Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marikozhundhu Vaasam
Marikozhundhu Vaasam
Marikozhundhu Vaasam
Ebook258 pages1 hour

Marikozhundhu Vaasam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சித்தன்னபுரம் ஜமீன் மாளிகையில் புதையல் எடுக்க பூஜை போட போன கண்ணன் குடும்பம் அதை எடுத்ததா? அவன் தம்பி மாதவன் பூஜையில் கலந்து கொண்டானா? கண்ணனின் மகன் விஷாலுக்கு அடுத்த ஜமீன் பட்டம் கிடைத்ததா? இதில் சித்தனின் பங்கு என்ன? பல திகிலூட்டும் சம்பவங்களுடன் மாதவனுக்கும் அவன் அக்கா மகள் மீனாவுக்கும் இடையே இருந்த காதல் நிறைவேறியதா? வில்லனாக விஷாலின் எண்ணங்கள் பலித்ததா? சித்தன்னபுரம் ஜமீனின் இன்றைய நிலை? அதில் இருந்த பொக்கிஷம் என்னவாயிற்று? பல கேள்விகளுக்கான பதில் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இதோ உங்களுக்காக.........!

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580147208741
Marikozhundhu Vaasam

Read more from G. Shyamala Gopu

Related to Marikozhundhu Vaasam

Related ebooks

Related categories

Reviews for Marikozhundhu Vaasam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marikozhundhu Vaasam - G. Shyamala Gopu

    http://www.pustaka.co.in

    மரிக்கொழுந்து வாசம்

    Marikozhundhu Vaasam

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    எக்மோர் ரயிலடியில் செங்கோட்டை பாசஞ்சர் கிளம்பும் தருணத்தில் இருந்தது. அந்த கடைசி நேரத்தில் பரபரவென்று இருந்தது பிளாட்பாரம். கடைசி நிமிட பயணத்தை நிர்ணயித்துவிட்டு அதற்காக அரக்கபரக்க ஓடி வந்து கொண்டிருந்த ஒரு குடும்பமும், ஊருக்கு பிரவசத்திற்கு மனைவியை அனுப்பும் புது கணவனின் சிணுங்கல்களும் அதற்கு குழந்தை பிறப்பதற்கு ஒரு நான்கு நாட்களுக்கு முன்பே வந்து விடுங்கள் என்ற இளம் மனைவியின் ஆறுதல்களும் திரும்பி வரும் போது ஒரு உறுதியான நிலைப்பாட்டுடன் வா என்று காதலியை வழியனுப்பும் காதலனும் என்று அங்கே ஒரே பாசப் போராட்டங்கள் கண்ணீர்கள் அழுகைகள் என்று காலந்தோறும் நித்தியப்படி நடக்கும் நிகழ்ச்சி அன்றும் அரங்கேறிக் கொண்டிருந்த மாலைப் பொழுது.

    வேகவேகமாக வந்து வண்டியில் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் லக்ஷ்மி தன் பெருத்த சரீரம் முழுவதும் வேர்வையால் தொப்பலாக நனைந்திருக்க மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க வந்து அமர்ந்தாள். ஏசி குளிரும் போதாமல் காற்றுக்கு ஆ ஆ என்று வாயைத் திறந்து பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அவளருகில் அமர்ந்திருந்த பார்வதியைவிட சற்று சரீரம் குறைவான அலைவரிசையில் சரஸ்வதியோ அவளைவிட கொஞ்சம் குறைவாக அதே செயலை செய்து கொண்டிருந்தாள்.

    இவர்களின் கணவர் வேதாச்சலம் எதிரில் தங்களுக்கு முன்பே வந்து அமர்ந்து விட்டிருந்த இவர்களுடைய சகோதரன் கண்ணனிடம் ஏன் கண்ணா? இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டு ரயிலில் தான் போகணும்னு உனக்கு அலும்பு? பாத்தியா உன் அக்காவையும் தங்கச்சியையும்

    மாமா, உங்ககிட்ட ஏற்கனவே விளக்கமா சொல்லிட்டேன். திரும்ப திரும்ப கேட்கிறீங்களே என்று சிணுங்கிக் கொண்டான்.

    இல்லண்ணே. நம்ம காரிலேயே போயிருந்தால் அங்கங்கே நிறுத்தி கோயில் குளமும்னு சுத்தி பாத்துட்டு நிதானமா போயிருக்கலாம் இல்லே. என்றாள் இளையவள் சரஸ்வதி.

    நாளைக்கு அமாவாசை. இந்த பூசையை அன்னைக்குத் தான் போடணும்னு நாள் குறிச்சிக் கொடுத்திருக்கு. நீ சொல்ற மாதிரி நிறுத்தி நிறுத்தி போவதற்கு நாம் என்ன பக்தி சுற்றுலாவிற்கா போகிறோம்? என்றான் கண்ணன்.

    அடுத்த அமாவாசைக்கு போயிருக்கலாமே என்றாள் மூத்தவள் பார்வதி.

    எப்போ போனாலும் உங்க ரெண்டு பேத்துக்கும் இந்த உடம்பைத் தூக்கிக்கிட்டு வரதுக்கு கஷ்டம் தான். விடுங்க

    எனக்கு தேர்தல் நேரம் கண்ணா. இந்த நேரத்தில வெளியூர் பயணம் அவசியமா?

    ஒருநாள் தானே மாமா.

    உன்னோட அக்கா தங்கையை கூட்டிக்கிட்டு போக வேண்டியது தானே. அதைவிட்டு எல்லாத்தையும் கட்டி இழுக்கறே.

    அக்கா தங்கச்சியோட தான் எங்க வீட்டுக்குப் போய் இந்த அமாவாசை பூசையை போடணும். வீட்டுக்குப் பெரிய மனுஷன் நீங்க மட்டும் தானே மாமா.

    அதுசரி தன்னை பெரிய மனுஷன் என்று அவனே சொல்லிவிட்டதால் மனதிற்குள் மகிழ்ந்து கொண்டவராக கிண்டலாக சொன்னார். அதுக்கு நீ வஞ்சிக்கொடி போல அக்கா தங்கையோட பொறந்திருக்கணும்.

    இந்தா பாருங்க. நாங்க என்ன செஞ்சோம் உங்களை? எதுக்கு வீணா எங்களை வம்பிழுக்கிறீங்க? முதல் மனைவி என்ற அதிகாரம் பார்வதிக்கு. அதிகாரம் மட்டும் தானே அவளுக்கு. மற்றவை எல்லாம் இளையவள் சரஸ்வதி தானே.

    பாரு. அசையவே முடியலை. திருவாரூர் ஆழித் தேர் போல சரீரம். அசையவே கஷ்டம். இதுல நடக்க வேறு முடியுமா இவங்களாலே. இதுல பக்தி சுற்றுலா வேற. உக்கும் நெனப்புத் தான் பொழப்பைக் கெடுக்குது என்றார் வேதாச்சலம்.

    வயசு காலத்திலே போகாத கோயில் குளமா? ஒன்னும் புண்ணியம் இல்லையே அலுத்துக் கொள்வதைப் போல அழுது கொண்டாள் பார்வதி.

    உனக்கு ஒன்னும் இல்லைன்னா என்னா தங்கம்? சரசுக்கு ஒரு பொம்பிள்ளை புள்ளை பொறந்து அதையும் நீ தானே வளர்க்கிறே பேச்சின் திசை எங்கோ திரும்புவதைக் கண்டு மெல்ல அவளை அணைப் போட்டார் வேதாச்சலம்.

    பார்வதியும் வியர்வையை துடைக்கும் சாக்கில் கண்ணில் பெருகிய நீரையும் சேர்த்து துடைத்தாள்.

    அதைக் கண்டு எப்போதும் போல அலட்சியப் பார்வைப் பார்த்தாள் இளையவள் சரசு. சும்மா கிடந்த கோழிக்கு ரெண்டு தீனியைப் போடுவானேன்? அதை தின்னுப்புட்டு அந்த கோழி கொண்டையை கொண்டையை ஆட்டிக்கிட்டு நம்மை கொத்த வருவானேன்? என்றாள்.

    தப்புத் தான். நமக்கு புள்ளை இல்லையேன்னு மாமா வேறே எங்கேயும் போயிறக் கூடாது. அத்தனை சொத்தும் சுகமும் மந்திரி மனைவின்னு பந்தாவும் வேறே யாரு அனுபவிக்கனுமா? நம்ம கூடப் பிறந்த பொறப்பாச்சுதே. நமக்கு அனுசரணையா இருக்குமேன்னு நெனச்சது ஒரு குத்தமா? என்று இல்லாத சளியை சிந்தினாள் பெரியவள்.

    நம்மளைவிட எத்தனியோ வயசு சின்னதாச்சே? பாவம். அது எங்கனா நல்லாயிருக்கட்டும்னு நெனைக்காம ரெண்டாந்தாராம் கட்டி வெச்சா? அனுபவிக்க வேண்டியது தான் என்று விடைத்தாள் சரஸ்வதி.

    ஏய் நீங்க ரெண்டு பேரும் சண்டையைப் போட்டுக்கிட்டு என் மண்டையை ஏன்டி உடைக்கிறீங்க?

    ஆமாம். தேங்காயை மாதிரி மண்டை வெச்சிருக்கீங்க. உடைக்கிறதுக்கு சரசுவின் ஒற்றை சொல்லிற்கு வாயை மூடிக் கொண்டார் வேதாச்சலம். வெளியேதான் மந்திரி என்ற பந்தாவெல்லாம். சதாகாலமும் பிலாக்கணம் பாடும் பார்வதியிடம் ரொம்பவே துள்ளுபவர்.

    எப்போதாவது பேசும் சரஸ்வதியின் ஒற்றை வார்த்தைக்கு அடங்கி விடுவார்.

    பேச்சை மாற்றிடும் விதமாக ஏன் கண்ணா, ஒரு அமைச்சரைக் கடத்திக்கிட்டு போவதுபோல கூட்டிக்கிட்டுப் போறே. அதுவும் மாறு வேஷத்தில. சொல்லியிருந்தா சகல மரியாதையுடன் போய் இருந்திருக்கலாம். சொன்னா கேட்டியா?

    மாமா. கொஞ்சம் பொறுத்துக்கங்க. உங்க கஷ்டம் எல்லாம் தீந்துடும்னு சோசியர் சொன்னார். நம்ம வீட்டு ஆளுங்க மட்டும் தான் பூசையின் போது இருக்கனுமாம்.

    அது போகட்டும். இப்போ என்ன திடீர்னு கோயில் பூசைன்னு கிளம்பிட்டே கண்ணா? வேதாச்சலத்தினால் மட்டும் தான் அதுபோல அதிகாரமாக அவரிடம் பேசிவிட முடியும். கண்ணன் சிறுவனாக இருந்த போது அவருக்கும் வீட்டில் தலைமகள் பார்வதிக்கும் திருமணம் ஆனது.

    பிறகு கண்ணனுக்குத் திருமணம் ஆகி மகன் விஷாலைப் பெற்று அவன் சிறுவனாக இருக்கும்போதே மனைவி இறந்துவிட அதற்குப் பின்பு வேறு திருமணம் செய்யாமலே காலத்தைக் கழித்துவிட்டார் கண்ணன்.

    திருமணம் முடிந்து ரொம்ப வருடங்களுக்கு பார்வதிக்கு குழந்தை பாக்கியமே இல்லை. அப்போதே அதீத உடல்வாகு கொண்ட பார்வதிக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பில்லை என்றான பின்பு தங்கை சரசுவையும் வேதாச்சலத்திற்கே கட்டி வைத்தார்கள் அவள் விருப்பம் கேட்காமலே.

    நான் நம்ம வீட்டை சின்ன வயசுல பார்த்தது என்றாள் சரசு.

    ஆமாம். நானும் என் கல்யாணத்துக்கு அப்புறம் ஊருக்கே வரலை. பார்வதியும் பழைய நினைவுகளை கண்களில் தேக்கியவளாய் சொன்னாள்.

    நம்ம அப்பா அம்மா செத்ததுக்கு அப்புறம் இந்த ஊர்ல நமக்கு என்ன கிடக்குது?

    ஆமாம் அக்கா. அப்பாவும் சாகும் போது இனி இந்த ஊருக்கு வரக் கூடாது என்று தானே சொல்லிட்டுப் போனாரு என்று அவர்களை ஆமோத்தித்தார் கண்ணன்.

    அது சரி. நம்ம மாதவன் என்ன ஆனான்? அவன் வருவானா?

    வரணும் அக்கா. சொல்லியிருக்கிறேன்.

    எங்கே இருக்கிறான் இப்போது?

    எங்கேயோ காசிக்குப் பக்கத்துல இருக்கேன் என்று சொன்னான்.

    என்னடா பண்ணுவான் அவன்?

    என்ன பண்ணுவான்? ஆராய்ச்சி அதுஇதுன்னு சுத்திக்கிட்டு இருக்கான். நடுநடுவுல புத்தகம் வேற எழுதறானாம்.

    நம்ம கூட பிறந்தவனு உனக்கு கொஞ்சம் அக்கறை இருந்திருக்கலாம் தம்பி

    ஆமாம் அண்ணா. காலம் போன காலத்தில கடைசிலே நம்ம அம்மாவுக்கு இந்த மாதவன் பிறந்தான். நீ அவனை என்ன ஏதுன்னு கேட்க கூடாதா?

    கேட்கணும் அக்கா. கேட்கறேன். நம்ம விஷாலுக்கும் மீனாட்சிக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டு மாதுக்கும் ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வச்சிரனும்.

    நான் என் மகளை என் தம்பி மாதவனுக்குத் தான் தருவேன் சரசு இடையில் புகுந்து கொஞ்சம் காட்டமாகவே சொன்னாள்.

    உன்னிடம் யாரும் அபிப்ராயம் கேட்கலை. நீ சும்மா இரு. மீனா பொறந்ததுமே அவனுக்கு தான் என்று நாங்க முடிவு செய்தாச்சு அக்கா இடைப்பட்டாள்.

    ஓஹோ, அப்ப பிள்ளைய பெத்த எனக்கு ஒரு உரிமையும் இல்லை. அப்படித் தானே இப்போது சரசுவின் கேள்விக்கணை வேதாச்சலத்தின் மீது பாய்ந்தது.

    அதுல பாரு சரசு. ஒரு விஷயத்தை நீ நல்லா புரிஞ்சிக்கணும். பாரு நம்ம கண்ணனுக்கு ஒரே மகன். அவனுடைய சொத்து மொத்தமும் விஷாலுக்குத் தான். மேற்கொண்டு விஷால் தொழிலில் நல்லா சம்பாதிக்கிறான். அதுக்கு தான் என்று சமாதானமாகவே சொன்னார் அவர்.

    அதுக்கு…! என் மவகிட்ட கேட்காமலே அவ சம்மதம் இல்லாமலே அவளை விஷாலுக்கு கட்டி வச்சிருவீங்களா?

    ச்சே. ச்சே. அப்படி எல்லாம் இல்லம்மா. மீனாவுக்கும் விஷாலுக்கும் நல்ல புரிதல் இருக்கு.

    மீனாட்ட சம்மதம் கேட்காமல் இந்த கல்யாணத்தை முடிப்பீங்களா? என்று கேட்டாள் அழுத்தம் திருத்தமாக. வாய் தான் அந்த கேள்வியைக் கேட்டதே தவிர தன் இளமை பருவத்திற்கு சென்று விட்டிருந்தது மனம்.

    பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடுத்த கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சுதாகரிடம் காதல் வயப்பட்டிருந்த தன்னை வலுக்கட்டாயமாக தன்னைவிட ரெண்டத்தனை வயது மூத்தவரான வேதாச்சலத்துக்கு துள்ளத் துடிக்க கட்டி வைத்ததைப் போல தன் மகளையும் அவள் விருப்பம் என்னவென்று கேட்காமல் இவர்கள் இஷ்டம் போல அண்ணன் மகன் விஷாலுக்கு கொடுத்து விடுவார்களோ என்று மனதில் பயம் சரசுவிற்கு. எக்காரணத்தைக் கொண்டும் தன் காதலை முறித்ததைப் போல தன் மகளின் காதலை அப்படி என்று ஒன்று இருந்தால் அதை இவர்கள் முறிக்கவிடமாட்டேன் என்று மனதிற்குள் வைராக்கியம் பூண்டிருந்தாள் சரசு.

    அவகிட்ட கேட்காம ஒன்னும் செய்ய மாட்டோம். நீ சித்த சும்மா இரு. ரயிலுக்குள்ள பேசற விஷயமா இது அக்கா அதட்டினாள் தங்கையை.

    என்னைக் கேட்காமலே உங்க இஷ்டம் போல எனக்கு செஞ்ச மாதிரி என் மகளுக்கும் நடக்கவிடமாட்டேன். அதை மட்டும் மனசுல வெச்சிக்கங்க வெஞ்சினத்து உரைத்தவளைக் கண்டு மனதிற்குள் கிலி அடிக்கத் தான் செய்தது மற்ற மூவருக்கும்.

    ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்தவங்க. நாமளும் ஒருத்தருக்கு ஒருத்தர்தான்னு சொல்லித் தானே வளர்த்திருக்கோம் என்றான் கண்ணன்.

    ஏன் நம்ம தம்பி மாதவனும் இவர்களுடன் வளர்ந்தவன் தானே. என்றாள் சரசு.

    கொஞ்சம் யோசித்துப் பேசு சரசு.

    என்ன யோசிக்கணும்? மாதவனும் நம்ம கூடப் பிறந்தவன் தானே. அந்நியமா அசலா? என்றாள் மீண்டும்.

    அவனுக்கு நிலையான ஒரு புத்தியும் இல்லை. இடமும் இல்லை. நாடோடி கணக்கா எங்கேயோ சுத்திக்கிட்டு இருக்கான். அவனுக்கு எப்படிப் பொண்ணைக் கொடுப்பது? என்றாள் பார்வதி.

    நம்மகிட்ட இல்லாத பணமா? சொத்தா? இருப்பது எல்லாமே நம்ம ஒத்தை பொண்ணுக்குத் தானே. அவனும் நம்ம கூட பிறந்தவன்.

    வேதாச்சலமும் பார்வதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏனெனில் வேதாச்சலம் சார்ந்திருந்த கட்சி தொடர்ந்து மூன்று முறை தோற்றது. இந்த கடைசி முறை தான் ஜெயித்து இவரும் ஒரு சப்பையான இலாகாவிற்கு பேருக்கு அமைச்சராக இருக்கிறார். பெரிய சம்பாத்தியம் இல்லை. போதாக்குறைக்கு ரெண்டு மூணு சினிமா படம் எடுக்கிறேன் என்று ஏகப்பட்ட கடன். இந்த முறை தேர்தலில் மீதம் இருக்கும் சொத்துக்களைக் காட்டித் தான் கடன் வாங்கியிருக்கிறார். ஜெயித்தால் தான் உண்டு. தேர்தலுக்கு பாக்கி இருக்கும் நாட்களுக்கு செலவு செய்வதற்கே கண்ணனைத் தான் எதிர்பார்த்திருக்கிறார். இதில் இந்த சரசு விவரம் தெரியாமல் எதையாவது பேசி கண்ணனை வெறுப்பேற்றிவிடப் போகிறாளே என்று இருந்தது இருவருக்கும். கணவன் நிலை அறிந்த பார்வதிக்கோ அப்படியே சரசுவை ஒரு அறை அறையலாமா என்று இருந்தது. ஆனாலும் முடியாதே…! அமைதி காத்தாள் அவள்.

    கண்ணனின் நிலைமையோ அதைவிட மோசம். தொழிலில் நல்ல வருமானம் தான். ஆனால் மனைவி இல்லாமல் இருப்பவர் மது மாது என்று சகலவித உல்லாசத்தில் ஏகப்பட்ட பணத்தை வாரி இறைத்து நிலை குலைந்து போயிருக்கிறார். ஏதோ ஜிகினா வேலை செய்து பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கிறார். இதில் மீனாட்சியை தன் மகனுக்கு கட்டி வைத்துவிட்டால் வேதாச்சலத்தின் சொத்துக்கள் வெளியே போகாது. அது மட்டுமல்ல இப்போது செய்யப் போகின்ற பூசையினால் கிடைக்கக் கூடும் என்று தான் நம்புகின்ற விஷயத்திலும் அனுகூலம் தனக்கே அதிகப்படியானதாக இருக்கும். நாம் எதையெதையோ கணக்குப் போட்டால் நம் கூடப் பிறந்த சின்னக்கழுதை இந்த சரசு, பெண்ணைப் பெற்ற தாயாக மாற்றி யோசிக்கிறாள். இருக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம். இந்த பூசையின் விளைவை நேரிடையாகப் பார்க்கும் போது நம் எண்ணத்திற்கு எல்லோருமே ஒத்துக் கொள்ளத் தான் செய்வார்கள்.

    ஆனால் தன்னுடன் பிறந்த தம்பி மாதவன் இருக்கிறானே. அவனை என்ன செய்வது? அவன் இல்லாமல் இந்த பூசையை செய்யக் கூடாது என்று சோசியர் சொல்லியிருக்கிறார். அதனால் அவன் வந்து தான் ஆக வேண்டும். வந்தால் அவனுக்கு விவரமும் விஷயமும் புரிந்துவிடும். அதற்கு என்னென்ன பிரச்சினை செய்வானோ? அவனுக்கும் பங்கு தர வேண்டியது இருக்கும். அது ஒரு அனாமத்து கணக்கு. தனக்குள் பலப்பல யோசனைகள் ஓடிக் கொண்டிருக்க நீண்ட யோசனைக்குப் பிறகே என்ன செய்வது என்று தீர்மானித்தவராக ஒரு நிலைக்கு வந்தார் கண்ணன்.

    முதலில் இந்த பூசை நல்லப்படியாக முடியட்டும். அதன் விளைவாக தான் எதிர்பார்த்திருக்கும் விஷயமும் நல்லபடியா நம் கையில் வந்து விடட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் யாரை என்ன செய்திட வேண்டும் என்று. அது சரசாக இருந்தாலும் சரி. மாதவனாக இருந்தாலும் சரி. இன்னும் ஒருநாள் தானே இடையில் இருப்பது. பார்த்துக் கொள்ளலாம்.

    அதுவரைக்கு சரசுவை வெறுப்பேற்றி விடாமல் கொஞ்சம் தாஜா செய்து கொண்டு தான் போக வேண்டும் என்று தீர்மானித்தவராய் தன்மையாகவே கேட்டார் கண்ணன். உன் இஷ்டம் இல்லாமல் உன் மவளை நான் என் மகனுக்கு கட்டி வைக்க மாட்டேன் சரசு. இது உறுதி. சரியா. நீ கோபப்படாமல் இரும்மா

    அவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசவே சற்றே அமைதியானாள் சரசு. "எனக்கு மட்டும் என்ன அண்ணா? என் மகளுக்கிட்ட ஒரு வார்த்தைக்

    Enjoying the preview?
    Page 1 of 1