Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மறவாதே மனமே!
மறவாதே மனமே!
மறவாதே மனமே!
Ebook111 pages39 minutes

மறவாதே மனமே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பார்வதியும், அம்சா மாமியும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.
“பார்வதி... என்னடி இது, உன் புள்ளையாண்டான் ஒரு குட்டியோடு வர்றான். என்ன அசிங்கம்!”
பார்வதிக்கும் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது போல் இருந்தது. ஆனால், மாமி எதிரே மானம் போகாமல் பார்த்துக் கொள்ள அவள் தவித்தாள்.
“என்ன மாமி... அசிங்கம் அது இதுன்னுகிட்டு! தன்கூட வேலை பார்க்கிற பொண்ணா இருக்கலாம். இப்ப ஆம்பளையும் பொம்பளையும் சகஜமா பழகுதுங்களே?”
“அதுக்கு இப்படி ஒட்டி உரசிக்கிட்டா போவாங்க? அந்தப் பொண்ணு உன் பையன் இடுப்பை என்னமா உடும்புப் பிடியா புடிச்சுக்கிட்டு வண்டியில் உட்கார்ந்திருந்தா... அருமை பெருமையா ஒண்ணு பெத்து அதையும் இப்படி விட்டுட்டியேடி! அவள் என்ன சாதியோ... குலமோ? கடவுளே...”
பார்வதியால் எதுவும் பேச முடியவில்லை. அவளுக்கு அடிவயிறு கலங்கியது.
“இந்தக் காலத்துல நடையா நடந்து நாம தேடி கட்டி வச்சதுங்களே உள்ளே வந்த ரெண்டு நாளில் நம்மை எந்த ஊருன்னு கேட்குதுங்க. இப்படி தானாக வர்றதுங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கணவனை கைக்குள் போட்டுக்கிட்டு நம்மை ஒருவழி பண்ணிடும். ஆரம்பத்திலேயே நாம எச்சரிக்கையா இருக்கிறது நல்லது.”
“என்ன மாமி நீங்க? என்னமோ கல்யாணமே நடந்துட்ட மாதிரி பேசுறீங்க? நான் நடக்க விட்டுடுவேனா? சாதி, மதம், ஜாதகம் இதெல்லாம் பார்த்துதான் என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணுவேன். நான் பார்க்கிற பொண்ணுதான் என் வீட்டுக்கு மருமகளாக வரணும்.”
“அதை, உன் புள்ளையாண்டான் கேட்கணுமே!”“கேட்காம எங்க போவான்? அவன் எனக்குப் பயந்தவன்.”
“காதல் வந்துட்டா, இந்தக் காலத்துல பயமாவது... கத்திரிக்காயாவது? இதோ பாரு... வீட்டுக்குப் போனதும் தடாலடியா அவனைப் பிடிச்சு கத்தாதே. மெதுவா கல்யாண பேச்சை எடு. அவனாக சொல்லட்டும். அப்புறம் ஒரு பிடி பிடி” மாமி திட்டம் போட்டுக் கொடுத்தாள்.
இருவரும் தங்கள் வீட்டுக்கு வந்தனர். தனது அம்சா மாமி, பார்வதியின் பக்கத்து வீட்டுக்காரி.
பார்வதி, வீட்டுக்குள் நுழையும் போது, முற்றத்தைப் பார்த்தாள். கேசவனின் “பைக்” இல்லை.
‘அவன் எங்கே போனான்? அவளை எங்கே இறக்கி விட்டான்?’
உள்ளே வந்தாள்.
திண்ணையில் அமர்ந்திருந்தார், கணவர் முருகேசன். அவர் கையில் செய்தித்தாள்.
“என்னங்க... உங்க அருமை பையன் வந்தானா?” கேட்டவாறு, அருகில் அமர்ந்தாள்.
“வந்தான்... யாரோ நண்பனைப் பார்த்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு, உள்ளேகூட வராம அப்படியே போயிட்டான்.”
“இன்னைக்கு என்ன காரியம் நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?”
“என்ன நடந்தது? நீ கோவிலுக்கு போயிட்டு வர்றே. அவ்வளவுதானே?”
“அதுமட்டுமில்லை” என்று இழுத்தவள், வழியில் தான் கண்ட காட்சியைச் சொன்னாள்.
“கொடுத்து வச்சவன். அந்தக் காலத்துல எதிரே வர்ற பொண்ணை நிமிர்ந்து பார்க்கவே எனக்கு தொடை நடுங்கும்.”
“என்ன... கிண்டலா?”
“கிண்டல் இல்லை. இப்போ என்ன பண்ணுறது? அவன் இஷ்டப்பட்ட பொண்ணையே கட்டிவச்சுட்டா போச்சு.”
“போதும்... நீங்க ஒருத்தரே போதும். இந்தக் குடும்பம் உருப்பட்ட மாதிரிதான்.கணவனோடு அவள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேசவன், வண்டியில் வந்து இறங்கினான். உற்சாகமாக அவன் பெற்றோரை நோக்கி வரவும், ஆத்திரத்தில் கொதித்தாள், அம்மா.
அவன், அதை சட்டை செய்யவில்லை.
“அம்மா! பசிக்குது” என்றான்.
“இப்போ என்னால் டிபனெல்லாம் பண்ண முடியாது. காப்பி வேணா போட்டுத் தர்றேன்.”
“காப்பி வேண்டாம்! வர்ற வழியில என் சகாவோடு காப்பி குடிச்சுட்டேன்.”
‘ஆம்பளை சகாவா? பொம்பளை சகாவா?’ அவசரமாகக் கேட்பதற்கு அம்மாவுக்கு நாக்கு துடித்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“அவன்தான் பசிக்குதுங்கிறானே... ஏதாவது பண்ணிக் கொடேன்” என்றபடி முருகேசன் உள்ளே வந்தார்.
பார்வதி கோபமாக சமையலறைக்குள் நுழைந்தாள். எரிச்சலோடு, பாத்திரங்களை போட்டு உருட்டினாள்.
“அம்மாவுக்கு என்னாச்சு? கோபமாக இருக்கிற மாதிரி தெரியுது?” அப்பாவைப் பார்த்து கேட்டபடியே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான், கேசவன்.
“கொஞ்ச நேரத்துல தெரியும்... நீயே பாரு” என்றபடி அவரும் தொலைக்காட்சியில் ஆழ்ந்தார்.
சில நிமிடங்களில் சூடாக ரவா உப்புமாவுடன் வந்தாள், பார்வதி. ‘டங்’கென மகன் எதிரே வைத்தாள். அவன் சாப்பிடத் தொடங்க, அம்மா இங்கும் அங்கும் உலவினாள்.
‘முதலில் கல்யாண பேசசை எடு’ என அம்சா மாமி சொன்னது மறந்து போனது.
அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தவளைப் போல் இருந்துவிட்டு திடீரென கத்தத் தொடங்கினாள்.
“ஏன்டா... உன் இடுப்பைப் புடிச்சுக்கிட்டு வண்டியில் ஒருத்தி வந்தாளே... அவ யாருடா?”
அதிரடியாக அம்மா இப்படிக் கேட்பாள் என்பதை எதிர்பார்க்காத கேசவன், ஒரு கணம் ஆடித்தான் போனான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
மறவாதே மனமே!

Read more from ஆர்.சுமதி

Related to மறவாதே மனமே!

Related ebooks

Reviews for மறவாதே மனமே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மறவாதே மனமே! - ஆர்.சுமதி

    1

    அந்தக் கல்லூரி வாசலில் தன் வாகனத்தை நிறுத்தினான், கேசவன். அடர்ந்த வேப்பமர நிழல், அவனையும் அவன் வாகனத்தையும் மறைப்பதைப் போலிருந்தது.

    கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தான். உள்ளே சென்றான்.

    சில நிமிடங்களில் மணியோசை கேட்டது.

    சுடிதார், சல்வார், ஜீன்ஸ் என விதவிதமான உடைகளில், புத்தம் புது பூக்களாக மாணவிகள் வெளியே வந்தனர்.

    குறையாத உற்சாகம், ‘குளுகுளு’ பேச்சு, குதூகல சிரிப்பு. அவன் பார்த்தான். கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. இதயத்துக்கு மலர்ச்சியாகத் தெரிந்தது.

    அவன் வசீகரமாக ‘ஜொள்ளு’ விட்டுக் கொண்டிருந்த அந்த நிமிடத்தில்தான் ‘வள்’ளென காதில் வந்து மோதியது, அந்தக் குரல்.

    ஏய்... படுபாவி...

    திடுக்கிட்டு சுயநினைவுக்கு மீண்டவன் - அருகே நின்றிருந்த பருவச் சிலையைக் கண்டு பதறினான்... அசடு வழிந்தான்.

    என்னைப் பார்க்க வர்றீங்களா? இல்லே... இப்படி, கண்டவளையும் ‘சைட்’ அடிக்க வர்றீங்களா? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு... மற்ற பொண்ணுங்களைப் பார்க்கிற இந்த ரெண்டு கண்ணையும் தோண்டி எடுக்கணும் போலிருக்கு என்றாள், அழகு தேவதை சுனிதா.

    கேசவன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

    கண்ணால் பார்த்தாலே தப்பா? உண்மையில், என் உணர்வு உனக்குப் புரியவில்லை.

    என்ன சொல்றீங்க?

    கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை... என் கண்ணோடு மணியானாய் நீ, கண்ணை விட்டு பிரியவில்லை’ என்ற வரிகளில் அந்த உண்மை இருக்கு. கண்ணோடு காணும் இந்த கலரெல்லாம் நமக்கு சொந்தமாக முடியுமா? சும்மா பார்த்து ரசிக்கலாம்... அவ்வளவுதான். ஆனால், நீதான் என் கண்மணி, சரியா பெண்மணி?

    கேசவனின் பேச்சை ரசித்தாலும் தன் கோபத்தை தொடர்ந்து வெளிக்காட்டினாள். சொந்தமா கவிதை எழுதத் தெரியலைன்னாலும் இப்படி மத்தவங்க வரியை மனப்பாடம் செய்து பேசவாவது தெரியுதே!

    முகம் சுளித்தாள்.

    அதுக்கும் திறமை வேணும்... தெரிஞ்சுக்கோ!

    சரி... சரி, முதல்ல வண்டியை எடுங்க சுள்ளென விழுந்தாள்.

    அவளைப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு, கல்லூரி வாசலை விட்டு, வாகனத்தில் நகர்ந்தான்.

    சாலையில் நுழைந்த போது கேட்டான் - இன்னைக்கு நாம எங்கே போறோம்?

    எங்கேயும் இல்லை. வழக்கம் போல எங்க தெருமுனையில் என்னை இறக்கிவிட்டுட்டு நீங்கபாட்டுக்கு சிவனேன்னு போகலாம்.

    இன்னும் உனக்கு கோபம் தீரலையா? நாளையிலிருந்து உன்னைக் கூப்பிட வரும் போது, கைக்குட்டையால் என் ரெண்டு கண்களையும் கட்டிக்கலாம்ன்னு இருக்கேன்! என்றான்.

    சுனிதா சிரித்தாள்.

    சேச்சே! நான் ஒண்ணும் அப்படி சொல்லலை... இப்ப நான் அவசரமா வீட்டுக்குப் போகணும்.

    வீட்டுக்கு சீக்கிரம் போகணுமா? அப்படின்னா உன்னைப் பெண் பார்க்க வர்றாங்களா?

    நான் அப்படி சொன்னேனா?

    கல்யாணம் ஆகாத பொண்ணுங்க சீக்கிரம் வீட்டுக்கு போகணும்ன்னு சினிமாவில் சொல்லுவாங்க. வீட்டுல பெண் பார்க்க ஆள் வருவாங்க. அதான் கேட்டேன்.

    ஏன், யாராவது என்னைப் பெண் பார்க்க வந்தா என்னைக் கழட்டிவிட்டுடலாம்ன்னு பார்க்கிறீங்களா? முறைத்தாள்.

    கழட்டிவிடுற மாதிரியா நீ இருக்கே? கல்லூரிப் பெண்களை சும்மா பார்த்ததுக்கே கண்ண தோண்டி எடுத்துடுவேன்கிறே. உன்னைக் கழட்டிவிட முடியுமா?

    தெரியுதில்லே! வண்டியை நேரா ஓட்டுங்க!

    சரி... எதுக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்கிறே?

    இன்னைக்கு எங்க அக்கா ஊர்லேருந்து வர்றேன்னு சொன்னா! எனக்கு வகுப்புக்கு போகவே பிடிக்கலை. மட்டம் போட்டுடலாம்ன்னு பார்த்தேன். எங்கப்பா இருக்காரே, பயங்கர கண்டிப்பு. வகுப்புக்கு மட்டம் போட்டா என்னை வெட்டிப் போட்டுடுவாரு.

    அப்படியா? வகுப்புக்கு மட்டம் போட்டாலே வெட்டிப் போட்டுடுவாரா? நீ எத்தனையோ நாள் வகுப்பை ‘கட்’ அடிச்சுட்டு என்னோடு சுத்தி இருக்கியே... அதெல்லாம் தெரிஞ்சா என்ன செய்வார்?

    ஏது... விட்டா நீங்களே போய் சொல்லிக் கொடுப்பீங்க போலிருக்கே?

    சொல்லிக் கொடுத்தா அவர் முதலில் கழுத்தைப் பிடிக்கப்போறது என்னைத்தானே!

    புரிஞ்சா சரி... இப்ப வேகமா போங்க.

    உங்க அக்கா வந்திருக்காங்கங்கிறதால என்னை நீ ஏமாத்தலாமா?

    இப்போ என்ன ஏமாத்திட்டேன், உங்களை?

    தினமும் அரை மணி நேரமாவது ஜாலியா பேசிக்கிட்டிருப்போம். இன்னைக்கு ஏமாத்துறியே... இது சரியா?

    அதைத்தான் நானும் சொல்றேன். தினமும்தான் அரை மணி நேரம் பேசுறோமே! ஒருநாள் பேசலைன்னா என்ன?

    தினமும் சாப்பிடுகிறோம் என்பதுக்காக ஒருநாள் முழுவதும் பட்டினி கிடக்க முடியுமா? வயிற்றுப் பசியைவிட, காதல் பசி ரொம்ப கொடுமையானது.

    அசிங்கமா இருக்கு, உங்க பேச்சு.

    காதல் பசின்னுதானே சொன்னேன். வேறு பசின்னு சொன்னேனா?

    சீச்சீ...

    சீச்சீ...

    சொல்லு, இப்ப எங்காவது போகலாமா?

    இல்லை! நான் வீட்டுக்குப் போகணும். எங்க அக்காவை நான் பார்த்து முழுசா மூணு மாசம் ஆகுது. அவளை உடனே பார்க்கணும்.

    என்னைவிட அக்கா மேல்தான் உனக்கு பாசமா?

    நீங்க அக்கா - தங்கச்சியோடு பிறந்திருந்தா அதெல்லாம் தெரியும்.

    உண்மைதான். ஒரு பத்து நிமிடம் என்னோடு ஓட்டலுக்கு வந்து ஒரு காப்பிகூடவா நீ குடிக்கக் கூடாது?

    சரி, பத்தே நிமிடம்தான், உடனே கிளம்பிடுவேன்.

    ம்...

    இருவரும் ஒரு ஓட்டல் முன் இறங்கினர். மாலை நேரமாதலால் கூட்டம் அதிகமிருந்தது.

    இருவரும் ஒரு ஓரமாகப் போய் அமர்ந்தனர். காப்பிக்கு ‘ஆர்டர்’ கொடுத்துவிட்டு, அவளைப் பார்த்தான்.

    எனக்காக ஒரு பத்து நிமிடம் ஒதுக்க, உனக்கு இப்பவே இவ்வளவு சிரமம் இல்லையா? என்றான்.

    பத்து நிமிடம் என்ன? நாள் பூரா உங்க பக்கத்துல இருக்கேன். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க.

    நான் முடிவு பண்ணிட்டேன். இன்னைக்கே எங்க அம்மாகிட்ட நம்ம காதலை உடைக்கப் போறேன். சீக்கிரம் உன் கழுத்துல மூணு முடிச்சு போடப் போறேன்.

    அய்யோ... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?

    ஏன்... கல்யாணம் பண்ணாம இப்படி ஜோடியா ஊர் சுத்துறதுதான் உனக்குப் பிடிச்சிருக்கா?

    "எங்க அக்காவைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த கடனையே அப்பா இன்னும் அடைக்கலை. அதுக்குள் நம்ம

    Enjoying the preview?
    Page 1 of 1