், காலம் தந்த படிப்பினையின் சாரமாய், மேம்பட்ட செயல்களின் வெளிச்சமாக நாவலின் முடிவு ஒருங்கிணைந்து அமைந்திருப்பதும், ஒரு சமூக நாவலுக்கே உரிய நியாயமான கண்ணியத்தைக் காப்பாற்றி, அதன் மேன்மையை உச்சியில் கொண்டு நிறுத்திச் சிறப்புச் செய்து விடுகிறது என்பதுமே இந்த நாவலுக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லுவேன். இதுவே இந்தச் சீரிய சமூக நாவலின் மூலமாய் நான் வாசகர்களுக்குத் தரும் அனுபவபூர்வமான, நம்பிக்கையான, செய்தி. தரமான வாசகர்களை ஏமாற்றாத விறுவிறுப்பான வாசிப்பனுபவம் இந்த நாவலின் மூலமாய் நிச்சயம் கிட்டும் என்பது உறுதி.

அன்பன்,
உஷாதீபன்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580129904769
Latchiya Paravaigal

Read more from Ushadeepan

Related authors

Related to Latchiya Paravaigal

Related ebooks

Reviews for Latchiya Paravaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Latchiya Paravaigal - Ushadeepan

    http://www.pustaka.co.in

    லட்சியப் பறவைகள்

    Latchiya Paravaigal

    Author:

    உஷாதீபன்

    Ushadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ushadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    என்னுரை

    இந்த நாவலுக்கு லட்சியப் பறவைகள் என்ற பெயர் ரொம்பவும் பொருத்தமாக அமைந்து விட்டது என்று சொல்வேன். ஒரு சமூக நாவலுக்கான கச்சிதமான தலைப்பு. இதில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு லட்சியங்களைக் கொண்டவர்களாய்த் தங்களை அமைத்துக் கொண்டு இடைவிடாது, சுணக்கமின்றிச் செயல்பட்டு மேலெழுகிறார்கள்.

    முதியோர் இல்லம் நடத்தும் தேவகி, சிறந்த திரைப்பட இயக்குநராக, தரமான திரைப்படங்களைத் தயாரிப்பவனாக, மேலெழுந்து வர வேண்டும் என்று தன்னைக் கடுமையான முயற்சிக்கு உள்ளாக்கிக் கொள்ளும் பிரபு, ஒழுக்கமும், நேர்மையும், மற்றவருக்காக உண்மையாக உழைப்பதும்தான் தன்னை முன்னிறுத்தும் என்கிற மேன்மையான நடத்தையும், செயல்பாடும் உள்ளவனாக வரும் பாலன், அந்த தேவகிக்கும், இந்த பாலனுக்கும் தந்தையாக அமைந்திருக்கக் கூடியவர்களின் விடாமுயற்சி, கடுமையான உழைப்பில் வந்த தொழில் முன்னேற்றம் என இந்த நாவலின் கதாபாத்திரங்கள் அத்தனை பேருமே வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக நகர்த்திச் செல்வதும், தொடர்ந்து முன்னேறுவதுமான நடவடிக்கைகளை உள்ளடக்கியவர்களாக இருத்தல், படிக்கும் வாசக மனதை உற்சாகத்திலும், ஊக்கத்திலும், கொண்டு செலுத்தும் என்பது நிச்சயம்.

    முதியோர்களின் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்வதும், அந்த முதியோர் இல்லத்திற்கு வந்து சேர்ந்த பணியாளர்களின் வாழ்வியலைக் கருணையோடு தரிசிப்பதும் இந்நாதவலில் ஊடாடும் இன்னொரு தனிச்சிறப்பு.

    பல சமூக நாவல்கள் ஒரு குடும்பம் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்னைகள், அதில் தோன்றும் சிக்கல்கள், அதனால் தோன்றும் சுணக்கங்கள், அதன்பின்னான முனைப்பான செயல்பாடுகள், அந்தச் செயல்பாடுகளின் மூலமாகக் கிடைக்கும் வெற்றிகள் அல்லது எதிர்பாராத தோல்விகள் என்று பயணித்து, இறுதியில் இரண்டில் ஒன்றிலான முடிவினை எட்டி தங்கள் கதைகளை முடித்துக் கொள்ளும் விதமாய் அமைந்திருக்கும்.

    ஆனால் இந்த நாவலை நான் எழுதத் துவங்கும்போதே, கடைசியில் சுபம் என்கின்ற தீர்மானத்தோடேதான் ஆரம்பித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக ஆக்கி, ஊக்கமான செயல்பாடும், சோர்வடையாத மனமும், எதிர்ப்படும் சிக்கல்களைத் துணிந்து எதிர்கொண்டு தீர்க்கும் மனோதிடமும் கொண்ட கதாபாத்திரங்களாய்த்தான் அமைக்க வேண்டும், அம்மாதிரிக் கதாபாத்திரங்களூடே நம்பிக்கையும், நகைச்சுவையும், கலா ரசனையும், மிளிர வேண்டும் என்று நினைத்தேதான் சம்பவங்களைக் கோர்த்துக் கொண்டும், அதன் ரசனையைக் கூட்டிக் கூட்டிச் சுவை சேர்த்தும், பக்கங்களைக் கடந்து சென்றேன். நல்ல சிந்தனையே இந்நாவலின் அடிப்படை.

    ஏறக்குறைய நான் நினைத்தவிதமாகவே, வாசக மனங்களின் ரசனையை எடை போட்டு, விறுவிறுப்பும், ஆழமும் கொண்டதாகவே இந்நாவலை அமைத்திருக்கிறேன். இரண்டு நண்பர்களின், இரண்டு குடும்பங்களின் கதைகள் அடுத்தடுத்துக் காட்சிப்படுத்தப்பட்டு நடைபோடுகிறது இந்நாவல்.

    இருவேறு விதமான குடும்பக் கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறை அனுபவங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் கடந்து செல்வது ஸ்வாரஸ்யம் மிக்கதாகவே வாசகர்களுக்கு அமையும்.

    ஒரு குடும்பத்தின் கதை என்றில்லாமல், செய்யும் தொழிலில் பாகஸ்தர்களாக இருந்து, பிரிந்த இரு வேறு பெரியவர்களின் குடும்பங்களின் கதையாகவும், ஒன்றன்பின் ஒன்றாய் அவர்களின் செயல்பாடுகளை விவரிப்பதாயும், பெற்றெடுத்த பிள்ளைகளின் நேர்மையான லட்சியங்களை உள்ளடக்கியதாகவும், அந்த லட்சியங்கள் காலத்தால் கனிந்து மெருகேறும்போது, ஒரு அனுபவ முதிர்ச்சியின் அடையாளமாய், காலம் தந்த படிப்பினையின் சாரமாய், மேம்பட்ட செயல்களின் வெளிச்சமாக நாவலின் முடிவு ஒருங்கிணைந்து அமைந்திருப்பதும், ஒரு சமூக நாவலுக்கே உரிய நியாயமான கண்ணியத்தைக் காப்பாற்றி, அதன் மேன்மையை உச்சியில் கொண்டு நிறுத்திச் சிறப்புச் செய்து விடுகிறது என்பதுமே இந்த நாவலுக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லுவேன். இதுவே இந்தச் சீரிய சமூக நாவலின் மூலமாய் நான் வாசகர்களுக்குத் தரும் அனுபவபூர்வமான, நம்பிக்கையான, செய்தி. தரமான வாசகர்களை ஏமாற்றாத விறுவிறுப்பான வாசிப்பனுபவம் இந்த நாவலின் மூலமாய் நிச்சயம் கிட்டும் என்பது உறுதி.

    அன்பன்,

    உஷாதீபன்.

    1

    கம்ப்யூட்டரின் முன் அமர்ந்திருந்த தேவகியின் பார்வை கலங்கியிருந்தது. கடந்த அரை மணி நேரமாகத் திரையையே பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்டதுவோ என்று நினைத்த போது, அது மெயிலில் படித்த செய்தியினால் விளைந்தது என்பது புரிந்தது.

    வந்திருந்த செய்திக்கு உரிய அந்தப் பெரியவரின் முகம் கண் முன்னால் நிழலாடியது. அவர் அந்த விடுதிக்கு வந்து சேர்ந்ததும், பின்பு தன்னை மனப்பூர்வமாய் அந்த இடத்தோடு பிணைத்துக் கொண்டதும், கடந்த மூன்று ஆண்டுகளாய் அவரது இருப்பும், எல்லாமுமாய் அவள் நினைவில் படிப்படியாய் வந்து போயின.

    தகவல் தெரிவித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் பதில் வந்து விட்டதுதான். ஆனாலும் இப்படியா வரும்? இதைக் கேள்விப்பட்டால் அந்தப் பெரியவரின் மனம்தான் என்ன பாடுபடும்? அவர் எங்கே கேள்விப்படப்போகிறார்? அவர்தான் உயிரோடு இல்லையே? அதைத் தெரிவித்துத்தானே இந்தப் பதிலைப் பெற்றிருப்பது....!.

    பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.... - எல்லோரும் அறிந்த, பழக்கமான, பழைய பழமொழிதான். ஆனாலும் நினைக்கத் தோன்றுகிறதே! என்னால் வர இயலாத சூழ்நிலை. போதுமான பணம் இன்று உங்கள் விடுதிக் கணக்கிற்கு அனுப்பியிருக்கிறேன். தயவுசெய்து நீங்களே இறுதிக் காரியங்கள் அனைத்தையும் என் சார்பாக முடித்து விடுங்கள். நன்றி. மகேஷ்.

    கண்ணாடிப்பெட்டியில் உறைந்திருந்தார் அவர். சுற்றிலும் ஆட்கள் வருத்தம் தோய்ந்த முகங்களுடன். அதில் பலரும் அந்த விடுதியைச் சேர்ந்தவர்கள். அவரோடு அன்றாடப் பொழுதைக் கழித்தவர்கள். அனுதினமும் உறவாடியவர்கள். சிரித்து மகிழ்ந்தவர்கள். வருந்தி ஒடுங்கியவர்கள். கூடிக் குலவியவர்கள்.

    நிம்மதியாய்ப் போய்ச் சேர்ந்து விட்டார். நமக்கு எப்போதோ? என்பதான துக்கம் எல்லோரின் மனதிலும் படிந்திருப்பதாய்த் தோன்றியது.

    சிலர் அவர் முன்பு குடியிருந்த தெருவிலிருந்து வந்திருந்தார்கள்.

    எங்களோடதான் தினமும் வாக்கிங் வருவாரு... அவர் பாட்டுக்குத்தான் இருந்திட்டிருந்தாரு... பையன் வந்தான்... அம்மாவைப் பிரிச்சான். இவரை இங்க கொண்டு விட்டான். அதுக்கப்புறம் அவர் வர்றது நின்னு போச்சு....

    ஏன், இவரும் போயிருக்க வேண்டிதானே..?

    அதுல அவருக்கு விருப்பமில்லே... பையனும் சரியாக் கூப்பிடலைன்னுதான் சொல்லணும். பசங்க எதாச்சும் ஒரு லாப எண்ணத்தோடதானே பெற்றோரைக் கூப்பிடுறாங்க.... காரண, காரியமில்லாம ஒண்ணும் அவங்க தன் அப்பா, அம்மாக்களை அழைச்சிடுறதில்லை....

    என்ன சொல்றீங்க...?

    குழந்தையைப் பார்த்துக்கணும்... ரெண்டு பேரும் சம்பாதிக்கிறாங்க.... அதுக்கு வேலைக்கு ஒரு ஆள் போடுறதுக்கு, சொந்த அம்மாவையே வேலைக்காரி மாதிரி வச்சிக்கலாமேங்கிற எண்ணம்தான்....

    அப்படீன்னு சொல்லிட முடியாது.....

    அதுதான் உண்மை... ஒரு மூணாவது முகந்தெரியாத ஆளை வச்சிக்கிறதுக்கு இது பெட்டர்தானே...? வேலைக்காரிக்குக் கொடுக்கிற சம்பளமும் மிச்சமாகுது... அதே அளவுக்கு அப்பாவுக்கான தேவை இல்லை.... அதுனால அவர் இங்க கிடக்கட்டும்னு விட்டுட்டுப் போயிடுறாங்க....

    அதுக்காக இப்டி முதியோர் விடுதில விடணுமா....?

    வேறென்ன பண்றது? தனியா இருந்தா பாதுகாப்பில்லே... சமைக்கணும்... வீட்டைப் பராமரிக்கணும்... மத்த வேலைகளெல்லாம் இருக்கு... உடல் நோவுன்னா தானே தனியாப் போய் பார்த்துக்கணும்... இது எல்லாத்தையும் விட வீட்டுல தனிமைல இருக்கத் தெரியணும்... அதுக்கும் ஒரு தைரியமும், பழக்கமும், விருப்பமும் வேணுமில்லையா? இல்லைன்னா அது நடக்காதே...? போதாக்குறைக்கு இப்பல்லாம் திருட்டு பயம் அதிகம். தனியா இருக்கிற வீட்டுல கழுத்தை அறுத்துட்டு இருக்கிறதெல்லாம் சுருட்டிட்டுப் போயிடறான்... இப்படிப் பலதும் இருக்கே.....?

    உண்மைதான் நீங்க சொல்றது....

    எந்த சென்டிமென்ட்டுக்கும் இந்தக் கால இளம் தலைமுறைகிட்டே இடமில்லே... தனி ரூம், டி.வி., நியூஸ் பேப்பர், மெடிசின்ஸ், அப்பப்போ வந்து பார்க்கிற டாக்டர், பக்கத்துல கோயில், பார்க்... வேளா வேளைக்குச் சாப்பாடு... உனக்குத்தான் எல்லா வசதியும் இருக்கே... எதுக்காக வருத்தப்படணும்.... விடுதிக்கான பணத்தை நான் அனுப்பிச்சிடுறேன்... நீ பாட்டுக்கு இருக்க வேண்டிதானே... அப்பப்போ போன் பேசறேன்... போதாதா?

    சொல்லிட்டு விட்டுட்டுப் போயிட்டாங்க சார்... அந்த மனுஷனால் பதில் பேசமுடில... பணமிருந்தா எல்லாம் கிடைச்ச மாதிரின்னு நினைக்கிறாங்க.... அன்பா, ஆதரவா, பக்கத்துல உட்கார்ந்து, கையைப் பிடிச்சிட்டு, எப்டியிருக்கீங்க... சாப்டீங்களா, உடம்புக்கென்ன, டாக்டர்ட்டப் போவமான்னு கேட்க ஆளில்லை.... அதைத்தானே பெரியவங்க எதிர்பார்க்கிறாங்க.... அது யாருக்கும் கிடைக்கலை.... முக்கியமான விஷயங்கள்ல வீட்டுப் பெரியவங்களைக் கலந்துக்கிறதுங்கிறதெல்லாம் என்னைக்கோ அழிஞ்சு போன விஷயம்... இதெல்லாம் கிடைக்காதவங்க மனசுக்குள்ளயே புழுங்கிக்கிட்டு இருக்காங்க... இல்லன்னா கிடைச்சமாதிரி மத்தவங்ககிட்டே புளுகிக்கிட்டு, அப்படிச் சொன்ன பொய்க்காக தங்களுக்குள்ளயே மறுகிக்கிட்டு இருக்காங்க... இதுதான் இன்னைக்கு யதார்த்தம்...

    நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை.....

    போயிட்டு வந்துடறேன்... பத்திரமா இருந்துக்குங்கோ... ன்னுட்டு அவர் ஒய்ப்ஃபும் கிளம்பினாங்க பாருங்க.... அதுலதான் மனுஷன் நொடிச்சுப் போயிட்டாரு.... அவளுக்குக் கூடத் தன்னைப்பத்திக் கவலையில்லையேன்னு மனசுல வெறுப்பு வந்திடுச்சு அந்த மனுஷனுக்கு..... இவருக்கு அவர் மனைவியைப் பிரியணுமேன்னு இருக்கு... அந்தம்மாவுக்கானா பையன் கூடப் போய் இருக்கப் போறமேங்கிற சந்தோஷம்... பேரக் குழந்தையைக் கொஞ்சணும்ங்கிற ப்ரீதி... அதுல இவரை மறந்தாச்சு.... உதறியாச்சு... அவ்வளவுதான்... அங்க போனாத்தானே அவங்க நிலைமை புரியும்.....

    அதே ப்ரீதியும், ஆற்றாமையும் இவருக்கும் இருந்திருக்கும் தானே...?

    இருக்கும்... யார் இல்லேன்னு சொன்னா....? அதை யாரு மதிச்சா....? அதை உணர்ந்து, மதிச்சு, அப்பாவும் தங்களோட இருக்கணும்னு மனசார நினைச்சு கூட்டிட்டுப் போக வேண்டியவங்க அவங்கதானே... அம்மாவை அழைச்சிட்டுப் போயிருக்கிறதே, காரண காரியமாத்தான்ங்கிறது, அந்தம்மாவுக்கே அங்கே போனபின்னாடிதானே தெரிஞ்சிருக்கும்.... வேணுங்கிற காலம் மட்டும் வச்சிக்கிட்டு, தேவை முடிஞ்சவுடனே அனுப்பிடப் போறாங்க.... அவ்வளவுதான்... இப்போ என்னான்னா அந்தம்மா இங்கே திரும்பி வந்தாலும், அதுவும் அநாதையாத்தான் இருந்தாகணும்... ஏன்னா இவருதான் போயிட்டாரே...

    பையன் கடைசிவரை வச்சிட்டுப் போறான்... அவ்வளவு தானே.....

    அது எப்படி உறுதியாச் சொல்ல முடியும்....? மருமக என்ன நினைக்கிறாளோ அதுதானே அங்க ராஜ்யம்... பணம் செழுமையா இருக்கிற இடங்கள்ல இந்தமாதிரிப் பிரச்னைகளெல்லாம் இருக்காதுன்னு சொல்வாங்க... ஆனா இப்போ அப்படியில்லே.... வசதி வாய்ப்போட இருக்கிற இந்த இளைய தலைமுறை, தங்களோட வயசான உறவுகள் இருக்கிறதை விரும்பாதவங்களாத் தானே இருக்காங்க.....

    இந்தக் கேள்விக்கெல்லாம் இடமேயில்லை... உங்க யாருக்கும் விஷயம் தெரியாது போலிருக்கு... அந்தம்மா போன மாசமே இறந்து போயிடுச்சு.... எல்லாக் காரியமும் அங்கயே முடிச்சாச்சு... அந்த வேதனைதான் இந்த மனுஷனையும் போட்டுப் பார்த்திடுச்சுன்னு சொல்லலாம்.... அந்தச் செய்தி வந்த நாள்லயிருந்து யாரு கூடவும் இவர் பேசுறதில்லை.... சரியா சாப்பிடுறதில்லை.... டாக்டர் கொடுக்கிற மருந்தைக் கூட ஒதுக்கிட்டாரு.... சீக்கிரம் மனையாள் போன இடத்துக்கே தானும் போயிடணும்ங்கிற வெறுப்பு... தன் மனைவியைக் கூடக் கடைசியாப்பார்க்க முடியாத பாவியாகிட்டமேன்னு புலம்பிட்டிருந்தாரு... அப்புறம் சுத்தமா அமைதியாயிட்டாரு... ஒருவகைல சாவுக்கான முன்னெடுப்புன்னு அதைச் சொல்லலாம்.... மனுஷன், தானே முயற்சி பண்ணினா, தவமிருந்தா, இறப்பைக் கூடத் தன் கைக்குள்ள கொண்டுவர முடியும்ங்கிறதுக்கு இவர் ஒரு உதாரணம்......

    அங்கு நிலவிய உரையாடல்கள் எதையும் தேவகியால் தடுக்க முடியவில்லை. எல்லோரும் அவளுக்குத் தந்தை போல்தான். அவள் மேல் அவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள். அவளும் அவர்களை அத்தனை மதித்தாள். மனதில் உறுதி பூண்டு தான் எடுத்த முடிவு, மிகச் சரியான திசையில்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று அந்த விடுதியில் அமர்ந்திருக்கும் நேரங்களில் அவள் நினைக்கிறாள்.

    பத்தூ.... டேய் பத்து.... என்று பத்மநாபன் என்ற அந்தப் பெரியவரின் பெயரைச் சுருக்கி ஆவல் பொங்க அழைத்துக் கொண்டு நேற்றுக் கூட வந்த அவரது நண்பர்களின் முகங்கள் அவள் மனதில் நிழலாடியது. அவர்கள் வந்திருக்கிறார்களா என்று பார்வை ஓடியது.

    மிகப்பெரிய மாலையோடு அப்போதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருப்பது தெரிந்தது. தன் நினைப்பும், அவர்களின் வருகையும் ஒன்றியிருப்பதை ஒரு கணம் எண்ணினாள்.

    நீ மட்டும் ஏண்டா இப்டி முந்திண்டுட்டே... என்று சொல்லிக் கொண்டே போய் கண்ணாடிப் பெட்டியைக் கையால் அணைத்துக் கொண்டு ஒருவர் கதறியது இவளை உலுக்கியது. அவர் குலுங்குவதைப் பார்த்தால் எங்கே அவர் மூச்சே அடங்கிவிடுமோ என்பது போலிருந்தது.

    எதிரே பார்வை விரிந்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயதான முதியோர்களாய் ஆதரவற்று அநாதைகளாய் நிற்பது போலவும், ஒட்டு மொத்த சமுதாயமும் அவர்களின் திறமையை, சேவையை முழுக்கப் பயன்படுத்திவிட்டு ஒதுக்கி விட்டது போலவும், எல்லோரையும் ரட்சிக்க நானிருக்கிறேன், யாரும் பயம் கொள்ள வேண்டாம் என்று கத்த வேண்டும் போலவும் அவளுக்குத் தோன்றியது.

    சாமந்தி... இங்க வா.... என்றாள் தன் நினைவு வந்தவளாய். சுற்றிலும் சிதறியிருந்த மலர்களை ஒன்று கூட்டிக் கொண்டிருந்த அவள் இதோ வந்துட்டேம்மா.... என்றவாறே கையில் பிடித்திருந்த துடைப்பத்தைக் கூட வைக்க மனமில்லாமல் ஓடி வந்தாள்.

    நான் பெண்கள் விடுதிவரைக்கும் போயிட்டு வந்துடறேன்.. மயானத்துக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சில்லயா...? என்றாள்.

    சோமையா அண்ணன்ட்ட சொல்லிவிட்டுட்டேம்மா..... ரெடி பண்ணிட்டு ஃபோன் பண்றேன்னாரு....

    அவர்ட்டயிருந்து ஃபோன் வந்ததும் எனக்குச் சொல்லு.... அதிகபட்சம் ரெண்டு மணி... அதுக்கு மேலே தாண்டக் கூடாது... சரியா....?

    சரிங்கம்மா... அண்ணன் ஃபோன் பண்ணிட்டு உடனே வந்திடுறேன்னாரு.... அவர் வந்ததும் எடுத்திர வேண்டிதான்...

    கேன்டீன்ல சாப்பாடு தயாராகிட்டிருக்கா.....?

    அது எப்பவும் போல நடக்குதும்மா....

    அதுக்கில்லே.... இன்னைக்கு சிம்பிளாப் பண்ணினாம் போதும்னு சொல்லு... பாடி வெளியேறினதும், விடுதி மொத்தத்தையும் கழுவி விடணும்... சக்கியைக் கூப்பிட்டுக்கோ.... மீனாட்சியம்மாட்டச் சொல்லிடு... ரெண்டு, ரெண்டேகாலுக்கெல்லாம் எல்லாருக்கும் சாப்பாடு போட்ரணும்... அதுக்கு மேலே தாங்க மாட்டாங்க.... சரியா..?

    சரிங்கம்மா... எல்லாமும் டயத்துக்கு முடிஞ்சிடும்... நீங்க கவலைப்படாமப் போயிட்டு வாங்க...

    அவள் பதிலைக் கேட்டு தேவகி மெலிதாகச் சிரித்துக் கொண்டாள். சாமந்தி சமயத்தில் அதீதப் பொறுப்பாய்ப் பேசுவதைக் கேட்டால், சற்று அதிகப் பிரசங்கி போல் தோன்றும். ஆனால் உண்மையில் அவள் அப்படியல்ல. வெள்ளை மனது கொண்டவள். அது தேவகிக்கு மட்டுமே தெரியும்.

    நினைத்துக் கொண்டே வெளியே வந்து கேட்டைச் சாத்தி விட்டுக் காரில் ஏறினாள். வழக்கம்போல் அது தன் ஸ்டார்ட்டிங் டிரபிளைக் காண்பித்தது.

    அண்ணல் காந்தி மகாத்மா முதியோர் நல விடுதி என்ற சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பெயர்ப்பலகையைப் பார்த்த போது பத்மநாபன் நினைப்பு வந்தது தேவகிக்கு. போர்டு மாட்டிய அன்று அதற்கு ஆசை ஆசையாய் சந்தனம் குங்குமம் வைத்து, மாலை போட்டவர் அவர்தான்.

    சொல்லப் போனால் அந்தப் பெயர்த் தேர்வு கூட அவரதுதான் என்று சொல்ல வேண்டும். மகாத்மாகாந்தி முதியோர் நல விடுதி என்றுதான் இருந்தது. அண்ணல் என்பதும் காந்தி மகாத்மா என்று மாற்றியதும் அவரது விருப்பம். காந்தி மகாத்மா, எங்கள் காந்தி மகாத்மா... என்று சொல்லிக் கைதட்டிக்கொண்டே குதித்துக் குதித்துப் பாடுவார். காந்தி ஜெயந்தியின்போது முக்கியச் சொற்பொழிவு அவர்தான். அண்ணலை, அவரின் பெருமைகளை நினைவு கூர்வதில் அவருக்கு இணை அவர்தான். அந்தப் பெயர்ப்பலகையை எழுதிப் பதிப்பதற்கான மொத்தச் செலவையும் அவர்தான் ஏற்றுக்கொண்டார். இது என் நினைவு என்றார். இன்று அவரே நினைவாகி நிற்கிறார். பெருமூச்சு கிளர்ந்தது அவளிடமிருந்து.

    ஏந்தாயீ... இந்த ஓட்டைக் காரை இன்னும் கட்டி அழுதிட்டு இருக்கீங்க...? புதுசா ஒண்ணு வாங்கிக்கிடலாமில்ல....? - பாத்திரம் தேய்க்கும் சக்கி இரண்டு தினம் முன் கூறியது நினைவு வந்தது. ஓட்டைக் கார் என்று அவள் சட்டென்று சொல்லியது இவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. அதற்கு இன்னும் வேளை வரவில்லை என்று நினைத்துக் கொண்டபோது வண்டி தன்னை உசுப்பிக் கொண்டது.

    2

    அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலனுக்கு ஏனோ என்றும் போல் அன்று வேலை ஓடவில்லை. தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த காற்றாடி கூட இவன் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்பது போல் மெல்ல வட்டமடித்துக் கொண்டிருந்தது. சுத்தமாக் காத்தே இல்லையே! யாரு ஸ்லோவாக்கினது? என்று கேட்டுக்கொண்டே எழுந்து சென்று ரெகுலேட்டரைத் திருகினான். குளிர்ந்த காற்று வேகமாய்க் கீழ் இறங்கி சட்டைக்குள் புகுந்து இவனைக் குளிர்வித்தது. தலையைச் சாய்த்து வாயிலை நோக்கினான். மனம் ஒரு நிலையிலில்லை.

    நீண்ட பட்டாசாலையாய்க் கிடந்த அந்த இடம் ஒரு காலத்தில் குதிரை லாயமாய் இருந்தது என்று சொன்னார்கள். அது இப்போது அலுவலகமாய் உள்ளது. இவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அடுத்தாற்போல் ஒரு முற்றம். அங்கேதான் தொட்டியில்

    Enjoying the preview?
    Page 1 of 1