Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மயான மலர்கள்
மயான மலர்கள்
மயான மலர்கள்
Ebook101 pages36 minutes

மயான மலர்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்ணாடி முன்னால் நின்று கேசத்தை பதினெட்டாவது முறையாக வாரினான் யாதவ்.
மறுபடியும் கொஞ்சம் கோல்ட் க்ரீம், ரோஸ் பவுடர், யார்ட்லி சென்ட் என்று மானாவாரியாக பூசிக் கொண்டான்.
ஷிபான் புடவையைக் கிழித்து தைத்தது போல பளபளப்பாக ஒரு சட்டை, ஜீன்ஸ் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ.
“மறுபடியும் தலைவாரல் முடியலையா? வாரி வாரியே வழுக்கையா ஆகப்போற. எங்கே புறப்பாடு?”
“நாலு மணிக்கு எத்திராஜ் வாசல்ல இருக்கணும். ஷர்மிளா காத்துட்டு இருப்பா - நேரா காஞ்சில போய் டிபனை முடிச்சிட்டு, ஒரு ரவுண்ட் சுத்திட்டு ஷர்மியை வீட்ல ட்ராப் பண்ணிட்டு நான் இங்கே வந்திருவேன்!”
“இதுக்குத்தான் மாசாமாசம் ஊர்லேருந்து உனக்கு ட்ராஃப்ட் வருதாக்கும்? ‘என் பிள்ளை மெட்ராஸ்ல பெரிய படிப்பு படிக்கிறான். நாலு வருஷத்துல என்ஜினியராகி ஊரையே விலைக்கு வாங்குவான்’னு ஏதோ ஒரு கிராமத்துல உன்னைப் பெத்தவங்க பகல் கனவு காணுறவாங்க!”
“இடியட்! உன் சொற்பொழிவை, மேடை போட்டு நடத்து. கொஞ்சம் சில்லறையாவது தேறும்.”
“யாதவ்! உன் போக்கு சரியில்லை. அப்புறமா உன் இஷ்டம் - நல்ல ஒரு ஸ்நேகிதனுக்கு சொல்ல வேண்டிய கடமை உண்டு. சொல்லிட்டேன்.”
“போடா... சொல்லிருவேன் ஏதாவது! ஆமா, நல்ல ‘யாஷிகா’ ஒண்ணு கிடைக்குமா?”
“எதுக்கு?”
“ஷர்மியை போட்டோ எடுக்க. ‘பலான’ போஸ்கள் தர்றனு ஒத்துக்கிட்டா நேத்து!” கண்ணடித்தான்.
ராஜா முகத்தைச் சுளிக்க “வரட்டுமா சின்மயானந்தா!” விசிலடித்தபடி வெளியே வரும் யாதவ், போன மாதம் இருபத்தியொரு வயதை முடித்தான்.அவன் தகப்பனார், திருநெல்வேலி பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு, கரன்ஸிகளை அறுவடை செய்து கொண்டிருப்பவர். அந்த கிராமத்தையே தன் பிள்ளை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். மோசமான அந்த ஆசை, பல ஆயிரங்களை லஞ்சமாகக் கொடுத்து, இன்ஜினியரிங் கல்லூரியில் சேர வைத்தது. அவனுக்காக தங்குவதற்கு ரூம் ஏற்பாடு செய்து, இன்னும் எத்தனையோ...
யாதவ் கல்லூரிக்கு, அவ்வப்போது போரடிக்கும் போது போவான்.
ராஜா அவன் ரூம் மேட்... க்ளாஸ் மேட். அவன் எத்தனையோ சொல்லியும், யாதவ் திருந்துவதாக இல்லை.
‘கிராமத்துக்கு எழுதிவிட வேண்டும். இவன் தகப்பனாருக்கு நிஜத்தைத் தெரிவிப்பது என் கடமை’ என்று தீர்மானித்து விட்டான்.
யாதவ்,வெளியே வந்து தன் புல்லட்டை விடுவித்தான். சரேலென அம்புபோல விடுபட்டு, சாலையின் திருப்பத்தில் நாலைந்து பாதசாரிகள், ஒரு மொபைல் லாண்டரி, குளிர் பானம் கொண்டு வரும் ட்ரை சைக்கிள் எல்லாம் அலறி விலக,
பாந்தியன் சாலையில் நுழைந்து, சடுதியில் கமாண்டர் - இன் - சீஃப் ரோட்டைத் தொட்டுத் திரும்பி-
எத்திராஜ் வாசலுக்கு வரும்போது ஏற்கனவே கல்லூரியின் நேரம் முடிந்து, மாணவிகளின் கூட்டம் ஓயத் தொடங்கியிருந்தது.
புல்லட்டை நிதானப்படுத்தி, கண்களை அலையவிட்டான். அப்போதுதான் வந்து கொண்டிருந்தாள் ஷர்மிளா. இளம் நீலநிற சூரிதார் அணிந்து, உதிரியான கேசம் புசுபுசுவென்று முதுகு கடந்து படர -
சன்னமாகச் சிரித்துவிட்டு, காஞ்சியின் வாசலைப் பார்க்க நடந்தாள்.
யாதவ் சட்டென கியர் மாற்றி, சரேலென காஞ்சிக்குள் நுழைந்தான். ஸ்டாண்ட் போட்டு, பூட்டி, ஹெல் மெட் விலக்கி, மறுபடியும் தலைவாரிக் கொண்டான்.
ஷர்மிளா நெருங்கி விட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
மயான மலர்கள்

Read more from தேவிபாலா

Related to மயான மலர்கள்

Related ebooks

Reviews for மயான மலர்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மயான மலர்கள் - தேவிபாலா

    1

    "எப்ப என்னை டிஸ்சார்ஜ் பண்ணப் போறாங்க மது?"

    பதிலொன்றும் பேசாமல் மௌனமாக அவரையே பார்த்த மது, சாத்துக்குடியை அறுத்து ஒரு பாதியை எடுத்து ‘சர்’ரென்று பிழிய ஆரம்பித்தாள்.

    காலையில் டாக்டர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

    மிஸஸ் ரங்கா, உங்ககூட கொஞ்சம் தனியா பேசணும். வர முடியுமா?

    டாக்டரைப் பின்பற்றி டெட்டால் மணக்கும் அந்த நீண்ட காரிடாரில் நடந்தாள்.

    ஒரு வாரமாக இதே மணம்தான்.

    நர்ஸுகளின் மெல்லிய ‘ஷூ’க்களின் ஒலியும் வராண்டாவில் வேப்ப மரக்காற்றும், மருந்து வாசனையும், முனகலும்... ஒரு மாதிரி அலுத்துவிட்டது.

    டாக்டர் தன் அறைக்குள் நுழைந்து - இவளும் நுழைந்ததும் கதவைச் சாத்தினார்.

    ஒக்காருங்க மிஸஸ் ரங்கா!

    உட்கார்ந்தாள்!

    என்ன வயசு உங்களுக்கு?

    சட்டென கன்னத்தில் செம்மை படர, இருபத்தி மூணு டாக்டர்!

    மிஸ்டர் ரங்காவுக்கு?

    நாற்பது.

    மை குட்நெஸ். ஏன் பதினேழு வயசு வித்தியாசம்? ஸாரி டு என்டர் யுவர் பர்ஸனல். ஒரு சிநேகிதனா என்னை நினைச்சா நீங்க சொல்லலாம்!

    இட்ஸ் ஓகே டாக்டர். பணப் பிரச்னைதான். அப்பாவோட சிநேகிதர் மிஸ்டர் ரங்கா பணக்காரர். எங்க வீட்டுக்கு ஒருமுறை வந்திருந்தப்ப என்னை ரொம்பவும் பிடிச்சிருக்கு அவருக்கு. அப்பாகிட்ட அனுமதி கேட்டிருக்கார். அப்பா எலிமென்ட்ரி ஸ்கூல் வாத்தியார். நாங்க நாலு சகோதரிகள். மிஸ்டர் ரங்கா மூலம் சில உதவிகள் கிடைக்கலாம்னு நெனச்சு இதுக்கு என்னை ஒப்புக்க வெச்சாங்க!

    எப்பக் கல்யாணம் ஆச்சு?

    ஒரு வருஷம்கூட ஆகலை!

    ரெண்டாந்தாரமா?

    இல்லையில்லை. ரங்காவுக்கு இது முதல் கல்யாணம்தான்!

    எப்படியிருக்கு லைஃப்?

    "காலைல ஆறுமணிக்கு அவர் புறப்படும்போது நான் தூங்கிட்டு இருப்பேன். ராத்திரி அவர் வரும்போது மிட் நைட்கூட ஆயிடும் சிலசமயம்.

    எல்லா பிஸினஸும் உண்டு. எல்லா கம்பெனிகளிலும் ஷேர் உண்டு. நான் சுகபோகமா இருக்கேன். சுகம்னு சொன்னது பெரிய பங்களா, கலர் டி.வி, வீடியோ, வார்ட்ரோப் நிறைய துணிகள், போதாதா? டாக்டர்... நீங்க எதுக்காக என்னை கூப்பிட்டீங்கனு சொல்லலையே."

    சொல்றேன். போன வாரம் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்துதானே மிஸ்டர் ரங்காவை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கு?

    ஆமாம்!

    ஸாரி டூ ஸே மிஸஸ் ரங்கா. அந்த விபத்து அவரோட புருஷத் தன்மையை பறிச்சாச்சு. தாம்பத்ய உறவுக்கு அவர் இனிமே லாயக்கில்லை. அந்த சமயம் ரத்த அழுத்தம் அதிகமாகும். அது ஆச்சுனா உயிருக்கு ஆபத்து.

    ..........!

    என்ன மேடம். ஆர் யு ஆல் ரைட்?

    பர்ஃபெக்ட்லி டாக்டர். என் இளமைக்குப் பொருந்தாத கல்யாணம். கனவுகளை புரிஞ்சுக்கக் கூட நேரமில்லாத அவரோட பிஸினஸ். இத்தனை நாள் என்ன வாழ்ந்தது? எனக்கு வருத்தமேயில்லை. வேறென்ன டாக்டர்?

    அது மட்டுமில்லை மேடம். கொஞ்ச நாளைக்கு அவருக்கு இது தெரிய வேண்டாம். அதிர்ச்சி கூடாது!

    கொஞ்ச நாள்னா?

    அட்லீஸ்ட் மூணு மாசங்கள்!

    சரி டாக்டர். எப்ப டிஸ்சார்ஜ் பண்ணலாம்?

    நாளைக்கே. ஆனா பெட் ரெஸ்ட்ல மூணு மாசம் கண்டிப்பா இருக்கணும். நானே வந்து அவர்கிட்டே சொல்றேன்!

    வெளியே வந்தாள் மது. சட்டென சூன்யமாக உணர்ந்தாள்.

    இப்போதெல்லாம் ஆசைகளோ, கனவுகளோ வருவதில்லை. பல சமயம் தூக்கம்தான் வருகிறது.

    "மது, உங்கிட்ட நான் கேக்கறது யாசகம்தான். ஆனாலும் வேற வழி தோணலைம்மா எனக்கு. நீ அந்த ரங்காவுக்கு கழுத்தை நீட்ட சம்மதிச்சா உன்னோட மூணு தங்கைகளுக்கும் ஒரு வெளிச்சம் கிடைக்கும்மா. ரங்கா ஒண்ணும் கிழவன் இல்லை. முதல் தாரம் செத்து மூணு குழந்தைகளோட நிக்கற தகப்பனும் இல்லை, ஹீ ஈஸ் ஆன் எலிஜிபிள் பேச்சிலர்!"

    சட்டென சிரிப்பு வர, வராண்டாவின் கோடியை அடைந்தாள் மது.

    என்ன மது, என்மேல வருத்தம் உண்டா உனக்கு?

    ............!

    நீ இஷ்டப்பட்டுத்தானே இந்தக் கல்யாணம் நடந்தது?

    ம்!

    குட். நீ வந்த நேரம் நிறைய ஆர்டர்ஸ் வந்திருக்கு. எனக்கு ஒரு வருஷத்துக்கு மூச்சு விடக்கூட நேரமிருக்காது. இதெல்லாம் முடியட்டும், அடுத்த வருஷமே சுவிட்சர்லாந்துல நம்ம ஹனிமுன். ஓக்கே?

    சட்டென நின்றாள் மது!

    ஹனிமூன்! இனிமேல் தனி மூன்தான்!

    அறைக்குள் நுழைந்தபோது நல்ல உறக்கத்தில் இருந்தார் ரங்கா.

    நல்ல உயரம். ராணுவத்தனமான உடம்பு, உயர்த்தி வாரிய அடர்த்தியான கேசத்தில் அங்கங்கே நரை. சிவந்த நிறம். நாற்பதிலும் ஒரு ‘ஹி - மேன்’ ஆக ரங்கா.

    பெருமூச்சு விட்டாள் மது.

    கதவு தட்டப்படும் ஓசை கேட்க-

    யெஸ் கமின்!

    தலையைத் திருப்பி மது பார்க்க கதவைத் தள்ளிக் கொண்டு அந்த இளைஞன் நுழைந்தான்.

    மதுவின் மோசமான விதியும் கூடவே நுழைந்தது.

    2

    கண்ணாடி முன்னால் நின்று கேசத்தை பதினெட்டாவது முறையாக வாரினான் யாதவ்.

    மறுபடியும் கொஞ்சம் கோல்ட் க்ரீம், ரோஸ் பவுடர், யார்ட்லி சென்ட் என்று மானாவாரியாக பூசிக் கொண்டான்.

    ஷிபான் புடவையைக் கிழித்து தைத்தது போல பளபளப்பாக ஒரு சட்டை, ஜீன்ஸ் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ.

    மறுபடியும் தலைவாரல் முடியலையா? வாரி வாரியே வழுக்கையா ஆகப்போற. எங்கே புறப்பாடு?

    "நாலு மணிக்கு எத்திராஜ் வாசல்ல இருக்கணும். ஷர்மிளா காத்துட்டு இருப்பா - நேரா காஞ்சில போய் டிபனை

    Enjoying the preview?
    Page 1 of 1