Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

போர்க்களப் பூக்கள்
போர்க்களப் பூக்கள்
போர்க்களப் பூக்கள்
Ebook128 pages1 hour

போர்க்களப் பூக்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரவு பத்து மணிக்குத்தான் வீடு திரும்பினாள் பிரியா.
‘தாமதமாகும்’ என்று போன் மூலம் அம்மாவுக்கு தகவல் சொல்லி இருந்தாள்.
ஆனாலும், அம்மாவிடம் கலக்கம் இருந்தது. வாசலைப் பார்த்தபடி உட்கார்ந்துவிட்டாள்.
கம்பெனி கார் அவளைப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்தது.
முகம் கழுவி, சாப்பிட உட்கார இரவு பத்தே முக்கால் ஆகிவிட்டது.
“ஏன்ம்மா இத்தனை தாமதம்?”
“வேற ஒருத்தர் ஆபீசுக்கு வர முடியாத சூழ்நிலை... அந்த வேலையை எங்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க. நிறைய தேங்கி நிக்குது... முடிச்சாகணும்.”
“தினமும் ‘லேட்டாகுமா பிரியா?”
“கொஞ்ச நாளைக்கும்மா! சரி பண்ணிட்டா பிரச்சினை இல்லை. சனி, ஞாயிறுகூட ‘ஓவர்டைம்’ வேலை பார்க்க வேண்டியது வரலாம்.”
“இந்த ஞாயிற்றுக்கிழமையா?”
“ஏன்... ஏதாவது வேலை இருக்கா?”
அக்கா வாணி வெளியே வந்தாள்.
“தரகர் ஒரு ஜாதகம் குடுத்தார் பிரியா. அது பிரமாதமா பொருந்தி இருக்கு. ஞாயிறு காலையில் பெண் பார்க்க வராலாமானு கேட்டிருக்காங்க... அம்மா ‘சரி’ன்னு சொல்லிட்டாங்க.”
பிரியா படக்கென திரும்பினாள்என்னைக் கேக்காம எதுக்கு நீயே ஒத்துக்கற?”
“என்னடி... ஞாயிற்றுக்கிழமை உனக்கு ‘லீவு’தானே? அதான் வரச் சொன்னேன்.”
“ஞாயிறு ஒரு பக்கம் இருக்கட்டும். இப்ப எனக்குக் கல்யாண முயற்சி எதுக்கு?”
“என்னடீ இப்படி கேக்கற? உனக்கு வயசு இருபத்தி ஆறும்மா! இனி தாமதிக்கக்கூடாது.”
“நம்ம குடும்பப் பிரச்சினைகளை வச்சுகிட்டு, கல்யாணத்தைப் பத்திப் பேசலாமா?”
வாணி முன்னால் வந்தாள்.
“பிரியா! நீ என்னைத்தானே சொல்றே?”
“அக்கா...”
“எனக்கே அந்தக் கலக்கம் இருக்கு. ஒரு வாழாவெட்டி அக்கா- வீட்ல வந்து இருக்கும்போது, தங்கச்சியோட கல்யாணம் கேள்விக்குறிதான்.”
“அய்யோ... அக்கா! நான் அந்த அர்த்தத்துல சொல்லலை...”
“நீ சொல்லாம இருக்கலாம் பிரியா! ஆனா, நிஜம் அதுதானே? நமக்கு அப்பா உயிரோட இல்லை. அம்மா விதவை. நான் வாழாவெட்டி. இந்தக் குடும்பமே ஒரு கேள்விக்குறி. உன் கழுத்துல நல்லபடியா தாலி ஏறணுமேன்னு எனக்கே பயமா இருக்கு.”
“நிறுத்துடி! நாம ஒழுக்கமா வாழறோம். உங்க அப்பா மாரடைப்புல இறந்து நாலு வருஷங்களாச்சு... அவர் தாராளமா சேர்த்து வச்சிட்டுத்தான் போயிருக்கார். பிரியா படிச்சு முடிச்சு வேலைக்கும் வந்தாச்சு. நீயும் ஒரு ‘ஸ்கூல்’ல டீச்சரா வேலை பார்க்கறே! நாம யாரையும் சார்ந்து, யார்கிட்டேயும் யாசகம் கேட்டு நிக்கலையே? ஆண்கள் இல்லாத குடும்பம். அது ஒரு தப்பா?”
அம்மா லட்சுமி பொங்கி வெடித்துவிட்டாள்.
மூத்தவள் வாணி வந்து அம்மாவின் தோளை அழுத்திப் பிடித்தாள்.
“எதுக்காக நீ இப்படி பதற்றப்படுறே?”பதற்றம் இல்லைம்மா! உங்க அப்பாவுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்ல. நல்லா உழைச்சார். பணம் சேர்த்து வச்சார். வாணியை கல்யாணமும் செஞ்சு கொடுத்தார்.”
“சரிம்மா. என் வாழ்க்கை சரியா அமையாத அதிர்ச்சிதானே அப்பாவோட மாரடைப்புக்குக் காரணம்?”
“அது விதிடி!”
“இல்லைம்மா... ‘ஒரு குடிகாரனுக்கு என் மகளை கட்டி வச்சிட்டேனே’ன்னு அப்பா புலம்பாத நாள் ஏது? அவர்கூட நாலஞ்சு வருஷங்கள் நான் போராடி, அவரைத் திருத்தப்பட்ட பாடு கொஞ்சமா? அந்த முயற்சியில தோத்துட்டேன். அங்கே என்னை விட்டுவைக்க மனமில்லாம, அப்பா கூட்டிட்டு வந்துட்டார். விவாகரத்தும் வாங்கியாச்சு! நல்ல காலம்... ஒரு குழந்தை பிறக்கலை. நான் பொழச்சேன். பாவம் அப்பா... உருகி உருகித்தானே உயிரைவிட்டார்?”
அம்மா அழுதாள்.
கை கழுவிவிட்டு எழுந்து வந்தாள் பிரியா

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
போர்க்களப் பூக்கள்

Read more from தேவிபாலா

Related to போர்க்களப் பூக்கள்

Related ebooks

Reviews for போர்க்களப் பூக்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    போர்க்களப் பூக்கள் - தேவிபாலா

    1

    ‘சேர்மன்’ அழைக்க, பிரியா உள்ளே போய் வணங்கினாள்.

    ராகவன் வந்துட்டாரா பிரியா?

    இதுவரைக்கும் இல்ல சார்.

    இப்ப பதினொரு மணி! ஒன்பதரைக்கு ஆபீஸ் ஆரம்பம். இனிமே வரமாட்டார். இதோட மூணு நாளாச்சு! ஏதாவது தகவல் உண்டா?

    சார்... ‘லீவு லெட்டரும்’ வரலை. போன் மூலமாக்கூட யாரும் தகவல் சொல்லலை.

    முக்கியமான பதவில இருந்துகிட்டு இப்படி பொறுப்பில்லாம இருந்தா எப்படி?

    ஆறு மாசமாவே அவர் இப்படித்தான் இருக்கார் சார்!

    இது தொடர்ந்தா... அவர் மேல கண்டிப்பா நடவடிக்கை எடுக்கணும். சரி, அவரோட வேலைகளை நீங்க செய்யுங்க பிரியா! அதெல்லாம் தெரிஞ்ச ஒரே நபர் இந்த ஆபீஸ்ல நீங்கதான். முடிஞ்சா இந்த சனி, ஞாயிறு ஆபீசுக்கு வந்து, கூடுதல் நேரம் வேலை பாருங்க. ‘பர்சேஸ் டிபார்ட்மெண்ட்’ வேலை எதுவும் நின்னு போயிடக்கூடாது.

    சரி சார்.

    ராகவன் இந்த கம்பெனியில ஒரு பொறுப்பான ஊழியர்! என்ன பிரச்சினை?

    தெரியலை சார்.

    பிரியா தன் இருப்பிடம் வந்துவிட்டாள்.

    ராகவனின் வேலைகளை அவளிடம் ஒப்படைத்த அடுத்த சில நொடிகளில், பிரியா கவனமாக இருந்து அவற்றை அட்டவணைப்படுத்தி செயல்பட்டாள். ஏராளமான கோப்புகள் தேங்கிக் கிடந்தன. பார்த்ததும் மலைப்பாக இருந்தது.

    சீதா அருகில் வந்தாள்.

    ராகவனோட வேலையை உன் தலையில கட்டிட்டாரா சேர்மன்?

    பொறுப்பானது... செஞ்சுதானே ஆகணும்?

    விடாதே! கெட்டியா புடிச்சுக்கோ. ராகவன் சரியாத்தான் இருந்தார். கடந்த ஆறு மாசமா அவரோட சகவாசம் சரியில்ல. குடிப்பழக்கம் வந்திருக்கு! என்ற சீதாவை வெறுப்புடன் பார்த்தாள் பிரியா.

    ஏன் அப்படிப் பார்க்கற? இப்பல்லாம் நூத்துக்கு தொண்ணூறு ஆண்கள் குடிக்கறாங்க... பல பேர் மொடாக் குடியன். சில பேர்தான் அளவா இருக்காங்க.

    அளவா ஆரம்பிக்கறதுதான் மொடாக்குடியில கொண்டு போய் விடுது. தப்பு... தப்புதானே? விடுங்க! எதுக்கு நமக்கு இந்தப் பேச்சு?

    பிரியா, வேலைகளை கவனிக்கத் தொடங்கிவிட்டாள்.

    பிற்பகல் மூன்று மணி. ராகவன் வர...

    ஆபீசே பரபரப்பாகிவிட்டது.

    நன்றாகக் குடித்துவிட்டு வந்திருந்தான்.

    நேராக தன் இருப்பிடம் வந்தான்.

    அங்கே எதுவும் இல்லை!

    இங்கே இருந்த முக்கியமான ‘பைல்’கள் எங்கே?

    சேர்மன் அதையெல்லாம் பிரியாகிட்ட ஒப்படைச்சிருக்கார்!

    எதுக்கு?

    நீங்க வரலை. வேலைகள் தேங்கிப் போகுது... அதனால குடுத்திருக்கார்.

    அவளுக்கென்ன தெரியும்? இது பொறுப்பான ‘சீட்!’ பிரியா ஜூனியர்! அவளால இந்த வேலைகளைச் செய்ய முடியாது.

    ராகவன் எழுந்து பிரியாவின் இருப்பிடம் வந்தார்.

    பிரியா!

    நிமிர்ந்து பார்த்தாள்.

    நான் உனக்கு மேலதிகாரி! வந்து நின்னா, எழுந்து மரியாதை குடுக்கமாட்டியா?

    அவள் பேசாமல் வேலைகளைக் கவனிக்க,

    உன்னைத்தான் கேக்கறேன்!

    நான் வேலையில மும்முரமா இருக்கேன்..

    வேலையென்ன புண்ணாக்கு! என் வேலைகளை ‘சேர்மன்’ உங்கிட்ட ஒப்படைச்சா, நீ ராகவன் ஆயிடுவியா? உன்னால செய்ய முடியுமா?

    மறுபடி நிமிர்ந்தாள் பிரியா.

    சார்! ‘சேர்மன்’ சொன்னதுக்கு கட்டுப்படுறது என் கடமை.

    தேவையில்லை. நான் பார்த்துக்கிறேன். என் வேலைகளை திரும்ப எங்கிட்ட ஒப்படைச்சிடு.

    அதை ‘சேர்மன்’ சொல்லட்டும்!

    திமிரா உனக்கு?

    அதற்குள் அங்கு நாலு பேர் வந்துவிட்டார்கள்.

    பிரியா! சரின்னு தலையாட்டுங்க. இப்ப ராகவனோட நிலைமை சரியில்ல.

    குடிச்சிட்டு ஆபீசுக்கு வர்றது தப்பு. எங்கிட்டவும் தப்பா பேசறார். நான் ‘சேர்மன்’கிட்ட சொல்லுவேன்.

    வேண்டாம் பிரியா! ‘சேர்மன்’ இப்ப வெளியில இருக்கார். அவருக்கு இது தெரிஞ்சா, விளைவுகள் விபரீதமாகும். ராகவன் குடும்பஸ்தர். நாங்க பேசி சரிக்கட்டுறோம்! விட்ருங்க இதை.

    என்னாங்கடா... ‘ஓவரா’ பேசறாளா அவ?

    ராகவன்! நீங்க இப்படி வாங்க, பிளீஸ்!

    மாட்டேன். என் வேலைகளை என்கிட்ட ஒப்படைக்காம வரமாட்டேன்.

    தருவாங்க ராகவன்! நீங்க புறப்படுங்க. நாளை முதல் வேலையைத் தொடங்கலாம்.

    இல்லை! இப்ப செஞ்சாகணும்... இன்னிக்குப் போய்ச் சேர வேண்டிய ‘பில்’கள் இருக்கு.

    பிரியா விலகிப் போனாள்.

    சேர்மனுக்கு ‘டயல்’ செய்துவிட்டாள்.

    உஷா ஓடி வந்தாள்.

    யாருக்கு பிரியா... சேர்மனுக்கா? அவசரப்படாதே!

    அவள் கேட்கவில்லை.

    ‘டயல்’ செய்ததும், ‘சேர்மன்’ இணைப்பு கிடைத்துவிட்டது.

    சொல்லு பிரியா!

    அங்கு நடப்பதை சின்னக் குரலில் சொல்லிக்கொண்டே வந்தாள். கோபத்தில் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிவிட்டாள்.

    சார்! எனக்கு நீங்க முதலாளியா... இல்லை ராகவன் சாரா? குடிச்சிட்டு வந்து- பெண் ஊழியர்கிட்ட இந்த மாதிரி நடந்துக்கிட்டா எப்படி சார்?

    சரி, நீங்க வைங்க! நான் பார்த்துக்கிறேன்.

    அதற்குள் ராகவனை சமாதானப்படுத்தி நாலைந்து பேர் கூட்ட அறையில் உட்கார வைத்தார்கள்.

    அவரது போதையை இறக்கும் பணியில்கூட ஈடுபட்டார்கள்.

    ராகவன்! நீங்க இப்பப் புறப்பட்டுப் போயிட்டு, நாளைக்கு வாங்க!

    முடியாது. வேலைகளை முடிக்காம நான் போகமாட்டேன்.

    இந்த நிலையில் உங்களால வேலை பார்க்க முடியாது.

    முடியும். எந்த நிலையிலும் என்னால வேலையைக் கவனிக்க முடியும். விடுங்க!

    அரை மணி நேரப் போராட்டம்.

    கதவு படாரென திறந்தது.

    அனைவரும் திரும்ப,

    ‘சேர்மன்’ நின்றிருந்தார்.

    ராகவன் எழுந்து நின்றார்.

    குட்மார்னிங் சார்!

    இப்ப ‘மார்னிங்’ இல்ல ராகவன்! மணி நாலாகப் போகுது. இது சாயந்திரம்!

    ஸாரி சார். நான் ராத்திரி முழுக்க இருந்து வேலைகளை முடிச்சிட்டுப் போறேன்.

    ராகவன் எழுந்து நடக்க முயன்று, முடியாமல் தடுக்கி ‘சேர்மன்’ காலடியில் வந்து விழுந்தார்.

    அவர் முகம் சிவந்துவிட்டது.

    இவரை இங்கிருந்து அப்புறப்படுத்திடுங்க! யாரும் எந்த சமாதானமும் சொல்ல வேண்டாம். பாதி வேலையில வந்தேன் நான். ‘ஸ்டார் ஓட்டல்’ல ‘பட்ஜெட் மீட்டிங்’ நடக்குது. இடியட்! நாளைக்குப் பேசிக்கலாம்.

    வெளியே வந்தார்.

    பிரியா... வாங்க!

    அவர் பின்னால் அவள் ஓடினாள்.

    சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

    சரி சார்.

    காரில் ஏறிப் போய்விட்டார்.

    பிரியா தன் இருப்பிடத்தில் வந்து உட்கார்ந்தாள்.

    ‘சீனியர் ஆபீசர்’ கோதண்டம் அருகில் வந்தார்.

    பிரியா! நாங்க எல்லோரும் அத்தனை சொல்லியும் அவசரப்பட்டுட்டீங்க. நீங்க போன்ல சொல்லலைன்னா, ‘சேர்மன்’ இங்கே வந்தே இருக்கமாட்டார்.

    எதுக்கு சார் ஒரு குடிகாரனை இப்படி இழுத்து மூடுறீங்க? வேலை நேரத்துல வந்து கலாட்டா பண்றது நியாயமா?

    அய்யோ! அது நியாயம்னு நாங்க சொல்லலைம்மா... தப்புதான். இருந்தாலும், அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்துட்டா அவர் குடும்பம் பாதிக்குமே?

    பாதிக்கட்டும். இந்த மாதிரி கேடு கெட்டவங்க தண்டிக்கப்படணும் சார்! காப்பாத்த நினைக்காதீங்க. அதுதான் பெரிய தப்பு. ஸாரி சார்! ‘சேர்மன்’ நிறைய வேலைகளை எங்கிட்ட ஒப்படைச்சிருக்கார். பேச நேரமில்லை.

    பிரியா வேலையில் மூழ்கிப் போக, ராகவனை இழுத்து வந்து ஒரு ஆட்டோவில் ஏற்றினார்கள்.

    பாண்டி! இவரை பத்திரமாக வீட்ல கொண்டு போய் சேர்த்துடு!

    நான் போகமாட்டேன். ராகவன் கூச்சலிட,

    இரண்டு பேர் அவரை அழுத்தி உட்கார வைத்தார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1