Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poompavai
Poompavai
Poompavai
Ebook129 pages47 minutes

Poompavai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழகும், பசுமையும் இழையும் வனப்பு மிக்க பேச்சிமலை. அங்கு கட்டுப்பாட்டுடன் வாழும் எளிமையான மலைசாதியினர் திடீர் திடீரென மர்ம மரணமடையக் காரணம் குலசாமி வனப்பேச்சியின் அடங்காச் சினமா? இல்லை அன்னிய சக்தியின் தலையீடா? செம்பூ பூப்பது துயரத்தின் அறிகுறியா? பூம்பாவைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? தெரிந்து கொள்ளப் பின் தொடருங்கள் பூம்பாவையை!

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580156310706
Poompavai

Related to Poompavai

Related ebooks

Reviews for Poompavai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poompavai - Madhura

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பூம்பாவை

    Poompavai

    Author:

    மதுரா

    Madhura

    For more books

    https://www.pustaka.co.in/home/author/madhura

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    பூம்பாவை 15

    பூம்பாவை என்னும் இந்த நாவல். பஞ்சமுகி என்று அழைக்கப்படும் ஐந்து எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளது.

    பஞ்சமுகி அறிமுகம்

    எழுத்தாளர் G.A. பிரபா அவர்களின் ஊக்குவிப்பால் மாலா மாதவன், விஜி சம்பத், செல்லம் ஜரீனா, மதுரா மற்றும் சாய்ரேணு என்ற ஐந்து பெண்கள் இணைந்து பஞ்சமுகி என்னும் பெயரில் எழுதி வருகிறார்கள்.

    மாலா மாதவன்:

    சென்னையைச் சேர்ந்த MCA பட்டதாரி. தமிழில் கவிதைகள், கதைகள் எனப் பயணிக்கிறார். இவரது கதை கவிதைகள் கல்கி, குமுதம் சிநேகிதி, ராணி போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. வெண்பா எழுதுவதில் விருப்பம் அதிகம்.

    விஜி சம்பத்:

    சேலத்தில் வசிக்கும் முதுகலைப் பட்டதாரி. தினமணி கதிர், தினமலர் வாரமலர் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள் அனைத்து முன்னணி வார,மாத இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. தினத்தந்தியில் சில கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. ஆன்மீகப் பாடல் எழுதுவதில் வல்லவர்.

    செல்லம் ஜரீனா:

    சென்னையைச் சேர்ந்தவர். பல முன்னணி பத்திரிக்கைகளில் இவரது கதை வந்துள்ளது. இவருடைய சிறுகதைகள் சில ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு புத்தகமாகவும் வந்துள்ளன. வரலாற்று நாவல் படைப்பதில் சிறந்தவர்.

    மதுரா:

    தேன்மொழி ராஜகோபால் என்ற இவர் படித்தது ஆங்கில இலக்கியம்.மரபு நவீனக் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பிரபல இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் மின்னிதழ்களிலும் படைப்புகள் வெளியாகி உள்ளன

    சாய் ரேணு:

    தென்காசியில் வசிக்கும் பொறியியல் பட்டதாரி. ஆன்மீகத் துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை குங்குமம் ஆன்மீகம், அம்மன் தரிசனம் போன்ற ஆன்மீகப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. துப்பறியும் நாவல் எழுதுவதில் திறம் மிக்கவர்.

    அத்தியாயம் 1

    அதிகாலையின் இளங்குளிர் சிலீரென்க...மலை முகடுகளில் மூடுபனி இறங்கி வானம் தொட்டுவிடும் தூரம் போல் காட்டிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் பேச்சியாறு மலையருவியாய் சலசலத்துக் கொண்டிருந்தது.

    அருவியின் ஓரம் வேங்கை மரம் மலர்களை உதிர்த்துக் கொண்டிருக்க வனப்பேச்சிக்கு படையலிட ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

    மலைவேங்கையின் அடியில் கருங்கல் ஒன்று நடப்பட்டிருந்தது. துணி சுற்றி மஞ்சள் தடவி வேப்பிலை பாவாடை கட்டி வனப்பேச்சியாக உருவெடுத்திருந்தது.

    மலைத்தேனும் நாவல் பழங்களும் மூங்கிலரிசியும் முன்னேயிருக்க மருந்து சாறு குடுவையில் இருந்தது.

    மலைவாழ் மக்கள் தலைவன் வேலக்குட்டன் கருப்புநிற சால்வை சுற்றி காது மூக்கில் வளையத்துடன் கையில் கோலேந்தி வந்து கொண்டிருக்க கூடவே அரவானும்...

    அதிகாலையில் படையலிட்டு வணங்கி அன்றே நள்ளிரவில் பூசையை ஆரம்பிப்பார்கள். முழுநிலா வெளிச்சத்தில் காட்டெருமையை அலங்கரித்து வில், அம்பு, வேல்,கம்பு வைத்து நெடுநேரம் நடக்கும் பூசையில் இன்று என்ன வாக்கு வரப்போகிறதோ?

    அவ்விடத்தில் பார்வையிட்டபின் வேலக்குட்டன் புருவமுயர்த்தி மாடனைப் பார்க்க அவன்...

    நீலி வந்தாச்சா? என்றான்.

    கையில் குடுவையுடன் நீலி வர வேங்கையின் இடப்புற குடிலை நோக்கி நடந்தார்கள்.

    பசும்புல்லாலும் மூங்கில் கழிகளாலும் கட்டப்பட்டிருந்த குடிலின் வாசலில் மண்ணால் ஆன பெரிய காட்டெருமை பதுமை நின்றிருந்தது.

    அந்த பூர்வகுடிகளின் மூத்தோன் முதுவன் அவர்களைக் கண்டதும் தலையசைத்தார். குடுவையை நீட்டியதும் வலக்கையால் பிடித்து கீழே கவிழ்த்தார்.கண்மூடி யோசித்து ஒரு பூவை நீட்ட...

    வேலக்குட்டனுக்கு உடல் உதறியது. இந்த தடவையும் நல்ல குறி தெரியலையே...யாருக்கு‌ என்ன நடக்கப் போகிறதோ?

    முதுவனை வணங்கி பின்புறமாக முதுகு காட்டாமல் வெளியேறினான்.

    முதுவன் கொடுத்த பூ கனத்தது. மெலிதாய் ஒரு பதற்றம் உடலெங்கும் பரவ கண்களால் மகளைத் துழாவினான். இந்த மலையும் மகளும் அவனுக்கு இரு கண்களாயிற்றே!

    போன முறை தலைவனாய் இருந்த கார்க்கோடன் அசம்பாவிதத்தில் இறந்ததும்

    முதுவன் அடுத்து கைகாட்டியது வேலக்குட்டனைத் தான். மலைத்தெய்வம் வனப்பேச்சியும் அதை ஆமோதிக்க குலச்சாமி காட்டெருமையின் ஆசியோடு தலைவனானான்.இன்றுவரை மலைமக்களின் நல்வாழ்வு தான் அவன் எண்ணம்.

    மேற்கு தொடர்ச்சி மலையின் உள்ளே ஒதுக்குப்புறமாய் நிற்கும் பேச்சிமலை ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை சமவெளியோடு‌ எத்தொடர்புமற்றது. வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாது.ஆனால் பக்கத்து மலைக்கிராமம் பைனூர் சினிமாக்காரர்களின் கண்ணில் பட சுற்றுசூழலே மாசானது.

    இன்னமும் பேச்சிமலைக்கு பேருந்து போக்குவரத்து கிடையாது. அரசாங்கத்தின் பார்வை இப்போது தான் விழ ஆரம்பித்திருக்கிறது. பைனூரில் கல்விசாலை மருத்துவமனை என எல்லாம் அரசாங்கம் அமைத்துவிட பேச்சிமலையின் சுற்றுவட்ட பாதையில் அவ்வப்போது போக்குவரத்துக்கு அனுமதித்துள்ளனர் வேலக்குட்டனும் அவன் மக்களும்.

    கடந்த ஐந்தாண்டுகளாக‌ நடக்கக்கூடாது எல்லாம் நடப்பதற்கு அது தான் காரணம் என மூத்தவர்களுக்கு நினைப்பு. ஆனாலும் அரசாங்கத்தை எதிர்க்க முடியாதே.

    பெருமூச்செறிந்தவாறே குடிலுக்கு வந்தவனிடம் மஞ்சணத்தி பேச்சு கொடுத்தாள்.

    முதுவர் நல்ல குறி சொன்னாவளா?

    அதுக்குள்ள சேதி வந்துட்டா? என்பது போல் பார்த்தவன் பூசையில் தெரியும் சுருக்கமாக முடித்தான்.

    மஞ்சணத்தி முகத்தில் விசனம் தெரிந்தது. போன வருஷம் கார்க்கோடன் இறந்ததை யாராலும் அத்தனை சுலபமாக மறக்க முடியாது.

    மனைவியின் முகம் போன போக்கைப் பார்த்தவன் பேச்சை மாத்த

    பூவு எங்கே? என்றான்.

    அவன் கேட்ட நேரம்

    குலச்சாமியை குளியாட்ட

    மயிலும், முத்துப்பயலும் கூட வர பேச்சியாத்து அருவியில் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தாள் பூ என்கிற பூம்பாவை.

    பதினாறைத் தொட்டுக் கொண்டிருக்கும் பருவமங்கை.

    மலைஜாதியைப் பொறுத்தவரை ஆணும் பெண்ணும் அங்கே சமம்.என்ன தான்‌ சாங்கியங்கள் இருந்தாலும் பெண்ணின் விருப்பமே பிரதானம். பூம்பாவை கைகாட்டுபவனை‌ மருமகனாக்க

    வேலக்குட்டன்‌ தயார் தான்.ஆனால் அவர்கள் இனத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும்.

    மாடனின் மகன் கடம்பனுக்கு பூவு மேல் ஒரு கண். ஆனால் அவள் தான் பிடி கொடுக்கவில்லை.

    குளித்து முடித்தவள் புதரோரம் துள்ளிய குழிமுயலைப் பார்த்ததும் அதை துரத்தலானாள்.

    வேணாம் பூவு. ஐயனுக்கு தெரிஞ்சா ஏசும்.

    மயிலின் சொல்லெதையும் அவள் கேட்கத் தயாரில்லை.

    அந்த மலைக்காட்டில் அதன் பின்னே ஓட...வேற வழியில்லாமல் மயிலும் தொடர்ந்தாள்.

    நான் பிடிச்சாரவா?

    எதிரில் கடம்பன்.

    வேண்டாம். எங்களுக்கும் கைகாலிருக்கு.

    வெடுக்கென பதில் சொன்னவளைத் தடுத்தாள் மயிலு.

    எவ இப்படி பேசறவ?கட்டிக்க போறவன் பிடிச்சாரக் கூடாதா?

    அதாரு? பெரிய ஆபீஸரா கட்டிக்க?

    ஆபீஸரா?சமவெளிக்கு போறவளா நீயி? மலைக்காடத்தியை கட்டுவாவோ?

    ம்ஹும்...காடு தாண்டி போனாக்க.சமவெளி எப்படி இருக்கும்?

    நம்ம மாரி அங்கே உள்ளவ இங்கன வர நினைப்பாகளா?

    ***

    இருந்திருந்து எத்தனையோ ஊரிருக்க மலைக் கிராமத்துக்கு போய்த்தான் ஆகணுமா?

    கலையரசி கவலையோடு மகனைக் கேட்டாள்.

    மம்மி! மெடிஸன்

    Enjoying the preview?
    Page 1 of 1