Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhaiyodu Oru Naal!
Mazhaiyodu Oru Naal!
Mazhaiyodu Oru Naal!
Ebook90 pages36 minutes

Mazhaiyodu Oru Naal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூல் இரண்டு குறும்புதினங்களை உள்ளடக்கியது.

முதல் கதையான சரளி வரிசையின் நாயகன் ஒரு விபத்தில் காலை இழந்ததோடு காதலையும் இழக்கிறான். வீட்டாரன் வற்புறுத்தலுக்காக விருப்பமின்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவளோடு இவனது வாழ்க்கைப் பயணமே கதை!

இரண்டாவது கதையான 'மழையோடு ஒரு நாள்' கதையின் நாயகி வெள்ளப்பெருக்கில் ஒரு வீட்டில் தஞ்சமடைகிறாள். அவ்வீட்டிலுள்ள நாதன் என்ற கண் டாக்டரை எதிர்பாராமல் மணக்க நேரிடுகிறது. மனமொத்து வாழ்கிறார்களா... என்பதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580144710727
Mazhaiyodu Oru Naal!

Read more from Ilamathi Padma

Related to Mazhaiyodu Oru Naal!

Related ebooks

Reviews for Mazhaiyodu Oru Naal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhaiyodu Oru Naal! - Ilamathi Padma

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மழையோடு ஒரு நாள்!

    Mazhaiyodu Oru Naal!

    Author:

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    பொருளடக்கம்

    சரளி வரிசை!

    மழையோடு ஒரு நாள்!

    சரளி வரிசை!

    அந்தகாரம் சூழ்ந்தது போல், அடர்வனத்தில் தனித்து நிற்பது போல், ஒரு தவிப்பும், வெறுமையும் மனதை தாக்க, தன்னை வெளி உலகத்திலிருந்து மறைத்து கொண்டான் விபாகரன். யார் பேச்சுக்கும் செவி சாய்க்கவில்லை.

    ஐந்தாண்டு காதல் நொடிக்குள் முடிந்து விடுமா...?! சுற்றிச் சுற்றி வந்ததும், காதல் மொழி பேசியதும் பொய்யா... காலை இழந்தது ஒரு வலி என்றால், காதலை இழந்தது பெரும் வலி! இழந்தது காதலையா அல்லது காதலியையா...? மனதிற்குள் புலம்பினான். அத்தான் அத்தான் என்று மூச்சுக்கு முன்னூறு முறை அழைத்தவள், மாமன் மகள் மனம் மாறியது எப்படி...? விபத்தில் காலை இழந்தது விதி! காதலியை இழந்த்து சதி! ஆம் சதிதான்! யாரேனும் அவளை உசிப்பி விட்டிருப்பார்கள். இனிமேல் இதைப்பற்றி யோசித்துப் பயனில்லை!

    கால் துண்டிக்கப்பட்டு முற்றிலும் குணமாகி செயற்கை கால் பொருத்தி எழுந்து நடமாட ஓராண்டு ஆகி விட்டது! இந்த ஓராண்டுக்குள் அவளுக்கு மணமாகி குழந்தையும் பெற்று விட்டாள். ஆனால் நான்...? அவளை இழந்த துக்கத்திலும், அவள் செய்த துரோகத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். அம்மா என்னை மீட்கப் போராடுகிறாள். அண்ணன் என்னை கடுமையான வார்த்தைகளில் விளாசுகிறான். திருமணத்திற்கு பெண் பார்த்து பரஸ்பரம் பேச்சு வார்த்தை முடிந்து நிச்சயதார்த்த விழாவிற்கு நாள் குறித்து விட்டார்கள். என் விருப்பமின்மையை பலமுறை முன் வைத்தும் பயனில்லை.

    வரப்போகிறவள் முழு மனதோடு ஏற்பாளா... அல்லது பணக்கார இடம் சுகமாய் வாழலாம் என்று சம்மதித்தாளா... என்றெல்லாம் சிந்தனை தாறுமாறாகப் போகிறது. விபத்தில் அப்பளம் போல் நொறுங்கியது கார் மட்டுமல்ல. தனது காலும்தான் என்றறிந்த போது, அதிர்ச்சியடைந்தான்.இந்த நிலைக்கு உயிர் போயிருக்கலாமே என்று மனசுக்குள் புலம்பினான். அண்ணன் கூடவே இருந்து சகல பணிவிடைகளும் செய்தான். அண்ணி ரம்யாவின் தூண்டுகோலால்தான் அண்ணன் விடாப்பிடியாய் வரன் தேட ஆரம்பித்தான். சாந்தமான, தியாக மனப்பான்மை கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக முன் வைத்து பேசினான். எந்த எதிர்பார்ப்பும் இல்லை நாங்களே திருமண செலவை ஏற்றுக் கொள்வோம் என்று அண்ணியும் பின்பாட்டுப் பாட, தரகர் கொண்டு வந்த பத்து புகைப்படங்களில் சரண்யாவை அம்மாவிற்குப் பிடித்து போனதும், மும்முரமாக இறங்கிய அண்ணனிடம் இரண்டு முறை சொல்லிப் பார்த்தான். அவன் கோபத்தில் வசை பாட, என்னமோ செய்ங்க! என்று விரக்தியில் பதில் சொன்னாலும் அதை கேட்கும் நிலையில் யாருமில்லை!

    திருமணத்திற்கு ஒரு வாரம் இருந்த போது,, சரண்யாவைப் பார்த்துப் பேசணும் என்ற விபாகரனை முறைத்துப் பார்த்த கணேஷ், சற்று உஷ்ணமாகி கோபப்பட, அண்ணி ரம்யாதான் இடையில் புகுந்து கணவனை சமாதானப்படுத்தினாள்.விபா சொன்னதை செய்ங்க. எதுக்குக் கோபம் வரணும் என்று சொன்ன பிறகுதான் டிரைவரை அனுப்பி அழைத்து வர ஏற்பாடு செய்ய முனைந்த போது, இதை விரும்பாத விபாகரன் " நீங்கள் போய் அழைத்து வரக் கூடாதா...? என்றான்.

    "நீயும் வருவதாக இருந்தால் சொல் போகலாம்! எத்தனை காலத்திற்கு வீட்டில் அடைந்து கிடக்கப் போகிறாய்...? உன்னைப் போல் காலை இழந்த ‘மயூரி’ மறுபடியும் நடனம் ஆடலையா... நடப்பதற்கே அஞ்சினால் எப்படி...

    கடைசிப் பிள்ளை என்று உனக்கு செல்லம் கொடுத்து உன் பிடிவாத்த்தை வளர்த்து விட்ட அம்மாவின் மேல் கோபம் வருகிறது."

    போனது போனதாகவே இருக்கட்டும் விட்டுத் தள்ளுங்க நடக்க வேண்டியதை பாருங்க.என்றாள் ரம்யா...

    அண்ணன் கணேசனுடன் காரில் ஏறி அமர்ந்த விபாகரன் கண்களை மூடி சீட்டில் சாய்ந்தான். இரண்டு நாட்களுக்கு முன்புதான் சரண்யாவின் புகைப்படத்தைப் பார்த்தான். குடும்ப பாங்கான அழகு! பெரிய விழிகள்! ரத்னாவைப் போல் அதீத ஒப்பனைகள் இன்றி எளிமையான அலங்காரத்தில் இருந்தாள். அம்மாவுக்குப் பிடித்துப் போனதில் ஆச்சர்யமில்லை.

    வீடு வந்தாச்சு இறங்குடா அண்ணனின் குரல் அதட்டலாக ஒலித்ததும், அவசரப்படாமல் இறங்கினான். சத்தம் கேட்டு வெளியே வந்த பெண்ணின் அப்பா ஆச்சர்யத்துடனும், அன்புடனும் வரவேற்றார்.

    வாங்க... வாங்க! நீங்க வருவீங்கனு எதிர்பார்க்கலை! வாங்க உள்ளே வாங்க வரவேற்றார் வேதநாயகம். அங்கிருந்த மர நாற்காலிகளில் கணேசனும், விபாகரனும் அமர்ந்த பின், கமலா... யார் வந்திருக்கானு பார் என்று குரல் கொடுத்தார். வாங்க தம்பி, வாங்க மாப்பிள்ளை என்று முகமன் கூறிவிட்டு உள்ளே விரைந்தாள்.

    விபாவிற்கு சரண்யாவுடன் பேசணும்னு சொன்னான் அதான் என்ற கணேசனை கேள்விக்குறியோடு பார்த்தார் வேதநாயகம். முகத்தில் குழப்பம் தெரிந்தது. கவலைப்பட வேண்டாம் ஜஸ்ட் அஞ்சு நிமிசம்தான் என்ற கணேசன் தம்பி விபாகரனிடம் போயேண்டா என்றதும் நிதானமாய் எழுந்து அறைக்குள் போனான். அங்கு ஜன்னலை ஒட்டி நின்று கொண்டிருந்த சரண்யாவிடம்,

    என்னைப் பற்றி முழு விவரம் தெரியுமா...? அல்லது எப்படியானால் என்ன...? வசதியாக வாழலாம் என்ற நினைப்பில் சம்மதித்தாயா...,?

    "உங்களைப் பற்றித் தெரியும்! தெரிந்துதான் சம்மதித்தேன்! வசதி என்று எதை சொல்கிறீர்கள்... பணமா...?!

    நான் உன்னைக் கேள்வி கேட்டால், பதில் சொல்ல வேண்டுமே தவிர, பதில் கேள்வி கேட்கக் கூடாது!

    "ஏன் கேட்கக் கூடாது... உங்களுக்கு விருப்பமில்லை என்றால் இப்போது

    Enjoying the preview?
    Page 1 of 1