Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amutham Viritha Valai
Amutham Viritha Valai
Amutham Viritha Valai
Ebook170 pages59 minutes

Amutham Viritha Valai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தான் அறிமுகப்படுத்திய கதாநாயகி, தனக்கே வினையாய் வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு என்று அவளோடு ஒப்பந்தம் போடாதது தவறாய்ப் போனது என்பதை அவன் உணர்கிறான். அவளின் மார்க்கெட் பிய்த்துக் கொண்டு போவதை எண்ணி பொறாமை கொள்கிறான். இவனிடம் இருந்த பி.ஏ., அவளிடம் சென்று ஒட்டிக் கொண்டதை எண்ணிப் பொறுமுகிறான். சொத்துக்களை விற்று, பங்களாவை அடகு வைத்து ஒரு சொந்தப்படம் எடுத்து அதன் மூலம் எப்படியும் மறுபடியும் நிமிர்ந்து விட வேண்டும் என்கிற வெறி வருகிறது. அதற்குள் வில்லன் வேடம், வயதானவன் வேடம் என்று வந்து கேட்பவர்களிடம் தன் நிலை கருதி ஒப்புக் கொள்ள முடியாமல் தவித்து, பொறாமை கொள்கிறான். அது அவன் அறிமுகப்படுத்திய அவளைக் கொல்வதில் சென்று முடிகிறது. பிரபலமாய் இருந்த காலத்தில் அவனையும், அவளையும் இணைத்து வெளி வந்திருந்த ஒரு “கிசு...கிசு...” அதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580129905139
Amutham Viritha Valai

Read more from Ushadeepan

Related authors

Related to Amutham Viritha Valai

Related ebooks

Reviews for Amutham Viritha Valai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amutham Viritha Valai - Ushadeepan

    http://www.pustaka.co.in

    அமுதம் விரித்த வலை

    சிறுகதைகள்

    Amutham Viritha Valai

    Sirukathaigal

    Author:

    உஷாதீபன்

    Ushadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ushadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அமுதம் விரித்த வலை

    2. அவன் அப்படித்தான்...!

    3. புனலும் கனலும்

    4. ரகசியம் பரம ரகசியம்

    1. அமுதம் விரித்த வலை

    1

    அன்று பிரேம்குமாருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. குறிப்பிட்ட காட்சிக்கு இன்று ஐந்து டேக்குகள். புதிதாகத் திரைக்குள் புகுந்த புது முகங்கள் கூட இன்று தப்புவதில்லை. அடித்துத் தூள் கிளப்புகிறார்கள். ஆனால் எனக்கு என்ன வந்தது? ஏன் இன்று கவனம் இப்படிச் சிதறுகிறது? அந்தக் காட்சியில் அந்தப் புதுமுகப் பெண்ணும்தான் எத்தனை முறை தன்னிடம் அடி வாங்கும்?

    பரவால்லண்ணே... போதும்... சரியாத்தான் வந்திருக்கு... - தயங்கிக்கொண்டே கூறிய துணை இயக்குநர் விதேந்திரனை முறைத்தான் பிரேம். இவன் யார் இதைச் சொல்ல? எப்படி வந்தது தைரியம்? யார் கொடுத்தது? எது கொடுத்தது? இவனெல்லாம் பேச ஆரம்பித்து விட்டானா? எனக்கான காலக்கேடுதானா இது? சே...! என்னவெல்லாம் தோன்றுகிறது இந்த மனதில்? இருக்கும் இடம் தெரியாமல் நிற்கும் ஆளெல்லாம் வாயைத் திறக்கிறான்கள்?

    மனசு சலித்தது பிரேம்குமாருக்கு. இருந்தாலும் வெளிக்காண்பித்துக் கொள்ள அவன் அப்போதைக்கு விரும்பவில்லை.

    உனக்குப் போதும்யா... நீ கூடவே இருந்து எப்பவும் என்னைப் பார்க்கிறவன்... ஆனா என் ஆட்களுக்கு? அவுங்களுக்கு சரியான தீனி போட்டாகணுமே... எதிர்பார்த்திட்டே உட்கார்ந்திருப்பாங்களே... மனசில அவ்வளவு ஆசையைத் தேக்கி வச்சிட்டுக் காத்திருப்பாங்களே... அவுங்கள நான் ஏமாத்தக் கூடாதுல்ல... - வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஒரு உதவி இயக்குநரிடம் சகஜமாகப் பேசியிருக்கிறான் பிரேம்குமார். அவனுக்கே ஆச்சரியம். இவனின் நெருங்கிய பேச்சில் அவன் முழித்துப் போனான். மேற்கொண்டு வார்த்தைகளே வரவில்லை அவனுக்கு.

    ஒவ்வொரு முறையும் தனக்குத் திருப்தி ஏற்படாத காட்சிகளில், இப்படித்தான் சொல்வான் பிரேம். அப்படியே பார்த்துப் பார்த்து, உயிரைக் கொடுத்து உழைத்து மேலே வந்தவன் அவன். உண்மையான உழைப்புக்கு என்றும் பலனில்லாமல் போகாது என்பதில் அதீத நம்பிக்கை உள்ளவன். ஆனால் அதற்கும் ஒரு காலம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது போலும்... அதனால்தான் தனது முந்தைய இரண்டு சொந்தப் படங்களும் பின்னுக்கு இழுத்துக் கொண்டனவோ... அதற்கும் முந்தைய பிற கம்பெனிப் படங்கள் ஊத்திக் கொண்டனவோ? திரும்பத் திரும்ப மனதுக்குள் தோன்றித் தோன்றித் துடிக்க வைக்கும் அவமானங்கள் இவை. அடுத்தடுத்து எத்தனை வெற்றிகளைக் கொடுத்தவன் அவன். வரிசையாகப் பதினைந்து இருபது என்று வெற்றி மேல் வெற்றி வந்து என்னைச் சேரும் என்று அயராது உழைத்துக் களைத்தவனாயிற்றே! அவனுக்கா தோல்வி? யாரிட்ட சாபம் இது? எவரிட்ட பொல்லாங்கு?

    களைத்தவனா? நானா களைத்துப் போனேன்? அன்று போல்தானே இன்றும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். பின் எது என்னை இப்படிப் பின்னுக்குத் தள்ளியது? விடை தெரியா கேள்விகள் பல. அதற்கு முக்கிய காரணம் அவள். அந்த மேகலா. நான் கை பிடித்து அழைத்து வந்தவள். கூடவே வைத்துக் கொண்டு உயரத்தைக் காண்பித்து மேலே போய்விடு என்று தூக்கி உச்சிக்கு அனுப்பி இப்பொழுது அங்கிருந்து என்னைப் பார்ப்பவள். என்னவொரு கொடுமை? காலம் இப்படியுமா வேடிக்கை காட்டும்?அவளோடு கை கோர்த்த படங்கள் அத்தனையும் வெற்றி. என்னுடன் சேர்ந்து அவள் மார்க்கெட் பிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விட்டது. கைக்கு எட்டாத தூரம் போய்விட்டாள் அவள்.

    நெஞ்சுக்குள் இனம் புரிந்த குரூரம்...! பொறாமை அறுத்தது நெஞ்சை. பார்ப்பவர் எல்லாரிடமும் அநாவசியமாய் குற்றம் கண்டு பிடித்தது. தீக்குழம்பு மனதுக்குள். கொதித்துக் கொண்டிருக்கிறது தளதளவென்று. எதை ஊற்றி அணைப்பது என்று புரியாமல் தவிக்கிறேன் நான். இவன் என்னடாவென்றால் எனக்கு ஆறுதல் சொல்கிறான். நான் மட்டும் பழைய பிரேமாய் இருந்திருந்தால் இவன் வாய் இப்படி நீண்டிருக்குமா? அல்லது இந்த இடத்தில்தான் இந்நேரம்வரை நின்றிருக்க முடியுமா? எல்லாம் காலத்தின் கோலம்... நேரக் கொடுமை...!

    அப்படி என்ன வீழ்ச்சி வந்து விட்டது தனக்கு. வெளியே ஒன்றும் அதற்கான பரபரப்புத் தெரியவில்லையே...? எல்லாம் வழக்கம்போல்தானே நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்றாவது முயற்சியும் தோல்வியில் முடிந்து விடுமோ? வந்தது வரட்டும், போனது போகட்டும் என்று இறங்கியாயிற்று. வெற்றி இலக்கை மீண்டும் தொட்டாக வேண்டும். அதை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். இடையில் எது வந்து வந்து தடுக்கிறது? என்ன பயம் அது? ஏன் வந்தது? இரண்டு தோல்வி மூன்றாவது வெற்றிக்கான படியாக அமையக் கூடாதா? அதுவும் தோற்றுத்தான் போகும் என்று ஏன் இப்பொழுதே மனதுக்குள் மண்டிப் போக வேண்டும்? ஏன் ஊமையாய் அழ வேண்டும். தாழ்வுணர்ச்சி வெற்றியைப் பூமிக்குள் புதைத்து விடுமோ? என் முனைப்பு மழுங்கிப் போய்விட்டதோ?

    நினைப்பது சரி? ஆனால் உலகம்? அந்த ரசிகர்கள் உலகம்? என்னையே நினைத்துக் கொண்டிருக்குமா? என்னை மீண்டும் எழுப்பி நிறுத்துமா? சும்மாவானும் தூக்கி நிறுத்து என்றால் எப்படி? கொடுப்பதைக் கொடுத்தால்தானே தூக்கும்? கொடுப்பதைக் கொடுத்தால் அவர்கள் என்ன தூக்குவது, அது தானே உயர்ந்துதானே நிற்கும்? அப்படியானால் இதுநாள்வரை தான் அவர்கள் மூலம் நிற்கவில்லையா? அவர்கள்தானே கூட்டங்கூட்டமாய்ப் போய் அதிர வைத்தார்கள்? அதை மறந்து விட முடியுமா? அந்தப் பரபரப்பை உலகறியச் செய்தவர்கள் அவர்கள்தானே? அப்படித்தானே நான் உச்சிக்குப் போனேன்? பிறகு எப்படிக் கீழே விழுந்தேன். ஏன் இன்னும் எழமுடியாமல் தவிக்கிறேன்? என்னை இந்த ரசிகர் உலகம் மறந்துவிட்டதா? போதும் என்று அலுத்துவிட்டேனா நான்?

    உன்னைப்பற்றியே இந்த உலகம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா? மற்றவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? இப்போது எந்தப் பத்திரிகைக்காரனாவது எழுதுகிறானா? எதிலாவது உன் செய்திகள் வருகின்றனவா? காலம் மாறிப்போச்சுய்யா... தோல்விப்படமாக் கொடுத்தேன்னா? எவன் கவனிப்பான் உன்னை? சரக்கு நல்லாயிருந்தாத்தானே விலை போகும்? சும்மாவானும் வித்துப்புடணும்னு குதியாட்டம் போட முடியுமா? இது குதிரை ரேசு. தெரியும்தானே...? ஜெயிக்கிற குதிரை மேலதான் கட்டுவாங்க... அது ஆம்பளையா, பொம்பிளையா கணக்கில்லே... காசப்போட்டா டபுளா எடுக்கணும்... அவ்வளவுதான்... உனக்குப் போட்டியா பறந்தடிக்கிறாளே ராக்கி... அவ மார்க்கெட் இப்போ எங்க இருக்கு தெரியுமில்ல? நீ பண்ணுன போலீஸ் வேஷத்தப் பூராவும் இப்போ அவுளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க... பொம்பளப் போலீசு எங்கயாவது இத்தனை சாகசம் செய்ய முடியுமா? முடியும்... ஏன் முடியாது? சினிமாவுல செய்யலாமுல்ல... யாரு தடுக்கப் போறா? தீமையை அழிச்சிட தீயாப் புறப்பட்டவடா நா... ன்னு அவ பேசுற வசனம் இன்னைக்கு ஒவ்வொருத்தன் வாயிலயும்...இப்போ இதுதாம்ப்பா டிரென்ட்... ஒரு படம் வெற்றியாச்சின்னா வரிசையா முப்பது படம் எடுத்திட்டுத்தான் ஓய்வாங்க ஃபீல்டுல... உனக்குத் தெரியாதா? நீ பார்க்காத பரபரப்பா? எல்லாம் பார்த்து ஓய்ஞ்சுதான இன்னைக்கு இப்டி நிக்கிறே...? திரும்ப நிமிரணும்னா அந்த முயற்சி எந்தளவுக்கு இருக்கணும்னு உனக்குச் சொல்லியா தரணும்?

    மனசு தொடர்ந்து எச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறது.-ஆனாலும் எதுவோ காழ்ப்புணர்ச்சியைத் தூண்டியது. இல்லையென்றால் கேரளத்திலிருந்து இப்படியொரு ஜோடியைத் தேர்ந்தெடுக்க ஓட வேண்டி வந்திருக்குமா?

    2

    அங்கிருந்தபடியே சற்றுத் தள்ளி வேறொரு காட்சிக்குக் கோணம் பார்த்துக் கொண்டிருந்த டைரக்டர் நவீனை நோக்கிக் கை தட்டினான் பிரேம். சுற்றிலுமிருந்த மலைச்சாரல் பகுதியும், அந்தப் பண்ணை வீடும், அவனுக்குப் புதிய உற்சாகத்தை அளித்திருந்தன. அப்படியும் மனதைப் பழைய நினைவுகள் புரட்டிப் போட யத்தனிக்கின்றன. மொத்தக் கதைக்கும், அந்தக் குறிப்பிட்ட இடத்திலும், சுற்றுப் பகுதிகளிலுமான காட்சிகளை ஒரேயடியாக எடுத்து முடித்துக்கொண்டு பிறகு சென்னைக்குக் கிளம்பலாம் என்று சொல்லி அவன்தான் மொத்த யூனிட்டையும் அங்கு தங்க வைத்திருந்தான். பணம் ஆறாய்ப் பெருகி நீராய் ஓடியது. இனி அடகு வைப்பதற்கு ஒன்றுமில்லை. சென்னை பங்களாவையும் எழுதிக் கொடுத்திருப்பது இதுவரை யாருக்கும் தெரியாது. துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை என்று இறங்கியாயிற்று. ஆனால் இறங்கி நடக்க நடக்கத்தான் துக்கம் பெருகுகிறது. பயப்பேயைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டே செல்வது போன்ற பிரமை.

    வந்திட்டேன்... என்ன ஓ.கே.தானே? - கேட்டவாறே பரபரப்பாய் நெருங்கியவரை, திருப்தியில்ல... இன்னொரு டேக் எடுத்திருவோம் என்றான் பிரேம். அவர் விதேந்திரனைப் பார்த்தார். அவன் முகத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1