Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வாசமில்லா மலரிது!
வாசமில்லா மலரிது!
வாசமில்லா மலரிது!
Ebook107 pages36 minutes

வாசமில்லா மலரிது!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அதே நேரம் உள்ளே வந்தாள் கோபிகா. மார்பில் அணைத்திருந்த புத்தகங்கள் அவளையே சாய்த்துவிடும் போலிருந்தது.
உள்ளே வந்த கோபிகா புத்தகங்களை அருகிலிருந்த மேசை மீது வைத்துவிட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். கொஞ்சினாள்.
கோபிகா கல்லூரியில் முதல் வருடம் படிப்பவள்.
“அம்மா... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்றாள்.
அம்மா விசயத்தை சொன்னாள்.
“அத்தானை அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? நாம நம்ம அக்கா புள்ளையை அனுசரிக்கலைன்னா வேற யார் அனுசரிப்பா? பொண்டாட்டி செத்த துக்கத்துல ஒரு ரெண்டு வருஷம் இருக்கலாம். அப்புறம் அவரு வேற எங்கயாவது ஒரு பொண்ணைப் பார்த்து கட்டிப்பாரு. அப்ப வர்றவ இந்தப் புள்ளையைக் கொடுமைப்படுத்துவா. கொடுமையையெல்லாம் எப்படித்தான் தாங்கிப்பேனோ?”
“அம்மா...” தயக்கமாய் அழைத்தாள் கோபிகா.
“என்னம்மா?”
“நான் அத்தானைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.”
கோபிகா சொன்ன பதிலைக் கேட்டு இருவரும் அதிர்ந்தனர்.
கோபிகா சொன்னதைக் கேட்டு சரசு, சூடாமணி மட்டுமல்ல மன எரிச்சலுடன் உள்ளேயிருந்த கவிதாவும் அதிர்ந்தாள்...
மெல்ல வெளியே வந்தாள்“கோபிகா... நீ என்னம்மா சொல்றே?” என்றார் சூடாமணி.
சரசு மகளை திகைப்பு மாறாமல் பார்த்தாள்.
“ஆமாம்ப்பா. மணிகண்டன் குழந்தை. நம்ம அக்காவோட குழந்தை. சின்னம்மாக்காரிக்கிட்ட கொடுமைப்படுத்தப்பட்டா அதை பார்த்துக்கிட்டு எப்படிப்பா இருக்க முடியும்? அத்தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம இவனுக்காகவே தன்னை அர்ப்பணிப்பாரா? மாட்டார். யாரையாவது கல்யாணம் பண்ணிப்பார். வர்றவள் நல்லவளாயிருப்பாள்னு எப்படி நம்பறது? அதனால அக்காவோட புள்ளைக்காக நான் அத்தானைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். இவனைத் தாயா இருந்து நான் வளர்க்கிறேன்.”
அப்பாவும் அம்மாவும் மெய்சிலிர்த்தனர்.
“கோபிகா... உன்னோட நல்ல மனசு எனக்குப் புரியுதும்மா ஆனா...”
“ஆனா என்னப்பா?”
“கவிதாவுக்கும் மாப்பிள்ளைக்கும் வயசு வித்தியாசம் அவ்வளவா கிடையாது. பொருத்தம் இருக்கும். ஆனா நீ சின்னப் பொண்ணு. உனக்கும் மாப்பிள்ளைக்கும் பத்து வயசு வித்தியாசம் இருக்கும். தவிர... நீ காலேஜ் படிச்சுக்கிட்டிருக்கறே. உன்னைப் படிக்க வைச்சு பெரிய வேலைக்கு அனுப்பணும்னு ஆசைப்பட்டேன். நீ எப்படி... கிராமத்துல போய் வாழ்வே? இந்த வீட்லேயே முதன்முதலா காலேஜுக்குப் போன பொண்ணு நீதான். படிப்போட மட்டும் இல்லாமல், பாட்டு, பேச்சு, கம்ப்யூட்டர்ன்னு எதையெதையோ கத்துக்கிட்டிருக்கே. கிராமத்துல வாழ்க்கைப்பட்டு உன் திறமையையெல்லாம் அழிச்சுக்கப் போறியா?”
அப்பா அப்படி சொன்னதும் சிரித்தாள் கோபிகா.
“அப்பா... மணிகண்டனுக்காக நான் என் படிப்பு, லட்சியம் எல்லாத்தையும் விட்டுட தயாராயிருக்கேன். அக்காவோட குழந்தையை என் குழந்தையா வளர்ப்பேன். அக்காகூட ரெண்டு பேரு கூடப் பிறந்திருந்தும் அவளோட புள்ளையை அனாதையா விடலாமா? அதனாலதான்...சூடாமணி அவளை நிமிர்ந்து பார்த்தார். கோபிகா அழகான இளம் மான்குட்டியைப் போலிருந்தாள். நல்ல நிறம். கரிய பெரிய விழிகள். நிறைய லட்சியங்களைப் பிரதிபலிக்கும் விழிகள். நன்றாகப் படிக்கக்கூடியவள். இரண்டு பெண்களும் படிக்காததால் அவளையாவது நிறைய படிக்க வைத்து பெரிய வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று சூடாமணி கனவு கண்டார்.
ராகவேந்திரனுடன் கோபிகாவை இணைத்துப் பார்த்தபோது இதயம் வலித்தது.
மூன்று பெண்களிலேயே மிகவும் அழகானவள் கோபிகாதான். தனக்கு எந்தவிதத்திலும் பொருத்தமில்லாத ஒருவனை கல்யாணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறாள். காரணம் குழந்தை. அக்காவின் குழந்தை அனாதையாகிவிடக்கூடாது என்ற ஆதங்கம். அந்த ஆதங்கம் தன்னையே அர்ப்பணிக்கத் தயாராகிவிட்டது.
“கோபிகா... நல்லா யோசிச்சுத்தான் சொல்றியா?” அப்பா தயக்கமாகக் கேட்டார்.
“இதுல யோசிக்க என்னப்பா இருக்கு? கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க...”
“அதுக்கில்லைம்மா... அக்கா புள்ளை மேல உள்ள பாசத்தால நீ இந்த - முடிவை எடுத்துட்டுப் பின்னாடி வருத்தப்படக்கூடாது.”
“இல்லப்பா... நான் தெளிவா இருக்கேன். என் படிப்பைப் பத்தி நான் கவலைப்படலை” என்றாள்.
சூடாமணிக்கு இதில் விருப்பம் இல்லை. சரசுவிற்கும்தான். கவிதா சுமாராக இருப்பாள். எட்டாம் வகுப்போடு நின்றுவிட்டாள். பார்வதிக்கும் அவளுக்கும் ஓரிரு வயசுதான் வித்தியாசம். அதனால் ராகவேந்திரனுக்கு அவள் பொருத்தமானவள் என நினைத்தார். கோபிகாவை கொடுக்க மனம் வரவில்லை. அழகு, படிப்பு இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் வயது வித்தியாசம் இருக்கிறதே என்று கலங்கினார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
வாசமில்லா மலரிது!

Read more from ஆர்.சுமதி

Related to வாசமில்லா மலரிது!

Related ebooks

Reviews for வாசமில்லா மலரிது!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வாசமில்லா மலரிது! - ஆர்.சுமதி

    1

    சூடாமணிக்கு எப்படிக் கவிதாவை சம்மதிக்க வைப்பதென்று கவலையாக இருந்தது. ஒத்துக் கொள்வாளா என யோசித்தார்.

    மறுத்துவிட்டால் என்ன செய்வது?

    மனைவி சரசு நீங்க சொல்லிப் பாருங்க கண்டிப்பா கேட்பா என கூறினாள்.

    கவிதா உள்ளே வேலையாக இருந்தாள். ஏதோ சிற்றுண்டி செய்து கொண்டிருக்கிறாள்.

    கூடத்தில் மணிகண்டன் விளையாடிக் கொண்டிருந்தான். முட்டி தேய தரையில் ஊர்ந்து கொண்டிருந்தான். சுருட்டை சுருட்டையான மென்மையான கேசம். கழுத்தில் தொங்கும் சிறிய டாலர் வைத்த சங்கிலி. கால்களில் அடர்ந்த முத்து வைத்த கொலுசு. சூடாமணியின் கையைப் பற்றிக் கொண்டு நடை பழகும்போது அந்த கொலுசு எழுப்பும் சத்தம் வீட்டை நிறைக்கும்.

    தரையில் எச்சில் ஒழுக மண்டியிட்டு அங்கும் இங்கும் ஓடியவனை சரசு அள்ளி எடுத்துக் கொண்டாள். பஞ்சு போன்ற அதன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள். கணவனிடம் வந்தாள்.

    என்னங்க... சரசு அழைத்தாள்.

    சூடாமணி நிமிர்ந்தார்.

    அவளை கூப்பிடட்டா? என்றாள்.

    கூப்பிடு என்றார்.

    குரலை உயர்த்திக் கூப்பிடாள் சரசு.

    வர்றேம்மா பதிலுக்கு உள்ளிருந்து குரல் வந்தது.

    அவள் வருவதற்குள் தன் கவலையை வெளிப்படுத்தினார் சூடாமணி.

    சரசு... அவள் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா என்ன செய்யறது?

    ஒத்துக்கத்தான் வைக்கணும். இந்த புள்ளையோட எதிர்காலத்தை நினைச்சாவது அவள் சம்மதிச்சுதான் ஆகணும். பேசற விதத்துல பேசி வழிக்கு கொண்டு வரணும் என்றாள்.

    கவிதா வந்தாள்.

    "முகத்தில் விழுந்த முடிக்கற்றையை இழுத்து காதோரம் சொருகிக் கொண்டாள்.

    என்னம்மா... ஏன் கூப்பிட்டீங்க?

    இப்படி உட்காரும்மா மகளைத் தன் அருகே அமர்த்தினார் சூடாமணி.

    மணிகண்டன் கவிதாவைக் கண்டதும் வாய் குழைய சிரித்துத் தாவினான்.

    கவிதா அவனைக் கையில் வாங்கிக் கொண்டாள். முத்தமிட்டு மடியில் வைத்துக் கொண்டாள்.

    கவிதா...

    சொல்லுங்கப்பா.

    நீ ராகவேந்திரனை கல்யாணம் பண்ணிக்கறியா?

    சட்டென அதிர்ந்தாள் கவிதா.

    அப்பா... என்ன சொல்றீங்க? அத்தானையா?

    ஆமாம்

    மாட்டேன். நான் அத்தானை நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. ரெண்டாந்தாரமா வாழ்க்கைப்பட நான் விரும்பலை.

    என்னம்மா இது? உன் அக்கா செத்ததும் அவர் இடிஞ்சு போயிட்டார். இந்தப் புள்ளையை ஆம்பளையா இருந்து வளர்க்க முடியாமல் இங்க விட்டுட்டுப் போயிட்டார். அன்னைக்கு பாதர குடிக்கு போனப்ப எனக்கு ரொம்ப வயித்தெரிச்சலா போயிட்டு. சமைச்சு போட ஒரு ஆள் வைச்சிருக்காரு. அந்த சமையலை அவர் கூட சேர்ந்து சாப்பிட்டேன். வாயில் வைக்க சகிக்கலை. அவர் சரியாவே சாப்பிடலை. பாவம்... வயலோடயும், வாய்க்காலோடயும் கஷ்டப்பட்டு வர்றவருக்கு வாய்க்கு ருசியாக சமைச்சு அன்போட பரிமாற ஆள் இல்லாததை நினைச்சு என் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. பார்வதி இப்படி அல்ப ஆயுசுல போயிட்டா... கலங்கிய அவருடைய விழிகள் அனிச்சையாக சுவரில் மாட்டியிருந்த பார்வதியின் புகைப்படத்தில் நிலைத்தன.

    பார்வதி சரசு, கவிதாவின் சாயலை தாங்கி சிரித்தாள். மாலை சுமந்து அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அப்பா விழிகளை எடுத்துக் கொண்டார்.

    அத்தானை நீ கட்டிக்கிட்டு மறுபடி அந்த வீட்ல மகிழ்ச்சியை ஏற்படுத்தணும். அதான் என் ஆசை.

    மன்னிச்சிடுங்கப்பா. என்னால அது முடியாது. கவிதாவின் பதிலில் உறுதி தெரிந்தது.

    சரசு மகளைப் பார்த்தாள்.

    கவிதா... உன் அக்கா புள்ளை. இவனுக்காகவாவது நீ அவரை கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா? பாவம் இவன். தாய்ப்பாசம் இல்லாமல் வளரணுமா?

    எரிச்சலாக அம்மாவை ஏறிட்டாள்.

    அம்மா... இவனுக்காக என் வாழ்க்கையை நான் பலி கொடுக்கணுமா? அக்காவுக்கு அவரைப் பார்த்தபோதே எனக்குப் பிடிக்கலை. கருப்பா குண்டா... மாப்பிள்ளை மாதிரியா இருந்தார். முன்பக்கம் வழுக்கை... அக்காவுக்கே அவர் பொருத்தம் இல்லை. நான் எப்படி அவரைக் கட்டிப்பேன்? நாங்க ரெண்டு பேரும் தெருவுல நடந்து போனா பார்க்கறவங்க சிரிக்கமாட்டாங்க?

    அவள் இப்படிச் சொன்னதும், சரசு எரிச்சலாய் பேசினாள்.

    ஆம்பளைக்கு அவன் ஆம்பளைங்கற ஒரு தகுதியே போதும். அழகு தேவை இல்லடி, மாப்பிள்ளை எவ்வளவு தங்கமானவர். அக்காவை ராணி மாதிரி வைச்சிருந்தார். அவளுக்குத்தான் வாழக் கொடுத்து வைக்கலை. அல்ப ஆயுசுல போய் சேர்ந்துட்டா. இந்தக் குழந்தையோட முகத்தைப் பாரு. தாயில்லாத புள்ளையா ஆயிட்டான் நீ இவனுக்குத் தாயா இருக்கக்கூடாதா?

    கவிதா சட்டென எழுந்துகொண்டாள். மணிகண்டனைத் தாயிடம் கொடுத்தாள்.

    அம்மா... என்னை வற்புறுத்தாதீங்க. மணிகண்டனை வளர்க்க ஆள் இல்லையா? எத்தனையோ புள்ளைங்க பாட்டி வீட்ல வளரலையா? அதை மாதிரி நினைச்சுக்க வேண்டியதுதான். இவனுக்கு இங்க என்ன குறைச்சல்? அவன் இங்கேயே வளரட்டும். இவனுக்கு நான் சித்தியாக இருக்கத்தான் விரும்பறேன். அம்மாவா இல்லை... இப்படி சொல்லிவிட்டு கவிதா உள்ளே சென்றுவிட்டாள்.

    சூடாமணி சோர்வாய் தளர்ந்து உட்கார்ந்திருந்தார். சரசு மனம் கவலையில் வாடியது.

    அக்காக்காரி செத்துட்டா அவள் புருஷனை தங்கச்சி கட்டிக்கறது உலகத்துல நடக்காத ஒண்ணா? நாம என்ன இவளைப் படுகுழியிலயா தள்றோம். இப்படிப் பேசறா? அக்கா புள்ளைக்காகவாவது கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா?

    விடு சரசு. அவளுக்கே மனசு ஒப்பலைன்னா நாம என்ன பண்ண முடியும்? கல்யாண காரியம் சம்மதத்தோட நடக்கணும். சம்மதம் இல்லாமல் போனா நல்லாயிருக்குமா? ஒரு மகளைத்தான் பறிகொடுத்துட்டோம். வற்புறுத்திக் கல்யாணம் பண்ணினா இவள் ஏதாவது பண்ணிக்கிட்டா வருமா? விடு என்றார்.

    2

    அதே நேரம் உள்ளே வந்தாள் கோபிகா. மார்பில் அணைத்திருந்த புத்தகங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1