Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thisai Maarum Kaatru Part - 2
Thisai Maarum Kaatru Part - 2
Thisai Maarum Kaatru Part - 2
Ebook204 pages1 hour

Thisai Maarum Kaatru Part - 2

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

கௌரவர்களுக்கு பங்காளிகளான பாண்டவர்களிடைத்தில் ஏற்பட்ட பொறாமை மகாபாரத போரை உண்டாகியது. உலகத்தின் முதல் மனிதன் ஆதாமிற்கு இரு மகன்கள். சொந்த தம்பி மீது கொண்ட பொறாமையினால் அவனைக் கொன்று விடுவான் அண்ணன். சகோதர பொறாமை அதாவது சிபிலிங்க்ஸ் ஜெலசி என்பது உலகம் தோன்றிய காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது.

இந்த கதையிலும் அண்ணன் தர்மன் தன் தம்பி தாமுவிடம் கொண்ட பொறாமையினால் அவன் செய்யும் அக்கிரமங்களும் அதனால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகளும் விவரிக்கும் கதை இது. இறுதியில் தர்மன் என்னவாகிறான் என்பது தான் கதையின் அதி முக்கியமான விஷயம்.

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580147208731
Thisai Maarum Kaatru Part - 2

Read more from G. Shyamala Gopu

Related to Thisai Maarum Kaatru Part - 2

Related ebooks

Reviews for Thisai Maarum Kaatru Part - 2

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thisai Maarum Kaatru Part - 2 - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திசை மாறும் காற்று பாகம் – 2

    Thisai Maarum Kaatru Part – 2

    Author:

    G. ஷியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இது முன்னுரை அல்ல என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    இது முன்னுரை அல்ல என்னுரை

    பொதுவாக கதைகளில் வரும் ஒரு கதாநாயகன் ஆணழகனாக இளமையானவனாக நல்லவனாக அடுத்தவர்களுக்கு நல்லதே செய்பவனாக, மனைவியை மட்டும் நேசிப்பவனாக, குடும்பத்தை தாங்குபவனாக பெற்றோரை பூசிப்பவனாக என்றெல்லாம் தான் இருப்பார்கள் இல்லையா! ஆனால் இந்த கதையின் நாயகன் தர்மனோ இப்படி எந்த இலக்கண வரையறைக்குள்ளும் பொருந்தாதவன். ஏனெனில் இவன் கதாநாயகன் அல்ல. கதையின் நாயகன் மட்டுமே.

    கௌரவர்களுக்கு பங்காளிகளான பாண்டவர்களிடைத்தில் ஏற்பட்ட பொறாமை மகாபாரத போரை உண்டாகியது. உலகத்தின் முதல் மனிதன் ஆதாமிற்கு இரு மகன்கள். சொந்த தம்பி மீது கொண்ட பொறாமையினால் அவனைக் கொன்று விடுவான் அண்ணன். சகோதர பொறாமை அதாவது சிபிலிங்க்ஸ் ஜெலசி என்பது உலகம் தோன்றிய காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது.

    இந்த கதையிலும் அண்ணன் தர்மன் தன் தம்பி தாமுவிடம் கொண்ட பொறாமையினால் அவன் செய்யும் அக்கிரமங்களும் அதனால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகளும் விவரிக்கும் கதை இது. இறுதியில் தர்மன் என்னவாகிறான் என்பது தான் கதையின் அதி முக்கியமான விஷயம்.

    வலிமை வாய்ந்த மனிதனின் அத்தனை செயல்களுக்கும் பதிலுக்கு பதில் செய்ய பலகீனமான மனிதர்களால் எப்போதும் முடிந்து விடாது. ஆனால் தெய்வம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இறுதியில் தெய்வம் தான் தீர்ப்பை எழுதுகிறது. தெய்வத்தின் தீர்ப்பே இறுதியானது. அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று தானே கொல்லும்!

    அதர்மமும் அநீதியும் செய்பவனை பனைமரத்தைப் போல ஓங்கி உயர்ந்து வானை முட்டி விடுவதை போலத் தான் வளர்த்துக் கொண்டு போவார் கடவுள். அந்த பனைமரத்தின் கீழே யாரும் ஒண்டுவதற்கோ ஒதுங்குவதற்கோ நிழல் இருக்காது. காற்றுக்கு மற்ற மரங்கள் எல்லாம் கிளையை முறித்துக் கொண்டேனும் காற்றையும் புயலையும் எதிர்த்து நிற்கும். ஆனால் பனை மரமோ அடியோடும் வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ந்து விடும். அதைப் போலத் தான் அக்கிரமக்காரர்களை யாராலும் எதிர்த்து வென்றிட இயலாத வலிமையுடன் தான் ஓங்கி உயர்த்துவார் கடவுள். ஆனால் அதுவே அவன் அழியும் நேரம் வரும் போது அவனை வேரடி மண்ணோடு சாய்த்து விடுவார். இது தான் தெய்வ நீதி. பொயட்டிக் ஜஸ்டிஸ் என்பது.

    ஒரு மனிதன் வாழ வேண்டிய இலக்கணத்தோடு வாழ்ந்திடாத தர்மனின் இலக்கணம் மாறுமா!

    1

    திருவண்ணாமலையின் அந்த தனியார் பொறியியல் கல்லூரியில் வகுப்புகள் முடிந்து மாணவர்கள் எல்லோரும் கல்லூரியின் வாயிலில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். அந்த கல்லூரியின், மரங்களடர்ந்த நீண்ட பாதையில் ரெண்டாம் ஆண்டில் படிக்கும் அருணாவும் அவள் வகுப்புத் தோழன் வருணும் சக மாணவர்களுடன் வம்படித்துக் கொண்டு நடந்தார்கள். ஒரே கும்மாளமும் சிரிப்பும் அந்த பிரதேசத்தையே கிளுகிளுக்க வைத்துக் கொண்டிருந்தது. ஒரே நேரத்தில் எல்லோரும் பேச முற்படவே ஒரே கூச்சலாக இருந்தது. அவர்களைக் கடந்து சென்ற ஒரு வயதான விரிவுரையாளர் நின்று ஏனப்பா, இத்தனை சத்தம் போடுவீங்க? இந்த பிரதேசமே அமைதியாக இருக்க உங்கள் சத்தம் பெரும் கூப்பாடாக இருக்கு. கொஞ்சம் சத்தத்தை குறைங்க. இல்லாட்டா விரைவா நடங்க என்று சொல்லப் போக அவரை கேலி செய்து ஊரைக் கூட்டினார்கள்.

    பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்த இந்த ஊர்வலம், அங்கே நின்று கொண்டிருந்த மற்ற மாணவர்களையும் வம்பிழுத்தது. அந்த தறுதலைக் கூட்டத்தில் கொஞ்சமே கொஞ்சம் சாதுவான ஒரு மாணவன் நம்ம சீனியர்ஸ் நிக்கிறாங்க. பார்த்துக்கங்க என்றான்.

    அவன் சொல்லவும் அருணா பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய மாமன் மகன் மரிக்கொழுந்து பரணிதரன் தன் சகாக்களுடன் நின்று கொண்டிருந்தான். அவர்கள் நான்காம் வருட மாணவர்கள்.

    அருணாவின் பார்வை வட்டத்திற்குள் விழுந்த பரணி எதேச்சையாக அவள் கண்களைக் கண்டவன் அதில் விரவியிருந்த கேலியையும் எகத்தாளத்தையும் கண்டு கொதித்துப் போனான். என்ன திமிரு இவளுக்கு!

    வருண், என் பேருந்து வரும் நேரம். நான் போகிறேன். பை. நாளை சந்திப்போம்

    என்ன அருணா? அதுக்குள்ள கிளம்பிட்டே? இன்று என் பிறந்தநாள். அதனால் தான் தினம் காரில் வரும் நான் உங்களோடு பேருந்தில் வந்தேன் என்றான் வருண்.

    பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நாம் எல்லோரும் இன்னைக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு போகலாம் என்று தானே திட்டமிட்டிருந்தோம் என்றான் ஒருவன்.

    சினிமாவிற்குத் தான் வர மாட்டேன்னுட்டே என்றாள் ஒருத்தி.

    இன்னைக்கு ஜாலியா சினிமாவிற்கு போயிருந்திருக்கலாம் என்றான் வருண்.

    நாளை டெஸ்ட் இருக்குல்ல

    ஹேய் என்று எல்லோரும் சேர்ந்து கூவினார்கள்.

    அப்படியே டெஸ்ட்டுக்கு பயப்படறவ தான் நீ

    இல்லைப்பா… என்று இழுத்தாள்.

    ஹேய் கமான். ஏதாவது புதுசு புதுசா காரணம் சொல்லாதே அருணா என்றான் வருண்.

    தினம் தாமதமாக வீட்டிற்குப் போகிறேன். எங்க அத்தை திட்டுறாங்க

    உனக்கு இப்போது தான் கல்லூரி முடிந்தது என்று சொல்லேன்

    இது கூடவா நாங்க உனக்கு சொல்லித் தரணும்

    மாமா சொல்றாரு இனிமேல் நீ கார்ல போயிட்டு வா என்று என்றாள் அருணா.

    கார்ல போகப் போறியா? அப்படின்னா இனிமேல் நீ எங்களுடன் பேருந்தில் வர மாட்டாயா? என்றனர் அவளுடன் பயணிக்கும் மாணவர்கள்.

    கார்ல போக மாட்டேன்னு சொல்லி சமாளிச்சிட்டேன். ஆனாலும் தினமும் தாமதமாகி விடுகிறதா? பயமாயிருக்கு

    கல்லூரியில் இவ்வளவு கலாட்டா பண்ற ஆளா வீட்ல உங்க மாமாவுக்கு இப்படி பயப்படறே? என்றான் வருண்.

    மாமாவிடம் பயமில்லை. நான் என்ன கேட்டாலும் அவர் தட்டவே மாட்டாரு

    அப்புறம் என்ன?

    அவரோட மனைவி அதாவது மேகலா அத்தை

    அவுங்களுக்கு என்ன தெரியப் போவுது. ஸ்பெசல் கிளாஸ் லைப்ரரி லேப் என்று ஏதாவது ஒன்னை சொல்ல வேண்டியது தானே

    கல்லூரியில் கூடவே ஒரு அஞ்சாம்படை இருக்கே. வீட்ல போய் சொல்லிக் கொடுத்துடுது

    அவளுடன் இருந்தவர்களின் பார்வை ஒரு சேர பரணியிடம் சென்று திரும்பியது. ஓஹோ. அப்படி சொல்லு. இப்பத் தான் புரியுது. உன் நிலைமை ரொம்ப குஷ்டம் தான் என்றது கோரஸாக.

    அதுக்காக இன்னைக்கு நீ எங்களுடன் வர மாட்டியா? என்றான் வருண். கூடவே இவனுக்கெல்லாமா பயப்படுவே அருணா? என்றான். அவன் பார்வையிலும் குரலிலும் அத்தனை ஒரு இழிவு இருந்தது.

    அருணா பதில் சொல்லாமல் பரணியைப் பார்த்தாள். அவன் பார்வையில் போ. போய் பாரு என்ற செய்தியைப் பார்த்தாள்.

    நீ என்ன சொல்வது? என்று பதிலுக்கு வீராப்பு பார்வை பார்த்தவள் அதே வேகத்தில் நான் வருகிறேன் என்றாள்.

    அவர்கள் அத்தனைப் பேரும் கைதட்டி ஆரவாரித்தார்கள். அவர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு கதாநாயகியைப் போல உணர்ந்தவள் அதே கர்வத்துடன் வாய் சுழித்து இடது புருவம் உயர்த்தி பரணியைப் பார்த்தாள். அந்த பார்வையில் பார்த்தாயா…? எப்…பூ…டி? என்று கேலி இருந்தது.

    அவளை நடு சாலை என்றும் பாராமல் அப்படியே ஒரே அப்பு அப்பிட வேண்டும் என்று துடித்தது புஜம். நெஞ்சை நிறைத்தது வெப்பக் காற்று. அடங்கு அடங்கு என்றது மனம். கேலி. சுத்தமான கேலி. அவமானமாகத்தானிருந்தது அவனுக்கு. இன்று நேற்று அல்லவே. என்றைக்கு இவள் படிக்கும் பள்ளியில் இவனையும் கொண்டு சேர்த்தார்களோ அன்றிலிருந்தே இதே கேலி தான். பணக்கார வீட்டுப் பெண்ணாக காரில் வந்து இறங்கும் அவளையும் அவளுடைய சொந்த மாமன் மகனான இவனையும் ஒத்துப் பார்த்து இவன் ஏழ்மை முன்னிலும் அதிகமாக கேலி செய்யப்படும் அவளொத்த பணக்கார மாணவர்களால்.

    அதிகப்படியாக அவமானப்பட்டு கொதித்துப் போய் நான் அந்த பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அழுது அடம் பிடிக்கும் போதெல்லாம் பெற்றோருக்குப் பிறகு ஒரே ஆறுதல் பெரியம்மா மேகலா தான். அவனை அணைத்து சமாதானப்படுத்துவாள். இத்தனைக்கும் ஒரே பதிலடி நீ படித்து பெரியானாகி பெரிய வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்து கவுரவமாக நிற்பது மட்டுமே என்று வாழ்வின் இலக்கை நிர்ணயித்து அதில் மட்டும் கவனம் செலுத்த வைத்தாள்.

    அருணா மாலை வீடு திரும்பிய போது மேகலாவைத் தேடிக் கொண்டு சமயலறைக்கு சென்றாள். அத்தே, தலைவலி தாங்கலை. சீக்கிரம் ஒரு காப்பி போட்டு கொடுங்க

    ஏன் ஐஸ்கிரீம் சாப்பிட்டது தலைவலியா போச்சா? சளி பிடிச்சிருக்குமோ?

    ஓஹோ, அந்த கோள்மூட்டி வந்து சொல்லிக் கொடுத்துட்டானா?

    கல்லூரி முடிந்து அவன் வீடு திரும்பி எவ்வளவு நேரமாச்சு. நீயும் அதே கல்லூரி தானே. உன்னைக் காணோமேன்னு தவிப்பவளுக்கு நீ எங்கே போயிருப்பேன்னு யூகிக்க முடியாதா என்ன? அதை ஒரு ஆள் வேற வந்து கோள் மூட்டணுமா என்ன!

    ஆமாம். ஐஸ்கிரீம் பார்லருக்குத் தான் போயிருந்தேன். இன்று வருணின் பிறந்தநாள். சொல்லப் போனால் இன்றைக்கு எல்லோருமே சினிமாவிற்கு போவதாகத் தான் திட்டம். என்னால் தான் எல்லாமே கெட்டுப் போச்சு. எல்லாம் இந்த மாங்கா மடையனாலே

    என்னாச்சு? தர்மனை அப்போது அங்கே எதிர்ப்பார்க்கவில்லை இருவரும். மேகலாவிடம் வாயாடுபவள் தர்மனிடம் சற்று கூடுதலாகவே சலுகை எடுத்துக் கொள்பவள் அருணா.

    ம். ஒண்ணுமில்லை மாமா என்றவள் அத்தை திட்டறாங்க என்று சிணுங்கினாள்.

    என்னவோ மாங்கா மடையன்னு சொல்லிக்கிட்டு இருந்தே. யாரு பரணியா?

    ஆமாம் மாமா. எதுனாலும் அத்தைக்கிட்டே போட்டுக் கொடுக்கிறான் மாமா

    நீ ஏன் மேகலா அவன் பேச்சைக் கேட்டு புள்ளையக் கஷ்டப்படுத்தறே?

    கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு வான்னு சொல்றது கஷ்டப்படுத்தறதா?

    இங்கே பாரு நீ ஒன்னு புரிஞ்சிக்கணும். மக்கள் செல்வர் உள்துறை அமைச்சர் தர்மேந்திரனின் வீட்டுப் பெண் அருணா. அவள் கூட சுத்தற பசங்களும் பெரிய பணக்கார வீட்டுப் பசங்க. உன் தோழியோட மகனைப் போல அன்னாடங்காச்சிங்க கிடையாது. அதை மனசுல வெச்சிக்க

    ஆம்பிள்ளை பையனுங்களோட சுத்தறாளேன்னு கண்டிச்சா அது தப்பா?

    யாரும்மா?

    வருண் மாமா. இன்னைக்கு அவன் பிறந்தநாள். என்னாலே எல்லாம் கெட்டுப் போச்சு

    வருணா? மேகலா வருண் யாருன்னு தெரியுமா உனக்கு?

    அவன் யாராக இருந்தால் என்ன?

    பஸ்டாண்ட் கிட்ட புது மல்டிபிலெக்ஸ் தியேட்டர் இருக்கே. அதோட ஓனர் மகன் அந்தப் பையன். அருணாவோட அப்பாவுக்கு ஒரு வகையில சொந்தக்காரவுங்க

    வயசுப் பெண் பத்திரமா இருக்க வேண்டாமா?

    அவனை மாதிரி பணக்காரப் பசங்க பெரிய வீட்டுப் பசங்க கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருப்பாங்க. கண்டுக்காதே. அவுங்களுக்குத் தெரியும் எதை எப்படி செய்யனும்னு

    ஏதாவது ஆபத்துல சிக்கிக்க கூடாதேன்னு…

    நீ கவலைப்படாதே. நான் எதுக்கு இருக்கேன்? நான் பார்த்துக்கறேன் என்றவன் அருணாவிடம் நீ அத்தை பேசறதை மனசுல வெச்சிக்கிட்டு எதையாவது யோசிக்காதே. இந்த வயசுல அனுபவிக்கலைன்னா எப்போ அனுபவிக்கிறது? என்றான்.

    தேங்க்யு மாமா என்று அவனை கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

    ஏய், வளர்ந்துட்டே. இன்னும் அவரை இதுப்போல தொட்டுப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்வது?

    எல்லோரையுமா தொட்டுப் பேசறேன்? என்று நொடித்துக் கொண்டவள், மாமா, உங்களை தொட்டுப் பேசறது தப்பா? என்று அவனிடமே நடிப்பாக கோபப்பட்டாள்.

    அவ கிடக்கிறா விடும்மா என்றான் தர்மன்.

    அதுநேரம் வரை கிரைண்டரில் மாவு வழித்தவாறு இவர்கள் பேசுவதைக் கேட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1