Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alamu Paattiyin Alaparaigal!
Alamu Paattiyin Alaparaigal!
Alamu Paattiyin Alaparaigal!
Ebook132 pages1 hour

Alamu Paattiyin Alaparaigal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளவயதில் கணவரை இழந்து, மூன்று குழந்தைகளுடன் அய்யாவு காம்பவுண்டில் வசித்து வருகிறார் அலமு பாட்டி. அந்த காம்பவுண்டில் வசிக்கும் சாவித்திரிக்கும், அலமுபாட்டிக்கும் என்ன தொடர்பு? சாவித்திரியின் வாழ்வில் சந்தோஷம் ஏற்பட அலமுபாட்டி செய்த அலப்பறைகள் என்ன? வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580144709513
Alamu Paattiyin Alaparaigal!

Read more from Ilamathi Padma

Related to Alamu Paattiyin Alaparaigal!

Related ebooks

Reviews for Alamu Paattiyin Alaparaigal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alamu Paattiyin Alaparaigal! - Ilamathi Padma

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    அலமு பாட்டியின் அலப்பறைகள்!

    Alamu Paattiyin Alaparaigal!

    Author:

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    மதுரை ஆண்டாள்புரத்தில் காம்பவுண்ட் வீடுகள் அதிகம். அதில் ‘அய்யாவு காம்பவுண்ட்’ பிரசித்தி பெற்றது. அதில் ஒரு வீட்டில் வசிக்கும் அலமுபாட்டியை அறியாதவர் யாரும் இருக்க முடியாது.

    அலமுபாட்டியின் கணவர் இளவயதிலேயே சிவபதவி அடைந்ததால் தன் மூன்று குழந்தைகளோடு இங்கு வந்து குடியேறியவர். அப்பளம் இட்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியவர். உளுந்தை மிஷினல் திரித்து பதமாய் பிசைந்து, பக்குவமாய் உரலில் இடித்து அப்பளம் இட்டு நிழலில் உலர்த்தி அழகாய் அடுக்கி, நூலால் கட்டி கவரில் சீல் செய்யும் விதம் அலாதியானது. அலமுபாட்டியின் அப்பளம் என்றாலே ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்துவிடும் என்பதாலேயே கடைக்காரர்கள் சுணங்காமல் வாங்கிக் கொள்வார்கள். அதோடு உடனடியாக பணமும் பட்டுவாடா செய்வதால் அலமுபாட்டியிடம் எப்போதும் பணம் இருக்கும்.

    அய்யாவு காம்பவுண்ட் வலது, இடதுமாக எட்டு, எட்டாய் பதினாறு வீடுகள் கொண்டது. ஒரு சமையலறை என்ற பெயரில் ஒரு தடுப்பும், ஒரே அறை என்ற அளவில்தான் அனைத்து வீடுகளும் ஒரே அமைப்பில்தான் இருக்கும்! பகல் முழுவதும் எல்லா வீட்டுக்கதவும் திறந்தேதான் இருக்கும். தின சமையல் முதல் கொண்டு சண்டை சச்சரவுகள் வரை ஒளிவுமறைவு கிடையாது. சமரசங்களுக்கு அலமுபாட்டிதான் முன் செல்வார். யார்மேல் தவறோ அவர்களை சரமாரியாக திட்டுவாள். யாரும் மறுமொழி பேசுவதில்லை. அதற்கான முக்கியக் காரணமாய் இருப்பது அவசரத் தேவைக்கு பணம் தேவை என்றால் அலமுபாட்டியை விட்டால் வேறு வழியில்லை என்பதுதான்.

    பாட்டி தன் கடமைகளை முடித்தப் பிறகும்கூட, அப்பளம் இடுவதை நிறுத்தாமல் உழைத்துக்கொண்டிருந்தாள். வெடவெடவென்று உயரமானத் தோற்றம்! கோடாலி முடிச்சிட்டக் கொண்டை கைகளில் வெள்ளிக்காப்பும், கால்களில் தண்டையும் அணிந்திருப்பாள். நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் நட்சத்திர வடிவில் பச்சை குத்தியிருப்பாள்.

    கழுத்தில் வெள்ளியில் செய்த ஸ்படிகமாலை. கட்டுவது சுங்கிடிச் சேலைதான் என்றாலும் அதை நேர்த்தியாக உடுத்தியிருப்பாள். சட்டை மட்டும் எப்போதும் வெள்ளை நிறத்தில்தான்.

    பாட்டி கலர் சட்டை போடலாம்ல… என்று யாரேனும் சொன்னால், கைம்பெண் என்பதற்கு ஒரு அடையாளமாவது வேண்டாமா…? அதுவும் இல்லேனா கண்ட கண்ட காலிப்பயலுங்க கண்ணடிப்பாங்களேனு பயம்தான் என்பாள்.

    நீங்க சின்னப் பெண்ணா பாட்டி…? பாட்டியான பிறகு என்ன பயம்…? என்று கேலி செய்யும் அண்டை வீட்டாரோடு சேர்ந்து சிரிப்பவள்தான். ஆனால் எப்போது சீறுவாள்… எப்போது சிரிப்பாள் என்று யாராலும் சொல்ல முடியாது.

    காம்பவுண்ட் வீட்டில் பின்புறத்தில் குளியறை நான்கும், கழிவறை மூன்றும் இருந்தன. அதன் நடுநாயகமாய் பெரிய சதுர வடிவில் கிணறும், அதில் நான்கு ராட்டிணங்களில் நான்கு துத்துநாக வாளிகள் கருப்பு நிற டயரோடு இணக்கப்பட்டிருக்கும். யார் தண்ணீர் இறைத்தாலும் உடனே வாளியை கிணற்றின் மேலேயே கவிழ்த்து வைக்க வேண்டும். தவறினால் பாட்டியின் சொல்லம்புகள் செந்தமிழில் பாயும்! அய்யாவு காம்பவுண்டின் மொத்த குடித்தனக்காரர்களும் அலமுபாட்டியின் சொல்லம்புகளுக்கு பயந்தே 90 சதவிகிதம் பேர்கள் சரியாக நடந்து கொள்வார்கள். மீதம் இருக்கும் பத்து சதவிகித ஆட்கள் இவரிடம் உதவிக்கு வந்து நிற்காதவர்கள். பாட்டி அதிகம் பேசினால்,

    உன் சோலியைப் பாரு நீ என்ன வீட்டு சொந்தக்காரியா… எங்களைப்போல் வாடகைக்கு இருப்பவள்தானே என்று எகிறுவார்கள். ஆனாலும் அலமுபாட்டி அசராமல் மூச்சுவிடாமல் பேசுவாள். எதிராளிதான் ஒரு கட்டத்தில் அயர்ச்சில் ஓய்ந்து போய் அமைதியாவர். வீட்டின் உரிமையாளரான அய்யாவிடம் பாட்டியை பற்றி புகார் செய்தால், அட, விடும் ஐயா… 23 வயதில் கணவனை இழப்பது கொடூரம்! மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு அவங்க பட்டபாடு இருக்கே, அது அதைவிட கொடூரம். ஓயாத உழைப்பும், நேர்மையும் அவரது மூலதனம்! இந்த காம்பவுண்ட் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால் அதற்கு அவர்தான் காரணம்! என்பாரே தவிர அலமுபாட்டியிடம், ‘ஏன்… எதற்கு…’ என்ற கேள்வியை எழுப்பவே மாட்டார்.

    அலமுபாட்டியின் மூத்தபிள்ளை திருவேங்கடம் கல்லூரியில் படிக்கும்போதே கன்னடம் பேசும் பெண்ணை காதல் மணம் செய்துகொண்டு வீட்டு மாப்பிள்ளையாகிவிட, போறான் பயல் என்று ஒரு நாள் ஆற்றாமையில் புலம்பியதோடு சரி, அதன் பிறகு யார் விசாரித்தாலும், நான் அவனை மறந்துட்டேன் அவனைப் பற்றிப் பேசாதே என்று சொல்லிவிடுவாள்… மற்ற இரண்டு பெண்களுக்கும் தூரத்து சொந்தத்தில் மாப்பிள்ளைகளைத் தேடிப்பிடித்து அவர்கள் கேட்ட பவுனுக்குக்குக் குறையாமல் நகைகளைப் போட்டு திருமணத்தை நடத்தினார். வரதட்சணை சல்லிக்காசுக்கூட தரமாட்டேன் என்று வைராக்கியத்தோடு இருந்ததுதான் ஆச்சர்யமான விசயம்! பெண்கள் இருவரும் கொள்ளை அழகுடன் இருந்ததால் மறுபேச்சில்லாம் திருமணம் செய்துகொண்டனர்.

    பண்டிகை நாட்களில் பாட்டிக்கு யார் எது கொடுத்தாலும் எதுக்கு இது… புள்ளைங்களுக்கு இன்னொரு வேளை வச்சுக் கொடுக்கலாம்ல. வீடு வீடா போய் விநியோகம் பண்ணனுமா… கொடுத்துதான் நட்பை வளர்க்கணுமா…? போ… போ… என்று விரட்டுவாள். ஆனால் அதே சமயம் வீடு தவறாமல் பலகாரங்கள் தருவாள். நாங்க தருவதை வாங்கமாட்டீங்க. நீங்க தந்தால் வாங்கணுமா… இது எந்த ஊர் ஞாயம்…? நாலாவது வீட்டு சாவித்ரி, பாட்டியிடம் வம்பிழுப்பாள்.

    அட… நான் ஒண்டிக்கட்டை, என்னத்தை சாப்பிட முடியும்…? எண்ணெய் சட்டி வைக்கணுமே சாஸ்திரமாச்சே, விட முடியுமா… இரண்டு பலகாரம் செய்தேன். வாங்கிக்கோடி என்று கையில் திணித்துவிட்டுப் போவாள்.

    அலமுபாட்டி யாரோடும் ஒட்டி உறவாடுவதில்லை. அதே சமயம் விலகி நிற்பதும் இல்லை! யாருக்காவது பிரச்சனை என்றால் முதல் ஆளாய் நிற்பாள். கணவன், மனைவி சண்டையில் தலையிட மாட்டாள். அதே சமயம் அடிதடி சண்டையென்றால் மட்டுமே இடையில் புகுந்து காரமாய் பேசுவாள். "பொம்பளையை அடிப்பது வீரமாக்கும்… இரண்டு அடி அவள் பதிலுக்கு போட்டால் என்னாகும்னு யோசிச்சியா… போடா… போடா… புள்ளங்க முன்னாடி வெட்கமில்லாமல் அடிச்சுக்கிறீங்களே, அதுங்க மதிக்குமா…

    Enjoying the preview?
    Page 1 of 1