Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

போவோமா பொன்னுலகம்!
போவோமா பொன்னுலகம்!
போவோமா பொன்னுலகம்!
Ebook125 pages42 minutes

போவோமா பொன்னுலகம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்ணாடியும் தாயும் ஒன்று.
அழகைத் தந்தவள் தாய். அதையே திருப்பி தருகிறது கண்ணாடி.
கண்ணாடி எதிரே நின்று சேலை உடுத்திக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
இளமஞ்சள் நிற சேலை. மெல்லிய நூல்வேலை. எளிமையும் அழகையும் கூட்டிக்காட்டியது.
வளைந்த இரு புருவங்களுக்கிடையில் திலகத்தை தீட்டியவாறே “அம்மா...” என குரல் கொடுத்தாள்.
“சொல்லு...” பதிலுக்கு சமையலறையிலிருந்து குரல் வந்தது.
“டிபன் ஆச்சா?”
“எடுத்து வச்சுட்டேன்” என்று கையில் டிபன் பாக்ஸுடன் சமையலறையிலிருந்து வெளியே வந்த கோதை நாயகி ஐம்பது வயதில் அதிகமாகத் தளர்ந்திருந்தாள். முகத்தில் சோர்வும், களைப்பும் தெரிந்தது. சுகரும், பி.பி யும் நாங்கள்தான் காரணம் என்றது.
அதே சமயம் அறையிலிருந்து வெளிப்பட்டாள் தேன் மொழி. மகளை ஒருகணம் பார்த்து திருப்தியாக சிரித்துக் கொண்டாள்.
“உன்னைப் பார்த்தா யாரும் லெக்சரர்னு சொல்ல மாட்டாங்க. ஸ்டூண்ட்டுன்னுதான் சொல்லுவாங்க.”
“நீ மட்டும் என்னவாம்? அன்னைக்கு கோவில்ல ஒருத்தர் கேட்டாங்க. இது யாரு உன் அக்காவான்னு?”
“போடி! இவ ஒருத்தி. சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு, நானே எழுபத்திரண்டு வியாதியை வச்சுக்கிட்டு அல்லாடறேன். ஒரு நாள் போறது ஒரு வருஷம் போறமாதிரியிருக்கு. இப்பத்தான் இளமை ஊஞ்சல் ஆடறமாதிரி பேசறா. உடம்புல கொஞ்சம் நல்ல சத்து இருக்கும் போதே உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டா அது போதும் எனக்கு. உங்கப்பாவுக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லாமல் போய்ட்டு.” அனிச்சையாகஅவளுடைய கண்கள் சுவரில் மாலையோடு சிரித்த கணவரைப் பார்த்தன. பார்த்த நிமிடத்திலேயே கலங்கின. “அம்மா இப்பத்தானே என்னைப் பார்த்தா ஸ்டூடண்ட் மாதிரியிருக்குன்னு சொன்னே. ஸ்டூடண்ட்டுக்கு யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா? அப்புறம் கம்பி எண்ண வேண்டிய வரும். தேன்மொழியின் இந்த வார்த்தைகளுக்கு அம்மா சிரித்துவிட்டாள்.
“நல்ல மாப்பிள்ளை வந்தா நீயே கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிடுவே! இந்த வீட்டு மருமகன் எங்கே பிறந்திருக்கானோ?”
அம்மா சொல்லவும் தேன்மொழியின் மனதில் ஒரு கணம் பாலா தோன்றினான். கண்ணடித்து காதல் உணர்வுகளைத் தூண்டிவிட்டு மறைந்தான்.
வெட்கத்தை மறைக்க முந்தானையை எடுத்து முகத்தை துடைப்பதைப் போல் பாவனை செய்துக் கொண்டாள்.
அம்மாவிடமிருந்து டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்ட தேன்மொழி அவசரமாக வெளியே வந்தாள். வாசலில் நின்றிருந்த தன் வாகனத்தை நோக்கிச் சென்றாள்.
வாசல் வரை வந்த அம்மா “ஜாக்ரதையாப் போம்மா வரும்போது காய்கறி வாங்கிட்டு வா” என்று சொன்னபடியே டா டா” காட்டினாள்.
அம்மாவிற்கு கையசைத்து விட்டு வாகனத்தைக் கிளப்பினாள். அடுத்த அரைமணி நேரத்தில் அவளுடைய வாகனம் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தது.
மாணவ மாணவிகள் ஆங்கங்கே நிற்பதும் நடப்பதும் பேசுவதும் சிரிப்பதுமாகயிருந்தனர்.
சிரித்துப் பேசிக் கொண்டிருந்த சில மாணவ மாணவிகள் அவளுக்கு வணக்கம் சொல்லியபடி நாசுக்காக விலகி நடந்தனர்.
புரிந்ததைப் போல் சிரித்தாள் தேன்மொழி.
மறுபடியும் பாலா மனதில் தோன்றி சிரித்தான். கண்ணடித்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
போவோமா பொன்னுலகம்!

Read more from ஆர்.சுமதி

Related to போவோமா பொன்னுலகம்!

Related ebooks

Reviews for போவோமா பொன்னுலகம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    போவோமா பொன்னுலகம்! - ஆர்.சுமதி

    1

    ஓசையின் நிறம் என்னவென்றால் வெண்மை என்றுதான் சொல்லத்தோன்றும்.

    அவர்களைப் பார்க்கும் போது - கள்ளமற்ற அந்த சிரிப்பலைகளின் ஓசையைக் கேட்கும்போது அப்படித்தான் தோன்றியது.

    அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர். கொத்தாகப் பறித்த கொடைக்கானல் மலர்களைப் போலிருந்தனர்.

    பருவக்காற்று வந்து எந்த நிமிடமும் தொட்டுவிடலாம் என வெடித்து மலரத்துடித்துக் கொண்டிருக்கும் மாணவிகள். எல்லோரும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள். இரட்டைப் பின்னலும் ஒரே நிறத்தில் சுடிதாரும் ஒற்றுமையைப் புலப்படுத்தினாலும் அந்த சிரிப்புத்தான் அவர்களின் உண்மையான ஒற்றுமையை பறைசாற்றுவதைப் போலிருந்தது.

    பள்ளிக்கூடம் முடிந்ததும் அந்த குரூப் வழக்கமாக இந்த மரத்தடியில் கூடும். இயல் இசை நாடகமென முத்தமிழையும் முப்பது வினாடிகளில் அரங்கேற்றி விடுவார்கள். சிரிப்பு கலகலப்பு, பேச்சு... இவைதான் உலகம் என்ற வயது.

    அதிலும் அவள்...!

    அதிகமாக சிரித்துக் கொண்டிருந்தாள். சற்று முன் தோழி ஒருத்தி சொன்ன ஜோக் அவளை நிலைதடுமாற வைத்திருந்தது. கண்களில் கண்ணீர் பொங்க கன்னங்கள் சிவக்க சிவக்க அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

    ‘இது... நம்ருதாவின் வாய்விட்ட சிரிப்பு...’ என்று ஒருத்தி சொல்ல அதற்கு இன்னொருத்தி கெக் கெக் என சிரிக்க,

    ‘இது. ஷீலாவின் ஆட்டோ ஸ்டாண்ட் சிரிப்பு’ - என அவளே சொல்ல நம்ருதா இன்னும் சிரித்தாள்.

    ‘ஏய்... நம்ருதா! போதும் சிரிச்சது! ஒவரா சிரிக்காதே! நம் ஸ்கூல் எந்த ஆட்சி இருக்கும்போது எப்படிக் கட்டினதே இடிஞ்சு விழுந்திடப் போகுது."

    ஆனாலும் சிரிப்பை நிறுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்த நம்ருதா சட்டென்று சிரிப்பை நிறுத்தினாள்.

    தோழிகள் சட்டென்று எழுந்தனர். நினைச்சேன்! இப்படி சிரிக்கிறாளே... சத்தம் கேட்டு மேடம் வரப்போறாங்கன்னு. திரும்பிப் பாரு... மேடம் நிக்கறாங்களான்னு.

    கிசுகிசுத்த மாணவிகள் மெல்ல திரும்பிப் பார்க்க அங்க தலைமையாசிரியை இல்லை.

    அந்த தைரியத்தில் ஒருத்தி ஏன் நம்ருதா சிரிப்பை நிறுத்தி விட்டீங்க? உன் சிரிப்பென்ற இடியில் இந்தப் பள்ளிக்கூடம் இடிந்து விழுவதைப் பார்த்து ரசிக்கலாமென்று ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே! சிரி! உன் சிரிப்பிலாவது இந்தப் பழைய கட்டிடங்கள் முக்தியடையட்டும். சிரி... நம்ருதா... முன்பு ஜோக்கடித்தவளே இப்பொழுதும் சொல்ல நம்ருதாவைத் தவிர அனைவரும் சிரித்தனர்.

    நம்ருதாவின் முகத்தில் இனம் புரியாத அவஸ்தையான உணர்வுகள். சட்டென்று வயிற்றைப் பற்றியபடி மடங்கி அமர்ந்தாள். அடிவயிறு முழுவதும் ஆயிரம் ஊசிகளைக் கொண்டு குத்துவதைப் போல் வலி. கண்களை ஒரு நிமிடம் மூடித் திறந்தபோது இமைகள் நனைந்துவிட்டிருந்தன.

    ஏங்... என்னாச்சு? ஈசல் கூட்டமாய் தோழிகள் சூழ்ந்து கொண்டனர்.

    எதையோ உணர்ந்து கொண்டவளைப் போல் மறு நிமிடமே தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்த நம்ருதா அவசரமாக தன் புத்தகப்பையைப் பொறுக்கிக் கொண்டாள்.

    நான் வர்றேம்ப்பா... எங்கம்மா லேட்டா போனா திட்டுவாங்க.

    இதைக்கேட்டு தோழியர் கூட்டம் குபீரென சிரித்தது.

    இதைக் கேளுங்கடி! இவங்கம்மா தேடுவாங்களாம். மறுபடி கலகல சிரிப்பு.

    நம்ருதாவின் முகம் கருத்தது. தவறுதலாக சொல்லிவிட்ட பொய் இவர்களின் மத்தியில் எவ்வளவு இளக்காரத்தை எற்படுத்துகிறது.

    பதிலேதும் கூறாமல் நம்ருதா தன் ஸ்கூட்டியை நோக்கிப் போக பின்னால் கேலிப்பேச்சுக்கள்.

    "இவளுக்கு என்னடி ஆச்சு? தினமும் நாம் கிளம்பினாலும் இழுத்து வச்சு அரட்டை அடிச்சுக்கிட்டிருப்பா.

    என்னமோ... இன்னைக்கு அதிசயமா அம்மா தேடுவாங்கன்னு சொல்லிட்டுப் போறா."

    அவர்களின் பேச்சை சட்டை செய்யாமல் தன் வாகனத்தைக் கிளப்பினாள். இனம் புரியாத படபடப்பில் நெஞ்சுக் கூடு தடதடக்க அடிவயிற்றில் அவஸ்தையான வலி தொடர்ந்தது.

    நம்ருதா வீட்டிற்கு வந்தபோது வேலைக்காரி கங்கம்மா வாசல் பெருக்கிக் கொண்டிருந்தாள். நம்ருதாவின் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக நிமிர்ந்தவள் நம்ருதாவின் முகத்தைப் பார்த்து துணுக்குற்றாள்.

    கண்கள் சிவந்து கலங்கி பற்களால் கீழ் உதட்டை அழுந்தக் கடித்தபடி... நம்ருதாவின் முகம் கங்கம்மாவை துணுக்குற வைத்தது.

    ‘ஏன் கண்கள் கலங்கி அழுதமாதிரிப் போறா? ஏதாவது பிரச்சனையா? பள்ளிக்கூடத்துல சினேகிதிங்க சண்டைப் போட்டுட்டாளுங்களா?’

    ‘பரீட்சையில ஃபெயில் மார்க் வாங்கிட்டாளா? அப்படி யெல்லாம் வாங்க மாட்டாளே! என்ன பிரச்சனையிருந்தாலும் இந்தப் புள்ள எப்பப் பார்த்தாலும் படிச்சிக்கிட்டுத்தானேயிருக்கும் என்னாச்சு?’

    யோசித்தவாறே துடைப்பத்தை தோட்டத்து சுவரோரம் சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

    நம்ருதா விறுவிறுவென மாடிக்கு சென்றாள். பின்னாலேயே கங்கம்மாவும் சென்றாள்.

    நம்ருதா குளியலறை கதவை அறைந்து சாத்துவது கேட்டது. தொடர்ந்து குளிக்கும் ஓசை கேட்டது.

    கீழே இறங்கி வந்தாள்.

    ‘வந்ததும் இப்படிக் குளிக்காதே? ஏதாவது டிபன் சாப்பிட்டு விட்டு ராக்கெட்டை எடுத்துக்கிட்டு விளையாட ஓடிவிடுமே? இன்னைக்கு வந்ததும் வராததுமா ஏன் குளிக்குது?’

    யோசனையினூடே அவளுக்காக செய்த அரிசி உப்பு மாவை சூடாக தட்டில் எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்தாள்.

    மறுபடியும் அவள் மாடிக்கு வந்தபோது நம்ருதா ஈரக் கூந்தலை விரித்துப் போட்டபடி வேறு ஒரு மாற்று உடையில் குப்புறப்படுத்திருந்தாள்.

    அம்மாடி... கங்கம்மா அழைக்கவும் முகம் திருப்பிய நம்ருதாவின் கண்கள் பழையபடி கலங்கியேயிருந்தன.

    அம்மாடி உனக்குப் புடிச்ச அரிசி உப்புமா பண்ணியிருக்கேன். இந்தா சாப்பிடு என்றாள்.

    எனக்கு வேண்டாம். பசியில்லை. எடுத்துட்டுப் போ முகம் திருப்பிக் கொண்டாள்.

    ஏன் ஒரு மாதிரியாயிருக்கே? உடம்பு சரியில்லையா?

    ஆமா! லேசா தலைவலி.

    தலைவலின்னா வந்ததும் எதுக்கு தலைகுளிச்சிருக்கே?

    சும்மாதான். என்றவள் அம்மா எப்போ வருவாங்க என்றாள்.

    அம்மா... இன்னைக்கு லேடீஸ் க்ளப்ல டூர் போறாங்கள்ல அதுல் அவங்களும் போறாங்க. அதுக்கான ஏற்பாடுகளை கவனிக்கத்தான் க்ளப்புக்கும் போயிருக்காங்க.

    ஒருகணம் நம்ருதாவின் முகம் மாறியது.

    கங்கம்மாவிடம் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு அவளை உந்தித்தள்ளியது.

    ஆனால் சொல்லவிடாமல் எதுவோ தடுத்தது.

    ‘அம்மா வந்ததும் சொல்லிவிடலாம்’ நினைத்துக் கொண்டவள் முகத்தை தலையணையில் அழுத்திக் கொண்டாள்.

    ‘இன்றைக்காவது அம்மா சீக்கிரம் வீட்டிற்கு வரக் கூடாதா?’ என ஏங்கினாள்.

    2

    கண்ணாடியும் தாயும் ஒன்று.

    அழகைத் தந்தவள் தாய். அதையே திருப்பி தருகிறது கண்ணாடி.

    கண்ணாடி எதிரே நின்று சேலை உடுத்திக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

    இளமஞ்சள் நிற சேலை. மெல்லிய நூல்வேலை. எளிமையும் அழகையும் கூட்டிக்காட்டியது.

    வளைந்த இரு புருவங்களுக்கிடையில் திலகத்தை தீட்டியவாறே அம்மா... என குரல் கொடுத்தாள்.

    சொல்லு... பதிலுக்கு சமையலறையிலிருந்து குரல் வந்தது.

    டிபன் ஆச்சா?

    எடுத்து வச்சுட்டேன் என்று கையில் டிபன்

    Enjoying the preview?
    Page 1 of 1