Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbin Alaivarisai
Anbin Alaivarisai
Anbin Alaivarisai
Ebook105 pages42 minutes

Anbin Alaivarisai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனோ எழுச்சியின் தீவிரத்தால், எண்ண அலைகளை பீறிட்டு எழச்செய்து, உத்வேகத்துடன் ஓர் உணர்வுப் போராட்டம் நிகழ்த்தி, காலத்தின் கரத்தால் விலக்கப்பட்டிருந்த ஓர் உறவின் இழையைத் தேடிப்பிடித்துப் பற்றிக் கொள்ளும் இளம் பெண்ணின் கதை.

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580102009655
Anbin Alaivarisai

Read more from Gauthama Neelambaran

Related to Anbin Alaivarisai

Related ebooks

Reviews for Anbin Alaivarisai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbin Alaivarisai - Gauthama Neelambaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அன்பின் அலைவரிசை

    Anbin Alaivarisai

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    என்னுரை

    அன்பின் அலைவரிசை மனோ எழுச்சியின் தீவிரத்தால், எண்ண அலைகளைப் பீறிட்டு எழச்செய்து, உத்வேகத்துடன் ஓர் உணர்வுப் போராட்டம் நிகழ்த்தி, காலத்தின் கரத்தால் விலக்கப்பட்டிருந்த ஓர் உறவின் இழையைத் தேடிப்பிடித்துப் பற்றிக் கொள்ளும். இளம் பெண்ணின் கதை.

    மனம் எனும் மாய இழை தானே மனித குலத்தையே இணைத்து வைக்கிறது. அந்த இழை சற்று நைந்து விலகி விடுவதால் தானே உறவுகளில் விரிசல்கள் விழுகின்றன. அதை மீண்டும் சரி செய்ய வேண்டுமெனில், மனோ சக்தியைத் தானே பயன்படுத்த வேண்டும். மனத்தின் ஆற்றலைச் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் பிறரை எளிதாக வசீகரித்து விடுகிறார்கள். அதனால் அன்பு மலர்கின்றது. உள்ளம் பூந்தோட்டமாகிறது!

    அப்படியொரு அற்புத வித்தையைத்தான் ரஞ்சனி இக்கதையில் நிகழ்த்திக் காட்டுகிறாள்.

    உள் உலகில் தேடத் தெரிந்தவர்களால், வெளியுலக வெற்றிகளை எளிதாக்கிக் கொள்ள முடிகிறது.

    பாம்பு போன்ற சில உயிரினங்கள் தன் இரையை வசியவலை வீசிப் பிடிப்பதாக உயிரியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். வசியக் கலை ஒன்றும் மோடி வித்தைக்காரர்களுக்கு மட்டுமே உரியதல்ல. அது வாழ விரும்புவோர் அறிய வேண்டிய ஓர் உன்னதமான வாழ்க்கைக்கலை.

    ‘மலையோரம் வீசும் காற்று’ கதையிலும் இதே போன்றதொரு விஷயம் மறுஜென்மப் பின்னணியில் பேசப்படுகிறது. சுவாரஸ்யமாகப் படிக்க மட்டுமல்ல; சிந்திக்கவும் வைக்கிற கதைகள் இவை. முன்னுரை வழங்கிய இனிய எழுத்தாள நண்பர் சுப்ரஜாவுக்கும், என் இனிய நன்றிகள்.

    -கௌதம நீலாம்பரன்

    1

    அந்தச் சம்பவத்தை ரஞ்சிதாவால் மறக்க முடியவில்லை. அந்தக் காட்சி அவள் கண்களைவிட்டு அகல மறுத்து, உறுத்தியபடியே இருந்தது. விழிகளை மூடினால் போதும், சின்னத்திரை சுவிட்சை ஆன் செய்ததுபோல், அந்தக் காட்சி விரிந்து கொண்டே இருக்கிறது.

    ‘என்ன செய்து அதை மறப்பது?’

    ‘எப்படி அந்த ஆபத்திலிருந்து தப்புவது?’

    ஒன்றும் புரியவில்லை. ஒரு வழியும் புலப்படவில்லை.

    ஈவ் டீஸிங் பிரச்சினைதான். வேறு ஒன்றுமில்லை.

    வழக்கமாக அவள் பள்ளி செல்கையில் ஒருவன் பின்தொடர்கிறான். நாளுக்கு நாள் அவன் தொல்லை அதிகமாகிறது.

    ரஞ்சிதா, கிராமத்திலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள பக்கத்து டவுனில் சென்று ப்ளஸ்ஒன் படித்து வருகிறாள். போய் வருவதெல்லாம் சைக்கிளில்தான். வழியில்தான் இந்தத் தொல்லை.

    அவன் ஒரு பாலத்தின் மீது உட்கார்ந்திருப்பான். கூடவே இரண்டு மூன்று தடியன்கள். பெண்களைக் கண்டால் இளிப்பது, வழிவது, விசிலடிப்பது, ஊளையிடுவது... சரியான ஜொள்ளன்கள்.

    ‘சே...’ என்றிருக்கும். அந்த இடத்தைத் தாண்டும் வரை ரஞ்சிதா மனசுக்குள் கந்தர்சஷ்டிக் கவச வரிகளை வேகம் வேகமாக உச்சரிப்பாள். ஏதோ பைசாசங்களைப் பார்த்துவிட்ட அச்ச உணர்வு அவளை ஆக்கிரமிக்கும்.

    ‘ஜொள்’ விடுபவனையெல்லாம் நேசித்துதான் ஆக வேண்டுமென்றால், பெண்களின் கதி என்னவாகும்? இதை ஏன் இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை?

    போகிற வழியில் இந்த ஒரு பாலம்தானா இருக்கிறது? டவுனில் கடைத்தெரு, பாலக்கரை, முச்சந்திகள், பள்ளி அருகில் என்று குரூப் குரூப்பாக இப்படி எத்தனையோ ஜொள்ளுக்கேஸ்கள் உண்டு. ஒரு பெண் இத்தனையும் தாண்டித்தான் பள்ளிக்கூடம் சென்று வர வேண்டியிருக்கிறது. எத்தனை அசடுவழிஞ்சான்களைக் கண்டும் காணாமலும் தினமும் கண்ணையும், கவனத்தையும் இறுக்கியபடி போய்வர வேண்டியிருக்கிறது. எங்கேயாவது ஓரிடத்தில் நின்று, எவனிடமாவது, எதற்காகவாவது வார்த்தை பேசத்தான் முடியுமா?

    ஒரு பார்வை, ஒரு புன்னகை போதும் இவர்களுக்கு. அதைப் பிடித்துக்கொண்டு மளமளவென்று முன்னேறத் துடித்து விடுவார்கள். முன்னேறுவது என்ன... எல்லாம் பின்னலைச்சல்தான்.

    கண்ணலைச்சலைத் தவிர வேறெதற்கும் லாயக்கற்ற காளையர் கூட்டம் தரும் காதல் தொல்லைக்கு இணையாக கார்கில் பார்டரில் தீவிரவாதிகள் அளிக்கும் தொல்லைகூட பெரிதாக இருக்க முடியாது. அங்கேயாவது அவர்கள் வாலாட்டினால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் இருக்கிறது. இங்கே இதுபோன்ற பாலக்கரைகளிலும், பஸ் நிறுத்தத்திலும் நின்று இளம் பெண்களை ஈவ்டீஸ் செய்யும் ரோடுசைடு ரோமியோக்களைத் தரையில்போட்டு, நாலு மிதி மிதித்து நசுக்கித் தரதரவென்று இழுத்துச் செல்ல யார் இருக்கிறார்கள்?

    ரஞ்சிதாவின் மனக்குமுறலையெல்லாம் வார்த்தைகளில் வடித்தால், இளைஞர் உலகம் தாங்காது. அத்தனை வெறுத்தாள் அவள். தோழிகளோடு அவள் இத்தகைய ஜொள் ஆசாமிகள் பற்றிப் பேசிச் செல்வதையெல்லாம் நீங்கள் கேட்க நேர்ந்தால், மிரண்டு போவீர்கள்.

    டீ பானு, உன்னை சைட் அடிக்க நிக்கறான்னு சொன்னியே, அவனை அடையாளம் காட்டுடி. நீ அடிக்கலேன்னா, நான் செருப்பைக் கழட்டிப் உதறிடறேன் என்பாள்.

    ஏண்டி சுலோ, உன் மேல வேணும்னே, வந்து வந்து இடிக்கறான்னியே, ‘அவனைக் கன்னத்துல அறைஞ்சு, மூஞ்சில காறித்துப்பிட்டு வாடி’ன்னு சொன்னேனே... செஞ்சியா, இல்லியா? என்று விசாரிப்பாள்.

    ஒரு சமயம் ரஞ்சிதா, டவுன் தியேட்டரில் தோழிகளோடு மேட்னிஷோ பார்க்கச் சென்றாள். அன்று பள்ளியில் எதற்காகவோ திடீரென்று அரைநாள் லீவு விட்டிருந்தார்கள். தோழிகளின் கட்டாய அழைப்பால் அவளும் மேட்னி ஷோ பார்க்கச் சம்மதித்தாள். அந்தப் படத்தின் நாயகன், இளம் பெண்களின் இதயத்தில் இடம் பிடித்தவன். நாலு மாணவிகள் கூடி நின்று ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தால் அதில் நான்கு நிமிடம் அவனைப் பற்றி பேச்சுதான் இருக்கும். ‘சரி... நாமும்தான் அவன் படம் ஒன்றைப் பார்த்து வைப்போமே’ என்று எண்ணித்தான் அன்று ரஞ்சிதா அந்த சினிமாவுக்குப் போனாள்.

    படம் ஆரம்பித்ததே கல்லூரி வளாகத்தில். அதில் பள்ளிக் கல்வியைக் கூட ஒழுங்காக முடித்திராத நாலைந்து தடியன்கள் கல்லூரி மாணவர்களாகத் தோன்றினர். ஆபாசப் பேச்சு, அருவருப்பான ஆட்டம் - பாட்டம், சிகரெட் புகை, தண்ணியடித்தல் என்று ஏகப்பட்ட இலக்கணங்களோடு அந்த மாணவப் பிரகிருதிகள் கதாநாயகனோடு சூழ்ந்து நின்று கும்மாளமடித்தனர். ஒரு புதிய பெண் வந்து சேருகிறாள். அவளைக் கலாய்க்கிறது இந்தக் கும்பல், அவள் மீது ஹீரோ காதல் கொள்கிறான். விலகி விலகிச் செல்லும் அந்தப் பெண்ணை விட்டேனா பார் என்று துரத்துகிறான் அந்த ஹீரோ.

    Enjoying the preview?
    Page 1 of 1