Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mogame Mounamai...
Mogame Mounamai...
Mogame Mounamai...
Ebook463 pages2 hours

Mogame Mounamai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி என்பதுகளின் பின்னணியில் இந்த கதையை கொண்டு செலுத்தியிருக்கிறேன். நன்றாகப் படித்துக் கொண்டிருந்த மீராவை அவளுடைய தாய் அமிர்தம் பண்ணையார் சுந்தரலிங்கத்திற்கு தருகிறாள். ஐந்து வருடங்கள் தன் நிலை மறந்து வாழும் மீராவை வண்டிக்காரன் கதிரவன் அவளுக்கு அவளையே உணர வைக்கிறான். சுந்தரலிங்கத்திற்கு இணையான அந்தஸ்தைக் கொண்டு வர கேட்கும் அமிர்தம். அதற்காக மலேசியா போகிறான் கதிரவன். பத்து வருட மௌனத்தில் மீராவிற்கும் கதிரவனுக்கும் இடையே மௌனமாக இருந்த மோகம் காதலாக மாறியதா?

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580147210651
Mogame Mounamai...

Read more from G. Shyamala Gopu

Related to Mogame Mounamai...

Related ebooks

Reviews for Mogame Mounamai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mogame Mounamai... - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மோகமே மௌனமாய்...

    Mogame Mounamai...

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 1

    தட் என்று பெருத்த சத்தத்துடன் கரும் புகையை கக்கி விட்டு நின்றது அந்த பாசஞ்சர் ரயில். அக்கம்பக்கத்தில் சிறுசிறு கிராமங்கள் நிறைந்திருக்கும் சிற்றூர் அது. அதுவரை அங்கே மண் பிளாட்பாரத்தில் சோம்பலுடன் படுத்து உருண்டு கொண்டிருந்த ஒரு கருத்த நாய், ரயிலின் மிகப்பெரிய சத்தத்திற்கும் அசைந்து கொடுக்காமல் அப்படியே படுத்துக் கொண்டிருந்தது.ம்.க்ஊம். இந்த ரயில் அரக்க பரக்க பெரிய சத்தத்துடன் கரேர் என்று புகையை கக்கிக் கொண்டு வந்து நின்று விட்டால் ஆச்சா? யாரேனும் இறங்கினாலோ அல்லது ஏறினாலோ தானே! எப்பவாவது அத்திப் பூத்தார் போல் என்றைக்காவது ஒன்று ரெண்டு பேர் தான் வருவார்கள். இன்றைக்கு மட்டும் அப்படி யார் வந்து விடப் போகிறார்கள்? அப்படியே வந்தாலும் நான் தான் எழுந்து விடப் போகிறேனா? நமக்கு தெரிஞ்சவங்க யாராவது தான் வந்து விடப்போறாங்களா? இதற்கெல்லாம் நான் பயந்து எழுந்து விடுவேனா என்ன? தலையை தூக்கிப் பார்த்து விட்டு மீண்டும் அதே இடத்தில் நன்றாக படுத்துக் கொண்டு விட்டது அந்த நாய்.

    ஆனால் அதன் நினைப்பை பொய்யாக்குவது போல் அன்று அந்த விடியற் காலையில் நீண்டு கருத்து இருந்த அந்த ரயில் பெட்டியிலிருந்து இறங்கினான் அவன். கூடவே பெரிய ட்ரங் பெட்டியை கஷ்டப்பட்டு இறக்கினான். இவன் இறங்குவதற்காகவே காத்திருந்தது போல வண்டி மீண்டும் பெரிய ஒரு விசிலடித்து உறுமி விட்டு தடக் தடக் என்று ஆடி அசைந்து கிளம்பியது. அதுவரை உருண்டு கொண்டிருந்த அந்த நாய் இவனை தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு இவனை எப்போதோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தவாறு எழுந்து அவனருகில் வந்து நின்றது. யோசனையாய் அவன் முகத்தை அண்ணாந்து பார்த்து கொண்டு இருந்தது.

    தான் சின்னஞ்சிறிய குட்டியாக இருந்த போது இவன் இங்கே வந்திருக்கிறான். தன்னுடைய தாய் இறந்து கொஞ்ச நாட்கள் ஆகியிருந்தது. கண்கள் பஞ்சடைந்து குத்துயிரும் குலை உயிருமாக பசியால் பாலுக்கு அலைந்த போது இவன் இங்கே இருக்கும் கேண்டீனில் பாலும் பிஸ்கோத்தும் வாங்கி போட்டிருக்கிறான். போன உயிர் திரும்ப வந்தது. மகராசன் நல்லா இருக்கணும். நன்றியால் அவனைக் கண்டு வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.

    இது இன்று நேற்று நடந்தது அல்ல. நடந்து பத்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் தான் என்ன? நாய் நன்றி மறக்குமா என்ன?

    தன்னைக் கண்டு வாலை ஆட்டிக் கொண்டும் தன்னுடைய கையை எம்பி நக்கிக் கொண்டும் நின்றிருந்த நாயை தலையை தடவியவாறு சுற்றும் முற்றும் பார்த்தான் அவன். பொழுது இன்னும் புலரவில்லை. இருட்டின் விளிம்பில் வெளிச்சம் தொடங்கும் நேரம். பிளாட்பாரத்தின் வலது கடைக்கோடியில் விளக்கு கம்பத்தில் மினுக் மினுகென்று வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது குண்டு மஞ்சள் பல்பு. அந்த பல்பைச் சுற்றி ஈசல்கள் ரீங்கரித்துக் கொண்டிருந்தது. அதே தூங்குமூஞ்சி மரம் இலைகள் அசையாமல் எப்போதும் போல அதே தியான நிலையில் இன்னும் அதிகமாக கிளைகள் படர்ந்து அந்த இடத்தையே இன்னும் இருட்டாக அடித்திருந்தது. அதன் நிழல் பயமுறுத்துவதாக இருந்தது.

    தன்னுடைய அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து விட்டு கதவை மூடி பூட்டிக் கொண்டு வெளியே வந்த ஸ்டேசன் மாஸ்டர் இவனை பார்த்து விட்டு நின்றார். அவர் இந்த ஸ்டேசனுக்கு புதிதாக மாற்றல் ஆகி வந்தவர். இளம் வயது. ரயில்வே ஸ்டேசனை ஒட்டியுள்ள குவார்ட்டசில் குடியிருப்பவர். தினம் இந்த நேரத்திற்கு வரும் இந்த ரயிலுக்கு வந்து வேலை செய்து விட்டு, வீட்டிற்கு போய் இடையில் விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்வார். காலை பத்து மணிவாக்கில் வரும் கூட்ஸ் வண்டிக்கு மீண்டும் வந்து விடுவார். அவரே டிக்கெட்டும் கொடுத்துக் கொண்டு ஒரே ஆளாக அந்த சிறிய ரயில்வே ஸ்டேசனை நிர்வகித்துக் கொண்டிருப்பவர். உதவிக்கு நடுத்தர வயது அட்டெண்டர் சன்னாசி மட்டும் தான் துணை.

    என்ன சார், பெட்டியைத் தூக்கனுமா?

    ஆமாம் சார். அதான் பார்த்துக் கிட்டு இருக்கேன்

    அதுக்கென்ன, நம்ம சன்னாசிக் கிட்ட சொன்னால் செய்துட்டு போறான்

    நன்றி சார். யாரை உதவிக்கு கூப்பிடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்

    எங்கே போகணும் சார் உங்களுக்கு?

    பக்கத்திலே, மஞ்சக்கரம்பைக்குத் தான்

    ஓ, கரம்பைக்கா?

    அது தான் எப்படி போறதுன்னு?

    யோசிக்காதீங்க சார். ஒரே வழி தான். நம்ம சாயபு குதிரைவண்டி இருக்கும். அவரு அதுக்குள்ளத் தான் தூங்குவாரு. இருங்க சொல்லி விடறேன். ஏலே சன்னாசி. நம்ம சாயபுவைக் கூப்பிடு என்று தூரத்தில் நின்று கொண்டிருந்த சன்னாசிக்கு கேட்கும்படி உரக்க சத்தமிட்டு சொன்னார்.

    இன்னும் சாயபு தான் வண்டி ஓட்டறரா?

    ஆமாம். சொன்னவர் இவனிடம் திரும்பி, வாங்க சார். போய் ஒரு டீ அடிச்சிட்டு வரலாம் என்றார்.

    இருவரும் பேசிக் கொண்டே நடந்தார்கள். அந்த நாயும் வாலை ஆட்டிக் கொண்டே கூட நடந்து கொண்டிருந்தது. இன்றைக்கும் பாலும் பிஸ்கட்டும் வாங்கிக் கொடுக்க மாட்டானா? இத்தனை வருடத்தில் ஆள் மாறி போய் விடுவானா?

    பட்டினத்திலே இருந்து வரீங்களா சார்?

    நேத்திக்கு காலையில் தான் பட்ணத்துக்கு வந்தேன்

    ஓ, அப்படியா! எங்கே இருந்து வரீங்க சார்?

    மலேசியாவில் இருந்து வரேன் சார்

    அப்படி சொல்லுங்க. அதான் இந்த பக்கத்து ஆளு மாதிரி இல்லையேன்னு நெனச்சேன்

    நான் இங்கன மஞ்சகரம்பை தான் சார். மலேசியாவுக்கு வேலைக்கு போயிருந்தேன்.

    அப்ப வெளிநாட்டு சரக்கா கொண்டு வந்திருப்பீங்க?

    சும்மா கொஞ்சமா! மேற்கொண்டு இவனிடம் பேச்சைத் தொடர்ந்தால் இங்கேயே பெட்டியைப் பிரித்து காட்ட சொல்லி விடுவானோ என்று தோன்றவே பேச்சை மாத்தினான் அவன்.இந்த கேண்டின் மாறவேயில்லை. அப்படியே இருக்கு.

    கேண்டின் மட்டுமா? அதிலே இருக்குற அழுக்கு பிசுக்கு பிடிச்ச பாத்திரம் அதே நமசிவாயம். எதுவுமே மாறலை சார்

    அவர் சொன்னது உண்மை தான். தகரத்தில கொட்டாய், நாலுபக்கமும் அடைப்பு, பெரிய பெரிய வால்வு வைத்த பெரிய மர்பி ரேடியோ, அதற்கு இழுத்து விட்டிருக்கும் கரண்ட், கரண்ட் கம்பியிலே பிடித்திருக்கும் ஒட்டடை, பிஸ்கட் போட்டு வைக்கும் பெரிய கண்ணாடி ஜாடிகள், எப்போது போட்டது என்று போட்டவருக்கேத் தெரியாத உளுந்து வடை.

    ரேடியோவில் விடியக்காலையில் சிலோன் வானொலி ஒலிபரப்பு தொடங்கும் முன் இசைக்கப்படும் தொடக்க இசை ஆளரவமற்ற அந்த பிரதேசத்தில் இருட்டை கிழிக்கும் பெருஞ்சத்தமாக இருந்தது.

    எதுவுமே மாறவில்லை.!

    அந்த விடியற்காலையில் கடைக்குள் இருக்கும் ஒன்றிரண்டு பித்தளை சாமான்களை கழுவி தனக்கும் அதுக்குமாக வீபூதி பட்டை அடித்து நடுவில் குங்குமப் பொட்டு வைத்து அடுப்பை பற்ற வைத்தான் நமசிவாயம்.சார், ஸ்டேசன் மாஸ்டருக்கு நம்மளை கிண்டல் செய்யாட்டா முடியாது. டேசனுக்கு யார் சார் வரா? பெரிய வருமானம் எதுவும் இல்லை. ஏதோ பொழப்பு ஒடனுமேன்னு நானும் இந்த கடையை கட்டிக்கிட்டு அழுவறேன்

    டேசனை நம்பியா பொழைக்கிரே? பின்பக்கம் கவுண்டர் வெச்சு ஊரு சனத்துக்கு இல்லே வியாபாரம் பண்றே

    விடுங்க சார், நம்ம பஞ்சாயத்து கிடக்குது. இந்த சார் எங்கே போறாங்க?

    மஞ்சக்கரம்பைக்கு

    அங்கே யாரு வூட்டுக்கு?

    கதிரவன் வூட்டுக்கு

    அவரு அங்கனே இல்லையே. மலேசியாவுக்கு போயி பத்து பதினஞ்சு வருஷம் ஆச்சே

    தெரியும். ஆனா அவுரு வீடு அங்கன தானே இன்னும் இருக்கு

    கண்டிப்பா. அவுங்க அக்கா, அக்கா மக எல்லோருமே அங்கே தான் இருக்காங்க

    தெரியும் நமசிவாயம்

    என் பெயர் கூட தெரிஞ்சிருக்கே. ஆனா நீங்க யாருன்னு தான் புரிப்பட மாட்டேங்குது

    நான் தான் கதிரவன்

    ஆ, கதிரா?

    ஆமாம். கதிரு தான்

    எங்கேயோ மலேசியாவிலே இருக்கேன்னு சொன்னான் உன் அண்ணன் குமாரு.

    ஆமாம்

    திடீருன்னு ஒருநாள் ஊருக்கு போகப் போறேன்னு கையிலே ஒரு பையை தூக்கி கிட்டு வந்து நின்னே. ராத்திரி பட்ணத்துக்கு போற ரயிலுக்கு சாயரட்ச்சையே இங்கனே வந்து உக்காந்துகினு இருந்தே. எங்கே போறேன்னு கேட்டேன். தெரியாது. இப்போதைக்கு பட்ணத்துக்கு போறேன். அப்புறம் எப்படியோன்னு சொன்னே. இது நேத்து நடந்தது மாதிரி இருக்கு. அதுக்குள்ள ஏழெட்டு வருஷம் ஓடிப் போச்சா...!

    ம். சரியாக பத்து வருஷம் கதிர் நமசிவாயத்திற்கு பதில் சொன்னவனைப் போல இல்லை. தனக்குத் தானே தனக்குள் நினைவுகளில் மூழ்கியவனாக சொன்னான்.

    அப்பாடியோவ். அம்மாம் வருஷம். ஒரு தடவைக் கூட ஊருபக்கம் வரவேயில்லை. அட தெய்வமே, ம். உன்னை மறந்தே போச்சு. இன்னைக்கு திடீர்னு வந்து நிக்கறே. கேட்டா மலேசியாவிலே இருந்து வரேன்னு சொல்றே. ஒன்னும் புரியலை கதிரு

    பேசிக் கொண்டே டீ போட்டு ஆற்றி இவர்களுக்கு கொடுத்தான். புரியும்படியாக சொல்வதற்கு கதிருக்கு அலுப்பாக இருந்தது. கொஞ்ச கதையா இருக்கிறது இடைப்பட்ட இத்தனை வருடத்தில் நடந்ததை சொல்வதற்கு? அமைதியாக இருந்தான். கதிரு நாய்க்கு டீயை ஊற்றி அதில் கொஞ்சம் பிஸ்கட்டை உடைத்துப் போட்டான்.

    சரிப்பா, போயிட்டு வரேன். சாயங்காலம் வீட்டுக்கு வா. பாக்கலாம்

    அவன் குரலில் இருந்த சிநேகம் நமசிவாயத்திற்கு அவனிடம் ஏதோ எதிர்பார்ப்பை உண்டாக்கியது. கதிர் மாறவேயில்லை. அப்படியே இருக்கிறான். என்ன இந்த ஊரில் இருந்து போகும் போது ரொம்ப பட்டிக்காட்டான் மாதிரி பழுப்பேறிய வேட்டி அரைக்கை சட்டையுமாக இருந்தான். இப்போது மலேசியா காசு உடம்பில் சிலுசிலுன்னு பட்டு சொக்காயும் கழுத்து நகையுமா கை மோதிரமா மின்னுது. முழு டவுசர் காலில் பூட்ஸ் வேறு. சும்மா சினிமாக்காரன் போல இருக்கான்.

    குதிரை வண்டியில் பெட்டியைத் தூக்கி வைத்து விட்டு இவன் ஏறிக்கொள்ளவும், வண்டியை கிழக்கிலிருந்து தெற்க்காலே ஒரு அரை வட்டம் போட்டுத் திரும்பி மஞ்சக்கரம்பை நோக்கி செலுத்த தொடங்கினான் வண்டிக்கார சாயபு.

    என்னா சாயபு, எப்படி இருக்கீங்க?

    வழக்கம் போல பேர் சொல்லிக் கூப்பிடுவதா? அல்லது இன்றைக்கு அவன் இருக்கும் செல்வநிலைக்கு ஏற்ப அய்யா என்று கூப்பிடுவதா? என்று தயங்கி சரி எதற்கும் இருக்கட்டும் என்று பொத்தாம் பொதுவுல பேச்சை தொடர்ந்தார் சாயபு.

    நல்லா இருக்கேங்க. கொஞ்ச நாள் இருப்பீங்களா? இல்லே...

    இன்னும் முடிவு பண்ணலை. பார்ப்போம்

    அக்காவைப் பார்க்க வந்தீங்களா?

    சின்னம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு வந்தேன்.

    ஆமாம். ரொம்பத் தான் முடியாமல் இருக்காங்க. ப்ளசர் வெச்சி தஞ்சாவூருக்கு கொண்டு போயிருக்கு

    அதனாலத் தான் டேசனுக்கு என்னைய அழைக்க யாரும் வரலை

    நேத்திக்கு குமாரைப் பார்த்தேன். அம்மா எப்படி இருக்காக என்று கேட்டேன். ஒன்னும் பிரவோசனம் இல்லைன்னு உதட்டை பிதுக்கிட்டது குமாரு சாயபு அவர் பாட்டுக்கு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்.

    அவன் மேல்கொண்டு பேசவில்லை. ஏதோ யோசனையாகவே இருந்தான். பத்து வருடங்களுக்கு முன்பு ஒருநாள் இந்த ஊரை விட்டு போனான். கடைசி ஒரு மாதத்தில் என்னவெல்லாம் நடந்து விட்டது. ரெண்டு ஏக்கர் நிலத்தை ஊரில் வட்டிக்கு விடும் மாரியப்பனிடம் அடகு வைத்து வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்ட சண்டை அடிதடி மனதிற்குள் அவமானமும் எரிச்சலும் நமநமவென்று அரித்துக் கொண்டிருந்தது. இன்று தன்னைப் பார்த்தால் என்ன சொல்லுவான் அந்த மாரி?

    கதிரு, ஒருநாள் உன்னைய காணோம்னு கிராமமே பரபரத்துப் போய் கிடந்தது. மாரிமுத்துப் பய கிட்ட வாங்கின கடனுக்கு சண்டையானதுனால அவமானப்பட்டு ஏதாவது பண்ணிக்கிட்டியோன்னு குளம் குட்டை எல்லாம் தேடினோம். எங்கேயும் இல்லை. உங்க அக்காவை காண சகிக்கலை. கண்ணுல மட்டும் உசிரை வெச்சிக்கிட்டு இருந்தது அது. கொஞ்ச நாள் செண்டு நீ மலேசியாவுல இருக்கேன்னு கேள்விப்பட்டோம். எல்லாரையும் திகில்படுத்திட்டே போ.

    கதிரவன் அதற்கும் பதில் சொல்லவில்லை. மாரிமுத்துப் பயலுக்கு பயந்தா அவன் ஊரை விட்டுப் போனான்? பத்து மாரிமுத்து வந்தாலும் சமாளிக்க கூடிய ஆளாச்சுதே கதிரவன். தாயும் தந்தையும் அற்றவனுக்கு ஒரே ஆறுதல் அக்கா சுகுணாவும் அவள் மகள் துர்காவும் தான். அவர்களைக் கூட நினைத்துப் பார்க்க முடியாமல் இந்த ஊரை விட்டு போகும் படி ஆயிற்று.

    மண்சாலையில் ஆடி ஆடிப் போய்க் கொண்டிருந்தது அந்த வண்டி. குதிரையோ வயதானது. சாயபோ அதை விட வயதானவர். பெரிய தொப்பை வேறு. பெருங்குரல் எடுத்து ஓவென்று கத்தி குதிரையை விரட்டிக் கொண்டிருந்தார். அதாவது விரட்டுவது போல பாவலா. ஆனால் மறைமுகமாக கொஞ்சம் வேகமாக கால்களை எடுத்து வைக்க சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருந்தார். அவருடைய கூப்பாட்டிற்கு மசிந்து விடுமா அந்த சண்டிக்குதிரை? அதன் பாட்டுக்கு மெல்லவே போய்க் கொண்டிருந்தது.

    விடுங்க சாயபு. மெல்லமா தான் போகட்டுமே. அதைப் போய் வைது கொண்டு. விடுங்க. எனக்கு ஒன்னும் அவசரமா போகணும்னு இல்லை

    சின்னாறு ஒன்று இடைப்பட்டது. வண்டி பாலத்தில் ஏறி இறங்கியது. தலை பக்கவாட்டு தட்டியில் இடித்துக் கொண்டது. சிந்தனையில் இருந்து விடுபட்ட கதிரவன் சுற்றுப்புறத்தை பார்த்தான். அந்த விடியற்காலைப் பொழுதிலேயே அறுவடைக்கு ஆட்கள் வயலில் இறங்கியிருந்தார்கள். நன்றாக விளைந்து நின்ற நெற்கதிர்கள் வாசனை அவனுக்கு மீண்டும் சொர்க்கத்திற்கு வந்தது போல இருந்தது. நெஞ்சை விரித்து அந்த வாசத்தை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டான். தூரத்தில் ரேடியோவில் இலங்கை வானொலியில் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தது.

    "சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?

    அட, எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா?

    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்

    தமிழ் போல் இனித்திடுமா?"

    எவ்வளவு பொருத்தமான பாடல்! இந்த ஊரும் இந்த மண்ணும் சொந்தமும் பந்தமும் நட்பும் பகையும் இங்கே இருக்க இதை எல்லாவற்றையும் விட்டு விட்டு அப்படி ஏன் ஊரை விட்டுப் போனான்?

    இவை எல்லாவற்றையும் மிஞ்சிய ஒன்று. அது எது?

    அவளா? அவளின் நினைவுகளா? அந்த நினைவு தந்த கனவா? கனவு மெய்ப்பட வேண்டும் என்ற அவனுடைய உயிரை உருக்கும் ஏக்கமா?

    தலையை பின்னால் நன்றாக சாய்த்துக் கொண்டான். ஒரு பெரிய பெருமூச்சு விட்டான். குதிரைவண்டி சக்கரம் உருளுவது போல அவன் நினைவுகள் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் உருண்டது.

    அத்தியாயம் 2

    தஞ்சாவூரை நோக்கி செல்லும் அந்த தார்சாலையில் ஜல் ஜல் என்று கழுத்து சலங்கை சப்திக்க ஒரே சீராக சென்று கொண்டிருந்தது அந்த வில்வண்டி. வண்டியில் பூட்டப்பட்டிருந்த காங்கேயம் காளைகள் இந்த சாலையே அவைகளுக்குத் தான் சொந்தம் என்பது போல சாலையின் மையத்தில் அழகு நடை போட்டுக் கொண்டு நடந்தது. அந்த காளைகளின் ராஜயோகம் அப்படி. பின்னே பண்ணையார் சுந்தரலிங்கத்தின் பிரத்தியேக உபயோகத்திற்கு என்றே இருப்பது ஆயிற்றே. மற்ற மாடுகளைப் போல ஏர் ஓட்ட கலப்பையில் கட்டப்படுவதோ மொக்கை மாடாக வைக்கோல் போர் அடிக்கவோ அவைகளைப் பயன்படுத்துவது இல்லையே. பின்னே ஓய்யாரத்திற்கு கேட்கவா வேண்டும்?

    வண்டிக்காரன் கதிரவனும் சும்மா லேசுபட்டவன் இல்லை. அந்த வண்டியை அவ்வளவு அழகு படுத்தியிருந்தான். வண்டிக்குள் கீழே வைக்கோல் பிரிக்கு பதிலாக அசல் இலவம் பஞ்சு மெத்தை போட்டு பவானி ஜமுக்காளம் பரத்தி தலை சாயும் இடத்தில் மெத்தென்று நீண்ட பட்டு தலையணை இட்டு அருமையாக இருந்தது அந்த வில்வண்டி. வண்டியின் முன் பின் இரு விளிம்பிலும் புசுபுசுவென்று சாட்டின் துணியால் கொசுவம் வைத்து தைக்கப்பட்டிருந்தது. வண்டியின் கீழே மாடுகளுக்குத் தேவையான புல்லுக்கட்டு செருகப்பட்டிருந்தது.

    ரெண்டு வெள்ளைநிற காங்கேயம் காளைகளும் நன்றாக மசாஜ் செய்யப்பட்டிருந்தது. திமில் பெருத்து அவைகளுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. கழுத்தில் பட்டை சலங்கையும் நீண்டு முனையில் வளைந்திருந்த கொம்புகளில் வர்ணம் பூசி முகட்டில் பித்தளைத் தொப்பியும் இட்டிருந்தது. நெத்தியில் சிற்சிறு மணிகளும் சங்குகளும் அலங்கரித்து இருந்தது. இத்தனை அலங்காரங்களும் கொண்ட மாடுகளின் நடையில் துள்ளலும் உலகமே எனக்குத் துச்சம் என்ற ஒய்யாரமும் இருப்பதில் வியப்பென்ன.!

    கதிரவனும் கட்டுமஸ்தான உடலும், நடுத்தரத்திற்கு சற்றே ஒருபிடி அதிகமான உயரமும், தலை நிறைய முரட்டு முடியும் அது முன் நெற்றியில் விழும் அழகும், அதை தலையை உலுப்பி பின்னுக்குத் தள்ளும் ஸ்டைலும், கருப்பும் இல்லாமல் வெளுப்பும் இல்லாமல் ஒருவித புதுநிறத்தில், ஊர் எல்லையில் காவலுக்கு நிற்கும் அய்யனார் சாமி போல விறைப்பும் நிமிர்வும் கண்களில் கர்வமும் மாட்டை சொடேர் என்று ஒரு இழுப்பு இழுக்கும் லாவகமும் அவனை பேரழகனாக தான் அடித்திருந்தது. அவனுடைய ஆண்மையின் விரைப்பை அதிகப்படுத்திக் காட்டுவது போல இடுப்பில் அரை டவுசரும் முண்டா பனியனும் கழுத்தில் கருப்பு கயிற்றில் கோர்த்து கட்டியிருக்கும் தாயத்தும் கண்களின் கூர்மையும் அவனை சற்றே முரடனாகத் தான் காட்டியது. கழுத்தைச் சுற்றி போட்டுக் கொண்டிருந்த பிள்ளையார் துண்டு சமயத்தில் தலையில் தலைப்பாகையாகவும் இருக்கும். ஆனால் ஒரு போதும் இடுப்பில் மட்டும் இருந்ததில்லை.

    வண்டிக்குள் சுந்தரலிங்கம் இருக்கவே மாடுகளை ஒரு சொடுக்கு சொடுக்கி விரைவாகவே ஓட்டினான் கதிர். வானத்தில் கிழக்கே கருமேகங்கள் திரண்டு வந்து கொண்டிருந்தது அவர்கள் வண்டி கூடவே.

    என்ன கதிரு, மழை வரும் போல இருக்கே?

    ஆமாங்க. கிழக்கே கருத்து வருது அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே நச்சென்று ஒரு மழைத்துளி அவன் முன்கையில் பட்டுத் தெறித்தது.

    மழை வலுக்கும் முன்னே போய் விடுவோமா?

    போய்டலாம். போய்டலாம் வண்டியை விரைந்து செலுத்த தொடங்கினான் அவன். முன்னே நகர்ந்து குனிந்து மாடுகளை விரட்டிக் கொண்டிருந்தவனின் தோள்களின் வனப்பையும் அவனுடைய வாலிபத்தின் முறுக்கையும் கண்ட சுந்தரம் இவன் வயதில் தான் எப்படி இருந்தோம் என்று யோசித்துப் பார்த்தார்.

    வாலிபத்தின் கடைசி படியில் நின்று கொண்டிருப்பவர் அவர். அடிக்கடி இப்படித் தான் தன்னுடைய வாலிப வயதையும், அந்த வயதிற்குரிய சேட்டைகளும், செல்வாக்கும் செல்வமும் அவரை செய்யத் தூண்டிய விஷயங்களையும், நினைத்துப் பார்த்துக் கொள்வார். வாலிபத்தின் எல்லையில் இருந்த அவர் முதுமையின் முதல்படியில் ஏறாமல் அங்கேயே தேங்கி விட மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்.

    மஞ்சக்கரம்பையில் பரம்பரை பரம்பரையாக வந்த நிலபுலன்கள், சுந்தரலிங்கம் பஸ் சர்விஸ், பண்ணையார் பட்டம், கோவிலில் முதல்மரியாதை, இப்போது ஆண்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியில் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு அந்தஸ்து என்று அவர் வேறு ஒரு லெவலில் வாழ்ந்து கொண்டிருப்பவர். நடுத்தர உயரமும் மினுமினுப்பான கருப்பும், முகத்தில் தொங்கத் தொடங்கியிருந்த சதை கழுத்தில் வடிந்ததினால் தோள்கள் குறுகி அது தொப்பையாக இறங்கியிருந்தது. கழுத்தில் அணிந்திருந்த ஒருபிடி தங்க சங்கிலி அவரை மேலும் குள்ளமாக காட்டியது. நகைகள் உடலில் மட்டுமலாமல் பல்லிலும் இருந்தது. அது அவர் முகத்திற்கு ஒரு திமிர்த்தனத்தை கூட்டியது. இதில் அதற்கேற்றார் போல உடை நடை பாவனைகள். கழுத்திலும் கைகளிலும் மின்னும் நகைகள் என்று அலங்கார ஊர்தியாக நடமாடிக் கொண்டிருப்பவர். பட்டு வேட்டி பட்டு சட்டையில் அத்தரும் ஜவ்வாதும் கலந்த வாசனை மூக்கை முட்டியது. அதுவும் தஞ்சாவூருக்குப் போகும் போது அலங்காரமும் ஆடம்பரமும் சற்று அதிகமாகவே இருக்கும்.

    வண்டி சக்கரம் சாலையில் சிறு

    Enjoying the preview?
    Page 1 of 1