Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பட்டு மாமி!
பட்டு மாமி!
பட்டு மாமி!
Ebook294 pages1 hour

பட்டு மாமி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆவி பறக்கும் காபியுடன் கூடத்துக்கு வந்தாள் பட்டு! ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார் ரமணி!
“இந்தாங்கோ!”
அதை வாங்கிக் கொண்டார் ரமணி. அவளை ஏற இறங்கப் பார்த்தார்.
“ஏன் அப்படி பார்க்கறேள்?”
“காலங்காத்தாலே குளிச்சு லட்சணமா நெத்தி நிறைய குங்குமத்தோட வர்ற உன் மூஞ்சில முழிச்சாத்தான்மா பொழுதே சரியா விடியறது நேக்கு!”
பட்டு சின்னதாகச் சிரித்தாள்.
“நீ காப்பி சாப்பிட்டியோ?”
“இல்லை!”
“ஏன்?”
“தினமும் காப்பி சாப்பிட்டா, ஒருநாள் அது இல்லைனா கஷ்டமா இருக்கும். எப்பவும் எல்லாமே கிடைக்கும்னு என்ன நிச்சயம்? நான் எதுக்கும் அடிமையானதில்லை!”
அவர் ஆச்சர்யமாகப் பார்த்தார்.
“என்ன டிபன் பண்ணட்டும்?”
“நீ எது பண்ணினாலும் நன்னா இருக்கும். உன் இஷ்டம் போல செய்!”
“மாமி எப்ப வருவா?“யாருக்குத் தெரியும்? எனக்கு சமைச்சுப் போட நீ இருக்கே! மற்ற வேலைகளை கவனிக்கவும் ஆள் இருக்கு. அவ தேச சஞ்சாரி. ஊரைச் சுத்திண்டு இருப்பா!”
பட்டு மாமி உள்ளே வந்தாள்.
ஆடிட்டர் ரமணிக்கு ரொம்ப கடமைப்பட்டவள். கடந்த நாலைந்து வருடங்களாக இந்த வீட்டில்தான் சமையல் வேலை!
குருக்கள்மாமி மூலம் அறிமுகமாகி, அந்தப் பழக்கம் தொடர்ந்து, இன்று நெருங்கி விட்டாள்.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருந்த ஆடிட்டர் ரமணி சம்பாதித்து குவித்துக் கொண்டிருந்தார்.
ஒரே மகன்...அயல் நாட்டில் வைத்துப் படிக்க வைக்க ஆசைப் பட்டார். அவன் படிப்பு முடிந்த கையோடு, ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணியைக் காதலித்து மனைவியாக்கிக் கொள்ள, அதை ஒப்புக்கொள்ள முடியாத இவர், மகனுடன் உறவை முறித்துக் கொண்டார். மனைவி சாரதா என்ன சொல்லியும் எடுபடவில்லை. மகன் மும்பையில்தான் இருக்கிறான். சாரதா கோயில் குளம், தன் உறவுக்காரர்களின் கல்யாணம் என்று எதையாவது சொல்லிக் கொண்டு வருடத்தில் எட்டு மாதங்கள் வீட்டில் இருக்க மாட்டாள். ரமணி கண்டு கொள்ளவில்லை. தன் தொழிலில் மும்முரமாக இருந்ததால் அவரால் எதைப் பற்றியும் கவலைப்பட முடியவில்லை. வீட்டிலேயே அலுவலகம். காலை முதல் இரவு வரை க்ளையண்ட்டுகள். பிஸியான ஆடிட்டர். பட்டு மாமி வந்து சேர்ந்த ஒரு வருடத்தில் ஊர் மக்கள் சும்மா இருக்காமல், கொஞ்சம் சீண்டிவிடப் பார்த்தார்கள்-அடிக்கடி சாரதா வெளியூர் போய் விடுவதால் ஆடிட்டர் ரமணி பட்டுமாமியை வைத்திருக்கிறார் என்று. முதலில் குருக்கள் மாமிதான் இதை பட்டுவின் காதுக்குக் கொண்டு வந்தாள்.
“பட்டு! நான் சொல்றேன்னு கோச்சுக்க மாட்டியே?”
“சொன்னாத்தானே தெரியும்!”
“நீ அந்த ஆடிட்டர் ரமணியாத்துக்கு வேலைக்குப் போறதை நிறுத்திடேன்!”
“எதுக்கு?“நீயும் வயசான கிழவி இல்லை. இன்னிக்கெல்லாம் போனா, நாற்பது கூட ஆகலை நோக்கு. பெண் குழந்தை வேற இருக்கு.”
“நேராச் சொல்லுங்கோ!”
“கூசறது நேக்கு!”
பட்டு வாசல் திண்ணையில்தான் உட்கார்ந்திருந்தாள். சற்று தள்ளி நாயரின் சாயாக் கடையில் நாலைந்து பேர்... ஆட்டோக்காரர் உண்ணியின் அம்மா... எதிரே சவுண்டி மடத்தில் சின்னதான ஒரு கூட்டம்... பட்டு சட்டென குரலை உயர்த்திவிட்டாள்.
“எதுக்கு ஆடிட்டர் ரமணியாத்துக்கு சமையல் வேலைக்குப் போறதை நிறுத்தணும்?”
“பட்டு, மொள்ளடி! எதுக்கு இப்ப நீ குரலை உசத்தறாய்?”
“நாலு பேர் தெரிஞ்சுக்கட்டுமே மாமி! தனித்தனியா எல்லாரும் என்னைப் பத்திப் பேசத்தான் போறா. என்ன சொல்றா எல்லாரும்? ரமணி என்னை வச்சிண்டு இருக்கிறார்னுதானே! ஆமாம்... ரமணியோட ஆசைநாயகிதான் நான். போதுமா? வேறென்ன தெரியணும் இந்த கோயில்குண்டு ஜனங்களுக்கு?”
“அய்யோ பட்டு... ஒரு பொம்மனாட்டி நட்ட நடு கிராமத்துல நின்னுண்டு பேசற பேச்சாடி இது?”
“ஒரு பொம்மனாட்டி பத்தி ஒளிஞ்சு ஒளிஞ்சு எல்லாரும் பேசலாம். அதுல தப்பில்லை! ஆனா அவ பகிரங்மாக பதில் சொல்லக்கூடாது! அப்படித்தானே!”
குருக்கள் மாமி வெல வெலத்துப் போனாள்.
“த பாருங்கோ மாமி! இந்த என்னோட பதில் எல்லோருக்கும்தான். நான் உழைக்கிறேன். நாலு காசு சம்பாதிக்கிறேன். என் குழந்தைகளுக்கு சாதம் போடறேன். நான் கஷ்டப்பட்டப்ப யாரும் ஏன்னு கேக்கலை. போராடினது நான்தான். அதனால யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் நேக்கில்லை! எந்த நாய்க்காவது தைரியம் இருந்தா என் எதிர்ல வந்து நின்னு பேசட்டும்!”
நின்றவர்கள் அத்தனை பேரும் சட்சட்டென காணாமல் போனார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
பட்டு மாமி!

Read more from தேவிபாலா

Related to பட்டு மாமி!

Related ebooks

Reviews for பட்டு மாமி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பட்டு மாமி! - தேவிபாலா

    1

    பாலக்காட்டை தெரிந்தவர்களுக்குக் கல்பாத்தி என்ற புராதன கிராமத்தைத் தெரியாமல் இருக்க முடியாது.

    அதிகபட்சமாக பிராமணர்களைத் தன்னிடம் வைத்திருந்த ஒரு கிராமம் அது.

    அதன் வடகோடியில் இருந்த கிருஷ்ணன் கோயில் ரொம்பவும் பிரசித்தம்.

    அந்த கிராமத்தில் அரை கிலோ மீட்டர் கிருஷ்ணன் கோயிலிலிருந்து நடந்தால் படிக்கட்டு போல இறங்கும். இருபுறமும் படிக்கட்டுக்களைக் கொண்ட தாழ்வான ஒரு பிரதேசம் கோயில்குண்டு. அங்குள்ள தெய்வம் விசுவநாத ஸ்வாமி.

    அந்த ஆலயத்தை அடுத்து படிக்கட்டுகள்.

    அதில் இறங்கினால் புழை எனப்படும் குளிக்கும் ஆறு. இந்த கோயில் குண்டில் இரட்டை வரிசையாக கோயிலுக்கு எதிரே வீடுகள்...

    ஒரு வரிசையில் சவுண்டிமடம்.

    இறப்புக்குப் பிறகு ஈமச் சடங்குகளில் உதவும் பிராமணப் புரோகிதர்களை சவுண்டிகள் என்பார்கள்.

    அவர்களின் வாசஸ்தலம்.-

    எதிரே நாலைந்து வீடுகள். ஏறத்தாழ குடிசைக்கும் சற்றே மேலாக, ஆனால் வீட்டின் முழு அந்தஸ்தைப் பெற முடியாத வீடுகள்.

    ஒன்றில் வாசுதேவன் நாயரின் சாயாக்கடை.

    இரண்டாவதில் கோயிலுக்குப் பூஜை செய்யும் பரமேஸ்வர குருக்கள்...

    மூன்றாவது, ஆட்டோ ஓட்டும் உன்னிக்கிருஷ்ணன். கடைசி வீடு...பட்டு மாமி!

    அதிகாலை நாலு மணி!

    அலாரம் எதுவும் இல்லாமலே பட்டு மாமி எழுந்து உட்கார்ந்தாள், தன் படுக்கையில்-பாயில்.

    பாயைச் சுருட்டி வைத்து விட்டு, சோப்பு, பல் பொடி, துண்டு சகிதம் புழைக்குக் குளிக்கப் போகத் தயாராகி விட்டாள்.

    மின்சாரம் இல்லாத வீடு...

    லாந்தரை ஏற்றி வைத்தாள்.

    மூத்தவன் ராமகிருஷ்ணனின் குறட்டை சப்தம் கேட்டு கிராமத்தின் எருமைகள் கலவரப்பட்டுக் கொண்டிருக்க, அடுத்தவன், உடைகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என மல்லாந்து கிடக்க, பட்டு மாமி நெருங்கினாள்.

    காசி, சரியாப் படுத்துக்கோடா! கடாவாட்டம் வயசாறது! ஒரு அடக்கம் வேண்டாமோ? -போர்வையால் மூடினாள். மகள் லக்ஷ்மி தூக்கக்கலக்கத்தில் எரிச்சலுடன் எழுந்தாள்.

    மணி என்னம்மா?

    நாலு!

    நீயும் தூங்காதே! இருக்கிறவாளையும் தூங்க விடாதே!

    ஆமாண்டி! குறட்டை விட்டுண்டு கிடந்தா சோத்துக்கு என்ன வழி? பேசறியே! காலங்காத்தால வர்றது நேக்கு வாய்ல! வந்து கதவைச் சாத்திக்கோ!

    லக்ஷ்மி கதவைச் சாத்திக் கொள்ள, பட்டு மாமி இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

    குருக்களின் மனைவி ஓடி வந்தாள்.

    நானும் வர்றேண்டி பட்டு!

    ஏன்? எழுந்திருக்க நாழியாயிடுத்தா இன்னிக்கு?

    ஆமாம்... சித்த அசந்துட்டேன்! மனுஷ ஜன்மம் தானே! ஒரு நாளப் போல எந்திரமாட்டம் வேலை! முடியறதில்லை! வயசாறதோல்லியோ?

    இருளில் படிக்கட்டுகளில் பட்டு மாமி சரளமாக இறக்கினாள்.

    ஐப்பசி மாதம்.

    இரு கரையும் தொட்டு புழை சுலேசமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் குளிக்க வருபவர்கள் இந்த இரண்டு பேர்தான்.

    பார்த்துடி பட்டு! ஐப்பசி மாச வெள்ளம். எங்கேயாவது நம்மை இழுத்துண்டு போயிடப் போறது. ஒவ்வொரு வருஷமும் பலி குடுத்தாத்தான் விசுவநாத ஸ்வாமியோட தேர் நகர்றது. இந்த வருஷம் நாமளா இருக்க வேண்டாம்!

    போகட்டும் மாமி! இருந்து என்னத்த சாதிக்கப் போறோம்? -நீரில் இறங்கினாள் பட்டு!

    நான் போயிட்டாலும் தேவலைடி! நீ போகப் படாது! இன்னும் தலையெடுக்காத மூணு குழந்தைகள்! உன்னை நம்பித்தானே வாழறதுகள்!

    பத்தே நிமிடத்தில் குளியல் முடிந்து ஈரச் சேலையை உடம்பில் சுற்றிக் கொண்டு இருவரும் படியேறி விட்டார்கள்.

    அதே ஈரத்துடன் விசுவநாதர் கோயிலுக்குள் நுழைந்து ஒரு முறை தொழுது விட்டு, வெளியே வந்தார்கள்.. ஹும்! காசிக்குத்தான் போக முடியலை. அதுல பாதி கல்பாத்தின்னு சொல்லுவா!

    தினசரி குருக்கள் மாமி சொல்லும் வாக்கியம். வீடு திரும்பி விட்டார்கள். பட்டு மாமி சேலை மாற்றி, ஈரத்தைப் பிழிந்து காய வைத்தபின், ஈரக் கூந்தலை சுற்றுக்கட்டாக முடிந்து கொண்டாள். குங்குமம் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டாள்.

    லக்ஷ்மி!

    வர்றேன்மா!

    எனக்கு நேரமாச்சு! வழக்கம் போல கஞ்சி போட்டு தலா ரெண்டு பேருக்கும் குடுத்துட்டு, நீயும் குடி! நான் பதினொரு மணிக்கு வந்து சமையல் பண்ணிக்கிறேன்!

    சரிம்மா!

    மூணு பேரும் வெளில போகும் போது கதவை இழுத்துப் பூட்டிண்டு போ. கடைசியில் போறவ நீதான்!

    ஆமாம்! வீடு முழுக்க நகைகளும், பணமுமா கொட்டிக் கிடக்கு பாரு!

    பரிகாசம் போதும்டி! நாலு பாத்திரங்கள்தான் இருக்கு. அதை எவனாவது எடுத்துண்டு போனா நமக்கு நஷ்டம்தானே! என்ன குறைச்சல் இந்தாத்துல. ஒருவேளை கூட உங்க மூணு பேரையும் காயப் போட்டதில்லை நான்! நாக்கைக் கொஞ்சம் அடக்கு! வயசு பதினாலுதான் ஆறது நோக்கு!

    ஏம்மா காலங்கார்த்தால எழுந்து கோச்சுக்கிறாய்? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?

    போதும்! வார்த்தைக்கு வார்த்தை பேசாதே!

    லக்ஷ்மி வாயை மூடிக் கொண்டாள்

    பட்டு மாமி இறங்கி விட்டாள் வாசலில். இன்னும் இருட்டு கூடப் பிரியவில்லை. படிகளில் ஏறி, கல்பாத்தி கிராமத்தின் நீண்ட தெருவில் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

    நடக்கும் நேரம் பட்டு மாமி பற்றி...

    நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பட்டு மாமியின் மூத்த மகன் ராமகிருஷ்ணன். வயது பதினெட்டு. பள்ளிக்கூடத்தில் பத்தாவது பாஸாகி விட்டான். அதற்கு மேல் மாமியால் அவனைப் படிக்க வைக்க முடியவில்லை. கிராமத்து வக்கீல் ஒருவரிடம் உதவியாளனாக இருக்கிறான், கடந்த ஒரு வருடமாக. மாதச் சம்பளம் நானூறு ரூபாய்.

    அடுத்தவன் காசி ...வயது பதினாலு! எஸ்எஸ்எல்சி பெயிலாகி விட்டு எதுவும் செய்யாமல் வீட்டில் தண்டச் சோறு சாப்பிடும் கிராக்கி.

    மூன்றாவது, பதினாலு வயது லக்ஷ்மி. ஒன்பதாவது படிக்கும் பெண்!

    கேரளா டாக்கிஸ் கடந்து சுமார் 2 கிலோ மீட்டர் நடந்த பிறகு அந்தத் தனி வீடு-பெரிய வீடு வந்தது. பட்டு மாமி அதன் கேட்டைத் திறந்து கொண்டு நுழையும்போது மணி அஞ்சேகால். கதவைத் தட்டினாள். காலடி ஓசை கேட்டது. அந்த மனிதர் திறந்தார்.

    வா பட்டு! இப்பத்தான் கண்களை முழிச்சேன். பல் தேய்க்கப் போறேன். காலங்கார்த்தால பட்டுவோட காபி தொண்டைலே இறங்கினாத்தான் சூரியனே உதிக்கும்!

    இதோ, பத்தே நிமிடத்துல ரெடியாயிடும்! பட்டு மாமி சமையல் கட்டில் நுழைந்தாள். பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தாள். டிகாஷன் தயாரிக்கத் தொடங்கினாள் வேகமாக.

    பெரிய குடும்பத்தில் பிறந்தும் எப்படியோ வாழ வேண்டிய பெண். இன்று பிறர் வீட்டில் சமையல்காரியாக வாழவேண்டிய அவலம்!

    ஏன்?

    என்ன காரணம்?

    2

    ஆவி பறக்கும் காபியுடன் கூடத்துக்கு வந்தாள் பட்டு! ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார் ரமணி!

    இந்தாங்கோ!

    அதை வாங்கிக் கொண்டார் ரமணி. அவளை ஏற இறங்கப் பார்த்தார்.

    ஏன் அப்படி பார்க்கறேள்?

    காலங்காத்தாலே குளிச்சு லட்சணமா நெத்தி நிறைய குங்குமத்தோட வர்ற உன் மூஞ்சில முழிச்சாத்தான்மா பொழுதே சரியா விடியறது நேக்கு!

    பட்டு சின்னதாகச் சிரித்தாள்.

    நீ காப்பி சாப்பிட்டியோ?

    இல்லை!

    ஏன்?

    தினமும் காப்பி சாப்பிட்டா, ஒருநாள் அது இல்லைனா கஷ்டமா இருக்கும். எப்பவும் எல்லாமே கிடைக்கும்னு என்ன நிச்சயம்? நான் எதுக்கும் அடிமையானதில்லை!

    அவர் ஆச்சர்யமாகப் பார்த்தார்.

    என்ன டிபன் பண்ணட்டும்?

    நீ எது பண்ணினாலும் நன்னா இருக்கும். உன் இஷ்டம் போல செய்!

    மாமி எப்ப வருவா?

    யாருக்குத் தெரியும்? எனக்கு சமைச்சுப் போட நீ இருக்கே! மற்ற வேலைகளை கவனிக்கவும் ஆள் இருக்கு. அவ தேச சஞ்சாரி. ஊரைச் சுத்திண்டு இருப்பா!

    பட்டு மாமி உள்ளே வந்தாள்.

    ஆடிட்டர் ரமணிக்கு ரொம்ப கடமைப்பட்டவள். கடந்த நாலைந்து வருடங்களாக இந்த வீட்டில்தான் சமையல் வேலை!

    குருக்கள்மாமி மூலம் அறிமுகமாகி, அந்தப் பழக்கம் தொடர்ந்து, இன்று நெருங்கி விட்டாள்.

    ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருந்த ஆடிட்டர் ரமணி சம்பாதித்து குவித்துக் கொண்டிருந்தார்.

    ஒரே மகன்...அயல் நாட்டில் வைத்துப் படிக்க வைக்க ஆசைப் பட்டார். அவன் படிப்பு முடிந்த கையோடு, ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணியைக் காதலித்து மனைவியாக்கிக் கொள்ள, அதை ஒப்புக்கொள்ள முடியாத இவர், மகனுடன் உறவை முறித்துக் கொண்டார். மனைவி சாரதா என்ன சொல்லியும் எடுபடவில்லை. மகன் மும்பையில்தான் இருக்கிறான். சாரதா கோயில் குளம், தன் உறவுக்காரர்களின் கல்யாணம் என்று எதையாவது சொல்லிக் கொண்டு வருடத்தில் எட்டு மாதங்கள் வீட்டில் இருக்க மாட்டாள். ரமணி கண்டு கொள்ளவில்லை. தன் தொழிலில் மும்முரமாக இருந்ததால் அவரால் எதைப் பற்றியும் கவலைப்பட முடியவில்லை. வீட்டிலேயே அலுவலகம். காலை முதல் இரவு வரை க்ளையண்ட்டுகள். பிஸியான ஆடிட்டர். பட்டு மாமி வந்து சேர்ந்த ஒரு வருடத்தில் ஊர் மக்கள் சும்மா இருக்காமல், கொஞ்சம் சீண்டிவிடப் பார்த்தார்கள்-அடிக்கடி சாரதா வெளியூர் போய் விடுவதால் ஆடிட்டர் ரமணி பட்டுமாமியை வைத்திருக்கிறார் என்று. முதலில் குருக்கள் மாமிதான் இதை பட்டுவின் காதுக்குக் கொண்டு வந்தாள்.

    பட்டு! நான் சொல்றேன்னு கோச்சுக்க மாட்டியே?

    சொன்னாத்தானே தெரியும்!

    நீ அந்த ஆடிட்டர் ரமணியாத்துக்கு வேலைக்குப் போறதை நிறுத்திடேன்!

    எதுக்கு?

    நீயும் வயசான கிழவி இல்லை. இன்னிக்கெல்லாம் போனா, நாற்பது கூட ஆகலை நோக்கு. பெண் குழந்தை வேற இருக்கு.

    நேராச் சொல்லுங்கோ!

    கூசறது நேக்கு!

    பட்டு வாசல் திண்ணையில்தான் உட்கார்ந்திருந்தாள். சற்று தள்ளி நாயரின் சாயாக் கடையில் நாலைந்து பேர்... ஆட்டோக்காரர் உண்ணியின் அம்மா... எதிரே சவுண்டி மடத்தில் சின்னதான ஒரு கூட்டம்... பட்டு சட்டென குரலை உயர்த்திவிட்டாள்.

    எதுக்கு ஆடிட்டர் ரமணியாத்துக்கு சமையல் வேலைக்குப் போறதை நிறுத்தணும்?

    பட்டு, மொள்ளடி! எதுக்கு இப்ப நீ குரலை உசத்தறாய்?

    நாலு பேர் தெரிஞ்சுக்கட்டுமே மாமி! தனித்தனியா எல்லாரும் என்னைப் பத்திப் பேசத்தான் போறா. என்ன சொல்றா எல்லாரும்? ரமணி என்னை வச்சிண்டு இருக்கிறார்னுதானே! ஆமாம்... ரமணியோட ஆசைநாயகிதான் நான். போதுமா? வேறென்ன தெரியணும் இந்த கோயில்குண்டு ஜனங்களுக்கு?

    அய்யோ பட்டு... ஒரு பொம்மனாட்டி நட்ட நடு கிராமத்துல நின்னுண்டு பேசற பேச்சாடி இது?

    ஒரு பொம்மனாட்டி பத்தி ஒளிஞ்சு ஒளிஞ்சு எல்லாரும் பேசலாம். அதுல தப்பில்லை! ஆனா அவ பகிரங்மாக பதில் சொல்லக்கூடாது! அப்படித்தானே!

    குருக்கள் மாமி வெல வெலத்துப் போனாள்.

    த பாருங்கோ மாமி! இந்த என்னோட பதில் எல்லோருக்கும்தான். நான் உழைக்கிறேன். நாலு காசு சம்பாதிக்கிறேன். என் குழந்தைகளுக்கு சாதம் போடறேன். நான் கஷ்டப்பட்டப்ப யாரும் ஏன்னு கேக்கலை. போராடினது நான்தான். அதனால யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் நேக்கில்லை! எந்த நாய்க்காவது தைரியம் இருந்தா என் எதிர்ல வந்து நின்னு பேசட்டும்!

    நின்றவர்கள் அத்தனை பேரும் சட்சட்டென காணாமல் போனார்கள்.

    பட்டு உள்ளே வந்தாள். ராமகிருஷ்ணன் எதிரே வந்தான்.

    ஏம்மா நீ இப்படி கத்திப் பேசற?

    ஏன்? என்ன தப்பு? அது என் சுபாவம். உனக்கு அவமானமா இருந்தா, நீ ஆத்துக்குள்ள ஏன் இருக்கிறாய்? -ராமகிருஷ்ணன் கப்சிப்பென அடங்கிப் போனான்.

    அம்மாவிடம் பேச முடியாது. அந்தக் கிராமத்து ஜனங்களுக்கே பட்டுவைக் கண்டால் உதறல்தான். ரகசியமான பதிலே இல்லை. நாலு பேரைக் கூட்டி உரக்க விளாசித் தள்லி விடுவாள்.

    நெத்தி நிறைய குங்குமம்... மூணு வளர்ந்த குழந்தைகள்...புருஷன் எங்கேனு தெரியலை! லம்பாடி மாதிரி என்னஒரு வாய் பாரு அந்த பட்டுவுக்கு!

    கிராமத்து ஜனங்களுக்கு தில்லு போதாது! எடக்கு முடக்காப் பேசி யாராவது ஒருத்தர் இந்தப் பட்டு மாமியைக் கிழிக்கணும் ஒரு நாளைக்கு!

    அதுக்கு ஒருத்தர் பொறக்கணும். மாமிகிட்ட கிழிபட்டவாதான் அதிகம் இங்கே!

    காதுபட யார் பேசினாலும் பட்டு பொருட்படுத்தவே மாட்டாள். நேரடி மோதல் என்றால் ஒரு கை பார்த்து விட்டுத்தான் ஓய்வாள். ரமணியின் காதிலும் இது விழ, அவர் கலங்கித்தான் போனார். சாரதாவுக்கு தெரியவில்லை.

    ஒரு நாள் காலை பட்டு வேலைக்கு வந்ததும் கேட்டே விட்டார்.

    பட்டு, இப்படி வாம்மா!

    சொல்லுங்கோ!

    ஊர்ல ஒரு மாதிரி வேண்டாத பேச்செல்லாம் கிளம்பியது சங்கடமாக இருக்கு!

    மாமி தூங்கறாங்களா?

    ஏன்?

    இருங்கோ! எழுப்பிக் கூட்டிண்டு வர்றேன். அப்புறமா உங்க கேள்விக்கு பதில் சொல்றேன்!

    பட்டு... இரு! நான் சொல்ல வந்தது...!

    இருங்கோ!

    சாரதாவை எழுப்பி அழைத்து வந்தாள்.

    என்ன பட்டு?

    மாமி... உங்காத்து மாமா என்னை வச்சிண்டு இருக்கறதா ஊர்ல ஒரு பேச்சு கிளம்பியிருக்கு. மாமா காதுக்கு இப்பத்தான் அது வந்திருக்கு. எங்கிட்ட பேச்சைத் தொடங்கினார். நீங்க இப்ப அவசியம் வேணும். அதான் எழுப்பினேன்!

    சாரதா கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்க்க-

    நீங்க என்னை நம்ப வேண்டாம். நான் மூணாவது மனுஷி! ஆனா மாமா கூட இத்தனை நாள் தாம்பத்யம் நடத்தியிருக்கேள். ஊர் பேசுற இந்தப் பேச்சுக்கு உங்க பதில் என்னான்னு மாமாகிட்ட சொல்லுங்கோ!

    சாரதா சட்டெனச் சிரித்தாள்.

    ஏன் சிரிக்கறேள்?

    நான் இவரை நம்பலைன்னா, என்னையே நம்பலைன்னு அர்த்தம்! நான் ஊர் ஊரா சுத்தறேன். இவர் எம்மேலே சந்தேகப்படலாம் இல்லையா? தாம்பத்யத்துல நம்பிக்கை பரஸ்பரம் இல்லைனா, அப்புறம் என்ன வாழ்க்கைல ஒரு அர்த்தம்? பேசுற கழுதைகளைத் தள்ளுங்கோ! உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லைன்னா, தொடர்ந்து வேலைக்கு வாங்கோ!

    ரமணி நெகிழ்ந்து போனார். பட்டு உள்ளே வந்தாள். கண்கள் கலங்கி விட்டது.

    ‘எப்பேர்ப்பட்ட தம்பதிகள்! என்ன ஒரு இணக்கமும், மனப்பொருத்தமும்! ஒரு பெண்ணின் மிகப்பெரிய பலமே புருஷனும், அவர் வைத்திருக்கும் நேசமும்தான்! ‘வாழ்க்கை’ என்ற கல்லூரியில் சாரதா வெற்றி பெற்ற மனைவி! ஆனால், நான்?’

    3

    ரமணி உணவு மேஜைக்கு வந்தார்.

    ஆவி பறக்கும் வெண் பொங்கல், வடை சட்னி சாம்பாரோடு தயாராக இருந்தது.

    பட்டுதான் பரிமாறினாள்.

    அவர் ரசித்து ருசித்துச் சாப்பிடத் தொடங்கினார்.

    சமையல் அற்புதமானஒரு கலை பட்டு! சில பேராலதான் உன்னைமாதிரி அற்புதமாகச் சமைக்க முடியறது!

    சாப்பிட்டு முடித்தார்.

    நான் ஆத்துக்குப் போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்துர்றேன்!

    எதுக்கு?

    கார்த்தால கஞ்சியைக் குடிச்சிட்டு மூணும்கிடக்கும். சமையல் பண்ண வேண்டாமா?

    நீ ஏன் தனியா பண்ற? எப்படியும் இங்கே சமைக்கப் போறே! அதுல உன் குழந்தைகளுக்கும் எடுத்துண்டு போ!

    அது தப்பு! செய்யற வேலைக்குச் சம்பளம் தர்றேள். அப்புறம் சாப்பாட்டையும் எடுத்துண்டு போனா நியாயம் இல்லை!

    இந்த வெய்யில்ல ரெண்டும் ரெண்டும் நாலுகிலோ மீட்டர் நடப்பியா? கால்ல செருப்பும் போட்டுக்க மாட்ட! கொதிக்கலையா?

    என் மனசு தாங்காத சூடா? காலகள் மரத்துப் போயாச்சு! நான் வரட்டுமா?

    சரி, சொன்னா நீ கேப்பியா?

    அப்புறம் ஒரு விஷயம்!

    என்னம்மா?

    என் ரெண்டாவது பிள்ளை காசி எஸ்ஸெல்சி பெயிலாயிட்டு, ஆத்துல சும்மா இருக்கான். ஊரைச் சுத்தறான். மோசமான வயசு. அவனை எங்கேயாவது நீங்க சிபாரிசு பண்ணிச் சேர்த்துவிட முடியுமா?

    பெயிலாகித் தொலைச்சுட்டானே!

    படிப்பு ஏறலை அந்தச் சனியனுக்கு!

    "சரி, கோவப்படாதே! ரெண்டுங் கெட்டான் வயசு. ஓடிகீடப் போயிடப்போறது. மூத்தவன் ராமகிருஷ்ணன் புத்திசாலி. அதான் அட்வகேட் கிட்ட சேர்த்துவிட்டேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1