Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வெண்ணிலா நேரத்திலே...!
வெண்ணிலா நேரத்திலே...!
வெண்ணிலா நேரத்திலே...!
Ebook113 pages40 minutes

வெண்ணிலா நேரத்திலே...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குண்டு பூசணிக்காயாக உடலைப் பெருக்க விட்டிருந்த தையல்நாயகி பிருந்தாவுடன் ஓட முடியாமல் மூச்சிரைத்தாள்.
இருவரும் வழியில் இருந்த மளிகைக் கடை ஒன்றில் நின்றனர்.
கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை.
முதலாளியின் இடத்தில அமர்ந்திருந்தான் ஆதி. வாடிக்கையாளர் ஒருவர் நீட்டிய பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டிருந்தான் ஆதி.
“உன் மாமனைப் பாரு. கடைக்கே முதலாளி மாதிரி உட்கார்ந்திருக்கு.” என்றாள் தையல்நாயகி.
“ஒரு நாளைக்கு சொந்தமா கடை வச்சு முதலாளியா உட்காரமலா போகப்போகுது...” என்று விட்டுக் கொடுக்காமல் சொன்னாள் பிருந்தா.
ஆதி அவர்களைப் பார்த்துவிட்டான்.
“மாமா...இந்தா டிபன். அம்மா கொடுத்துது...”
“நீ எதுக்கு எடுத்துட்டு வந்தே? நான் வந்து சாப்பிட்டுக்க மாட்டேனா? உனக்கு ஸ்கூலுக்கு நாழியாகலையா? கடைக்கெல்லாம் வந்துக்கிட்டு...” வேளை செய்யும் விடலைப் பையன்கள் பொட்டலம் மடிப்பதை விட்டுவிட்டு பிருந்தாவைப் பார்ப்பதை கவனித்த ஆதி அவளை சற்றே அவஸ்தையாகப் பார்த்தான்.
“ம்...உனக்குப் புரியுது. என் அம்மாவுக்குப் புரியலையே...” என முணுமுணுத்துவிட்டு தையல்நாயகியுடன் சென்றாள் முதுகு திருப்பியபடி.
அவர்கள் அகன்றதும் மீதி சில்லறையை வாடிக்கையாளருக்கு கொடுக்க கல்லாவில் குனிந்தவனிடம் பணம் கொடுத்த அந்த நடுத்தர மனிதர் குறும்பாகக் கேட்டார்.“என்னப்பா ஆதி? அக்கா மக அக்கறையா டிபன் கொடுத்துட்டுப் போறா? என்னா விஷயம்?”
வெட்கப்பட்ட ஆதி சிரித்தான்.
“அக்கா கொடுத்துவிட்டிருக்கு. பாவம் பள்ளிக்கூடம் போற நேரத்துல அதுக்கு வேலை.”
“அப்ப உன் மேல அக்காவுக்குத்தான் அக்கறை. இவளுக்கு இல்லைன்னு சொல்றே?”
“அப்படியில்லீங்க.”
“அப்ப இவளுக்கு மாமன் மேல அக்கறை இருக்குன்னு சொல்லு. கட்டிக்கப் போறவளுக்கு அக்கறை இல்லமாயிருக்குமா?”
தீயை தொட்டதைப் போல் பதறினான்.
“ஐய்யோ...நீங்க வேற?”
“என்ன தப்பா சொல்லிட்டேன்? அவ உனக்கு மொறைப் பொண்ணுதானே?”
“மொறைப் பொண்ணுதான். ஆனா...குமாருக்கு கட்டறதாத்தான் பேச்சு.”
“அந்த ஒட்டடைக்குச்சிப் பயலுக்கா? இவதான் உன் பொறுமைக்கும் குணத்துக்கும் பொருத்தமாயிருப்பா!” இப்பொழுது ஆதியின் முகத்தில் ஒரு கிளர்ச்சி படர்ந்து மறைவதை அவர் மட்டுமல்ல வேலைக்கிடையே ஜாடையாக கடைப் பையன்களும் பார்த்துச் சிரித்தனர்.
“குமார் காலேஜ்ல படிக்கிறான். அவனுக்கு சமமாயிருக்கணும்னுதான் அக்கா அவளைப் படிக்க வைக்குது.”
“இருக்கட்டுமே...படிச்ச பொண்ணு படிக்காதவனைக் கட்டிக்கிட்ட கதையெல்லாம் உலகத்துல இல்லையா?”
“அதுக்கில்லை. குமாருக்குத்தான் பிருந்தா வயசுப் பொருத்தம் சரியாயிருக்கும். எனக்கும் அதுக்கும் ரொம்ப வயசு வித்தியாசம்.”
“என்ன பெரிய வயசு வித்தியாசம்? உங்க அக்காவை பதினாறு வயசுல முப்பத்தஞ்சு வயசு அத்தானுக்கு அதுவும் ரெண்டதாரமா கட்டிக் கொடுக்கலையா? அவங்க சந்தேகத்துக்குத்தான் முதல் உரிமை. குமாருக்குன்னு பேச்சுத்தானே? வார்த்தையெல்லாம் வாழ்க்கையாகிடுமா ? விட்டுக் கொடுத்துட்டு உட்கார்திருக்காதே! பிரிந்தசூட்டிகையான பொண்ணு அவளைக் கட்டிக்கிட்டா நீ இப்படி இனொருத்தன்கிட்டே வேலை பார்க்கிற நிலை இருக்காது உன்னை ஒரு கடைக்கே முதலாளியா ஆக்கிடுவா.”
“இந்தாங்க”
கடைப் பையன் நீட்டிய பொட்டலத்தை வாங்கிக் கொண்டு அதி மனதில் பொறியை கிளப்பிவிட்டுவிட்டு போய்விட்டார் வாடிக்கையாளர்.
வேடிக்கையாகப் பேசினார் என எடுத்துக் கொள்வதா உண்மையாக எடுத்துக் கொள்வதா என ஒரு கணம் தடுமாறினான் ஆதி.
அந்த வார்த்தைகள் அரியாசனம் போட்டு அமர்ந்து விட்டது அத்தியின் மனதில்.
“ஏய்... பிருந்தா உங்கம்மா முருகேசன் வீட்ல குமாரை பார்த்து வீட்டுக்கு சாப்பிட வரச் சொல்லிட்டுப் போன்னு சொன்னாங்களே மறந்துட்டியா?”
ஓட்டமும் நடையுமாக முன்னால் சென்று கொண்டிருந்த பிருந்தாவின் பின்னாலயே நடந்த தையல் ஞாயபகப்படுத்தினால்.
“வேற வேலை இல்லை. சாப்பாடு கொடுக்கறதும். சாப்பிடாதவங்களையெல்லாம் கண்டுபிடிச்சு சாப்பிடவாங்கன்னு சொல்றதுதும்தான் எனக்கு வேலையா? ஏற்கனவே லேட்டாயிண்ட்டுன்னு நானே பயந்துகிட்டு ஓடறேன்.”
“பாவம்டி குமார்.”
“ம்... அவ்வளவு அக்கறையிருந்தா நீ போய் சொல்லிட்டு வா. அதுவரைக்கும் உனக்காக பஸ் காத்துக்கிட்டிருக்கும்.”
“அடப்பாவி என்னடி இப்படி சொல்றே?”
பிருந்தா கடுப்படிக்க தையல் மௌனமானாள்.
இருவரும் பேருந்து நிறுத்தத்தை நெருங்கினர்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
வெண்ணிலா நேரத்திலே...!

Read more from ஆர்.சுமதி

Related to வெண்ணிலா நேரத்திலே...!

Related ebooks

Reviews for வெண்ணிலா நேரத்திலே...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வெண்ணிலா நேரத்திலே...! - ஆர்.சுமதி

    1

    பிருந்தா இரட்டை சடை சகிதமாக பள்ளிக்கு கிளம்பிவிட்டாள். மேஜைமீது படித்துவிட்டு பரப்பி வைத்திருந்த புத்தகங்களை அட்டவணையைப் பார்த்து அடுக்கி மார்போடு சரித்துக் கொண்டவள் சமையலறையைப் பார்த்து குரல் கொடுத்தாள்.

    அம்மா...பஸ்ஸூக்கு நாழியாயிட்டு டிபன் பாக்ஸ் கொடு...

    அம்மா பரிமளம் கையில் இரண்டு டிபன் பாக்ஸ்களோடு வந்தாள்.

    அம்மா...என்ன ரெண்டு டிபன் பாக்ஸ் தர்றே?

    ரெண்டும் உனக்கில்லை. இதுல ஒண்ணு ஆதிக்கு. ஆதி கடையில கொடுத்துட்டுப் போ.

    பிருந்தாவின் முகம் மாறியது.

    அம்மா...எனக்கு பஸ்ஸூக்கு நாழியாகிடும். இன்னைக்கு முக்கியமான டெஸ்ட் வேற இருக்கு. நான் சீக்கிரம் போகணும். மாமா கடைக்கெல்லாம் போக எனக்கு நேரமில்லை.

    என்னடி ரொம்ப அலுத்துக்கறே? போற வழியிலதானே கடையிருக்கு கொடுத்துட்டுப் போக முடியாதா? பரிமளம் முறைத்தாள்.

    அம்மா.என்னம்மா நீ? பஸ்ஸைப் பிடிக்க நான் கோவில் வழியா வேகமா ஓடிடுவேன். மாமா கடைக்கு போறதுன்னா மண் ரோட்டுமேல போகணும். சுத்திக்கிட்டு போக நேரமாகாதா?

    என்னடி ரொம்பத்தான் அலுத்துக்கறே? அவன் பசியால கடையில வாடி வதங்கணும். நீங்களெல்லாம் வயிறுமுட்ட சாப்பிடணும்.

    ‘ஏன்...சைக்கிளை எடுத்துக்கிட்டு வந்து சாப்பிட்டுட்டு போகலாமில்லை?"

    இந்த சட்டமெல்லாம் உன்னை யாரும் கேட்கலை. அவனுக்கு சாப்பாடு கொடுக்கறதைத் தவிர உனக்கு வேறெந்த வேலையும் முக்கியமில்லை. படிக்கிறாளாம் படிப்பு. அவனைக் காட்டிலும் படிப்பு ரொம்ப முக்கியம் பாரு.

    பரிமளம் கத்த ஆரம்பித்துவிட்டால் அவ்வளவுதான். பிருந்தா பயந்தவளாக அவசரமாக இரண்டு டிபன் பாக்ஸ்களையும் வாங்கிக்கொண்டு வாசலுக்கு வந்து செருப்பை

    மாட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடையை ஓட்டமாக மாற்றிக் கொண்டாள்.

    பின்னாடியே ஓடிவந்த பரிமளம் அடியே...வழியில முருகேசன் வீட்ல குமாரு படிச்சுக்கிட்டிருப்பான். ஒரு எட்டு அவனை வூட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போகச் சொல்லு. பாவம் புள்ளை ராத்திரியெல்லாம் கண் முழிச்சிப் படிச்சிருப்பான்.

    நடந்தவள் ஒரு கணம் நின்று ஏன் அதுக்கும் ஒரு டிபன் பாக்ஸ் கொடுத்தா கொடுத்துட்டு போவேன்ல... என்றாள்.

    ரொம்பப் பேசாதே. பல்லுலேயே நாலு போடுவேன். கட்டிக்கப்போறவன் மேல இருக்கற அக்கறையைப் பாரு...

    இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே ஏகக் கடுப்பானாள் பிருந்தா.

    கோபப்பட இது நேரமல்ல என்று நினைத்தாளோ என்னவோ எதுவும் பேசாமல் நடந்தாள்.

    இரண்டு எட்டு நடந்தவளோடு ஓடி வந்து சேர்ந்து கொண்டாள் தையல்நாயகி.

    அதே தெருவில் திண்ணை வீட்டுக்காரி. கொஞ்சம் வசதியான குடும்பத்துப் பெண். பிருந்தாவுடன் படிப்பவள். இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பவர்கள். பத்தாம் வகுப்பிற்கு பிறகு அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லை. அதனால் பக்கத்து டவுனிற்கு சென்று படிக்கின்றனர். இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போல் இன்னும் பத்து பேர் ஆண்களும் பெண்களுமாகச் செல்கின்றனர்.

    பிருந்தா...என்ன...நீ உன் குமார் மாமாவைத்தான் கட்டிக்கப்போறியா? அருகே நடந்த தையல்நாயகி விழிகளை சுருக்கி தோளில் தோளால் இடித்து கிசுகிசுக்க சுள்ளென விழுந்தாள் பிருந்தா.

    நான் சொன்னேனா?

    நீ சொல்லலைன்னா என்ன? உங்கம்மாதா ஊர் முழுக்க சொல்லிக்கிட்டு திரியறாங்களே! இதோ இப்பக் கூட அதைத்தானே சொன்னாங்க.

    ஆமா...அவங்களுக்கு என்ன வேலை? இப்படி எதையாவது சொல்லிக்கிட்டிருப்பாங்க.

    அப்படின்னா உனக்கு குமார் மேல எந்த எண்ணமும் இல்லையா?

    குமார் மேல மட்டும் இல்லை. யார் மேலயும் அப்படி ஒரு எண்ணம் இல்லை. காதல், கல்யாணம் இதைப்பத்தியெல்லாம் பேசறதுக்கான வயசா நினைக்கறதுக்கான தருணமோ இது இல்லை. தையல், நான் நல்லா படிக்கணும். நிறைய மார்க் வாங்கணும். காலேஜ்ல சேரணும். பெரிய வேலைக்கும் போகணும். இந்த கிராமத்துக்கு நிறைய சேவை பண்ணனும். அதுதான் என் லட்சியம்.

    இதைக் கேட்டு கலகலவென சிரித்தாள் தையல்.

    என்ன சிரிப்பு? என்னைப் பார்த்தா படிக்கிற மாதிரி வேலைக்குப் போறமாதிரி தெரியலையா?

    பிருந்தா நீ இப்படிப் பேசறே? உன் அம்மா எப்படிப் பேசறாங்க தெரியுமா?

    எப்படிப் பேசறாங்க?

    நேத்து உங்க வீட்டுக்கு பால் கொடுக்க வந்தபோது உன்னைப்பத்தி என்னவோ பேச்சு வந்தது. உன் படிப்பைப் பத்தி நான் சொன்னேன். வகுப்புல பிருந்தாதான் முதல் மார்க் வாங்கறான்னு நான் சொன்னதுக்கு உங்கம்மா என்ன சொன்னாங்க தெரியுமா?

    என்ன சொன்னாங்க?

    ஆமா...அவளைப் படிக்க வச்சு வேலைக்கா அனுப்பப் போறேன்? இந்தக் குமார் பயலுக்கு கட்டி வைக்கறதுக்காகத்தான் இவளைப் பல்லைக் கடிச்சுக்கிட்டு வேலைக்கு அனுப்பறேன். இல்லாட்டி...நிறுத்திப் போட்டு வீட்டு வேலை செய்ய வச்சிருப்பேன். என்னால வேலை செய்ய முடியலை. குமார் ஆதிமாதிரி கிடையாது. காலேஜ்ல படிக்கிறான். அவனுக்குத்தான் இவளைக் கட்டி வைக்கப்போறேன். என்னதான் தம்பிங்க ரெண்டு பேரையும் சின்ன வயசிலேர்ந்து நானே வளர்த்தாலும் கல்யாணம்னு வரும்போது அவனுங்க விருப்பம்தானே முக்கியம்! உன் பொண்ணு படிக்கலைன்னு ஒரு காரணம் சொல்லிடக்கூடாது பாரு. அதுக்காகத்தான் படிக்க வைக்கிறேன் குமார் காலேஜ்க்கு அனுப்புன்னு சொன்னா மேற்கொண்டு அனுப்புவேன். இல்லாட்டி பள்ளிக்கூட படிப்போட நிறுத்திடுவேன். அப்படின்னு சொன்னாங்க.

    ஏற்கனவே எரிச்சலில் இருந்த பிருந்தாவிற்கு இதைக் கேட்டதும் இன்னும் எரிச்சல் பரவியது.

    ஓகோ! குமார் படிக்கவைன்னு சொன்னாத்தான் எங்கம்மா படிக்க வப்பாங்களா? இல்லாட்டி படிக்க வைக்க மாட்டாங்களா? படிப்பு மட்டும் இல்லை. கல்யாணம் கூட நான் விரும்பினாத்தான்.

    ஏண்டி! குமாருக்கு என்ன? சினிமா ஹீரோ மாதிரி இருக்கார். உனக்கு ரொம்பப் பொருத்தமாயிருப்பார்.

    அப்படியா? பேசாம படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு ஜோடிப் பொருத்தம் பாரு. ஆளைப்பாரு...

    இந்த டபாய்க்கற வேலையெல்லாம் வேண்டாம். உண்மையைச் சொல்லு. உனக்கு குமார் மேல இஷ்டமா இல்லையா?

    "அதான் சொன்னேனே...காதல், கல்யாணம் இதையெல்லாம் யோசிக்கிற வயசோ பக்குவமோ எனக்கு இப்ப இல்லை. எனக்கு மட்டும் இல்லை உனக்கும்தான். வாயை மூடிக்கிட்டு

    வா. முடிஞ்சா இன்னைய டெஸ்ட்டுக்கான கேள்விகளைக் கேட்டுக்கிட்டு வா. நான் பதில் சொல்லிக்கிட்டு வர்றேன்."

    நல்ல வேளை கேள்விகளை மட்டும் என்னைக் கேட்கச் சொன்னே?

    "எனக்குத் தெரியும். கேள்வி மட்டும்தான் உனக்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1