Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thannai Vendravan
Thannai Vendravan
Thannai Vendravan
Ebook300 pages1 hour

Thannai Vendravan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு இருபத்தைந்து வயது இளைஞனின் எழுபது, எண்பதுகளிலான வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியது இந்நாவல். சம்பவங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் காலமும் கருத்தும் உணர்த்தப்பட்டு நாவல் யதார்த்த நிலையில் நகர்ந்து பயணிக்கிறது. பின் நகர்ந்த காலமாய் இருப்பினும், கருத்து உள் வாங்கி இருத்தும் தன்மையானது இதன் சிறப்பு.

பிறந்தது முதல் குடும்பமே கோயிலாய் ஒன்றிக் கிடந்த ஒருவனை பணி நிமித்தம் வேரோடு வெளியூரில் பிடுங்கி நட்ட கதை இது.. வெளி உலக அனுபவமே இல்லாத ஒருவனை, தனியொருவனாக அவன் தங்கியிருக்கும் அறையும், பணியாற்றும் அலுவலகமும், சுற்றியுள்ள புதிய மனிதர்களும், அன்பு காட்டும் எளிய உள்ளங்களும், இந்த சமூகமும் எப்படிப் புதுப் புது அனுபவங்களை அவனுக்கு அள்ளித் தருகின்றன, அதன் முரண்களிலிருந்து அவன் எப்படி விலகி நின்று தன்னைக் காத்துக் கொள்கிறான், பொது நலச் சிந்தனைகளில் எப்படிப் படிப்படியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான், அவனுக்கான அடையாளம் எங்ஙனம் வேரூன்றுகிறது, நியமங்கள் மிகுந்த, முறைமையான, பொறுப்புள்ள குடும்பத்திலிருந்து வெளிப்போந்தவன் எப்படிப் பலரின் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரியவன் ஆகிறான் என்பதை மிகுந்த நிதானத்தோடு சின்னச் சின்னச் சம்பவக் கோர்வைகளோடு, வாசிப்போர் மனதில் ஆழப் பதியும் வண்ணம் கண்ணும் கருத்துமாய் முன் வைக்கும் நாவல் இது.

அனுபவங்களால் புடம்போடப்பட்டு தன்னையே வென்றவனாய் தலை நிமிர்ந்து நிற்கிறான் இதன் நாயகனான சத்யன் என்கிற சத்தியமூர்த்தி.

Languageதமிழ்
Release dateDec 23, 2023
ISBN6580129910591
Thannai Vendravan

Read more from Ushadeepan

Related authors

Related to Thannai Vendravan

Related ebooks

Reviews for Thannai Vendravan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thannai Vendravan - Ushadeepan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தன்னை வென்றவன்

    Thannai Vendravan

    Author:

    உஷாதீபன்

    Ushadeepan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ushadeepan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    1

    கண்களைத் திறந்து பார்த்தால் ஜன்னலுக்கு வெளியே தெரியும் வெளிச்சம் பார்வையில் பட்டுக் கூசும் என்கிற தயக்கத்திலும், அதற்குள்ளாக இப்படிப் படுத்து சுருண்டு கிடக்கிறோமே என்ற எண்ணம் விரியக் கூடும் என்ற சுணக்கத்தில் கைகளையும், கால்களையும் மடக்கி, ஒரு பக்கமாய் ஒருக்களித்துக் கொண்டு அறையில் முடங்கிக் கிடந்தான் சத்யன் என்கிற சத்தியமூர்த்தி.

    ஊரிலுள்ள அம்மா, அப்பா தங்கைகளின் நினைவு அவனை வாட்டிக் கொண்டிருந்தது. குடும்பத்தையே அவனோடு பெயர்த்துக் கொண்டு வந்திருந்தால் நிம்மதியாய் இருந்திருப்போம் என்று தோன்றியது. ஆனால் அது சாத்தியமேயில்லை. அப்படி வெளியூர் வந்து தன்னந்தனியே இருப்பது என்பது அவனுக்குப் புதிது. அவனது இருபத்தியாறாவது வயதில் இது கிட்டியிருக்கிறது. கூட்டுக்குள் இருந்து வெளியே வந்து எந்தத் திசையில் எப்படிப் பறப்பது என்று இன்னும் புலனாகாத தருணம். வெளியூர் வந்து இதுநாள் வரை எங்கும் தனியே இருந்ததில்லை. இதுவே முதல் முறை. புதிய இடம். புதிய முகங்கள்... எப்படிப் பேசுவது, என்ன பேசுவது... என்று புரிபடாத இனம் புரியாத தயக்கம். கூச்சம். பயம்... கூடியானவரை யாருடனும் அதிகம் பேசிக்க வேண்டாம் என்று அம்மா சொன்ன அறிவுரை. அவங்களாப் பிரியமா நெருக்கமாப் பேசி வந்தா மட்டும் பதிலுக்குப் பேசு... நீயா ஒண்ணும் சொல்லிக்க வேண்டாம்... தெரிஞ்சிதா? - ச்சே... இப்டி வெளியூர் போட்டுட்டாங்களே... அநியாயமாப் பிரிஞ்சி வர வேண்டியதாப்போச்சே... - சத்யனின் மனம் இன்னும் சமாதானமாகவில்லை.

    அதுக்காக உனக்கு வேலையையும் உள்ளூர்லயேவா போட்டுத் தருவாங்க... போய்ட்டு வாப்பூ... கிளம்பு... கிளம்பு... – தனக்கும் நண்பனோடு சேர்ந்து வேலைக்குத் தேர்வாகவில்லையே என்ற வருத்தம், கவலை சிறிதுமில்லாமல், வாழ்த்துச் சொல்லி அனுப்பிய நண்பன் ராஜகோபால். வேலையில் சேரும்முன் ஒரு முறை பழனி கோயிலுக்குச் சென்று விடுவோம் என்று வேண்டுதலை நிறைவேற்ற மனமுவந்து உடன் கிளம்பி வந்தான். அவன் நிலையில் தான் இருந்திருந்தால் தனக்கு அந்த மனசு வந்திருக்குமா என்று இவன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

    அடுத்த வருஷம் இன்னும் கொஞ்சம் அடிஷனல் டெக்னிகல் க்வாலிஃபிகேஷனோட எழுதினேன்னா உனக்கும் கிடைச்சுடும் கண்டிப்பாக் கிடைக்கும்பார்... என்றான் இவன்.

    வாழ்வின் புதிய அனுபவமாய் தனிமையை எதிர்கொள்ள இன்னும் சத்யனின் மனம் தயாராகவில்லை. இந்தத் திசையை நோக்கிப் பறந்து செல்... என்று காலம் அவனுக்கு வழி காண்பித்திருந்தது. காலையில் நாலு மணிக்குக் கிளம்பும்போதே தயங்கித் தயங்கி இன்னைக்கு லீவு போட்டுடட்டாம்மா... என்று அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கக் கேட்டது நினைவுக்கு வந்தது.

    இதுக்கெல்லாம் இப்டி அழுவாங்களா...? இங்கயிருக்கிற திருச்சிக்குத்தானே போறே... பஸ் ஏறினா மூணு மணி நேரம்... அடுத்த வாரம் வந்துடப் போறே... இப்டியெல்லாம் மனசை வருத்திக்கப்டாது... உடம்பு பலவீனமாயிடும்... தெரிஞ்சிதா...? – அம்மா சொன்னாளே தவிர அவளும் கலங்கியிருப்பதை இவன் பார்த்தான்.

    தைரியமாப் போயிட்டு வா... நல்லா வேலை செய்யணும்... எல்லார்ட்டயும் நல்ல பேர் எடுக்கணும்... இதுவரைக்கும் பார்த்தவாளவிட ஒரு படி மேலேயிருக்கணும்... நேரே ரூமுக்குப் போய் இந்த டிபனைச் சாப்டுட்டு ஆபீஸ் போ... மத்தியானத்துலேர்ந்து வெளில வழக்கம்போல சாப்டுக்கோ... சரியா...?

    ஏம்மா,மதியத்துக்கும் ஏதாச்சும் லெமன் சாதமாச்சும் பண்ணிக் கொடுக்கக் கூடாதா? உன்னை நினைச்சிட்டே சாப்டுப்வேன்ல...

    .நேத்துப் பூராவும் அம்மாவுக்கு ஒரே தலைவலி... போடு போடுன்னு போட்டுடுத்து... ராத்திரிப் பூரா எனக்குத் தூக்கமில்லே... முடிலப்பா... அடுத்தவாட்டி பண்ணித் தர்றேன்... சரியா?

    சரி... சரி... பரவால்ல... நா வெளிலயே சாப்டுக்கிறேன்... நீ நல்லா ரெஸ்ட் எடு... அது போதும்... -இவன் சொல்ல அம்மா செல்லமாய் இவன் கன்னத்தை வருடிக் கொடுத்தாள்.

    ஓட்டல்ல எண்ணெய் பலகாரம் அதிகம் சாப்டாதே... வயித்துக்காகாது... தெரிஞ்சிதா... ஆவில வெந்த ஐட்டமா, இட்லி, இடியாப்பம்... இப்டியா செலக்ட் பண்ணி சாப்பிடு... ஏன் சொல்றேன்னா உன் வயிறு கொஞ்சம் கோளாறு பண்ணும்... கிழங்கு ஐட்டம், குருமால்லாம் ஒத்துக்காது உனக்கு... அவங்க என்ன எண்ணெயைப் போடுவாங்களோ...? கவனமா இருந்துக்கோ... சுட்ட எண்ணெய்ல செய்வாங்க... முத நாள் மிஞ்சின எண்ணெயோட... புது எண்ணெயையும் கலந்து கட்டி... ஊத்துவாங்க... அது நிறையப் பேருக்கு ஒத்துக்காது... கவனமாயிருக்கணும்...

    சரிம்மா... இட்லி சாப்பிடலாம்... இடியாப்பம்லாம் அங்க கிடைக்காது... அது கொஞ்சம் பழைய ஓட்டல்னு வச்சிக்கயேன்... சைடுல நாங்க குடியிருக்கிற அட்டேச்டு லாட்ஜே பழசாத்தான் இருக்கும்... அதுனாலதான் அங்க வாடகையும் கம்மி... நமக்கும் அதுதான் சரிப்படும்னுதான் அங்க போனது. என்னை மாதிரி வெளியூர்லர்ந்து வர்றவங்களெல்லாம் அந்த லாட்ஜைக் கேள்விப்பட்டு முதல்ல அங்கதான் வருவாங்களாம். அங்கே ரூம் காலியில்லேன்னாத்தான் வேறே தேடிப் போவாங்களாம்... அடுத்த வாரம் வரச்சே ஜிலேபி வாங்கிட்டு வரட்டா... அந்தக் கடைல நல்லாயிருக்கும்... ஜீரா தோயத் தோய பளபளப்பா அடுக்கியிருக்கிற அழகைப் பார்க்கணுமே... எனக்கு உங்க ஞாபகம்தான் வந்தது. கிளம்புற அன்னிக்குப் பார்த்தேன்... ஒண்ணு கூட இல்லை... தீர்ந்து போயிடுச்சி... அதான் அல்வா மட்டும் வாங்கிட்டு வந்தேன்...

    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... நீ மட்டும் வந்தாப் போதும்... தெரிஞ்சிதா... காசைக் கரியாக்காதே... சேமிச்சு வை... அங்கே ஏதாச்சும் பேங்க்ல ஒரு அக்கௌன்ட் ஓப்பன் பண்ணு... தனியாப் போட்டு வை... திடீர்ச் செலவுக்கு என்னைக்காச்சும் உதவும்...

    போம்மா... நீ எப்பப் பார்த்தாலும் இப்டித்தான் சொல்லுவே... இப்டிச் சொல்லிச் சொல்லி, எதாச்சும் செலவுன்னு போனாலும் எனக்குக் கைவர மாட்டேங்குது... இது தேவையான்னு ஆயிரம் யோசனை வருது... ரொம்பத் தேவையானதை வாங்கவே தயக்கமா இருக்கு...

    நல்லதுதான் அந்தப் பழக்கம்... இப்போ நீ திருச்சிக்குப் போய் மூணு மாசம் இருக்குமா? இப்போ ஒரு நிதானத்துக்கு வந்திருக்க வேண்டாமா? சேவிங்க்ஸ்ங்கிறது கொஞ்சமாச்சும் வேணும்... பழகிக்கோ... அப்புறம் இன்னொண்ணு... வாரா வாரம் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணும்... மறந்துடாதே...! –அம்மாவின் அக்கறையே தனிதான்.

    அடுத்த வாரம் வரத்தானே போறேன்னு இப்பத்தானே சொன்னே... இங்க வந்து குளிச்சிக்கிறேன்...

    ஒரு பேச்சுக்குச் சொன்னேன்டா கண்ணா... ஒரு வேளை வேலை ஜாஸ்தியாயிடுச்சின்னா, வர முடியாமப் போயிடுமோல்லியோ... அப்போ? எண்ணெய்க் குளியலை விட்டுடக் கூடாதில்லியா, அதுக்காகச் சொன்னேன்...

    அதெல்லாம் இல்ல... கண்டிப்பா வந்துடுவேன்... அப்டி வேலை அதிகமிருந்தா தினசரி லேட் அவர்ஸ் உட்கார்ந்து முடிச்சிடுவேன்... அவுங்களுக்கும் தெரியும் நான் ஊருக்குப் போவேன்னு... அதுனால என்னைக் கட்டாயப் படுத்த மாட்டாங்க...

    அப்டீன்னாச் சரி... ஆனாலும் அவா மனசை முறிச்சிண்டு புறப்பட்டு வரப்படாது... ஏன்னா அங்கேயிருக்கிறவாளெல்லாம் சனிக்கிழமை ட்யூட்டிக்கு வருவான்னு சொல்லுவியே... அதுனால சொல்றேன்...

    அவுங்க உள்ளூர்லயே இருக்காங்க, வர்றாங்க... நான் வெளியூரு... அவுங்களும் வெளியூரா இருந்தா என்னை மாதிரித்தானே புறப்பட்டுப் போவாங்க...! அதனாலதானே மனசோட என்னை அனுப்பறாங்க?

    அம்மா சிரித்துக் கொண்டாள். அந்தச் சிரிப்பில்தான் எத்தனை கருணை? குழந்தை மனதை எந்தவிதத்திலும் புண்படுத்திவிடக் கூடாது என்பதில்தான் எத்தனை அக்கறை? அம்மாவிடம் கிடைக்கும் கருணையும் அன்பும் வேறெங்கிலும் கிடைக்குமா? கிடைத்தாலும் அதற்கு ஈடாகுமா?

    சரி... சரி தைரியமாப் போயிட்டு வா... – திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேர்ந்தான் இவன். இருளும் ஒளியும் கலந்த விடிகாலை நாலரை மணிவாக்கில் அப்படிக் கிளம்பி வந்ததும், தான் தெருத் திரும்பி மறையும்வரை அம்மா வாசலிலேயே தன்னைப் பார்த்துக் கொண்டு நின்றதும், தானும் விடாமல் பத்தடிக்கொருதரம் அம்மாவைத் திரும்பிப் பார்த்ததும், கடைசியாகத் தெரு முடிகையில் நீளமாய்க் கையை உயர்த்தி அம்மாவுக்கு டாட்டா காண்பித்ததும், இந்த நிமிடத்தில் கூட அவன் கண் முன்னே நின்று கொண்டேயிருக்கிறது. கண்களை மூடியிருப்பதால் அந்த இரவும் பகலுமான காலைக் காட்சி அவன் முன்னே அழியாமல் விரிந்து கிடந்து அவனை ஆறுதல் படுத்துகிறது.

    அம்மாவிடம் பேசியதில் ஒரு விஷயம் மட்டும் இன்னும் நெருடுகிறது. ஆபீஸ்ல இருக்கிறவங்க மனசை முறிச்சிண்டு ஊருக்குப் புறப்பட்டு வரக்கூடாது... என்றாளே...!

    வாரா வாரம் இப்டி ஊருக்குப் போனீங்கன்னா எப்டி? நாங்கள்லாம் சனிக்கிழமை வர்றோமில்ல... வந்து இந்த ஸ்டாக் ஃபைல்ஸ் எல்லாம் டைப் பண்ணி முடிக்க வேணாமா? அப்பப்போ ரெகுலர் டிராஃப்ட்ஸோட கொஞ்சம் கொஞ்மாத் தீர்த்தீங்கன்னாத்தான்... சேராம இருக்கும்... ஸ்டாக் ஃபைல்ஸை பிறகு டைப் பண்ணிக்கலாம்னு வச்சீங்கன்னா சேர்ந்திட்டே போயிடும்... தினசரி சாயங்காலம் ஆறு மணிக்கு இங்க வந்து ஒரு மணி நேரம் வேலை செய்திட்டுப் போங்க... – சற்றே கெடுபிடியான நிர்வாகப் பிரிவு கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் இப்படிக் கூறுவார் என்று இவன் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை.

    பணிமனை சம்பந்தப்பட்ட அலுவலகம் தனி. நிர்வாக அலுவலகம் தனி என்றிருந்தது அங்கே. பணிமனை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குத்தான் ஸ்டெனோ. அலுவலர் அங்குதான் இருப்பார். நிர்வாகப் பிரிவிலிருந்து கோப்புகள் அங்குதான் வரும். என்றும் அவர் அங்கு சென்று இவன் பார்த்ததில்லை. இவனுக்கும் பணிமனை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் வேலை பார்ப்பதுதான் பிடித்திருந்தது. அங்குதான் பணிமனைப் பணியாளர்கள் நிறைய இருந்தார்கள். மெக்கானிக், வெல்டர், டர்னர், எலெக்ட்ரீஷியன், ப்ளம்பர், டிரைவர், என்று வெவ்வேறு வகையில் மொத்தம் ஐம்பது பணியாளர்கள் அங்கு பணியாற்றினர். அதுபோக அலுவலகம் தனியே அங்கு இயங்கியது. அந்தப் பணியாளர்களுக்கான சர்வீஸ் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தல், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்தல், அவர்களுக்கான பணத் தேவைகளைப் பட்டியலிட்டுப் பெற்றுக் கொடுத்தல், இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிரதி மாதமும் அவர்கள் சம்பளம் பெறும் இடமாகவும் அந்த அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது.

    பணி நிமித்தம் அவர்களுக்கு நிறையக் குறைகள் இருப்பதாய்த் தோன்றியது. அவை தீர்த்து வைக்க முடியாத சிக்கல் நிறைந்தவையாய் இருப்பதாயும், அதற்காக அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதும், விதி முறைகளுக்கு அப்பாற்பட்டு எதுவும் செய்ய முடியாத நிலையில் அடிக்கடி அலுவலகத்தில் சண்டை போடுவதும். அந்தச் சண்டையின்போது கைகலப்பு அளவுக்கு அவை உயர்ந்து உச்சத்தைத் தொட்டு விடுவதும்... பிறகு விலக்கி விடப்பட்டு சமாதானமாகப் போவதும் அங்கே வாடிக்கையாய் இருப்பதைக் காண முடிந்தது. மிகுந்த பணிவோடும், உதவி செய்யும் நோக்கோடும் இயங்கும் அந்தப் பணியாளர்கள் சமயங்களில் தரம் மீறி நடந்து கொள்வது இவனுக்குள் பயத்தை உண்டு பண்ணியது. அவர்களோடு பழகுவதா வேண்டாமா என்கிற தயக்கத்தை இவனிடம் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது. அதே சமயத்தில் அவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்துகொடுக்கும் இடத்தில் தான் இல்லையே என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது. இதெல்லாவற்றையும் மீறிய நெருக்கதலாய் இருந்தது நிர்வாகப் பிரிவு கண்காணிப்பாளரின் எதிர்பார்ப்பும், ஆணையும்...

    ஆபீசருக்குப் பி.ஏ.வா இருக்கீங்க... வெறும் ஸ்டெனோ இல்ல நீங்க... அதனால யாருக்கும் பயப்படணும்ங்கிற அவசியமில்ல... அதுமாதிரி நடந்துக்குங்க... -அலுவலக நண்பர்கள் சொல்லத்தான் செய்தார்கள். நேற்று சர்வீசுக்கு வந்தவன் எப்படி அப்படி இருக்க முடியும். அனுபவங்கள் சேகரம் ஆக வேண்டாமா? முதலில் அந்த அலுவலக நடைமுறைகள் பழக வேண்டாமா? என்ன போகிறது, என்ன வருகிறது என்பது தெரியாமல் ஆழம் தெரியாமல் காலை விட முடியுமா? நண்பர்கள் தனக்கு அறிவுரை சொல்கிறார்களா இல்லை உசுப்பி விடுகிறார்களா? எனக்கு நானே சுய நம்பிக்கை கொள்ள வேண்டாமா? ஒருவர் சொல்கிறார் என்பதற்காகச் செய்து விட முடியுமா? முதலில் என்னை, என் தேவையை, எனது அவசியத்தை அலுவலரிடம் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டாமா? படிப்படியாகத்தான கால் வைக்க வேண்டும். யார் பேச்சையும் கேட்டுக் கொண்டு முணுக்கென்று முதிர்ச்சியில்லாமல் எதுவும் செய்துவிடக் கூடாது. மனதுக்குள் உறுதி கொண்டான் சத்யன்.

    அந்தாளு உம்மேல ஒரு கண்ணு வச்சிருக்கார்னு சொன்னேன்ல... சரியாப் போச்சா... என்றான் பாலசுப்ரமணி. மாதேஸ்வரனை அவனுக்கு அறவே பிடிக்காது என்று தெரிந்திருந்தது இவனுக்கு. தன் வேலையில் சின்சியராக இருப்பவர்கள், கெடுபிடியாக இருப்பவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. மிகவும் பொறுப்பாக இருந்து பணியாற்றி நல்லபெயர் எடுத்து வந்த மூத்த தலைமுறை சற்று அப்படித்தான் இருக்கும் என்கிற நியதியை மனம் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைத் தங்களின் சிறப்பான பணியால் கவர முடியும், அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்கிற நேர்மறையான எண்ணம் வருவதில்லை. மாறாக இவன் யார் தன்னை அடக்குவதற்கு என்கிற முரணான எண்ணமே தலையெடுத்து, எனக்கு ஆர்டர் போடுறதுக்கு நீங்க யார்... அதான் எங்களுக்குன்னு ஒரு கண்காணிப்பாளர் இருக்காரே... அவர் சொல்றதத்தான் நான் கேட்க முடியும்... என்பதாக இயங்கிக் கொண்டிருந்தான் பாலசுப்ரமணி.

    கிடா மீசை வைத்திருப்பான். ஆனால் பேச்சு அமுங்கி வெளிப்படும். ரொம்பவும் பணிவாய் இருக்கும் பதில்கள். மீசைக்கும் ஆளுக்கும் துளி சம்பந்தமில்லை. வேலை நன்றாய்ச் செய்வான். தானுண்டு, தன் வேலையுண்டு... ஆனால் அநீதி என்று தோன்றுவதற்கு அடங்காத தன்மை. உறுதி. இதுதான் அவனது மனநிலை.

    இன்னொரு க்ளார்க் ரவிச்சந்திரன் அப்படியல்ல. ஆபீஸர் வேலை எதைச் சொன்னாலும் தட்ட மாட்டான். அலுவலருக்கு ரயில் டிக்கெட் எடுத்து வருபவன் அவன்தான். அவரை ஏற்றிவிட, கூடக் கிளம்பி விடுவான். டிக்கெட் போடப் போறேன் என்று ஆபீசுக்கு டிமிக்கி கொடுப்பது அவன் வழக்கம். நேரம், காலம் என்று எதையும் அவனிடம் கேட்க முடியாது. கணக்காகப் பார்த்தால் தானும், டைப்பிஸ்ட் நாராயணனும், ஒர்க் ஷாப் கண்காணிப்பாளர் தியாகராஜனும் இன்னும் சிலரும்தான் அந்த அலுவலகத்திற்கு நேரத்திற்கு வேலை பார்த்து, கடமையைச் சீராக நிறைவேற்றுபவர்கள் என்று சொல்லலாம் என நினைத்துக் கொண்டான் சத்யன்.

    ஒர்க் ஷாப் பிரிவுக் கண்காணிப்பாளர் தியாகராஜன் அப்படிப்பட்டவரல்ல. உண்மையிலேயே அவர் தியாக-ராஜன்தான். மாலை சரியாக அஞ்சுக்கு இருக்கையைவிட்டு எழுந்ததாக ஒரு நாள் கூடக் கேட்டதில்லை. அஞ்சேகாலுக்கெல்லாம் அந்தப் பணிமனை காலிக் கூடாரமாகிவிடும். என்றாவது அலுவலர் முகாம் போய்விட்டு அந்த நேரத்திற்குத் திரும்பினார் என்றால் இருக்க வேண்டி வரும். சிலநாட்கள்.ஃபோனில் சொல்லிவிடுவார்... ஸ்டெனோவை மட்டும் இருக்கச் சொல்லுங்க...

    எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியர்... சுந்தரபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். இரக்கச் சிந்தை உள்ளவர்... ஒர்க் ஷாப்பைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர்கள் வயதில் சின்னவர்கள் என்பதால் அத்தனை பேரையும் வாடா, போடா என்றுதான் அழைப்பார்...

    ஒரு நாள் இவன், உடன் பணியாற்றும் ரவிச்சந்திரன், நாராயணன் ஆகியோர் ஒட்டு மொத்தமாக மணி அஞ்சுக்குக் கிளம்பியபோது, வாசலில் ஜீப் வந்து விட்டது. அதிலிருந்து குதித்த சீஃப்... என்னடா கம்பி நீட்டப் பார்க்கிறீங்களா... போடா உள்ளே... போ... போய் எல்லாரும் சீட்ல உட்காருங்க... என்று கையை இருபக்கமும் நீட்டி அணைத்து அத்தனை பேரையும் வெளியே விடாமல் இருக்கைக்குத் திருப்பி அனுப்பியது இப்பொழுது நினைத்தாலும் இவனுக்கு வேடிக்கையாய் இருக்கும். ஒரு அலுவலர் தன் பணியாளர்களிடத்தில் இத்தனை சோஷியலாய் இருந்தால் அவர்களுக்கு இவர் மேல் என்ன பயம் இருக்கும்? என்று நினைத்துக் கொள்வான். ஆபீஸ் நிர்வாகத்தின் கட்டுக் கோப்புக் குலைந்து போகாதா? என்று எண்ணுவான்.

    அந்த அலுவலகத்திலிருந்துதான் அவனுக்கு அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் வந்தது. இப்பொழுதும் கூட சமயங்களில் அந்த ஆணையை எடுத்துப் படித்துப் பார்ப்பான். ஆங்கிலத்தில் இருந்த அந்த ஆணையில் நாலைந்து இடங்களில் இலக்கணப் பிழை இருந்ததை நினைத்துச் சிரித்துக் கொள்வான். கண்காணிப்பாளர் கூடச் சரியாகப் படிக்காமல், அலுவலரும் கையெழுத்துப் போட்டு, ஒரு ஆணை இப்படி வந்த அந்தக் கணமே இப்படியான அந்த அலுவலகம் எப்படி இருக்கக் கூடும் என்பதாக இவன் எண்ணமிட்டிருந்தான். இவன் ஒன்றும் அத்தனை ஆங்கில அறிவு உள்ளவன் இல்லை என்றாலும், எழுதியிருப்பது தவறு என்று கண்டு கொள்ளக்கூடிய திறன் இருந்ததும், அப்படியான வரைவுகள் இப்பொழுதும் டைப் செய்வதற்கு அவனிடம் வருகையில் அந்தத் தவறுகளை இவனே திருத்தி சரியாக டைப் செய்து அனுப்புவதும் அவனுக்கு அந்த அலுவலகத்தில் ஒரு பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

    பெரும்பாலும் வரைவுகள் தமிழில்தான் அங்கு நடைமுறையாய் இருந்தன. தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அரசின் வலியுறுத்தலாகவும் இருந்தது. அதற்காக அரசாணையே இடப்பட்டிருந்தது. ஆனால் தமிழில் எழுதப்படும் வரைவுகளையும் திருத்தித்தான் அனுப்ப வேண்டும் என்கிற அவலநிலைதான் அங்கிருந்தது. எழுத்துப் பிழைகளும், சந்திப் பிழைகளும், வாக்கிய அமைப்புகளுமே சரியில்லாமல் இருந்தன பலரிடம். ஆனால் தாங்கள் சரியாக எழுதுவதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஒவ்வொரு முறையும் கண்காணிப்பாளர் திருத்தி அனுப்புவதை மறுமுறை தவறின்றிப் பின்பற்றும் பழக்கமும் அவர்களிடம் இல்லாதிருப்பதைப் பார்க்க முடிந்தது. கண்காணிப்பாளரையும் தாண்டி வரும் கோப்புகளில் உள்ள வரைவுகளில் சந்திப்பிழைகளை இவன் திருத்துவதும், வாக்கியத்தின் அர்த்தங்களை ஒருமை, பன்மைகளைக் கணக்கில் கொண்டு வார்த்தைகளைத் திருத்துவதும் முக்கியமானதாய் இருப்பதையும், அவற்றை ஏன் கண்காணிப்பாளர் அத்தனை கவனமாய் எடுத்துக் கொள்வதில்லை என்கிற கேள்வியும் இவனுக்குள் இருந்துகொண்டேயிருந்தது. எத்தனை தடவைதான் திருத்துவது என்கிற அலுப்பாய் இருக்குமோ என்று நினைக்க

    Enjoying the preview?
    Page 1 of 1