Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ayngaran...!
Ayngaran...!
Ayngaran...!
Ebook159 pages1 hour

Ayngaran...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இத்தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகள் ஒவ்வொன்றும் பெண்களின் நிலை குறித்து பேசுகின்றன. காதல், கோபம், வருத்தம், குழப்பம், கருணை, சுயநலம், வெறுப்பு என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கியது.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580144708517
Ayngaran...!

Read more from Ilamathi Padma

Related to Ayngaran...!

Related ebooks

Reviews for Ayngaran...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ayngaran...! - Ilamathi Padma

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஐய்ங்கரன்...!

    Ayngaran...!

    Author:

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இருளில் பெருஞ்சுடராய்…!

    2. துணை...!

    3. அம்மா…!

    4. வசந்த வாசமாய்…!

    5. அஸ்தமனத்தில் ஒரு விடியல்!

    6. மனதோடு ஒரு யுத்தம்…!

    7. ஐய்ங்கரன்…!

    8. தவறுகள் திருத்தப்பட வேண்டும்…!

    9. சூதும் வெல்லும்!

    10. காதலாய்….!

    11. மனைவியின் குழந்தை…!

    12. வெஞ்சினம்!

    1. இருளில் பெருஞ்சுடராய்…!

    கன மழைக்குப் பின் சுள்ளென்று அடிக்கும் மஞ்சள் வெயில் அன்றலர்ந்த மலராய் பொலிவுடன் இருப்பது போல் தோன்றியது. விட்டு விட்டு பெய்யும் மழைக்குப் பின் வரும் வெயிலில் இத்தனை அழகு இருப்பதில்லை. இரண்டு நாட்கள் விடாமல் பெய்த மழையில் டிரையரில் போட்டிருந்த துணிகளை அள்ளிக் கொண்டு மாடியேறினாள் பவித்ரா. ஒவ்வொருத் துணியையும் உதறி உலர்த்தினாள். கீழே விழாதபடி கிளிப்களை சொருகினாள். அழைப்பு மணியின் சத்தம் கேட்டு அவசரமாய் கீழே இறங்கி வாசலை நோக்கி விரைந்தாள்.

    வாசலில் நின்றிருந்த அப்பாவைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளலோடு வாங்கப்பா... என்றபடி கிரில் கேட்டை திறந்தாள்.

    "எப்படி மா இருக்கே...?

    "நல்லா இருக்கேன் பா... அம்மா வரலையா...?

    இல்லை மா. ராஜிக்கு நிறைமாசம் விட்டுட்டு வர முடியுமா சொல்லு. மாப்பிள்ளை உன்னை அன்பா... நடத்துறாரா...

    தொந்தரவு செய்யாமல் இருப்பது கூட அன்புதானே பா... சமைச்சுக் கொடுப்பதை குறை சொல்லாமல் சாப்பிடுவார். வீட்டுக்குத் தேவையானதை மொத்தமா வாங்கிப் போட்ருவார். பசும்பால் வாசலுக்கே வந்துடும் பா. என்ன ஒன்னு... தனியா இருப்பதுதான் கஷ்டமா இருக்கு. காலையில் போனால் ராத்திரி எட்டு மணிக்குத்தான் வருவார். அதுவரை வெட்டு வெட்டுனு உட்கார முடியலை.

    வந்து பத்துநாள்தானே ஆச்சு பழகிடும் மா. மாமியாரை கூப்பிட்டு வச்சுக்கோ. கூடமாட ஒத்தாசையா இருப்பாங்க. அதோடு பேச்சுத் துணைக்கும் ஒருவர் இருப்பது போல் இருக்குமே...

    ஒரு மாசம் கழிச்சு வரேனாங்கப்பா. நீங்க போய்க் குளிச்சுட்டு வாங்கப்பா சாப்பிடலாம்! என்றபடி பவித்ரா கிச்சனுக்குள் நுழைய, பாஸ்கரன் குளிக்கப் போனார். பத்தே நாட்களில் நடந்து முடிந்த தன் மகளின் திருமணம் பெரும் வியப்பை அளித்தது. டிகிரி முடித்த கையோடு தேடி வந்த வரன் மனசுக்கு திருப்தியளிக்க மள மளவென்று காரியத்தில் இறங்கினார். கொஞ்சம் நிதானமாய் செய்யலாமே... என்ற மனைவியை அடக்கினார். "நல்ல படிப்பு கைநிறைய சம்பளம், நல்ல குடும்பம் விசாரிச்சுட்டேன் கோமதி நீ கவலைப்படாதே நான் பார்த்துக்கிறேன். உன் தம்பி பேச்சைக் கேட்டு பெரிய குடும்பத்தில் ராஜியைக் கொடுத்தோம். என்ன ஆச்சு... அச்சு பிச்சுனு எப்பவும் சண்டை.! என்றதும் கோமதி மேற்கொண்டு பேசவில்லை.

    சாப்பிட அமர்ந்த பாஸ்கரனிடம்... வீட்டை கண்டுபிடிக்கிறது கஷ்டமா இருந்துச்சாப்பா… என்று கேட்டாள்

    மாப்பிள்ளை விவரமா சொன்னதால் கஷ்டம் தெரியலை. நேத்து போன் செய்தேன் நீ தூங்கிட்டேனு சொன்னார். எட்டு மணிக்கே தூங்கிடுவியா மா?

    ஆமா பா. இவர் ராத்திரி பன்னிரண்டு மணிவரை கம்யூட்டரை விட்டு நகர மாட்டார். எனக்கு போரடிக்கும் தூங்கிடுவேன் என்றதும் மகளை ஏறிட்டுப் பார்த்தார். மனசுக்குள் ஏதோ ஒன்று நெருடியது. திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லையே அதற்குள்.... மகள் பேசுவது முரணாகத் தெரிந்தது. மனசுக்குள் பல கேள்விகள் அலையலையாய் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்க... மெளனமாக சாப்பிட்டார் மூன்று தோசைக்கு மேல் இறங்கவில்லை.

    மதியம் மாப்பிள்ளை வருவாரா மா...

    இல்லை பா. ஆபீஸ் கேன்டீனில் சாப்பிடுவார்

    அட டா... தப்பு மா. நீ கையில் கொடுத்தனுப்ப வேண்டாமா...

    இரண்டு நாள் தொடர்ந்து செய்தேன் பா. சிரமப்படாதேனு சொல்லிட்டார். எடுத்துட்டுப் போகலை பா.

    பவி... சந்தோசமா இருக்கிய டா...? கேட்கும் போதே பாஸ்கரனின் குரல் உடைந்தது.

    அப்பா ஆஆஆ... ஏன் பா... சந்தோசமா இருக்கேன் பா.

    இல்லை டா... அவசரப்பட்டுட்டோமோனு உறுத்தலா இருக்கு டா. என்ற பாஸ்கரன் கண்கலங்கி நிற்க...

    நீங்க வருத்தப்படும்படி ஒன்னும் இல்லை பா. ஏன் வருத்தப்படுறீங்க... என்று அப்பாவை சமாதானப்படுத்தினாள். மனசுக்குள் கெளதமன் வந்து போனான். கல்யாணமான முதல் நாளே... என் அம்மாவிற்காகத்தான் இந்தக் கல்யாணம்! புரிஞ்சுதா...?! என்னை எந்த வித்த்திலும் கட்டுப்படுத்தக் கூடாது." என்ற போது புரியாமல் திகைத்துப் போய் நின்றது நினைவிற்கு வந்தது. எதையும் வெளிக்காட்டாமல் புன்னகையுடன்...

    உங்க மாப்பிள்ளை கொஞ்சம் ரிசர்வ் டைப் பா. மத்தபடி நல்லவர் பா. கலகலப்பா பேசத் தெரியாது. அவர் உண்டு அவர் வேலையுண்டுனு இருப்பார். மத்தபடி எனக்கு எந்தக் குறையும் இல்லை பா.

    எப்படியோ... நீ சந்தோசமா இருந்தால் போதும் மா. என்ற பாஸ்கரன் தன் மகள் கண்களில் ஒரு கலக்கம் தெரிவதை கவனித்தார்.

    ஐயோ... அப்பா... நீங்க பேசியதுதான் என்னை கலங்க வச்சுதே தவிர வேற ஒரு விசயமும் இல்லை பா. என்றபடி டைனிங் டேபிளை சுத்தப்படுத்தினாள். தனித்தனி அறைகளில் அவரவர் தனித்திருக்கிறோம் என்பது தெரிந்தால்... அப்பா உடைந்து போவார். ஏன்... ஏன்... ஏன்... என்ற தன் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல்தான் வாழ்கிறேன் என்பது அப்பாவிடம் சொல்ல முடியாது. காலப் போக்கில் எல்லாம் சரியாகி விடும். தேவையில்லாமல் அவரை சங்கடப்படுத்தக் கூடாது என்று கவனமாக இருந்தாள் பவித்ரா.

    இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பிய கெளதம் மாமனாரைப் பார்த்து சன்னமான சிரித்து விட்டு அறைக்குள் சென்றவன், குளித்து உடை மாற்றி ஃபிரஷ்சாக வந்தான். சமையலறையில் இருந்த பவித்ராவை பின்புறமாய் சென்று அணைத்தான். திகைத்து நின்ற பவித்ராவின் காதுகளில்... உங்கப்பா என்னை வில்லனைப் போல் பார்க்கிறார். அதற்காகத்தான் இந்த அணைப்பு. தேவையில்லாம் பஞ்சாயத்தைக் கூட்டக் கூடாதல்லவா... உன் அறையை அவருக்குக் கொடுத்துடு. என் அறைக்கு வந்துடு. என்ற கிசுகிசுத்து விட்டு, பவித்ராவை முன்பக்கமாக திருப்பியவாறு, பவித்ராவின் கண்களைப் பார்த்து, உன் ஏக்கத்தை இன்னிக்குத் தீர்த்துடுறேன்." என்றபடி வெளியேற, பயம் கலந்த பதட்டம் பவித்ராவைத் தொற்றிக் கொள்ள, விரைவாக கணவனைப் பின் தொடர்ந்தாள்.

    குடிச்சிருக்கீங்களா...? மெல்லிய குரலில் கேட்டாள்.

    புத்திசாலிதான்! கண்டுபிடிச்சுட்டியா...? என்று சத்தமாய் சிரித்த கெளதமன், ஆமாம்...! வா டின்னர் சாப்பிடலாம். உங்கப்பா காத்திருக்கார் என்றபடி டைனிங் ஹாலுக்கு விரைந்த கணவனை இழுத்து பிடித்து நிறுத்தினாள். தேவையில்லாமல் பேசாதீங்க. எங்கப்பா வருத்தப்படுவார். நீங்க குடிப்பீங்கனு அவருக்குத் தெரிய வேண்டாம்.

    ஏன்... அவர் குடிச்சதே இல்லையா... ஓவரா பில்டப் பண்ணாதே. என்றபடி மாமனாரின் எதிரில் போய் அமர்ந்தான். "வீட்டில் எல்லோரும் செளக்கியமா மாமா...? என்ற நல விசாரிப்போடு, சமையல் அறையிலிருந்து பெட்ரூம் வரை உங்கப் பெண் வைத்ததுதான் சட்டம்! என்ற போது, பாஸ்கரன் மகளைப் பார்க்க, பவித்ரா கெளதமை முறைத்தாள்.

    "மாமா... எட்டு மணிக்கெல்லாம் தூங்கிடுறா... தூக்கத்தில் கும்பகர்ணிதான் எழுப்பவே முடியாது. இன்னும் உங்கள் பெண்ணாகத்தான் இருக்காள். என் மனைவி என்ற ஃபார்முக்கே வரலை! என்ற போது பவித்ரா விக்கித்துப் போனாள். என்ன அழகானப் பொய்...?! எப்படி இப்படி சரளமாக பேச முடிகிறது.

    "என்னம்மா இது...?! மாப்பிள்ளைக் குறை பட்டுக்கற மாதிரியா நடந்துக்கிறது என்ற பாஸ்கரன், மாப்பிள்ளை சின்னப் பெண்தானே போகப் போக சரியாய்டும்! என்றவர், நீயும் உட்கார்ந்து சாப்பிடு மா என்றார் குரலில் உற்சாகம்! ஆக தான் நினைத்தபடி எந்தப் பூசலுமில்லை என்று மனசுக்குள் குதூகலித்தார்.

    வேலைகளை முடித்து விட்டு, வேகமாக உள்ளே வந்த பவித்ராவை ஏறிட்டுப் பார்த்தான். என்ன.. என்று புருவத்தை உயர்த்தி ஜாடையில் கேட்டான். சுறு சுறுவென வந்த கோபத்தை அடக்கியவாறு பேசினாள்.

    உங்க தங்கை ஒரு கெட்டப்பழக்கமும் இல்லேனு சொன்னாளே...

    எப்பவாச்சும் ஆபீஸ் பார்ட்டியில் குடிப்பது கெட்டப் பழக்கமா... டென்சன் அதிகமானால் ஒரு சிகரெட் அடிப்பேன். இதையெல்லாம் பெரிசு படுத்தாதே.

    அவ்வளவுதானா... வேற ஏதாச்சும் இருக்கா...?

    ஹேய்... ஜஸ்ட் ஒன்ஸ் எப்பவாச்சும்தான்!

    ஓ... ஜஸ்ட் ஒன்ஸ்... ஐஸ்ட் ஒன்ஸ் என்று இன்னும் என்னவெல்லாம் இருக்குனு இப்பவே சொல்லிடுங்க.!

    வேற ஒன்னும் இல்லை! இனிமேல்தான் பழகனும்! என்று கண் சிமிட்டியவாறு ஆர் யூ ரெடி... என்ற போது பலமிழந்தாள். பார்வையை திசை திருப்பினாள். சரி சரி... வந்து கட்டிக்கோ வா. எத்தனை நாள்தான் உன்னை இப்படியே விட்டு வைப்பது...?

    உங்கள் பேச்சு செய்கை எதுவும் பிடிக்கலை! நமக்கு திருமணமாகி ஒரு மாசமாச்சு. உங்க நிழல் கூட என்மேல் பட்டதில்லை. குடி போதையில் உளறாமல் சத்தமில்லாமல் படுங்க. காலையில் பேசலாம்.

    வாடினா... என்று வலுக்கட்டாயமாக பவித்ராவை அணைக்க, திமிறினாள். ச்சீய்... குடிச்சுட்டு பலவந்தப்படுத்துறீங்களே... வெட்கமாக இல்லையா…?" என்றபடி தன்னை விடுவித்துக் கொண்ட பவித்ரா

    Enjoying the preview?
    Page 1 of 1