Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கோடையில் பனி மழை!
கோடையில் பனி மழை!
கோடையில் பனி மழை!
Ebook142 pages27 minutes

கோடையில் பனி மழை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

த்ரிக்கு கம்ப்யூட்டரில் அந்த நாலு நாட்களும் முக்கியமான சார்ட் ஒன்றைத் தயாரிக்க வேண்டி இருந்தது. அது சற்றே கடினமான வேலை! 


காலை ஆறு மணிக்குப் போனால், இரவு பத்தரையாகும் வீடு திரும்ப. பேருக்கு சாப்பிட்டு விட்டு படுத்து விடுவான். நாலு நாட்கள் எந்திர கதியில் உழைத்து சார்ட்டை முடித்து விட்டான். எம்.டி.யிடம் கொண்டு வந்து தந்தான். 


“முடிச்சாச்சா?” 


“ஆச்சு சார்!” 


“மைகாட். பதினைஞ்சு நாள்ள செய்ய வேண்டிய வேலையை நாலுநாள்ள முடிச்சிட்டீங்களா? வொண்டர்! இது நம்ம கம்பெனிக்குப் பெரிய பிஸினஸ். போட்டிக் கம்பெனிகள் நாலஞ்சு சார்ட் தயாரிச்சிட்டு இருக்காங்க. வேற யாரும் இத்தனை வேகமா செஞ்சிருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்! எனிவே, சப்மிட் பண்ணிக்றேன் இன்னிக்கே!” 


மறுநாள் ஞாயிறு! 


பத்ரி வீட்டில் நன்றாக உறங்கினான். 


எழுந்து குளித்துவிட்டு சாப்பிட வந்தான்.


“உட்காரு பத்ரி பேசலாம்!” 


“என்னக்கா? கடன் சங்கதி எப்படி இருக்கு?” 


“பத்து சதவிதம் வட்டினு ஒண்ணரை லட்சம் தர ஒரு பார்ட்டியை எங்க ஜியெம் புடிச்சுத் தந்திருக்கார். ரொம்பக் குறைஞ்ச வட்டி. மாசம் ஆயிரத்து முன்னூறு ரூபா போகும்! தவிர என்னோட லோன்கள் மூலமா ரெண்டாயிரம் போகும். ஒரு ஃபைனல் வித்ட்ராயலும் போட்டுத் தர்றேன்!” 


“அவங்களைக் கேக்காம போடலாமாக்கா?” 


“நான் போட்டிருக்கேன்னு தெரியுமா அவங்களுக்கு? கூடப்பிறந்தவனுக்கு இதுகூடச் செய்யலைனா எப்படி பத்ரி?” 


“சரி! விஷயத்துக்கு வா!” 


“நீ மாசம் மூவாயிரத்து முன்னூறு ரூபா கடன் அடைக்கணும்! உன் கையில பிடித்தம் போக நாலாயிரத்து எண்ணூறு ரூபா வருது! மீதி ஆயிரத்து நூறுல, ஆயிரம் ரூபா வாடகையும் தந்துட்டா, நீயும் அம்மாவும் என்ன செய்வீங்க? மண்ணையா தின்ன முடியும்?” 


“அதுகூட நல்ல ஐடியாக்கா!” 


“பத்ரி நான் சீரியஸா பேசறேன்!”  


“ஏற்பாடு பண்ணுக்கா! இப்ப பணம் நமக்கு முக்கியம்! உன் கல்யாணம் நடக்கணும்! நாங்க சமாளிச்சிப்போம்! தேதி குறிக்கச் சொல்லும்மா!” 


“பத்ரி. எனக்கு பயம்மா இருக்குடா!” 


“வாழ்க்கைனா, எல்லாமே ரிஸ்க்தான்கா! எங்களுக்காக உழைச்ச உனக்காக நாங்க ஒரு வேளையோ, ரெண்டு வேளையோ பட்னி கிடந்தாக்கூட தப்பில்லைக்கா! உனக்கொரு வாழ்க்கை வருது பாரு!” 


சாவித்ரியின் கண்கள் தளும்பியது. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
கோடையில் பனி மழை!

Read more from தேவிபாலா

Related to கோடையில் பனி மழை!

Related ebooks

Reviews for கோடையில் பனி மழை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கோடையில் பனி மழை! - தேவிபாலா

    1

    ‘பத்ரிக்கு வேலை கிடைக்க வேண்டுமே’ என்று அம்மா காத்துக் கொண்டிருந்தாள். பட்டப்படிப்பு முடித்து பத்ரி மூன்று வருடங்கள் வீட்டில் இருந்து விட்டான். இத்தனைக்கும் முதல் வகுப்பு மாணவன். சகலமும் தெரிந்தவன். அபார புத்திசாலி. ஆனாலும் பத்ரிக்கு ஏனோ வேலை மட்டும் கிடைக்கவே இல்லை!

    முதல் ஒரு வருடம் அது பாதிக்கவில்லை!

    அடுத்து வந்த நாட்களில் அது மிக பலமாகத் தாக்கியது.

    காரணம் அப்பா இல்லாத வீடு!

    பத்ரி மூன்றாவது வருடம் பட்டப்படிப்பில் இருக்கும் போது அப்பா இறந்து போனார். அவர் சுமாராக சம்பாதித்தார். சேமிப்பு எதுவும் இல்லை. கடனுடன் குடும்பம் அக்கா தலையில் வந்து உட்கார்ந்தது!

    அக்கா சாவித்ரிக்கும் பத்ரிக்கும் ஆறு வயது வித்யாசம். சாவித்ரி தன் பதினெட்டு வயதில் வேலைக்குச் சேர்ந்தவள். இருக்குமிடம் தெரியாது. அத்தனை சாதுப்பெண். எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டாள். குடும்பத்தை அவள் நடத்த வேண்டிய கட்டாயம்.

    அப்பா போன துக்கத்தில் அம்மா பேசாமல் இருந்தாள் முதலில். பிறகு அம்மாவே குத்திக்காட்டத் தொடங்கி விட்டாள்.

    சாவித்ரிக்கு வயசு ஏறிட்டே போகுது! நீயும் ஒரு வேலைக்கு போகாம வீட்லயே இருந்தா எப்படி?

    அம்மா! பேசாம இரு! அவன் கிடைச்சிட்டு, போகாம இருக்கானா? அவனுக்கும் கிடைக்கும். மனசை நோகடிக்காதே! நீ கவலைப்படாதேடா பத்ரி. உனக்கும் நல்லகாலம் வரும்!

    இதமாக ஆறுதல் சொல்வாள்.

    அவன் மேல் அக்காவுக்கு உயிர்.

    குழந்தைக்காலம் தொட்டே அவனை யாரும் எதுவும் சொல்ல சாவித்ரி அனுமதிக்க மாட்டாள்.

    தனக்கொரு தீனிப்பொருள் கிடைத்தாலும் அதை பத்ரிக்காக பத்திரப்படுத்துவாள்.

    அவனுக்கொரு சளிப்பிடித்தால் கூட துடித்துப் போவாள். அந்தப் பாசம் சற்றும் மங்கவில்லை!

    பத்ரியின் இடைவிடாத முயற்சியில் அவனது 24-வது வயதில் நல்ல ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து விட்டது.

    அன்று மாலையே உற்சாகத்தின் விளிம்புக்கே வந்து விட்டான் பத்ரி.

    அக்கா! எனக்கு வேலை கிடைச்சாச்சு! அம்மா நான் இனி தண்டச்சோறு இல்லை! அக்காவுக்கு உடனடியா வரன் பார்த்துக்கோ!

    இரு பத்ரி! அவசரப்படாதே! நம்ம கையில சேமிப்பு எதுவும் இல்லை! முழுக்க முழுக்க நீ கடன் வாங்கினா, உன் சம்பளத்தை அப்படியே கடனா அடைக்க வேண்டிவரும். அதுகூடப் பத்தாது! அப்புறம் நீ நிமிர பல வருடங்கள் ஆகும்.

    அதனால? எப்ப நீ கல்யாணம் செஞ்சுக்கப் போற? இப்பவே உனக்கு வயசு முப்பது!

    அம்மா! நீ சும்மாரு! அவன் குழந்தை! அவன் தலைல அளவுக்கு மீறி பாரம் ஏற்றக்கூடாது!

    இல்லைக்கா! நான் சுமக்கறேன்! இனிமே நீ கவலைப்பட வேண்டாம். இனிமேலும் காலம் கடந்தா, உனக்குக் கல்யாணம் நடக்காது. அம்மா! நீ வரன் பார்த்துக்கோ!

    அம்மா தரகரை அழைத்தாள்.

    ஜாதகம் தந்தாள். விபரங்களைச் சொன்னாள்.

    உடனடியாக எதுவும் நடந்து விடவில்லை. நாலைந்து மாதங்கள் ஓடிவிட்டன.

    ஓரிரு வரன்கள் ஜாதகங்கள் சேரவில்லை. சிலது பேச்சோடு நின்றது.

    சிலது போட்டோ பார்க்கும் வரை வந்தது.

    நாலைந்து மாதங்களுக்குப் பிறகு ஒன்றுதான் பெண் பார்க்கும் வரை வந்தது. அந்த வரன் தனியார் கம்பெனியில் உத்யோகம். ஒரே பையன்.

    பெற்றோர்கள் உடன் இருக்கிறார்கள்.

    ஒரு அக்கா, ஒரு அண்ணன், (பெரியப்பா மகன்) ஒரு தங்கை உடன்பிறப்புகள். தங்கைக்கு கல்யாணம் ஆகவில்லை!

    நாளை பெண் பார்க்க வருகிறார்கள்!

    சாவித்ரி பத்ரி இருவரும் லீவு போட்டு விட்டார்கள்.

    சாவித்ரி கொஞ்சம் டென்ஷனில் இருந்தாள். அம்மாவுக்கு, இது அமைய வேண்டுமே என்ற கவலை!

    பத்ரி அக்காவை அழைத்துச் சொல்லிவிட்டான்.

    அக்கா! உன் மனசுக்கு பூரண திருப்தி இருந்தா சம்மதி. இல்லைனா விட்ரு! இத்தனை நாள் இந்தக் குடும்பத்துக்காக நீ உழைச்சாச்சு. போற எடத்துல நிம்மதி வேணும் உனக்கு!

    சாவித்ரி தலையாட்டிக் கொண்டாள்.

    பிற்பகல் மூன்று மணிக்கு பெற்றவர்கள், அந்த கடைசித் தங்கை சகிதம் அவன் வந்து இறங்கினான். பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பார்வைக்கு ஒரு கம்பீரம் இருந்தது. நிறம் மங்கலாக இருந்தாலும் முகத்தில் ஒரு வசீகரம் தெரிந்தது.

    சாவித்ரி வந்து நமஸ்கரித்தாள்.

    மணிகண்டன் பார்த்தான். அவனுக்குப் பிடித்து விட்டது. பெரியவர்களுக்கும் திருப்திதான்.

    அந்தம்மா நேரடியாக விஷயத்துக்கு வந்து விட்டாள்.

    எங்களுக்குப் புடிச்சிருக்கு! உனக்கு என் பிள்ளையைப் பிடிச்சிருக்கா? சாவித்ரி லேசான சிரிப்புடன் தலையை ஆட்டினாள்.

    நல்லது! மற்ற விஷயங்களைப் பேசலாமா?

    பத்ரி வந்து உட்கார்ந்தான்.

    நகை என்ன போடறீங்க? மற்றதெல்லாம் எப்படி செய்ய போறீங்க?

    பத்து சவரன் போடறம்மா!

    பத்து சவரனா? எங்க குடும்பத்துல இருபதுக்குக் குறைச்சு யாரும் நகை போட்டுக்கறதில்லை

    இப்போதைக்கு பத்து போடறம். அப்புறம் கொஞ்சங் கொஞ்சமா செஞ்சுபோடறம்!

    அதெல்லாம் சும்மா! இப்படி சொன்னவங்க யாரும் செஞ்சதா சரித்திரமே. இல்லை! சரி, பதினைஞ்சு போட்ருங்க! கையில் பத்தாயிரம் ரொக்கம் குடுத்துருங்க! எங்க குடும்பம் மொத்தத்துக்கும் இவன் ஒருத்தன்தான் ஆண் வாரிசு! அதனால் நிறைய பேருக்கு நாங்க செய்யணும். பட்டுச் சேலைகள் எதுவும் அஞ்சாயிரத்துக்குக் குறையக் கூடாது! தவிர, நாங்க சொல்ற மண்டபத்தை வாடகைக்கு எடுங்க. எங்க ஆட்கள் சொந்த பந்தம், ஆபீஸ்னு ஆயிரம் பேர் உண்டு. நல்லா கவனிக்கணும்! எப்பக் கல்யாணத்தை வச்சுக்கலாம்!

    நாங்க கொஞ்சம் தனியாப் பேசணும்!

    பத்ரி சொன்னான்.

    நிதானமாப் பேசுங்க! தேதி குறிச்சு எங்களுக்கு அனுப்புங்க! சாவித்ரி சீக்கிரம் வந்து சேரு!

    டிபனை சாப்பிட்டு விட்டு அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். ஆட்டோ போனதும்,

    பத்ரி உள்ளே வந்தான்.

    இந்த வரன் வேண்டாம்கா! அந்தம்மா பேசறது வியாபாரமா இருக்கு. சரியில்லை!

    இதப்பாரு பத்ரி! நம்ம வீட்ல கல்யாணம் பேசறது இப்பத்தான் முதல் தடவை. அவங்க அதிகமா எதுவும் கேட்டுட்டதா எனக்குத் தெரியலை!

    இதுக்கு மேல என்னம்மா கேக்கணும்?

    ஆமாம்மா கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் இருந்தாத்தான் இந்தக் கல்யாணம் நடக்கும். அதுவே பத்தாது. பணத்துக்கு எங்கேமா போறது?

    செஞ்சுதாண்டி ஆகணும்! பொண்ணைப் பெத்தவங்க எல்லாம் கையில் வச்சுகிட்டா அலையறாங்க? கடனை உடனை வாங்கி செய்ய வேண்டியதுதான்!

    காசுக்காக நான் சொல்லலைமா. கடன் வாங்கத் தயார்! ஆனா அக்கா இவங்க வீட்ல போய் சந்தோஷமா இருப்பாளா?

    ஏண்டா பத்ரி? அதுக்கென்ன கஷ்டம்?

    அந்தம்மா டாமினேட் பண்றாங்க. அவர் - மாப்ளை - சும்மா இருக்கார்!

    மூணாவது மனுஷங்களுக்கு முன்னால தாயை விட்டுத்தர முடியுமா? நீ செய்வியா? எல்லாம் இவ கழுத்துல மூணு முடிச்சு போட்டா, சரியாகும்!

    அக்கா! உனக்கு அவரைப் பிடிச்சிருக்கா?

    அது இப்ப பிரச்சனையில்லை பத்ரி! உன்னால - உன் ஒருத்தனால பணத்தைப் புரட்ட முடியுமா?

    முடிஞ்சுதானேக்கா ஆகணும்?

    எப்படி? நீ சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகலை! உனக்கு பிராவிடண்ட் பண்ட் இருக்காது. கம்பெனில சல்லிக்காசு கூட நீ கடன் வாங்க முடியாது!

    Enjoying the preview?
    Page 1 of 1