Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saathi Malli Poocharame...
Saathi Malli Poocharame...
Saathi Malli Poocharame...
Ebook141 pages45 minutes

Saathi Malli Poocharame...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தங்கள் காதல் நிறைவேற வேண்டுமென்ற ஆவலில்,ஊரைவிட்டு ஓடிப்போகும் வெவ்வேறு சாதிக் காதலர்களான மாறன்-செல்வியும்.. அவர்களை பிரிக்க நினைத்து பின்தொடரும் செல்வியின் தாய்மாமன் பசுபதி. சென்னையில் வாழ்வதற்காக தஞ்சமடையும் மாறன்-செல்விக்கு தஞ்சமளித்து வேலை கொடுக்கிறார். காண்டக்டர் மணி.கொரோனாவின் தாக்கம் வீரியமடையவே..அரசு ஊரடங்கு அறிவிக்க,வேறுவழியின்றி மாறனும்,செல்வியும் சொந்த ஊருக்கு வருகின்றனர்.அதை கேள்விபட்டு வரும் பசுபதி,மாறனை கொலை செய்ய..செல்வி தனிமரமாகிறாள். அப்போது பள்ளியொன்றில் ஆசிரியையாக பணிபுரியும் செல்விக்கு செழியன்கா காதல்வலை வீச,அவள் மீண்டும் சென்னைக்கு திரும்பும்போது, மாதவனை சந்திக்கிறாள். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அங்கே எதிர்பாராதவிதமாக செழியனும் வேலைக்கு வருகிறான். செழியனை செல்வி எப்படி சமாளித்தாள். ஒருதலையாக செல்வியை விரும்பும் மாதவனின் காதல் நிறைவேறியதா..என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580176310762
Saathi Malli Poocharame...

Read more from V. Ramkumar

Related authors

Related to Saathi Malli Poocharame...

Related ebooks

Reviews for Saathi Malli Poocharame...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saathi Malli Poocharame... - V. Ramkumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாதி மல்லிப் பூச்சரமே...

    Saathi Malli Poocharame...

    Author:

    வெ. இராம்குமார்

    V. Ramkumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-ramkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08

    அத்தியாயம் 09

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 01

    நள்ளிரவு மணி பன்னிரெண்டு...

    கோட்டான்களின் கூவலும், ஆந்தைகளின் அலறலும், சூறைக்காற்றுக்கு அசைந்தாடும் பனைமரங்களின் சத்தமும் பனைகுடி கிராமத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.ஊரை சுற்றியிருந்த வயற்காடுகள் பொட்டல்களாக இருந்தது.ஊரின் ஒதுக்குப்புறத்தில் உப்பளங்களில் பாத்திகட்டி தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் வானிலுள்ள முழுநிலவு தன் அழகு பிம்பத்தின் மூலம் இரவை அழகுகலை நிபுணராக மாறி அழகுபடுத்திக் கொண்டிருந்தது.

    அந்த சமயத்தில்தான் உப்பளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் சலசலக்க ஆரம்பித்தது.

    தூரத்தில் ஒளிபாய்ச்சும் மின்மினிப் பூச்சுகள் ஒரு சேர கூட்டமாக பறந்து வந்து ஊருக்கே ஒளிப்பாய்ச்சுனால் எப்படியிருக்கும்.அதுபோல இருந்தது அந்தக்காட்சி.

    மின்மினிப் பூச்சுகளாக காட்சியளித்த அந்த கூட்டம் சாட்சாத் அந்த கிராமத்து மக்கள்தான்.அவர்கள் கைகளில் இருந்ததோ டார்ச் லைட்டோ, செல்போனிலிருந்து வந்த ஒளியோ அல்ல...தீப்பந்தங்களும், அரிவாள், கத்திகளும்...ஒடிவந்த அனைவரது முகங்களுமே கோபத்தின் கனலும், சாதிவெறியின் உக்கிரமும் தெரிந்தது.அவர்கள் இவ்வளவு ஆக்ரோஷமாக ஒடிவருவது, ஒட்டப்பந்தயத்துக்காக அல்ல...அவர்களுக்கு முன்னே இருநூறு அடிகளுக்கு முன், மனதில் காதலையும், விழிகளில் உயிர்பயத்தையும் சுமந்து கொண்டு ஓடிச் செல்லும் மாறன்-செல்வி காதலர்களின் தடுக்கத்தான்...

    "ஏய்!அந்த இரண்டு நாய்களையும் விட்டுடக் கூடாது.என்ன திமிரிருந்தா, சாதிவிட்டு சாதி மாறி காதலிச்சு, வஞ்சகமா திட்டம்போட்டு என் முறைப் பொண்ணு செல்வியை கூட்டிட்டு ஊரைவிட்டே ஒடுவான்.அவனை பிடிச்சு என் கையால வெட்டி கூறுபோட்டால்தான் என் வெறி அடங்கும்.கர்ஜித்தான் செல்வியின் கோபக்கார தாய்மாமன் பசுபதி.

    ஒடிக் கொண்டிருந்த இளஞ் ஜோடிகளை நோக்கி கையிலிருந்த அரிவாள்களையும், கீழே கிடந்த கற்களையும் நோக்கி கூட்டத்தினர் எறிந்தார்கள்.

    மாறன்!என்னால வேகமா ஒட முடியலைடா.இந்த சாதிவெறியும், அறியாமையும் இவங்ககிட்டே இருக்கற வரைக்கும், நம்மளை இவங்க வாழ விடாம, இப்படித்தான் துரத்திட்டு இருப்பாங்க.

    செல்வி!இன்னும் கொஞ்ச தூரம்தான்...கூட்டுச்சாலை வந்திடும்.அங்கே போய்ட்டா, தொடர்ந்து பஸ்சுங்க வரும்.அங்கே வர்ற சென்னை பஸ்ல ஏறிட்டா போதும்.ஈஸியா தப்பிச்சுடலாம்.ஒடியபடியே மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியபடியே சொன்னான் மாறன்.

    செல்வியால் மாறனுக்கு ஈடுகொடுத்து வேகமாக ஒட முடியவில்லை.தடுக்கி விழுந்தாள்.

    பள்ளி, கல்லூரிகள்ல நடந்த பல ஒட்டப்பந்தய போட்டிகள்ல ஒடி பரிசு வாங்கியிருக்கே.இப்போ தடுமாறினால், எப்படி செல்வி...கொஞ்ச நேரம்தான்.

    முடியலைடா...பேசாம, நம்ம ஊர்க்காரங்ககிட்டேயே சரணடைஞ்சு, பேச்சு வார்த்தை நடத்திடலாம்.

    ஊர்க்காரங்க நம்மளை நெருங்கிட்டாங்க...ஒடிவா செல்வி.நாம சரணடைஞ்சா, நம்மளை இந்த ஊர் வாழ வைக்கும்ன்னு நினைக்கறீயா அல்லது ஊர்க்காரங்களே மன்னிச்சு விட்டாலும், உன் தாய்மாமன் பசுபதிதான் நம்மளை வாழவிடுவானா, இது நம்ம உயிர் சம்பந்தபட்ட விஷயமில்லை செல்வி...வாழ்க்கை சம்பந்தபட்ட விஷயம்.நாம வாழணும்.சாதிவெறி பிடிச்ச இந்த ஊர்க்காரங்களுக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும்.

    அப்போது கூட்டுச்சாலை வர, பசுபதிக்கு சற்று நிம்மதி வந்தது.கூட்டுச்சாலை பகுதியானது அந்த நடுநிசி வேளையிலும் மக்கள் நடமாட்டங்களால் நிறைந்திருந்தது.

    அந்த சமயத்தில் ஒரு ஆட்டோ வரவே...நிறுத்தும்படி சைகை செய்தான் பசுபதி.அவர்கள் முன் நின்றது ஆட்டோ.ஆட்டோ டிரைவர் உயிர்பயத்தில் ஒடி வந்து கொண்டிருக்கும் இருவரையும், அவர்கள் பின்னால் துரத்தி வந்த ஊர்க்காரர்களையும் மாறி மாறி பார்த்துவிட்டு, முதல்ல, ஏறுங்க.அப்புறமா, பேசிக்கலாம்.என கூறிவிட்டு அவர்களை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தான்.

    ச்சே!கொஞ்ச நேரத்துல தப்பிச்சுட்டாங்களே...கோபத்தில் அருகிலிருந்த மைல்கல்லை எட்டி உதைத்தான்.

    சலிச்சுக்காதே, பசுபதி.அந்த சிறுக்கியும், அந்த நாதாரியும் எங்கே போயிடப் போறாங்க.மதுரை, திருச்சி, சென்னை இந்த ஊர்களை தவிர எங்கேயுமே போயிட முடியாது.அங்கெயெல்லாம் நம்ம உறவுக்காரனுங்களும், சாதிக்காரனுங்களும் அதிகமா இருக்கானுங்க.இவய்ங்க, நம்மாளுங்களோட யார் கண்ணுல மாட்டினாலும் சமாதிதான்டா மாப்ளே.ஊர்க்காரர் ஒருவர் பசுபதிக்கு ஆறுதல் வார்த்தை சொல்லவும்,

    வெறிபிடித்த வேங்கையாக, அடிபட்ட புலியாக நின்று கொண்டிருந்தான் பசுபதி.மாமா!என் முறைப் பொண்ணை கூட்டிட்டு ஒடின அந்த மாறனை கொன்னுட்டுதான் நான் இனி இந்த ஊருக்குள்ளேயே காலெடுத்து வைப்பேன்.அதுக்கு முன்னாடி, நம்ம சாதிக்காரங்களையும், உறவுக்காரங்களையும், கூட்டிட்டுப்போய் அந்த மாறனுடைய சாதிகாரனுங்க வீட்லயெல்லாம் கொளுத்துங்க.நம்ம சாதியோட திமிரு என்னங்கறதை அவனுங்க பார்க்கணும்.இதை பார்த்த பிறகு, எந்த சாதிக்காரனுக்குமே நம்ம சாதி பொண்ணுங்களை காதலிச்சு வாழணும்ங்கற ஆசை மட்டுமல்ல...ஏறெடுத்து பார்க்கற ஆசையுமே வரக்கூடாது.கர்ஜித்தான் பசுபதி.

    அதெல்லாம் நாங்க.பார்த்துக்கறோம் பங்காளி.நீ யும் எங்க கூடவே வந்திடு.இதுங்களுக்காக நீ ஏன் ஊருக்குள்ள வரமாட்டேன்னு சொல்றே?

    பங்காளி!இப்படியே நான் ஊருக்குள்ள வந்தா, எவனுமே என்னை மதிக்கமாட்டான்.நானே என் முறைப் பொண்ணை கூட்டிக் கொடுத்து டாட்டா காட்டி வழியனுப்பி வெச்சது மாதிரி பேச ஆரம்பிச்சிடுவானுங்க.நான் வரலை.நீங்க கிளம்புங்க...நாளை காலையில, ஒடிப்போன மாறனுடைய சாதிக்காரனுவ ஏரியாவே தீப்பத்தி எரியற தகவல் மட்டும்தான் எனக்கு வரணும்...புரிஞ்சுதா?

    பசுபதியோடு காதல்ஜோடிகளை விரட்டி வந்த உறவுக்காரர்களும், ஊர்க்காரர்களும் இப்போது பசுபதியை ஊரைவிட்டு வழியனுப்பும் இக்கட்டான வேதனை நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள்.

    அவங்களைப் பற்றி எந்த தகவல் கிடைச்சாலும் சரி, எனக்கு தெரியாமல், நம்ம ஊருக்குள் வந்தாலும் சரி...உடனே எனக்கு தகவல் சொல்லுங்க.குறிப்பா, நான் அவளோடு இந்த ஊருக்குள்ள வரும்போது, மாறனுடைய குடும்பத்துல ஒரு பயலுமே உயிரோட இருக்கக் கூடாது...சரியா?

    அதைப்பற்றியெல்லாம் நீ கவலைப்படாதேப்பா.எல்லாத்தையுமே நாங்க பார்த்துக்கறோம். என்றார் ஊர் பெருசு ஒருவர்.

    அப்போது தூரத்தில் கன்னியாகுமரி விரைவுப் பேரூந்து ஒன்று வரவே...நிறுத்த கூறி கையைக் காட்டினான் பசுபதி.

    அவனை தடுத்த உறவுக்காரன் ஒருவன்.வேணாம் பங்காளி...எனக்கு தெரிஞ்சு அவன் பஸ்ஸ்டாண்டுக்குதான் போயிருப்பான்.நீ பஸ் ஸ்டாண்டுக்கு போ.ஒருவேளை அங்கேயிருந்தா, அதுங்களை அங்கேயே வெட்டி பொலி போட்டிடு.

    நீ சொல்றதுதான் சரி பங்காளி.வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்திய ஊர்க்காரர் ஒருவர், பசுபதியை ஏற சொன்னார்.

    ஆட்டோவில் ஏறிய பசுபதி அனைவருக்கும் கையசைத்து விடைபெற்றான்.

    "எங்கே சார், போகணும்?

    பஸ்டாண்டுக்கு போ.என்றான்.

    என்ன சார்!லவ்வர்ஸா...ஊரைவிட்டு ஒடிட்டிருக்கீங்களா?ஆட்டோ டிரைவர் கேட்கவும்,

    ஆமாம்...எப்படி கண்டுபிடிச்சீங்க?பதட்டத்தோடு கேட்டான் மாறன்.

    அதான் முகத்துல உயிர்ப்பயமே காட்டி கொடுக்குதே...சரி, இப்ப எங்கே போகணும்?

    பஸ் ஸ்டாண்டுக்கு போப்பா...

    மாட்டிக்குவீங்க சார்...இந்நேரம் ஊர்க்காரங்களும் ஆட்டோவை பிடிச்சு பஸ் ஸ்டாண்டுக்குதான் வந்துட்டிருப்பாங்க.அதனால ரிஸ்க் அதிகம்.அதே நேரத்துல பைபாஸ்ல வர்ற எந்த பஸ்சுகளுமே இந்த இடத்துல, இந்த நேரத்துல நிறுத்தமாட்டாங்க.தேவையில்லாம நீங்க ரிஸ்க் எடுக்க வேணாம்ன்னு தோணுது.

    மாறனும், செல்வியும் மிரட்சியுடன் ஒருவரையொருவர் பார்க்கவும்,

    "ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1