Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அழகான ஆபத்து
அழகான ஆபத்து
அழகான ஆபத்து
Ebook139 pages54 minutes

அழகான ஆபத்து

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்யாணம் முடிந்த மறுநாளே குலதெய்வம் கோயில் வழிபாடு, இன்னும் சில கோயில்கள் என பிரசாத்தின் அம்மா தீர்மானித்து விட்டாள்!
அதையாவது குறைந்த நபர்களோடு போனார்களா?
இரண்டு வேன் வைத்துக் கொண்டு, இருபத்தி நான்கு பேர் கொண்ட கூட்டம் புறப்பட்டது!
அதுவும், காலை மூணு மணிக்கே எழுந்து புளிசாதம், இட்லி, சப்பாத்தி, தயிர் சாதம் என ஒரு பட்டாளமே இறங்கி வேலை பார்த்தது!
“அக்கா! மருமகளைக் கூப்பிட்டு வேலை குடு! நீதான் ஆளுக்கு தகுந்த மாதிரி வேலை தருவியே!”
“இப்பத்தானே வாழ வந்திருக்கா! அவ எதுவும் செய்ய வேண்டாம். அவங்க சின்னக்குடும்பம்! பெரிய குடும்பத்துக்கு செஞ்சு பழக்கம் இருக்காது வசுமதி!”
அந்த காமெடி பீஸ் கேட்கவில்லை!
“பழக்கிவிடுக்கா!”
அங்கே ஒரு முசுட்டு பெரியப்பா - அதிகபிரசங்கி பெரியப்பா, எதைப்பார்த்தாலும் பெருமூச்சு விடும் ஒரு அத்தை - செக்ஸ் ஜோக்கை கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் சொல்லும் ஒரு மாமா... நல்லதும் கெட்டதுமாக கலந்த ஒரு பாட்டி... தவிர வாண்டுக் கூட்டங்கள்... அவர்களது மழலையை அதே குரலில் சொல்லிக்காட்டும் அக்காக்கள்... இந்த மாதிரி ஒரு கும்பல்!
பிரசாத்துக்கு பயமாக இருந்தது!
நேற்று ரத்திரி அவள் பேசிய பேச்சு, அவனை உறங்கவிடவில்லை! இதே நிலைமையில் இருந்தால், இவள் யாரிடம் என்ன பேசுவாளோ என்ற பதட்டம் இருந்தது“என்னடா? ராத்திரி தூங்கினியா?” ஒரு அக்கா புருஷன்!
“மூஞ்சி வீங்கிக்கிடக்கு! காலைல கதவு திறந்ததும் குழந்தையோட வருவான்னு நெனச்சேன்!”
இன்னொரு மாமா!
“டேய்! உங்கம்மா பெத்தது மொத்தம் எட்டு! மிஞ்சினது நீங்க அஞ்சு பேர்!”
“அந்தக் காலத்துல பொழுது போக்கே பலான விஷயம்தானே?”
பெரியவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடு என பார்க்காமல் அப்பட்டமாக பேசும் உறவுகள்.
நாற்பது கடந்த பெண்கள் வெட்கப்படுவதும், அவர்களை சேர்த்து வைத்து ஐம்பது கடந்த அரைக்கிழங்கள் தாம்பத்ய வர்ணனை தருவதும்... இரவு நேர ரெக்கார்ட் டான்ஸை மிஞ்சியது!
வேனில் புறப்பட்டு போய் நாலு நாட்களில் பதினோரு கோயில்கள் என கதறக் கதற அடித்து, கொண்டு போன உணவு ஊசிப்போக, வெளியில் நல்ல ஓட்டலை பதிவு செய்யாமல் சத்திரம், சாவடி என தங்கிக்கொண்டு, நரகத்தை உணர்ந்தாள் சொப்னா.
“டேய்! ரெண்டாவது நாள் பிரியக்கூடாது! தனி ரூம் குடுங்க!”
இவர்களுக்கு மட்டும் மட்டமான லாட்ஜில் ஒரு கேவலமான அறை!
ஜன்னல் வழியாக மூத்திர நாற்றம். மூச்சு முட்டியது!
“24 பேர் இருக்கும் போது பெரிய ஓட்டல்கள்ள ரூம் போட்டா கட்டுப்படியாகாது! கொஞ்சம் சமாளி சொப்னா!”
“எதுக்கு 24 பேர்? நமக்குக் கல்யாணமாகி, குல தெய்வ வழிபாட்டுக்கு நம்ம கூட உங்கப்பா, அம்மா மட்டும் போதாதா! இத்தனை பெரிய கும்பல் வேணுமா!”
“எல்லாரும் பணத்தை ஷேர் பண்ணிப்பாங்க!”
அவள் பேசவில்லை!
“நேத்திக்கே நமக்கு எதுவும் நடக்கலை!“வேண்டாம். அதுக்கொரு வசதியும், மனசந்தோஷமும் வேணும் பிரசாத்! இத்தனை நாற்றங்களோட, ஒரு தாம்பத்யம் தொடங்க வேண்டாமே! பிளீஸ்!”
மறுநாள் ஒரு பெரிய கோயில் வழிபாடு!
அந்தக்குளத்தில் குளித்தால்தான் விசேஷமாம்.
அது குலதெய்வம் கோயில்!
ஆண், பெண்களுக்கு தனித்தனி படித்துறை!
ஆனாலும் குளம் திசை வரும் போது சகலமும் கலக்கும் மையப்பகுதி!
“அய்யோ! இங்கே எப்படி அத்தே குளிக்கிறது!”
அந்த காமெடி பீஸ் வந்து விட்டது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
அழகான ஆபத்து

Read more from தேவிபாலா

Related to அழகான ஆபத்து

Related ebooks

Reviews for அழகான ஆபத்து

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அழகான ஆபத்து - தேவிபாலா

    1

    திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது நிஜமானால், விவகாரத்து எங்கே முடிவாகிறது? நம் கதையின் நாயகி சொப்னா- இப்போது அவளுக்கு வயது 48. மிக மிக அழகான பெண்! 48 என்று தலையில் அடித்து சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள். அப்படி ஒரு இளமை சொட்டும் பெண்!. ஏறத்தாழ ஐந்தடி ஏழங்குலம் - சராசரிப் பெண்களின் உயரத்துக்கு மேல், பெரிய கண்கள், அழகான உடற்கட்டு. வரிசைப்பற்கள் - எடுப்பான மற்ற எல்லாமே! மிக மிக வசீகரமான பெண்!

    சொப்னா என்ற பேருக்கு அருகதை கொண்டவள். பல பேரின் சொப்பனத்தில் இன்றும் நுழைந்து, தூக்கத்தை கெடுப்பவள். படிப்பு! மாஸ்டர் டிகிரி!

    பெரிய கம்பெனியில் இன்றைக்கு ஏறத்தாழ 2 லட்சம் வரை சம்பளம். டிரைவிங், நீச்சல், விளையாட்டு என சகலமும் அத்துபடி. ஆங்கிலம் உள்பட ஆறு மொழிகள் தெரிந்தவள்.

    என்ன பாக்கி! தன்னை அழகாக அலங்கரித்து கொள்வாள். ஒருசாவுக்குப் போனால்கூட மேக்கப் இல்லாமல் வாசலில் கால் வைக்கமாட்டாள்.

    வீட்டில் மூன்று பீரோ நிறைய உடைகள்.

    ஒரு முறை கட்டியது அடுத்த முறை சுழற்சியில் வராத அளவுக்கு உடைகள். நிறைய நகைகள். மேக்கப் சாதனங்கள்! இதற்காக அவள் செவழிக்கும் தொகை மாதந்தோறும் சில பல ஆயிரங்கள்!

    உள்ளூர், வெளியூர், வெளிநாடு என்று டூர் போய்க்கொண்டே இருக்க வேண்டும்!

    இது தான் சொப்னா - இப்போதைக்கு!

    சரி குடும்பம்?

    ம்! 24 வயதில் கல்யாணம். காதல் அல்ல! குடும்பத்தார் பார்த்து அவள் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை பிரசாத்! அவளுக்கு சற்றும் குறையாத படிப்பு, வருமானம், பர்சனாலிட்டி என எல்லாம் நிறைந்த புருஷன். இப்போது பிரசாத்துக்கு ஐம்பத்தி ரெண்டு வயது!

    இரண்டு குழந்தைகள். இரண்டும் பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு வயது 23. கல்யாணமான மறுவருடமே பிறந்து விட்டாள் இனியா!

    அவளும் சமீபமாக மாஸ்டர் டிகிரி முடித்து ஒரு வேலையில் சேர்ந்து விட்டாள். தனியார் வேலை!

    அடுத்தவள் ஆறுவருடம் கழித்து பிறந்த மலர். இப்போது 17. 12-ம் வகுப்பு, முடித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவி! வசிப்பது பெங்களூரில்.

    பெரிய சொந்த வீடு - நிலம் வாங்கிக்கட்டிய வீடு! நகரின் மையத்தில் - நல்ல கார் - எல்லா வசதிகளும் உண்டு!

    பிரசாத்துக்கும், சொப்னாவுக்கு நிகரான சம்பளம்.

    மார்க்கெட்டிங் அதிகாரி.

    மாதத்தில் 18 நாட்கள் இந்தியா முழுக்க டூர். இருக்கும் 12 நாட்களில் ஒரு நாள் கூட ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு வேலைச்சுமை!

    காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடும் மனிதர்.

    இனியாவும் அம்மா போல அழகான பெண்! புத்திசாலி! எல்லா சாதூர்யங்களும் நிறைந்த பெண்.

    ஆனால் குணம் - அப்படியே அப்பா பிரசாத்!

    பிரசாத்துக்கு மனிதர்கள் நிறைய வேண்டும். ரத்த பந்தங்கள், சொந்தங்கள், பெற்றவர்கள், உடன்பிறப்புகள் என வீடு முழுக்க எந்த நேரமும் திருவிழாக் கூட்டம்தான்! நாலு சகோதரிகள். நாலு பேருக்கும் நல்ல வாழ்க்கை! வெளியூரில் இருவர். உள்ளூரில் இருவர். கடைசி தங்கைக்கு மட்டும் பிரசாத் கல்யாணம் முடிந்து தான் திருமணம்!

    மாமியாரின் சகோதரிகள் - மாமனாரின் உறவுகள் என எந்த நேரமும் திருவிழாக் கூட்டம் தான்!

    சொப்னாவுக்கு பிரசாத் அளவுக்கு ரத்த, பந்தங்கள் உறவுகளிடம் பிடிப்பு இல்லை!

    அவளுக்கு ஒரு அண்ணன் மட்டும். அவன் மதம் தாண்டி காதலித்து கல்யாணம் நடந்ததால் வீட்டில் பெரிய களேபரமாகி குடும்பத்தை விட்டே அவன் பிரியும் சூழ்நிலை உண்டாகிவிட்டது. அவன் வெளி நாட்டில் போய் செட்டில் ஆகும் போது சொப்னா கல்லூரி படிப்பில் கடைசி வருஷம். அந்த அதிர்ச்சியில் அம்மாவுக்கு பி.பி. அதிகமாகி ஒரு பக்கம் இழுத்து பக்கவாதத்தில் படுத்து விட்டாள்!

    அப்பாதான் படுக்கையில் வைத்து அம்மாவுக்கு சகலமும் செய்தார். ஒரு வளர்ந்த மகளாக இருந்து சொப்னா எதுவும் செய்யவில்லை! பிறந்த முதலே அவள் சுபாவம் அது! எதிலும் ஒட்டமாட்டாள். யாருடனும் அதிகம் பேசமாட்டாள். தான் - தன் சுகம்... தன்னைப்பற்றி மட்டுமே சிந்தனை! பேரழகியாக உருவானதால் ஒரு கர்வமும், திமிரும் ரத்தத்துடன் கலந்து விட்டது! வீட்டில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடமாட்டாள். அப்பா செல்லம்!

    அம்மாவுக்கு இது பெரும் குறை! அழகான மகள் - ஏன் அன்பாக இல்லை என்ற மனக்குறை!

    வீட்டில் ஒரு வேலை செய்யமாட்டாள். குக்கரி வகுப்பில் போய் பரிசு வாங்குவாள்! பிரமாதமாக, சமைக்கத் தெரியும். ஆனால் ஒரு காபி கூட வீட்டில் போடமாட்டாள். அம்மா பல முறை சொல்லிப் பார்த்து விட்டாள்.

    நான் எதுக்கு செய்யணும்?

    பொண்ணா பொறந்தவ, இந்த மாதிரி பேசக்கூடாது! நீ இன்னொரு வீட்டுக்கு வாழப் போகணும். அதைப் புரிஞ்சுக்கோ! பெத்தவங்க மாதிரி, மத்தவங்க தாங்கமாட்டாங்க!

    என்னை யாரும் தாங்கிப் பிடிக்கணும்னு அவசியம் இல்லை! படிப்பு, அறிவு, அழகு, எல்லாம் தெரிஞ்ச புத்தி எங்கிட்ட இருக்கு! பணமிருந்தா எதையும் சாதிக்கலாம். சம்பாதிக்கற தெம்பு இருக்கு! நான் என் கால்ல நிக்கறவ யாரையும் நம்பி வாழலை!

    இந்த திமிர் தப்புடி! இது நல்லதில்லை!

    விடேன் ராஜம்!

    தப்புங்க. நீங்க குடுக்கற இடம். சலுகை! பெண்ணா பிறந்தா ஒரு அடக்கமும், தன்மையும் வேணும்!

    நேரடி மோதல் வருவதால் அம்மாவை சொப்னாவுக்கு பிடிக்காமல் போனது! பேச்சு வார்த்தையை கட் செய்தாள்.

    அப்பா சமாதானப்படுத்தியும் எடுபடவில்லை!

    அண்ணன் மதம் மாறி குடும்பத்தை விட்டுப்பிரிய, குடும்பம் உடைந்து போக,

    அது அவன் விருப்பம்! நாம எப்படி கேக்க முடியும்? அவனை நம்பியா அப்பா வாழறார்? விட்டுத்தொலை!

    நீயும் அந்த மாதிரி போவியா?

    எனக்கு காதல்ல நம்பிக்கை இல்லை! எப்பவுமே நான் என்னை மட்டுமே நம்பறவ!

    அப்பா ஓரளவு நல்ல உத்யோகம்.

    சிறியதாக ஒரு வீடு - பைக் - கொஞ்சம் சேமிப்பு என வாழ்பவர்!

    குழந்தைகளை நான்றாகவே ஆளாக்கிவிட்டார். மூத்தது அறுத்துக்கொண்டு ஓடி விட்டது!

    அதனால் அம்மா படுத்தபடுக்கை!

    சொப்னா வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டாள்.

    எந்த ஒரு உதவியும் செய்யாத போது, அப்பா உடைந்து போனார்.

    இதப்பாருப்பா! ஒண்ணு நீ ரிடையர்மென்ட் வாங்கு! இல்லைனா, ஒரு நர்ஸை வேலைக்கு வச்சு சம்பளம் குடு!

    அப்பவும் நீ உதவமாட்டியா?

    இதெல்லாம் எனக்குப் பிடிக்காது!

    அந்த மாதிரி நான் நெனச்சிருந்தா, நீ இல்லை! நீ இப்படி நெனச்சா, நாளைக்கு தாயே ஆக முடியாது!

    அம்மா வாய்குளற புலம்பினாள்!

    சொப்னாவுக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கலை!

    எனக்கு வரன் பாருப்பா! இந்த வீடு நரகமா இருக்கு! அம்மாவோட புலம்பல கேட்டு காது செவிடாப் போச்சு!

    உங்கப்பா படற கஷ்டங்களைப் பார்த்தும், உன் மனசு இறங்கலையா சொப்னா?

    பதிலே இல்லை!

    அவருக்கும் கசந்து விட்டது!

    வரன் அமைந்து விட்டது!

    பிரசாத் அமைந்தான்.

    நல்ல குடும்பம். இவளது அழகு, அறிவு, உத்யோகம் என அவளிடம் எல்லாமே பிரமாதமாக அமைந்துவிட, பிரசாத்துக்கும், குடும்பத்துக்கும். அவளைப் பிடித்து விட்டது!

    பிரசாத் அவளிடம் தனியாகப் பேசி, பழகி வெளியில் போக விரும்பினான்!

    சொப்னா மறுத்து விட்டாள்.

    குடும்பமே ஆச்சர்யப்பட்டது!

    ஏன்மா!

    எனக்கு அதுல உன்பாடு இல்லை!

    ரெண்டு பேரும் வெளியில் போய், மனசு விட்டுப் பேசி பழகினா, ஒரு நெருக்கம் வருமில்லையா?

    மாமியார் கேட்க,

    "வேண்டாமே! எனக்கு காதல் - இந்த மாதிரி கல்யாணத்துக்கு முன்னால தனியா

    Enjoying the preview?
    Page 1 of 1