Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Snehamai Oru Kaadhal
Snehamai Oru Kaadhal
Snehamai Oru Kaadhal
Ebook206 pages1 hour

Snehamai Oru Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803215
Snehamai Oru Kaadhal

Read more from Maharishi

Related to Snehamai Oru Kaadhal

Related ebooks

Reviews for Snehamai Oru Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Snehamai Oru Kaadhal - Maharishi

    http://www.pustaka.co.in

    சிநேகமாய் ஒரு காதல்

    Snehamai Oru Kaadhal

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    பிரபலமான அமெச்சூர் நாடகமொன்றைப் பார்க்கப் போனபோது நரேந்தரின் நடிப்பைப் பார்த்து விட்டு பிரமித்துப் போனவள் சுகுமாரி.

    நாடகம் முடிந்தவுடன் அவனை கிரீன் ரூமில் சந்தித்து தன் பாராட்டுதலைச் சொல்ல நேர்ந்த நிகழ்ச்சியுடன் அவர்கள் நட்பு ஆரம்பமானது.

    அதன் பின் அவன் நாடகம் நகரத்தில் எங்கு நடந்தாலும் போய் விடுவாள்.

    நாடகம். அதன் கதை அமைப்பு. ஆழமில்லாத வெறும் சோப்பு நுரை போன்ற ஹாஸ்ய வசனங்கள் இவை பற்றி அவளிடத்தில் நிறைய அபிப்பிராய பேதமிருந்தாலும் நரேந்திரனின் மிக இயல்பான மேடை நடிப்பும். தோற்றமும் அவளைக் கவர்ந்து விட்டது.

    தான் ஒரு டெலிவிஷன் உற்பத்திக் கம்பெனியில் வேலை செய்வதாகக் கூறினான்.

    அவனிடம் இருக்கிற இயல்பான ரசனை. கலை பற்றிய அவன் விமர்சனம் எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது.

    அவனே ஒரு முறை கூறினான்.

    "என் வேலை. சம்பளம் இவைகளை விட சூழ்நிலைகளை தான் மிகவும் ரசிப்பவன். ரசனையுடன் கூடிய வாழ்க்கையை

    நான் மிகவும் விரும்புகிறேன். அது இல்லாமல் ஒரு இயந்திரத் தரமான வாழ்க்கையை நான் என்றுமே விரும்புவதில்லை.

    இந்த டெலிவிஷன் உற்பத்தி கம்பெனி சிடியில் நான் தேடிக்கொண்ட நான்காவது உத்தியோகம்.

    முதலில் ஒரு கம்பெனியில் இருந்தேன். அதன் பின் ஒரு டுட்டோரியல் காலேஜில் இருந்தேன். அதன் பின் மருந்து கம்பெனியொன்றில் ரெப்பாக இருந்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான வேலையாக இருந்தாலும் எதிரியே மனம் லயிக்கவில்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாதிரியான பிரச்னை.

    இப்பொழுதுதான் கொஞ்ச நாட்களாக இதில் வேலை செய்கிறேன். எனக்கு நாடகம். சீனிரிமா போன்றவற்றில் ஆர்வமுண்டு. குறிப்பாக நாடகத்தில் நடிப்பதென்றால் ரொம்பப் பிடிக்கும்.

    இதற்காகவே சிட்டியை விட்டு எங்கும் போக மனம் வருவதில்லை. வெளியூர்களில் எல்லாம் கூட நல்ல உத்தியோகத்திற்குச் சந்தர்ப்பம் வந்தது"

    தன் கலையார்வத்தைப் பற்றி அவள் நிறைய பேசியிருக்கிறான்.

    நல்ல எழுத்து. எழுத்தாளர்கள். நாட்டியம். சங்கீதம்.

    இவை எல்லாவற்றைப் பற்றியும். அவனிடத்தில் ஓர் ஆழமான கருத்து இருப்பதைப் பார்த்து வியந்து போயிருக்கிராள்.

    அவன் நாடகத்தைப் பார்த்து விட்டு ரசனையுடன் அவனைப் பாராட்டுவது. அவன் நாடகத்திற்குப் போகும்போது பரிசுகள் வாங்கிப் போவது அவனைப் பற்றி வரும் விமர்சனங்களைச் சேகரிப்பது.

    பிற்பட்டு அவளுடைய எல்லா நேரத்து நினைவுகளிலும் அவன் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டான்.

    ***

    அவன் கொடுத்த விலாசத்தை வைத்துக் கொண்டு அவன் குடியிருப்புப் பகுதிக்குப் போனபோது அவள் பிரமித்தே போனாள்.

    அந்தக் குடியிருப்புப் பகுதியின் மூன்றாவது மாடியில் எல்லா சௌகரியங்களுடன் கூடிய அறையில் அவன் இருந்தான்.

    நிரந்தரமான மாத வருமானத்திற்கு கம்பெனியில் வேலை. ஆத்ம திருப்திக்கும். கலையார்வத்திற்கும் நாடகக் குழுவுடன் ஐக்கியம்.

    அறையெங்கும் அவன் நடித்த நாடகங்களின் புகைப் படங்கள். சுவரில் ஒட்டப்பட்ட பேப்பர் கட்டிங்குகள்.

    பிடித்தமான நாடக நடிகையின் படங்கள். கூடவே நான்கைந்து அரை. முக்கால். முழு நிர்வாணப் படங்கள்.

    இது ஒரு பிரம்மச்சாரியின் அறை என்பதை நீங்கள் இப்படி விளம்பரப்படுத்திக் கொள்ளவேண்டாம் .

    அந்த முழு நிர்வாணத்தை ஒரு கையால் மறைத்துக் கொண்டே அவளை அவன் முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் அணைத்துக் கொண்ட போது அவள் கொஞ்சம் பயந்து தான் போனாள்.

    ஆனால்.

    அந்த முதல் அணைப்பில் அவள் அனுபவித்த முதல் பய உணர்வுதான் நிகரற்ற இன்பம் என்பதைப் பிறகு உணர்ந்தாள்.

    இம்மாதிரி உணர்வு ஒரு பெண்ணுக்கு ஒரு முறை தான் உண்டாக முடியும். அதுதான் பவித்திரமானது.

    அணைப்புகளும் பின்பு முத்தங்களும்...

    ***

    -நாடகத்தில் நீங்க ரொம்ப ரிஸர்வ்ட்டாக நடிக்கிறதைப் பார்த்து நான் ஏமாந்து போயிட்டேன் - என்றாள் ஒரு தடவை அவளை அவன் அணைத்து முத்தமிடும் போது.

    சினிமா மாதிரி நாடகத்திலே கதாநாயகியைக் கட்டி அணைக்க முடியாது. அதுக்கு ஒரு எல்லை உண்டு. அதை மீறினால் நாடகம் ரசிக்காது.

    அவன் கைகள் அவளை மேய்ந்தன. அவள் அவன் அணைப்பில் மயங்கிப் போனாள்.

    ***

    ஒரு பைத்தியம் போல அவனுடைய இம்மாதிரி அணைப்பிற்கும். முத்தத்திற்குமாக ஏங்கி ஓடிவரும் மன நிலையை எண்ணியபோது அவளுக்கே வெட்கமாகப் போய்விட்டது.

    அவனைத் தேடிக் கொண்டு அவள் தான் ஓடி வந்தாள்.

    அவன் மாலை நேரங்களில் நாடக ஒத்திகைக்குப் போகும்வரை அவனுடன் இருப்பாள்.

    நரேந்திரன் நாடகம் போட ஒன்றிரண்டு நாட்கள் வெளியூர் போய்விடும் நாட்களில் அவளுக்கு அந்த இரண்டு நாட்கள் போவதற்குள் பெரும்பாடாகி விடும்.

    நரேந்திரா நீ என்னை பையித்தியமாக்கிட்டே. உன் பார்வையிலும். அணைப்பிலும். சிரிப்பிலும் அப்படி என்ன தாண்டா மாயம் வச்சு இருக்கே....

    ***

    அன்று மாலை அவனைப் பார்க்க சுகுமாரி அவன் அப்பார்ட்மென்டுக்குப் போகும் போது கொஞ்சம் நேரமாகி விட்டது.

    அவன் ஏற்கனவே அவளுக்கு டெலிபோன் செய்திருந்தான்.

    இரண்டு நாட்கள் வெளியூர் நாடக நிகழ்ச்சியொன்றுக்குப் போய்விட்டு பிற்பகல் திரும்பியிருந்தான்.

    மாலையில் நாடகம் இருப்பதால் அறைக்கு வந்தவுடனே புறப்பட வேண்டியிருக்கும் என்றும் கூறிவிட்டு டெலி போனிலேயே அவளுடைய கிளர்ச்சிகளைத் தூண்டியிருந்தான்.

    ஹால் பூட்டப்பட்டிருந்தாலும் வரவேற்பறை திறந்திருந்தது.

    வேலைக்காரப் பையன் அறையைக் கூட்டிச் சுத்தம் செய்து. தண்ணீர் எடுத்து வைத்துவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தான்.

    நரேந்திரன் இருக்காரா?

    எதிர்பட்ட பையனிடம் கேட்டாள்.

    இல்லீங்க... அநேகமா ஆபீசிலேருந்து நேரா நாடகத்துக்குப் போயிடுவாருன்னு நினைக்கிறேன்.

    அறைக்கு வரவேயில்லையா!

    வரலே.-அறையெல்லாம் கூட்டி தண்ணி எடுத்து வைக்கச் சொன்னாராம். சாவிய வைக்கற போர்ஷன்காரங்க சொன்னாங்க.

    வந்தாலும் வரலாம். கொஞ்ச நேரம் இருந்து பார்க்கலாமா!

    நேரம் இருக்குது. இருந்து பாருங்க. சாவி வேணுமா.! போகும் போது பத்தாம் நெம்பர் அப்பார்ட்மென்ட்டுலே கொடுத்துட்டுப் போயிருங்க

    அவள் சாவியை வாங்கிக் கொண்டு அவன் அறைக்கு வந்த போது

    அங்கே ஏற்கனவே திறந்திருந்த வரவேற்பறையில்...

    அவள் உடம்பையெல்லாம் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

    அவளுடன் சுகுமாரி ஏதும் பேசவில்லை. அவருக்குத் தெரிந்தவளாக இருக்கலாம். அவருடன் நாடகத்தில் நடிக்கிற பெண்களில் யாராகவேனும் இருக்கலாம்...

    அவள் நரேந்திரன் அறையைத் திறந்து விட்டு நின்ற போது. அப்பெண் எழுந்துவந்து அவளுக்குப் பின்னால் நின்றாள்.

    'நரேந்திரன் வருவாரா?"

    பின்னால் கேள்வி வந்த போது சுகுமாரி திரும்பிப் பார்த்தாள்.

    வேலைக்காரப் பையன் அவர் வருவது சந்தேகம் தான் என்று கூறி சாவியைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறான்.

    சுகுமாரி உள்ளே வந்தான்.!

    நரேந்திரைக் கேட்டுக்கொண்டு நின்றவளைப் பார்த்தாள். அவள் அழகாக இருந்தாள். வயது முப்பதைத் தாண்டியிருக்கலாம். அடர்த்தியான கேசம். சற்றே தடிமனான உடல்வாகு. வட்டமான முகம்...அவ்வளவு சிகப்பு என்று கூறமுடியாது. வகிடு இல்லாமல் கேசத்தை இழுத்து வாரிக் கொண்டிருந்தாள். காதில் அழகிய வளையங்கள் எடுத்த எடுப்பில் தோன்றும் ஓர் எளிமை! கவர்ச்சி.

    பத்து நாட்களாக அவரைப் பார்க்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன். முடியவில்லை. நாடகம் நடத்தும் இடத்திற்கெல்லாம் வந்து தொந்தரவு பண்ணக்கூடாது என்று கூறுகிறார். இங்கே வந்தாலும் ஆள் இருப்பதில்லை...

    நீங்க அவருக்கு உறவுக்காரப் பெண்ணா - சுகுமாரி கேட்டாள்.

    அவள் பதில் சொல்லாமல் மலர்ச்சியற்றுச் சிரித்தாள்.

    சுகுமாரிக்குக் குழப்பம்தான். நரேந்திரனைப் போன்ற பிரபலமான வாலிபர்களைப் பார்த்து இப்படி நிறைய பேர் ஆசைப்படுவது நியாயம் தான்.

    இந்தக் காலத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற்ற வாலிபர்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது.

    ஒரு பட்டப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியை விட்டு வெளியே வரும் போதே பாதி அளவு சோர்ந்து விடுகிறார்கள். மேற்படிப்புக்கு கல்லூரியில் இடம் பிடித்து விருப்பமான பாடப் பகுதிகள் கிடைத்து குடும்பப் பிரச்னைகளுக்கு நடுவே படித்து.

    கல்லூரிப் போராட்டங்கள். வேலை நிறுத்தங்கள். என்று அந்தத் தேர் நிலைக்கு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.

    அதற்குப்பின் வேலை தேடல். விருப்பம் என்பது ஒரு புறம் பிடித்து இழுக்க. கிடைத்த வேலை என்பது ஒரு புறமிருக்க தன் விருப்பத்திகும். பிறர் விருப்பத்திற்கும் நடுவே இழுப்பட்டு. கிடைத்த வேலையை பரக்கா வெட்டி போல பற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கிடைப்பதை விட்டு விட்டால் கிடைக்கப் போவது கேள்விக் குறியாகிவிடுமோ என்கிற அச்சம்.

    இத்தனை சோதனைகளுக்கு நடுவே நரேந்திரனைப் போன்ற ஒருசிலரே வாழ்க்கையில் வெற்றிகரமாக வரமுடிகிறது. நிரந்தமான வருமானத்திற்கு ஒரு கம்பெனியில் நல்ல வேலை. ஆத்ம திருப்திக்கும். உபரி வருமானத்திற்கும் வருமானமுள்ள ஒரு கலைத்தொண்டு.

    இதில் பொழுது போக்கு அம்சம். பயனுள்ள அம்சம் என்ற சர்ச்சை! எது எப்படி இருந்தால் என்ன. வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தொழிலில் வெற்றி பெற வேண்டும் அது தான் முக்கியம். இந்த வகையில் நரேந்திரன் ஒரு சக்ஸஸ்ஃபுல் யங்மேன்.......அவரை இம்மாதிரி பெண்கள் தேடிவருவதைச் சந்தேகிக்க முடியாது என்று எண்ணிமிட்டவள்.

    நீங்கள் யார்? அவரை அடிக்கடி பார்க்க வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அவருடைய நாடகக் குழுவில்...

    சுகுமாரி தன் கேள்வியை முடிக்கு முன் அவள் கேட்டாள்.

    என்னைப்பற்றி நான்கூறுவது இருக்கட்டும். நீங்கள் யார் என்று சொல்லுங்கள்... அவள் இப்படித் திருப்பிக் கேட்டவுடன் சுகுமாரி கொஞ்சம் அதிர்ந்து போனாள்.

    நான் அவருடைய ரசிகை!

    அவருடைய நாடக ரசிகையா அல்லது

    சுகுமாரிக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டது. இந்தக் கேள்வியின் உள் அர்த்தத்தில் ஏதோ விரசம் இருப்பது போலப்பட்டது அவளுக்கு. ஆத்திரத்தை வெளியே காட்ட முடியவில்லை. என்றாலும் அவள் கேள்வி வந்த பாணியிலேயே பதிலையும் சொன்னாள்.

    முதலில் அவருடைய நாடக ரசிகை. அதன் பின் அவருடைய ரசிகை! - அவளைக் கொஞ்சமாக சினப்படுத்துவதில் தவறில்லை என்று எண்ணமிட்ட பின்பு தான் இந்தப் பதிலைக் கூறினாள்.

    அப்படியா... நாடக ரசிகையாக இருப்பதில் தவறொன்றுமில்லை. அது ஓர் உயர்வான ரசனை. ஆனால் இரண்டாவதாகக் கூறினாயே. அந்த வார்த்தை எனக்கு அத்தனை மகிழ்ச்சியைத் தரவில்லை.

    உங்கள் மகிழ்ச்சியைப் பற்றியோ சோகத்தைப் பற்றியோ எனக்குக் கவலையில்லை.

    எல்லா விஷயத்திலும் அப்படியிருந்துவிட முடியாது. சில நேரங்களில் சிலருடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு ரசனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். அது போகட்டும். உங்கள் பேர் என்னவென்று சொல்லவேயில்லயே. இத்தனை நேரம் பேசிக் கொண்டிருக்கிறோம். தாம் ஒருவரையொருவர் பெயரைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் - இவள் எதையோ பூடகமாகச் சொல்லிவிட்டு பேச்சை மாற்றுகிறாள். இவளைச் சரியான நேரத்தில் சரியான முறையில் கவனிக்க வேண்டும். என்றவள்.

    "நம் நட்பு வளர்கிறதோ இல்லையோ நம் பெயரைத் தெரிந்து கொள்வதில் தவறொன்று

    Enjoying the preview?
    Page 1 of 1