Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sreemathi
Sreemathi
Sreemathi
Ebook232 pages1 hour

Sreemathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாயை இழந்த ஒரு குழந்தை வேறு ஒரு குடும்பத்தில், வேறொரு பாரம்பரியத்தில் வளர்ந்தாலும், பெற்றத் தந்தை தேடி வரும் போது இரண்டு பக்கத்து மனிதர்களையும் எப்படி சமமாக, அருமையாக தன் சாதூர்யத்தால் நிறைவு செய்வதை சொல்கிறது இந்நாவல்.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580144707122
Sreemathi

Read more from Ilamathi Padma

Related to Sreemathi

Related ebooks

Reviews for Sreemathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sreemathi - Ilamathi Padma

    https://www.pustaka.co.in

    ஸ்ரீமதி

    Sreemathi

    Author:

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் –10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம்-22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் - 29

    அத்தியாயம் - 30

    அத்தியாயம் - 31

    அத்தியாயம் - 32

    அத்தியாயம் - 33

    அத்தியாயம் - 34

    அத்தியாயம் - 35

    அத்தியாயம் - 36

    அத்தியாயம் - 37

    அத்தியாயம் - 38

    அத்தியாயம் - 39

    அத்தியாயம் - 40

    அத்தியாயம் - 41

    அத்தியாயம் - 42

    அத்தியாயம் - 1

    அப்பா....

    குடை எடுத்துட்டுப் போப்பா மழை வரும் என்றபடி ஸ்ரீமதி குடையை கிருஷ்ணனிடம் நீட்டினாள். மறு பேச்சில்லாமல் குடையை வாங்கிக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தார்.

    ஐம்பதடி தூரத்தில் இருக்கும் காய்கறி கடைக்குச் சென்று வருவதற்குள் மழையில் முளைத்துப் போய்விடுவாரா என்ன... சரியான அதிகப் பிரசங்கி என்று முணங்கிய பங்கஜத்திடம்....

    பாட்டி... அப்பா முளைக்க மாட்டார். மூச்சு விட சிரமப்படுவார் என்று ஸ்ரீமதி சொல்லிக் கொண்டிருந்த போதே...

    கருமேகங்கள் திரண்டு ஒன்று சேர்ந்து கொள்ள சத்தத்துடன் மழை கொட்டியது.திகைத்துப் போன பங்கஜம் தன் மகள் கோமதியிடம்...

    காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாய்... தற்செயலாய் நடக்கும் விசயத்திற்கெல்லாம்... இவளை சம்பந்தப்படுத்திப் பெருமைப்பட்டுக் கொள்ளாதே... மாப்பிள்ளை இவளை தங்கத்தட்டில் வைத்து தாங்குவதை நீயும் ரசிக்கிறாய். "தான் பெறனும் பிள்ளை, கூடப் பிறக்கனும் பிறப்பு ' என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதை மனசில் வச்சுக்கோ... என்று அடிக்குரலில் அதட்டலாய் பேச...

    நீ எப்படி ஊருக்குப் போறனு சொல்லு. அடுத்த பத்துநாட்கள் இவர் ஊரில் இருக்க மாட்டார் என்றாள் கோமதி.

    போன் செய்தால் என் பிள்ளை வருவான். நீ கவலைப்படாதே. உன்னை டாக்டரின் காட்டிட்டு, உன் நிலைமை என்னனு தெரிஞ்சுட்டுதான் போவேன். உன் வயிற்றில் ஒன்னு தங்கட்டும் பிறகு நீயே மாறிடுவாய். பெத்ததுதான் உசத்தினு எண்ணம் வரும். வரனும்! இல்லேனா... வர வைப்பேன்.

    "மெதுவா பேசுமா. குழந்தை காதில் விழுந்தால்... வருத்தப்படுவாள். பத்து வயது குழந்தையிடம் உனக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி...??? கோமதியின் குரலில் வருத்தம் இழையோடியது.

    இதை ஒன்றையும் கவனிக்காதவளாய் வாசலில் அப்பாவின் வருகைக்காகக் காத்திருந்தாள் ஸ்ரீமதி...!

    அப்போது.....

    பத்தடி தூரத்தில் தளர்ந்த நடையுடன் வந்து கொண்டிருந்த அப்பாவைப் பார்த்ததும், ஸ்ரீமதி ஓடிப் போய் அப்பாவின் கைகளிலிருந்த பைகளில் ஒன்றை வாங்கிக் கொண்டாள்.

    என்னாச்சு பா...?

    மகளின் அன்பான விசாரிப்பில் மனம் நெகிழ்ந்த்து கிருஷ்ணனுக்கு.

    சங்கரனுக்கு உடம்பு சரியில்லைனு பாஸ்கர் போன் செய்தான். மனசு பதற்றமா இருக்கு டா

    மாமாவிற்கு ஒன்றும் ஆகாதுப்பா. பாஸ்கர் சரியான மண்டுப்பா. எல்லாத்துக்கும் பயப்படுவான். நீங்க கவலைப்படாதீங்க பா.

    சரி தங்கம். நாம இன்னிக்கு ஊருக்குப் போறோம். அம்மாவிடம் இந்த விசயத்தை பதமா சொல்லனும். பாட்டியிடம் சொல்லக் கூடாது. பயந்துடுவா. வயசாச்சுல்ல பதட்டமாய்டும் அவளுக்கு சரியா...?

    சரி பா. என்ற ஸ்ரீமதி வீட்டிற்குள் போனதும் காய்கறிகளையும் பழங்களையும் அலம்பி துடைத்து ஃபிரிட்ஜில் அடுக்கினாள். கிருஷ்ணன் மனைவிடம் விசயத்தைச் சொல்ல...

    அய்யோ... என் குழந்தைக்கு என்னாச்சு... மாப்பிள்ளை விவரமா சொல்லுங்க என்று பதறினாள் பங்கஜம்.

    "பெரிய ஒன்றுமில்லை அத்தை பதறாதீங்க. லேசா நெஞ்சுவலினு ஆஸ்பிட்டல் போயிருக்கான். அட்மிட் செய்திருக்காங்க. டெஸ்ட் முடிந்த்தும் நாளைக்கு அனுப்பிடுவாங்க. பாஸ்கர் குழந்தைதானே... பயந்துட்டான் போல... போன் செய்தான். நாம கிளம்பலாம் டாக்சி புக் பண்ணியிருக்கேன் இன்னும் அரைமணி நேரத்தில் வந்துடும்.

    அய்யோ... என்னென்னமோ சொல்றீங்களே... பயமா இருக்கே என்ற பங்கஜம்...

    கோமதி... சட்டுனு கிளம்புடி என்று துரிதபடுத்த...

    பாட்டி... மாமாவுக்கு எதுவும் ஆகாது. கவலைப்படாதீங்க என்ற ஸ்ரீமதியை எரிச்சலோடு பார்த்தாள் பங்கஜம்.

    "நீ வாயை மூடு. அதிகப்பிரசங்கி என்ற பங்கஜம்...

    கோமதி இவளோட வாயை அடக்கி வை. நேரங்காலம் தெரியாமல் எதையாவது பேசி கடுப்பேத்துறா...

    "ஸ்ரீமதி... இங்க வாடா... என்றழைத்த கிருஷ்ணன் மகளை வாஞ்சையுடன் அணைத்து, பாட்டிக்கு மனசு பாரமா இருக்கும். அதனால் இப்படி பேசுறாங்க. நீ உனக்கு வேண்டியதை எடுத்து வச்சுக்கோ... வண்டி வந்துடும்!

    அடுத்த அரைமணியில் டாக்சி வந்துவிட, முன்புறம் கிருஷ்ணனும் பின்புறம் கோமதியும் பங்கஜமும் ஏறிக் கொள்ள...

    அம்மா... நான் ஓரமா உட்கார்ந்துக்கிறேன் மா... ப்ளீஸ்...

    ம்ம்ம்... கார் கண்ணாடியை கீழே இறக்கி விட்டு கையை வெளியே நீட்டக் கூடாது சரியா...

    சரி மா...

    கார் வேகமெடுக்க, பங்கஜம் கந்தசஷ்டியை முணங்கியபடி வர, கோமதி கண்களை மூடி மனசுக்குள் தன் அண்ணனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தாள்.

    அம்மா... பசிக்குது மா...

    ஒரு வேளை திங்கலேனா உயிர் போய்டாது. தெரிஞ்சுதா... கம்முனு வா... என்ற பங்கஜத்திடம்...

    "அம்மா... அவள் குழந்தை! உன் மன வருத்தத்தில் அவளை ஏன் காயப்படுத்துற... காலையில் இரண்டு இட்லிதான் சாப்பிட்டாள். பசிக்காதா...?

    பசி தாங்கனும்டி. பெண் குழந்தையை எப்படி வளர்க்கனுமோ அப்படி வளர்க்கனும். தலையில் தூக்கி வச்சுட்டு ஆடாதே...

    அத்தை... குழந்தையை கரிச்சுக் கொட்டாதீங்க என்ற கிருஷ்ணன், ஒரு நல்ல ஹோட்டலா பார்த்து வண்டியை நிறுத்துப்பா என்ற போது...

    போன் ஒலிக்க... எடுத்து பேசினார்.

    "மாமா... அப்பாவிற்கு ஹார்ட் பீட்டில் வேரியேசன் இருக்காம். ஒரு வாரம் ஆஸ்பிட்டலில் தங்கனுமாம். டெஸ்ட் எல்லாம் எடுத்தப் பின்தான் அனுப்புவாங்களாம்.

    சரி. பத்ரமா பார்த்துக்கோ வந்துடுவோம் என்றபடி ஸ்ரீமதியின் கையை பிடித்தபடி ஹோட்டலுக்குள் நுழைந்தார் கிருஷ்ணன்.

    இறுக்கமாய் அமர்ந்திருந்த அம்மாவின் மேல் கழிவிரக்கம் வர...

    ஸ்ரீமதி... எங்களின் பொக்கிஷம் மா. அவள் வாய் வார்த்தை எங்களுக்கு காயத்ரி மந்திரம் மாதிரி... நீ புரிஞ்சுக்கனும். உன் மாப்பிள்ளை அவள் மேல் உயிரை வச்சிருக்கார். நானும்தான். எனக்கு குழந்தை பிறந்தால் சந்தோசம்தான். அதே சமயம் பிறக்கலேனா வருத்தப்பட மாட்டேன். பெற்றெடுத்தால்தான் பிள்ளையா மா...

    நீ அவளை நல்ல மனசோடு ஆசீர்வதிக்கனும் மா. அவள் எப்பேர்ப்பட்ட குழந்தை...? எப்படி கிடைத்தாள்... யார் கொடுத்தார்கள்...?

    யாரோட குழந்தை.. இதெல்லாம் தெரிந்தால் நீ இப்படி பேச மாட்டாய்...

    மூன்று மாதக் குழந்தையாக என் கைகளில் அவளைத் தாங்கிய அந்த நேரம்... நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது மா.

    போதும் போதும் நிறுத்து! அனாதைக் குழந்தைக்கு பரிந்து கொண்டு, என்னை துச்சமாகப் பேசாதே... நாளைக்கு உனக்கு பிரசவம் நான்தான் பார்க்கனும். நினைப்பில் இருக்கட்டும்!

    "அம்மாஆஆஆ.... உன்னை துச்சமாக எப்போது பேசினேன்...? நான்... நான்... என்று அகங்காரமாய் பேசாதே... எனக்கு ஸ்ரீமதி போதும். வேறு குழந்தை வேண்டாம். நீ வந்து என்னை பார்க்கவும் வேண்டாம். மகளுக்கு மகளாய் தாய்க்குத் தாயா... என் பெண் இருக்காள். போதும்!!

    கிருஷ்ணன் ஸ்ரீமதியுடன் வந்து காரில் ஏறிய போது...

    "நீங்க போய் அண்ணாவை பார்த்துட்டு, அம்மாவை விட்டுட்டு வாங்க. நானும் ஸ்ரீமதியும் பஸ் பிடித்து வீட்டுக்குப் போறோம்.. என்ற கோமதியை வியப்புடன் பார்த்த கிருஷ்ணன்...புரிந்து கொண்டவராய்...

    என்னாச்சு திடீர்னு...? நேரங்காலம் தெரியாமல் நீயும் அத்தையோடு வாக்கு வாதம் செய்யனுமா... சரி. நீ முடிவு செய்தால் மாற மாட்டியே... வேற வண்டி புக் பண்ணி ஏற்றி விட்டுட்டுப் போறேன். உன் அண்ணன் தப்பா நினைச்சா நான் பொறுப்பில்லை. அதையும் நீதான் சமாளிக்கனும்!

    தங்கை வேணும்னு நினைத்தால் தேடி வரட்டும். வரலேனா நஷ்டமில்லை. செத்தால் பிறந்து வீட்டு கோடித்துணி வராது அவ்வளவுதானே... என்ற கோமதியிடம்...

    ஏன்டி... இப்படி அச்சாணியமா பேசுறே...ஏதோ ஒரு வார்த்தை ஆதங்கத்தில் பேசிட்டேன். அதற்கு இப்படி பேயாட்டம் ஆடனுமா...?! என்ற அம்மாவை திரும்பிப் பார்க்காமல்....

    ஸ்ரீமதியின் கையைப் பிடித்தபடி எதிர்திசைக்கு நடந்து சென்றாள் கோமதி.

    அத்தியாயம் - 2

    வீடு வந்து சேர்ந்த பிறகும் கூட கோமதிக்கு மனம் சமாதானமாகவில்லை. இந்த ஒரு விசயத்தில் மட்டும் அம்மாவின் தாக்குதல் மறைமுகமாகவோ... நேரடியாகவோ தொடர்வதை விரும்பாத்தால் சற்று கடுமையாக நடந்து கொண்டதை நினைத்து வருந்தினாள.

    ஸ்ரீ.... டின்னர் என்ன செய்ய... சொல்லுடா. சப்பாத்தியும் மட்டர் பனீரும் செய்யவா...

    வேண்டாம் மா. நாளைக்கு அப்பா வந்ததும் செய்யலாம். தோசையும் சட்னியும் போதும் மா. நான் உதவி செய்றேன் மா. நீ டயர்டா இருக்கல்ல..

    இல்லை டா தங்கம். அம்மா நல்லாதான் இருக்கேன்.

    "ஏம்மா... பாட்டிக்கு என்னைப் பிடிக்கலை...? உன் வயிற்றில் நான் பிறக்கலையாமே... என்னோட அம்மா யாரும்மா...?

    ஸ்ரீமதியின் கேள்விகள் கோமதியை திடுக்கிட வைத்தது.

    அப்படி யார் சொன்னாங்க உனக்கு. நான்தான் உனக்கு அம்மா

    போன லீவுக்கு பாஸ்கர் இங்கு வந்தானில்லையா... அப்ப சொன்னான்.

    அவன் சும்மா விளையாட்டுக்குச் சொல்லியிருப்பான். நீ அதையெல்லாம் நம்பக் கூடாது.

    போம்மா... நீதான் சும்மா சொல்றே..

    ஸ்ரீ... ஃபிரிட்ஜிலிருந்து நாலு பச்சைமிளகாய் எடுத்துட்டு வா... மகளின் பேச்சை திசை திருப்ப வேலை ஏவினாள் கோமதி.

    பச்சைமிளகாயைக் கொண்டு வந்து கொடுத்த ஸ்ரீமதி மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டாள்.

    அப்பா வந்ததும் கேளு. இப்ப நீ சாப்பிட வா... சும்மா நை நைனு தேவையில்லாமல் கேள்வி கேட்காதே."

    அப்பா உண்மையைச் சொல்லிட்டார். நீதான் அடம் பிடிக்கிறாய். என்ற ஸ்ரீமதி கோமதியின் கண்களை உற்றுப் பார்த்தாள்.

    கலங்கிப் போனாள் கோமதி. மனசு மளுக்கென்று உடைந்தது. சின்னக் குழந்தையிடம் எதற்கு இப்படி அவசரப்பட்டு உண்மையைச் சொல்லனும். வரட்டும் அவர் உண்டு இல்லைனு ஆக்கிடுறேன். உள்ளே வெகுண்டாள்.

    "அழனும் போல இருக்கும்மா. நீ எப்பவும் என் அம்மாவா இருப்பியா...???? என்ற ஸ்ரீமதியை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

    ஸ்ரீ... அம்மா எப்பவும் அம்மாதான். நீ என் பெண்தான். வயிற்றில் பிறக்கலையே தவிர... மூணுமாசக் குழந்தையா உங்கப்பா வந்து கொடுத்த போதும் சரி. இப்பவும் சரி. நீ என் குழந்தையாகத்தான் பார்க்கிறேன். உனக்கு ஏதாவது குறை வச்சிருக்கேனா... சொல்லு டா...

    இல்லை மா. ஆனால்... நான் உன் வயிற்றில் பிறக்கலையே மா...

    "இதோ பார் தங்கம்... நான்தான் உனக்கு அம்மாவா இருக்கனும் என்றுதான் கடவுள் உன்னை என்னிடம் சேர்த்திருக்கார். அதை நீ புரிஞ்சுக்கனும். யார் எது சொன்னாலும் வருத்தப்படக் கூடாது. சரியா...?!

    சரி மா... ஆனால் அப்பா எதுவும் சொல்லலை. உண்மையைத் தெரிஞ்சுக்கனும் என்றுதான் அப்படிச் சொன்னேன். சாரி மா மன்னிச்சுடு.

    ஸ்ரீ.. என்று சத்தமாய் அழைத்தபடி

    என்றைக்கும் அடிக்காத தன் மகளை முதுகில் பலமாக அடித்தவள் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

    "சாரி மா. அழாதே மா. நிறைய தரம் கேட்கனும்னு நினைப்பேன். ஆனால் நீ வருத்தப்படுவியோனு கேட்க மாட்டேன்.

    ஆனால் பாட்டி என்னை அதிகம் திட்டுவதால் என் மனசும் வருத்தப்படுது மா. அதுதான் கேட்டேன்."

    நீ என்னோடு பேசாதே ஸ்ரீ. பத்து வயசில் அம்மாவை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு, அப்பா சொன்னார்னு பொய் சொல்லி காரியம் சாதிச்சுட்டல்ல...

    "அம்மா... சாரி மா...

    "போ... தள்ளிப் போ... என் பக்கத்தில் வராதே என்று மகளைத் தள்ளி விட்ட கோமதி சாப்பிடாமல் படுத்து விட... ஸ்ரீயும் சாப்பிடாமல் சுருண்டு படுத்தாள்.

    மறுநாள் ஊரிலிருந்த வந்த கிருஷ்ணன் கோமதியும் ஸ்ரீமதியும் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்த்தை பார்த்து வியந்தவராய்...

    என்னாச்சு... இன்னுமா நடந்த்தை நினைச்சு வருத்தப் படுறே...

    "இல்லை பா. நான்தான் அம்மாவை வருத்தப்பட வச்சுட்டேன். ஸாரி கேட்டும் அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1