Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pappa... Mamma... Cuckoo!
Pappa... Mamma... Cuckoo!
Pappa... Mamma... Cuckoo!
Ebook142 pages42 minutes

Pappa... Mamma... Cuckoo!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தந்தை இறந்ததற்காக மும்பையிலிருந்து சென்னை வந்து, மனநலம் பாதிக்கபட்ட தாயுடன் புதிய வேலையில்ஙசேர வேலூர் வருகிறான்; கொல்கத்தா தம்பதியினர் தங்களது மனநலம் பாதித்த மகளுக்கு சிகிச்சைக்காக வேலூர் வர; மனநலம் பாதிக்கபட்டவர்களையும், வயதான பிச்சைகாரர்களையும் கடத்தி உடலுறுப்புகளை திருடும் ஒரு கும்பல்; மனநலம் பாதித்தவர்களை மீட்டெடுத்து காப்பகத்தில் சேர்க்க துடிக்கும் தன்னார்வலரும், சமூக சேவை அமைப்பு தலைவியும். நாயகனை ஒருதலையாக காதலிக்கும் காதலி; 17 வயது மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை கற்பழிக்க துடிக்குத் ஆட்டோகாரர்கள் இவர்கள் அனைவருமே ஒரு இரவின் மையப்புள்ளியில் இணைந்தால் எப்படியிருக்கும் என்பதை விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருப்பதே, இந்த நாவல்!

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580176310764
Pappa... Mamma... Cuckoo!

Read more from V. Ramkumar

Related authors

Related to Pappa... Mamma... Cuckoo!

Related ebooks

Reviews for Pappa... Mamma... Cuckoo!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pappa... Mamma... Cuckoo! - V. Ramkumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பப்பா... மம்மா... குக்கூ!

    Pappa... Mamma... Cuckoo!

    Author:

    வெ. இராம்குமார்

    V. Ramkumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-ramkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08

    அத்தியாயம் 09

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 01

    மும்பை சத்ரபதி சிவாஜி இன்டர்நேஷனல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது...விண்ணில் மேகக் கூட்டங்களுக்குள் காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாக சென்ற விமானமானது,வாழ்க்கையில் வரும் இன்னல்களையும்,தடைகளையும் உடைத்துக் கொண்டு முன்னேறு எனும் அரிய வாழ்க்கை தத்துவத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.வானுக்கு பெரும்புள்ளியாக காட்சியளித்த விமானம் ஏனோ,பூலோக மனிதர்களுக்கு சின்னஞ் சிறு புள்ளியாகவே தெரிகிறது. சில நேரங்களில் பிரபலமான மனிதர்களும், உயரத்தில் இருப்பவர்களுக்கு பிரமாண்டமாக தெரிந்தாலும்,கீழேயிருந்து அண்ணாந்து பார்ப்பவர்களுக்கு கண்ணுக்கு முழுமையாக புலப்படாத விமானம் போலவே புரியாத புதிராக காட்சியளிக்கிறார்கள்...ஒரு விதத்தில் விமானமும் மனிதர்களும் ஒன்றுதான்;தாங்கள் சேர வேண்டிய இடம் வந்ததும்,இறங்கியவுடன் பத்திரமாக கரை சேர்த்த விமானத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை;உதவி செய்யும் நல்லவர்களை தன் தேவைக்கு உபயோகித்துவிட்டு,தேவை தீர்ந்ததும்,திரும்பி கூட பார்ப்பதில்லை,சுயநல மனிதர்கள்...

    உயரத்தில் குட்டிப் பறவையாக காட்சியளித்த விமானம் தரையில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க இறங்க பிரமாண்ட அவதார் பறவையாக காட்சி தந்தது.ரன்வேயில் இறங்கி வேகமாக ஒட ஆரம்பித்ததும்,விமானத்துக்குள் ஏர்கோஸ்டர்ஸின் அறிவிப்புகள் முன்னெச்சரிக்கை மணியாக அலாரமிட ஆரம்பித்தன.பயணிகள் தங்களது சீட் பெல்ட்டை கழட்ட வேண்டாம்;யாரும் விமானத்தில் எழுந்து நிற்கவோ,நடக்கவோ வேண்டாம் போன்ற ஆங்கில அறிவிப்புகள் அபாய சங்கொலியாக முழங்க ஆரம்பிக்க...அவற்றையெல்லாம் பிசினஸ் க்ளாஸில் இருந்த பயணிகளோ,எக்கனாமிக் வகுப்பில் பயணம் செய்த பயணிகளோ கடைபிடிப்பதுபோல தெரியவில்லை.அதுவரை வெளிநாட்டு பயணிகள் போல ஜென்டிலாக காட்சியளித்தவர்கள் கூட,சென்னையில் விமானம் தரையிறங்கியதும்,பக்கா லோக்கலான தமிழர்களாக மாறியிருந்தனர்.

    நிறுத்தபட்ட விமானம்,தன்னையும்,விமானத்தில் பயணம் செய்த பயணிகளையும் சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்தும் விதமாக ஒய்வளித்துக் கொண்டிருந்தது.விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு,இறங்குவதற்கு ஏணிகள் பொருத்தப்பட்டதுதான் தாமதம்...காசிமேட்டில் புதிதாக திறக்கப்பட்ட மீன் சந்தைக்கு மீன் வாங்குவதைப் போல,திபு திபுவென முண்டியடித்துக் கொண்டு இறங்க ஆரம்பித்தார்கள்.சிலரோ,மற்றவர்கள் இறங்கும்வரை பயண இருக்கையிலிருந்து கூட எழாமல்,பொறுமை காக்க...வயதான நோயாளிகள்,ஊனமுற்றோர்கள் பணியாளர்களின் உதவிக்காக காத்திருந்தனர்.

    இப்போது விமானத்துக்குள் பயணிகளின் கூட்டம் குறைந்திருந்தது.அதுவரை மௌனமாகயிருந்த பிரகாஷ்,எழுந்து தனது கணிணி பேக்கை எடுத்து,முதுகில் மாட்டியவன்,மெதுவாக நடந்து வந்தான்.அவனின் கண்கள் கலங்கியிருந்தது.இருபத்தெட்டு வயதான பிரகாஷின் அழகும்.தோற்றமும் சினிமாவின் அழகிய இளைய தலைமுறை நடிகர்களை நினைவுபடுத்தும் விதத்தில் இருப்பதற்கான ஒரே அடையாள சாட்சி...அவனை எப்பேர்பட்ட இளம் பெண்ணாக இருந்தாலும்,நடுத்தர வயது ஆன்ட்டியாக இருந்தாலும்,ஒருமுறை அவனை லுக்விட்டு ரசிக்காமல் செல்லமாட்டார்கள்.அப்படிபட்ட அழகிருந்தும்,இப்போது அவன் அழுது,சோகம் வழியும் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் போலவே இருந்தான்.விமான நிலையத்தை விட்டு,வெளியேற வேகமாக நடந்தவனின் இதயத்துடிப்பு அதிகமாகத் துடிக்க ஆரம்பித்தது.சுற்றி நடப்பவைகளை கவனிக்காமல்,கடிவாளம் கட்டிய குதிரையைப் போல,நேர்கொண்ட பார்வையுடன் நடந்தான்.எக்ஸிட் வழியை நெருங்கியவனை,கஸ்டம்ஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.அவனது பதட்டம்,படபடப்பான வேகத்தைக் கண்டு..."மிஸ்டர்!பேக்கை கொடு?

    பேக்கை கொடுத்தான்.

    சோதனையிட்ட அதிகாரியோ,அதான் பேக்ல ஒண்ணுமேயில்லையே...பிறகு எதற்கு இவ்வளவு டென்ஷனா.வர்றே?"என கேட்கவும்,

    அதுவரை லாக்டவுண் மோடிலிருந்த அழுகையானது,ஊரடங்கு தளர்வு அறிவிப்பு போல,தொண்டையிலிருந்து விம்மி வெடித்து அழுகையாக சிதறியது...

    அதிகாரிகள் செய்வதறியாமல் அதிர்ந்து போய் நின்றார்கள்...என்னப்பா ஆச்சு,பதட்டப்படாமல் சொல்லு?

    என் அப்பா காலைல ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார் சார்.மீண்டும் அழுதான்.

    ஓ மை காட்!என்றார் அதிகாரி.வாட் ய பிட்டி...நீ கிளம்புப்பா.என்றார்.

    தேங்க்ஸ் சார்.

    விமான நிலையத்தைவிட்டு வெளியேறியவன்,தனியார் டாக்ஸியின் பிக்கப் பாயிண்ட்டுக்கு சென்று பணம் செலுத்தி டாக்ஸியை புக் செய்தான்.

    சில நிமிடங்களில் டாக்ஸி வரவே...கிளம்பினான்.வண்டியில் ஏறியதிலிருந்து,புரசைவாக்கம் தானா தெருவிலிருக்கும் தன் வீடு வந்து சேரும்வரை விசும்பியபடியே இருந்தான்.

    டாக்ஸி வீட்டின் முன் நின்றது.

    வீட்டின் முன்பு ஷாமினா மட்டுமே போடப்பட்டிருந்தது.ஒரு சில ஆட்கள் மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள்.வெளியே நின்றபடியே வீட்டினுள் பார்த்தான்.உள்ளே அவனது அப்பாவின் உடல் தரையில் படுக்க வைக்கப் பட்டிருந்தது.அந்தக் காட்சியைப் பார்த்ததுமே அவனையறியாமல்i,உடல் நடு நடுங்க ஆரம்பித்தது.

    அப்போது அவனது தோளில் ஒரு கரம் பற்றியது...திரும்பினான்.

    வா பிரகாஷ்.உனக்காகத்தான் காத்திட்டிருந்தோம்.

    பாலு அங்கிள்!அப்பாவுக்கு என்ன ஆச்சு...நேற்று என் கூட,போன்ல நல்லா பேசினாரே...

    விடியற் காலையில,தூங்கும்போதே ஹார்ட் அட்டாக் வந்து உயிர் பிரிஞ்சிருக்கு பிரகாஷ்.காலையில நான்தான் வீட்லபோய் யதேச்சையா பார்த்தேன்.

    "அப்போ அம்மா என்ன பண்ணிட்டு இருந்தாங்க அங்கிள்?

    வழக்கம்போல,சுயநினைவில்லாமல் தூங்கிட்டிருந்தாங்கப்பா...இனி,நடந்ததை பற்றி பேசி பயனில்லை.நடக்கப் போறதை பார்க்கலாம்.நீ எதற்கும் டென்ஷனாகாதே...இறுதிச் சடங்கு வேலைகளையெல்லாம் நானே பார்த்துக்கறேன்.அஞ்சு மணிக்கு பாடியை எடுத்திடலாம்.முதல்ல,நீ உள்ளே போப்பா.

    "அவர் பேசியதை எதுவுமே காதில் வாங்கிக் கொள்ளாமல்,உள்ளே சென்றான்.தனது தந்தையின் பூத உடலைப் பார்த்ததும்,மண்டியிட்டு அழ ஆரம்பித்தான்.

    அப்போது கல கலவென சிரிப்பொலி கேட்கவே...

    மெதுவாக திரும்பிப் பார்த்தான்.அது அவனது தாய் பார்வதி.தனது கணவர் இறந்தது கூட தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.இப்போது புதிதாக மகனை பார்த்ததும்,குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

    தனது தாயின் அருகே வந்தவன்,அம்மா!அப்பா நம்மை விட்டு போயிட்டாரும்மா...என அழுதபடி கூறினான்.

    அதுவரை அழுது கொண்டிருந்தவள்,அழுகையை நிறுத்திவிட்டு,கணவனின் உடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அதைப் பார்த்ததும் கண்கலங்கியவன்,அம்மா!மனசுவிட்டு அழுங்கம்மா...அழுங்க...உங்க கூட முப்பது வருஷமா வாழ்ந்தவரும்மா...அப்பாம்மா...என கூறியபடியே தன் தாயை கட்டிப்பிடித்து அழுதான்.

    அப்போது உள்ளே வந்த பாலு,"பிரகாஷ்!முதல்ல,நீயும்,அம்மாவும் சாப்பிடுங்க.என்றபடி வாங்கி வந்த டிபன் பார்சலை நீட்டினார்.

    வேண்டாம் என்பது போல தலையாட்டினான் பிரகாஷ்.

    நீ சாப்பிடலைன்னாலும் பரவாயில்லை பிரகாஷ்.முதல்ல அம்மாவுக்கு கொடு.அவங்க பசிதாங்கமாட்டாங்க.

    பார்சலை வாங்கியவன்,பிரித்தான்.பின்,தன் தாய்க்கு இட்லியை ஊட்ட ஆரம்பித்தான்.பார்வதியும் சாப்பிட்டாள்.

    "கடவுளே!இனி,எங்கம்மாவை நான் மட்டும் எப்படி சமாளிச்சு காப்பாத்தப் போகிறேன்?என தனக்குள்ளேயே பேசிக் கொண்டான்.இப்போது வெறித்து பார்த்தபடியிருந்த தன் தாயை பார்த்ததும் மிரட்சியானான்.உடனே எழுந்து சென்று தன் தந்தையின் மேஜையை துழாவினான்.அதில்,தாய்க்கு கொடுக்கப்பட வேண்டிய மாத்திரைகள் இருந்தது.தேடி

    Enjoying the preview?
    Page 1 of 1