Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyiril Thathumpum Uravugal
Uyiril Thathumpum Uravugal
Uyiril Thathumpum Uravugal
Ebook254 pages1 hour

Uyiril Thathumpum Uravugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடந்த காலத்தின் கசப்பான அனுபவத்தின் பாதிப்பிலிருந்து வெளியே வராத சம்யுக்தா பாட்டியின் கிராமத்தில் செம்பியனை சந்திக்கின்றாள். இருவரிடையே உண்டான சொல்லாத மெல்லிய காதல் வெளிப்படும் தருணம் தன் தாய் வீட்டிற்கு போய் விடுகிறாள் சம்யுக்தா. மீண்டும் இருவரும் சந்தித்தனரா? காதல் கை கூடியதா?

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580147210497
Uyiril Thathumpum Uravugal

Read more from G. Shyamala Gopu

Related to Uyiril Thathumpum Uravugal

Related ebooks

Reviews for Uyiril Thathumpum Uravugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyiril Thathumpum Uravugal - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உயிரில் ததும்பும் உறவுகள்

    Uyiril Thathumpum Uravugal

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    முன்னுரை

    கடந்த காலத்தின் கசப்பான அனுபவத்தின் பாதிப்பிலிருந்து வெளியே வராத சம்யுக்தா பாட்டியின் கிராமத்தில் செம்பியனை சந்திக்கின்றாள். இருவரிடையே உண்டான சொல்லாத மெல்லிய காதல் வெளிப்படும் தருணம் தன் தாய் வீட்டிற்கு போய் விடுகிறாள் சம்யுக்தா. மீண்டும் இருவரும் சந்தித்தனரா? காதல் கை கூடியதா?

    1

    சமையலறையில் இருந்து வெளியே எட்டி பார்த்த சாரதா வேலிப்படலை திறந்து கொண்டு உள்ளே வந்த சிறுவன் விஜயை பார்த்து விட்டாள். இவள் பார்ப்பதை அவன் கவனிக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் அதிலும் முக்கியமாக சாரதாவிற்கு தெரியாமல் நைசாக வருவதாக அவனுக்கு எண்ணம். நேரே வீட்டிற்குள் வராமல் வலது புறம் பக்கவாட்டில் போய் ஜன்னல் வழியாக எம்பி எம்பி பார்த்து சன்னமாக குரல் கொடுத்தான்.

    அக்கா, சங்கிக்கா.

    அந்த சங்கிக்கா எனப்படும் சங்கமித்ரை அங்கே இல்லை. ஆனால் அவன் எதிர்பாராதவிதமாக சாரதா தான் அங்கே வந்தாள்.

    டேய் பையா, இங்கே என்னடா பண்றே?

    பா... பாட்டி... வந்து...அக்கா கூப்பிட்டிச்சுஎன்றான் மெல்ல.

    அதுக்கு இப்படி வருவானேன்? உள்ளே தான் வாயேண்டா என்று அவனை அழைத்தாள் சாரதா.

    அவன் சற்றே தயங்கி, பின்பு சரி என்பது போல தலையை ஆட்டி விட்டு முன்பக்க கதவு வழியாக உள்ளே வந்தான். அப்போது கையில் காப்பி தம்ளருடன் உள்ளே வந்த சங்கி விஜயை பார்த்து விட்டு என்னடா எதுக்கு வந்தே? என்றாள்.

    என்னக்கா, நீ தானே சொன்னே. சாயங்காலம் தேரிக்கு போகலாம்னு என்றவன் பாட்டியைப் ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் சங்கியைப் பார்த்து சொன்னியே என்றான்.

    அவளுக்கு தர்மசங்கடமாக போய் விட்டது. இந்த பொடியன் இப்படி தன்னுடைய பாட்டியின் முன் அப்பட்டமாக தன்னைப் போட்டு கொடுத்து விடுவான் என்று நினைக்கவில்லை. சூதுவாது அறியாத பத்து வயது பையன் இவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெருமாள் மாசானியின் ஒரே மகன் விஜய்.

    இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்த பாட்டி சாரதா ஏதும் சொல்லும் முன்பு சுதாரித்து கொண்டவளாக விஜய்க்கு பதில் சொன்னாள் சங்கி. ஓ. ஆமாம் இல்லே. இரு காப்பி குடித்து விட்டு வந்து விடுகிறேன்

    தேரிக்கா? வியந்து கேட்ட சாரதாவிடம் நயந்து பதில் சொன்னாள் சங்கமித்திரை. ஆமாம் பாட்டி ரொம்ப போரடிக்குது. அது தான் தேரிக்கு போலாம்னு இவனை வர சொன்னேன்

    இந் நேரமா போவே? என்றாள் கண்டிக்கும் குரலில்.

    மணி என்ன ஆவுது? நாலு மணி தானே என்றாள் சங்கமித்ரா கெஞ்சும் குரலில்.

    பேத்தியின் கெஞ்சலில் மனம் இளகியவளாக சாரதா கேட்டாள். போய் தான் ஆகணுமா?

    கொஞ்ச நேரம் மணலில் விளையாடி விட்டு வரலாம்னு நினைத்தேன் பாட்டி. அது மட்டுமல்லாமல் இன்னிக்கு பொவுர்ணமி. ராத்திரி பார்ப்பதற்கு நிலா ரொம்ப அழகா இருக்கும்.

    ‘அதுக்காகா?"

    அதுக்காக...? என்று தன்னைத் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பாட்டியைக் கண்டு உதடு பிதுக்கி ஊஹூம்...நான் ராத்திரிக்கு போகலையே. ம். போனால் நல்லா இருக்கும்னு சொன்னேன் என்றாள் புன்னகையுடன்.

    இருக்கும். இருக்கும் என்று பேத்தியுடன் சேர்ந்து புன்னகைத்து விட்டு நினவு வந்தவளாக பௌர்ணமி நிலவு கடற்புரத்தில் நல்லாவே இருக்கும் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டு கூடவே கடல் சீற்றமாக இருக்கும். அலைகள் ரொம்ப வேகமா இருக்கும். ஆளையே உள்ளே இழுத்திடும். அது அதை விட ரொம்பவே ஆபத்தா இருக்கும் என்று அவளுக்கும் நினைவூட்டினாள்.

    என்ன பாட்டி? ஆபத்தை பார்த்தா அழகை பார்க்க முடியுமா?

    அதுக்காக...? அழகை பார்க்க போய் ஆபத்தை விலைக்கு வாங்குவியா? என்றாள் நறுக்கென்று சாரதா.

    ஆபத்து இல்லாமல் இப்போ போய் கொஞ்ச நேரம் விளையாண்டு விட்டு வரேன். ப்ளீஸ் பாட்டி

    என்னமோ போ சங்கீதா. ஆபத்து என்று தெரிந்தும் அதையே தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிப்பது இன்னும் உன்னை விட்டு போகவில்லை என்றவாறே சமையலறையின் உள்ளே போய் விட்டாள் சாரதா.

    இந்த வார்த்தை சங்கமித்ரையின் மனதை நறுக்கென்று குத்தியது. பாட்டியிடம்

    கோபப்பட முடியாது. ஏனென்றால் பாட்டி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தானே. இவளும் அப்படிபட்டவளாகத் தானே இருந்திருக்கிறாள். ஆபத்து என்று தெரிந்தும் அதையே தான் செய்வேன் என்று பிடிவாதமாக நின்று எத்தகைய ஆபத்துகளை விலைக்கு வாங்கி இருந்திருக்கிறாள். எத்தனை வேதனை?. இவளுக்கு மட்டுமா? ஏதேதோ நினைவுகள் நெஞ்சின் நினைவுகளைப் புரட்டிப் போட மேற்கொண்டு சிந்திக்க இயலாமல் அப்படியே அருகில் கிடந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள் சங்கமித்திரை.

    தனக்கு காப்பியை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்த சாரதாவிற்கு, தலையை தொங்கப் போட்டு கொண்டு உட்கார்ந்திருந்த சங்கமித்ராவை அதாவது பாட்டிக்கு மட்டும் அவள் சங்கீதா அதுவும் சமயத்தில் கீதா தான் பார்ப்பதற்கு பாவமாகி போயிற்று. நாள் முழுவதும் வீட்டிற்குள் ஏதேனும் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் பெண், மாலையில் சற்று நேரம் கடற்கரை மணலில் விளையாடி விட்டு வருகிறேன் என்ற இந்த பெண்ணை பாவம் நாமும் தான் நோகடித்து விட்டோம். ம். என்ன செய்வது? இந்த பெண் தாய் தகப்பனிடம் இல்லையே. நாம் தானே இவளுக்கு பொறுப்பு. இவளுக்கு ஏதேனும் ஒன்று ஆகிவிட்டது என்றால் இவளுடைய பெற்றோருக்கு யார் பதில் சொல்வது?

    சரி. சரி. பத்திரமாக போய் விட்டு வா. தெரு வழியா போகாமல் தென்னவிளைக்கு உள்ளார போ என்றாள் பேத்தியிடம் சாரதா.

    இல்லை நான் போகலை. என்றாள் சங்கி. விட்டால் அழுது விடுபவளைப் போல.

    ஏன் போகலை? அதான் ரெடியா இருக்கியே.உனக்காக இந்த பொடியனும் வந்துட்டான். போ போ என்றாள் பாட்டி சமாதானமாக.

    வேண்டாம். நீ ஏதேதோ பேசறே

    சரி விடு. நான் தானே சொன்னேன். பாட்டி சொல்றதை மனசில எடுத்துக்காதே. போயிட்டு சீக்கிரமா வந்துடு

    இல்லை பாட்டி. நான் போகலை என்றாள் கண்கள் அழுகையால் மினுமினுக்க.

    சற்று நேரம் அவளையே பார்த்து கொண்டிருந்த சாரதா அவள் அருகில் நெருங்கி குனிந்திருந்த தலையை ஒற்றை விரலால் நிமிர்த்தினாள். கண்களில் வழிந்திருந்த கண்ணீரை புடவை தலைப்பால் துடைத்து விட்டு அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டாள்.

    2

    பவுர்ணமி மாலையில் கடற்கரைக்கு போக கிளம்பி நின்ற பேத்தி சங்கமித்திரையை மாலையில் இவ்வளவு நேரத்திற்குப் பிறகு போகனுமா என்று கேட்டு, பவுர்ணமி நிலவு இரவில் அழகாக இருக்கும் என்ற பேத்தியை அழகாயிருக்கிறது என்பதற்காக ஆபத்தை விலை கொடுத்து வாங்கலாமா என்று கூர்மையாக கேட்டு விட அப்படியே அமர்ந்து விட்ட பேத்தியைக் காண சகிக்கவில்லை சாரதாவிற்கு.

    என் ஆதங்கம் எனக்கு. ஏதோ ஒரு நெனப்புல இப்படி பேசிட்டேன். நீ இப்போ எப்படி இருக்கேன்னு எனக்கு தெரியும்

    எப்படி இருக்கேன்? என்று நிமிர்ந்து பாட்டியின் முகத்தைப் பார்த்தாள் அழும் கண்களை துடைக்க கூட துடைக்காமல். ஏனெனில் அவளுக்கும் தான் இப்போது எப்படி இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது கடல்கரைக்கு போவதை விட.

    புடம் போட்ட தங்கம்மா ஜொலிகிறே என்றாள் பாட்டி குரலில் பெருமிதம் ஒலிக்க.

    நிஜமாவா? இல்லே நான் அழுதேன்னு சமாதானபடுத்தவா? என்று கேட்டாள் சங்கி

    பாட்டியை உன்னைத் தெரியும் என்ற பார்வையுடன்.

    உன்னை சமாதனப்படுத்தனும் என்பதற்காக பொய் சொல்வானேன்? உனக்கே தெரியும் என்று சங்கியை கூர்ந்து பார்த்தவாறு உன் மேல் உனக்கு நம்பிக்கை இருக்கு இல்லையா? என்று கேட்டாள் திட்டவட்டமாக.

    இருக்கு பாட்டி

    பின் எதற்கு நான் சொன்னதற்காக அழுவது?

    பாட்டி உன் வார்த்தைகளுக்காக அழலை. அதில் இருந்த உண்மைக்காக அழறேன்

    கடந்து போன விஷயங்களுக்காக அழக்கூடாது சங்கீதா என்றாள் சாரதா கட் அண்ட் ரைட் கறாராக.

    கடந்து போன விஷயங்கள் என்னுடைய சின்ன சின்ன ஆசைகளைக் கூட நசிச்சிடுதே பாட்டி என்று சொன்னவளுக்கு மீண்டும் கண்ணீர் கண்களை விட்டு கன்னத்தில் இறங்கியது.

    சின்ன ஆசை என்ன சின்ன ஆசை? உன்னுடைய பெரிய பெரிய ஆசைகள் கூட நல்லபடியா நிறைவேறும். நம்பனும் சங்கீதா என்றவாறு இருக்கையில் அமர்ந்திருந்த பேத்தியை தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டாள் சாரதா.

    உன் ஆசையையே உன் ஆசிர்வாதமாக எடுத்துக்கறேன் பாட்டி என்று எழுந்து நின்றாள்.

    இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்ததை பார்த்து கொண்டிருந்த விஜய்க்கு கடற்கரைக்கு போவதற்கு பாட்டி அக்காவை திட்டுகிறாள் என்பது புரிந்தது. அதனால் அக்கா வருவாளா மாட்டாளா அல்லது நான் நிற்பதா போவதா என்பது புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டு நின்றிருந்தான்.

    வாடா போகலாம். நல்லா வாய் பார்க்கிறே அவனை இழுத்து கொண்டு வீட்டின் பின் கதவு வழியாக தென்னவிளை உள்ளாடி விறுவிறுவென்று வேகமாக நடந்தாள் சங்கமித்ரை.

    பூம்புகாரின் கடற்பகுதி அது. சிறு கிராமம். மருவூர் என்பது அதன் பெயர். மணல்பாங்கான பகுதி. மணல் திட்டு திட்டாக சிறுசிறு குன்று போல் இருக்கும். அதன் மேல் ஏறி விளையாடுவது அருமையான விஷயம். அதிலும் ஒளிந்து பிடித்து விளையாடுவது தான் அவர்கள் வாடிக்கை. அன்றும் கடற்கரைக்கு வந்த சங்கமித்ரை அந்த மாலைவேலையில் சூரியன் ஒரு நெருப்பு பந்து போல தகதகவென்று தங்கமாய் ஜொலித்தபடி கடலில் மறையத் தொடங்கும் கண்கொள்ளா காட்சியை கண்டு மெய்மறந்து நின்றாள்.

    மருவூரின் தெற்கே கடற்கரையில் தூரத்தில் பூம்புகாரில் மாசிலாமணி நாதர் கோயில் தெரிந்தது. முற்கால சோழர்கள் நசிவுற்ற பிறகு எழுச்சியுற்ற பாண்டியர்களில் இந்த கோயில் மாறவர்ம குலசேகர பாண்டியனால் ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. முன்புறம் முற்றிலும் சிதிலமடைந்து விட்ட கோயிலில் அன்றாட பூஜை புனஸ்காரங்கள் ஏதும் கிடையாது. பல்லாயிரக்கணக்கில் பலநூறு தலைமுறை மக்களை, அவர்கள் கலாச்சாரங்களை, வாழ்க்கையை, வீழ்ச்சியை மட்டுமல்லாமல், இயற்கை சீற்றங்களையும் கண்டு எதற்கும் அசைந்து கொடுக்காமல் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷமாக நிற்கிறது.

    சங்கமித்ரை எப்போது இந்த கடற்கரைக்கு வந்தாலும் இந்த கோயிலை பார்க்க தவறுவதில்லை. எப்போதும் நினைப்பது போலவே இன்றும் ஒருநாள் அந்த கோயிலுக்கு சென்று வரவேண்டும் என்று தீர்மானித்து கொண்டாள்.

    அதற்குள் அருகில் வந்த விஜய் அக்கா விளையாட வேண்டாமா? இப்படியே எத்தனை நேரம் தான் நிற்ப்பியோ? என்றான்.

    பாருடா எவ்வளவு அழகா இருக்கு. இந்த சூரியன் அஸ்தமிக்கறதும், தூரத்தில் அந்த கோயிலும். அடடா

    விஜய் உள்ளூர்காரன். அவனுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக இல்லை. அவள் சொன்னாளே என்பதற்காக தலையை திருப்பி அதை பார்த்தவன் மேற்கொண்டு ஏதும் சுவாரஸ்யம் காட்டாதவனாக அவளை மீண்டும் அவசரப்படுத்தினான் விளையாடுவதற்காக. சங்கமித்ரையுமே சென்னையில் பிறந்து வளர்ந்தவள். எத்தனையோ நாட்கள் கடற்கரைக்கு சென்றிருக்கிறாள். மாலை சூரியன் கடலில் விழுவதை எல்லாம் பார்த்தது இல்லை. பார்த்திருந்தாலும் கவனித்திருந்திருக்கமாட்டாள். பரபரப்பான ஊரில் கவனைத்தை திசை திருப்ப கூடிய அநேகம் விஷயங்கள் உண்டு. அவளுமே அப்படி திசை திருப்பபட்டவளும் கூட. ஆனால் இந்த கிராமத்தில் அத்தகையவைகள் ஏதும் இல்லாததினால் இதை எல்லாம் கவனிக்கவும் ரசிக்கவும் முடிகிறது. இங்கே வந்ததில் அவள் வாழ்க்கை முறை மட்டுமல்லாமல் ரசனையும் கூடத்தான் மாறிப் போய் இருக்கிறது. தன்னை குனிந்து பார்த்து கொண்டாள். பாவாடை சட்டை தாவணி. ரெட்டை பின்னல். அதை இணைக்கும் மல்லிப்பூ மணக்க, காதில் லோலாக்கு ஆட, கைகளில் கண்ணாடி வளையல்கள் கிலுங் கிலுங் என்று குலுங்க, காலில் கொலுசு ஜலக் ஜலக் என்று சப்திக்க மொத்தத்தில் வாசனையும் சங்கீதமுமாக இருந்தாள். எப்படி இருந்த நான் இப்படி இருக்கிறேன் என்பதான நினைவில் ஒரு நொடி ஆழ்ந்த போதும் உடனே தலையை குலுக்கி சிந்தனையிலிருந்து விடுப்பட்டவளாக தன்னை தானே பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள்.

    அவளையே பார்த்து கொண்டிருந்த விஜய் அவள் தன்னை தான் பார்த்து சிரிப்பதாக நினைத்து பதிலுக்கு அவளைப் பார்த்து புன்னகைத்தான். அந்த சிரிப்பினூடே அக்கா வாக்கா விளையாட வா என்று மீண்டும் அழைத்தான். அவனுடன் சாட்பூட் திரீ போட்டு அவள் பிடிக்க வேண்டி ஒளிந்து கொண்டிருந்தவனை பிடித்து விட்டவள் இப்போது அவன் பிடிக்க வேண்டி மணல் திட்டின் மறுபுறம் போய் ஒளிந்து கொண்டாள்.

    இவளைத் தேடிக்கொண்டு வந்த விஜய் இவளை கண்டு விட்டான். அக்கா என்று அவள் மேல் பாய்ந்ததில் இருவரும் நிலை தடுமாறி விழுந்தார்கள். கீழே விழுந்த விஜய் உருளத் தொடங்கியிருந்த சங்கியை பிடிக்க முயலுமுன் அவள் உருள தொடங்கியிருந்தாள்.

    3

    கீழே விழுந்த விஜய், உருளத் தொடங்கியிருந்த சங்கியை பிடிக்க முயலுமுன் அவள் உருள தொடங்கியிருந்தாள். உருளத் தொடங்கியவள் தான் வரைக்கும் உருண்டால் தேவலையே.

    எதிர்புறத்தை பார்த்தவாறு கையில் ஒரு பேப்பரில் எதையோ எழுதி கொண்டோ அல்லது வரைந்து கொண்டோ உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனின் மேல் விழுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவனையும் உருட்டி கொண்டு போய் கீழே விழுந்தாள். அதுவும் ஒருமுறை உருண்டால் தேவலயே. சினிமாவில் வர்ற மாதிரி நாலைஞ்சு தடவை சேர்ந்து உருண்டது தான் சிறப்பு.

    முதலில் சுதாரித்து கொண்டவன் அவன் தான். எதிர்பாராத இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1