Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இன்ப அதிர்ச்சி
இன்ப அதிர்ச்சி
இன்ப அதிர்ச்சி
Ebook121 pages38 minutes

இன்ப அதிர்ச்சி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாமுவால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை! வீட்டுக்கு வந்த பிறகு ஏராளமாகக் குடித்திருந்தான்.


‘அப்பாவிடம் சொல்லலாமா?'


'ச்சே! அப்பா தலையிடும் அளவுக்கு நிச்சயமா இது பெரிய விவகாரம் அல்ல!’


'தனிப்பட்ட ஒரு பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள என்னால் முடியாவிட்டால், பிறகு நானென்ன தாதா மகன்?’


'இல்லை! இப்படியே விட்டால், கல்லூரியில் நான் செல்லாக்காசாகி விடுவேன்! எச்சில் தீரும் வரை மாணவர்கள் துப்பித் தீர்த்து விடுவார்கள்!’


'விடக்கூடாது!’


‘சட்டென என்னைத் தள்ளி விட்டாள்.’


'எதிர்பாராத ஒரு நொடியில் அவள் கை ஓங்கி விட்டது. ஆனாலும் அசாத்தியத் துணிச்சல் அதுக்கு!'


'எச்சரிக்க வேண்டும்!'


காலை சீக்கிரமே தாமு வந்து விட்டான்.


லேசான தாடி... எப்போதும் போடும் அந்த வெளிறிய ஜீன்ஸ், டீ ஷர்ட்ஸ் அதுவும் மோசமான நிறம்:.. வாயில் புகையும் சிகரெட், மதுவால் சிவந்த கண்கள்... இதுதான் தாமு!


கல்லூரி வாசலில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்து விட்டான்.


அவன் பெரிய கலாட்டா பண்ணப் போகிறான் என்று எல்லாருக்கும் தெரிந்தே விட்டது.


அவனது பரிவாரம் நெருங்கியது.


“தாமு...!”


“பொட்டப் பசங்களா! நான் அடிபட்டப்ப, அத்தனை பேரும் ...பப் போனீங்களா? நாய்களா!”


அவர்கள் பேசவில்லை!


மாணவிகள் கடந்து போனார்கள்.


“போகுதுங்க பாரு ஆட்டிக் குலுக்கிட்டு! கம்மனாட்டிங்க!”


சரியாக ஒன்பதுக்கு ரேஷ்மா தன் ஸ்கூட்டியில் வந்தாள்.


தாமு தன் கைகளை விரித்துக் கொண்டு நின்றான்.


அவள் வண்டியை விட்டு இறங்கினாள். ஸ்டாண்ட் போட்டாள் அங்கேயே!


அவனை நெருங்கினாள்.


“என்ன தாமு சாலை மறியலா?”


“இதப்பாரு! இப்ப நான் சண்டை போட வரலை! உன்னை எச்சரிக்க வந்தேன்! அன்னிக்கு என்னைத் தள்ளி விட்ட காரணமா, நீ பெரிய சண்டியர்னு நெனக்காதே! ஆயிரம்தான் ஆனாலும் நீ பெண்! அதை மறக்கக் கூடாது!”


“தேங்க் யூ தாமு! அப்பப்ப நான் பொண்ணுனு நீ ஞாபகப்படுத்திட்டே இருக்கே! வழியை விடு!”


“என் வழில தலையிட மாட்டேன்னு சொல்லிட்டு நீ போகலாம்!”


“ஷ்யூர்! நீ ரௌடித்தனம் பண்ணாம, தண்ணியடிச்சிட்டு அனெக்ஸ்ல வராம, அடாவடி நடத்தாம, சராசரி மாணவனா படிக்கற நோக்கத்தோட மட்டுமே வந்தா, நீ இருக்கற திசைப் பக்கம் கூட நான் திரும்ப மாட்டேன்!”


“உபதேசமா?'


“இல்லை! உண்மை!”


“நீ சொல்ற எல்லாத்துக்கும் நான் கட்டுப்படறேன். நான் சொல்றதை இப்ப நீ செய்யணும்?”


“என்ன?”


“எனக்கு முத்தம் குடுக்கணும்!”


“அப்படியா? தந்தாப் போச்சு! கிட்ட வா தாமு!”


அவன் மிரண்டான்!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
இன்ப அதிர்ச்சி

Read more from தேவிபாலா

Related to இன்ப அதிர்ச்சி

Related ebooks

Reviews for இன்ப அதிர்ச்சி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இன்ப அதிர்ச்சி - தேவிபாலா

    1

    ரேஷ்மாவுக்குப் பின்னால் எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். அது சூழ்நிலையைப் பொறுத்து பெண்களா ஆண்களா என்பது தீர்மானிக்கப்படும்!

    ஸ்நேகிதிகள் என்ற பேரில் பெண்கள் இருப்பார்கள்.

    ஜொள்ளர்கள் கூட்டம் ஒன்று சர்வ நிச்சயமாக இருக்கும்!

    கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாவது வருடம் படிக்கும் பெண் ரேஷ்மா. துணிச்சல் என்றால் உன் துணிச்சல் என் துணிச்சல் இல்லை! யாருக்கும் பயப்படாத பிறவி!

    சங்கீதம் போன்ற மென்மையான சங்கதிகளும் சரி கராத்தே போன்ற வன்மையான விஷயங்களும் சரி ரேஷ்மாதான் முதலில்!

    கல்லூரியில் மாணவ, மாணவிகளின் தலைவி!

    அது ஆண், பெண் இணைந்து படிக்கும் நேஷனல் கல்லூரி! ரேஷ்மா பி.எஸ்ஸி. முதலாண்டு சேர்ந்தபோது மாணவர் தலைவர் தேர்தல் நடந்தது.

    சாதாரணமாக முதலாண்டு படிக்கும் மாணவர்கள் யாரும் சேர்மன் பதவிக்குப் போட்டியிட மாட்டார்கள்.

    பெரும்பாலும் ஆண்கள்தான்-

    அதிலும் மூன்றாமாண்டு படிப்பவர்கள் களத்தில் இருப்பார்கள்.

    ரேஷ்மா நாமினேஷன் கொடுத்து விட்டாள்.

    யாரும் இதை எதிர்பார்க்கவில்லை!

    தேர்தலில் நின்ற நாலைந்து பேர் ரேஷ்மாவை சந்தித்து, நீ முதலாம் வருஷ ஸ்டூடண்ட்! மேலும் பெண்! அதனால் நீ வாபஸ் வாங்கிடு என்றார்கள்.

    ஏன்? தேர்தல்ல நிக்க எனக்குத் தகுதி இல்லையா? அதென்ன மேலும் பெண்! நான் நிக்கத்தான் போறேன்!

    யாரும் எதுவும் எதுவும் சொல்லவில்லை!

    ஆனால் மறுநாளிலிருந்து ரேஷ்மா பிரச்சாரம் தொடங்கிய விதத்தைப் பார்த்தபோது மாணவர் கூட்டம் ஸ்தம்பித்தது.

    வசதியுள்ள பெண் ரேஷ்மா.

    பிரபல தொழிலதிபர் சேஷாத்ரியின் ஒரேமகள்...

    பிறகென்ன?

    அப்பாவிடம் கணிசமான ஒரு தொகையைக் கேட்டு வாங்கிக் கொண்டாள்.

    எதுக்குடா இவ்ளோ பணம்?

    நான் ஸ்டூண்ட்ஸ் சேர்மன் எலெக்ஷன்ல நிக்கறேன் டாடி!

    இதெல்லாம் தேவையாம்மா?

    எனக்குத் தேவை டாடி! நான் சாதாரணப் பெண் இல்லை! கொஞ்சம் வித்யாசமா, முன்னணில நிக்க ஆசைப்படறேன்!

    சரி! உனக்குப் பிடிவாதம் அதிகம். பிரச்னைகளை இழுத்து விட்டுக்காதே! ஓக்கே?

    தெரிந்த பிரஸ்ஸில் கொடுத்து வண்ணத்தில் ஏராளமான போஸ்டர்களை அடித்துக் கொண்டாள்.

    நிறைய பிட் நோட்டீஸ்கள். கட்-அவுட் ஒன்றுக்குப் பேசி விட்டாள்.

    24 மணி நேரத்தில் அத்தனையும் தயாராகி, அந்தக் கல்லூரி அமைந்திருக்கும் பத்து கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்துக்கு போஸ்டர்களை இண்டு இடுக்கு விடாமல் ஒட்டித் தள்ள ஏற்பாடு.

    எங்கு பார்த்தாலும் பிட் நோட்டீஸ்…

    அங்கங்கே விளம்பர போர்டுகள்.

    கல்லூரி வாசலில் கட்-அவுட் இருபதடி உயரத்துக்கு!

    அன்று மாலையே பெவிலியன் அருகில் ஒரு சிறிய மேடை அமைக்கச் செய்து, அதை அலங்கரித்து, ஆறு மணி சுமாருக்கு ஸ்பீக்கர் வசதிகளுடன் அதில் ஏறி, கம்பீரமாக. பிரச்சாரம் தொடங்கி விட்டாள்.

    இதைப் போல ஒரு பிரச்சாரத்தை தனியொரு ஸ்டூடண்ட் அதுவும் பெண் செய்திராததால், அத்தனை பேரும் மிரண்டு போனார்கள்.

    பேராசிரியர்கள் கூட ருசிகரமாக வேடிக்கை பார்த்தார்கள்.

    ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல காரம், மணம், குணத்துடன் ருசிகரமான பேச்சு!

    சரளமான தமிழ்...!

    மாணவிகள் மெல்ல மெல்ல அவள் பக்கம் சேரத் தொடங்கி விட்டார்கள்.

    ஒரு பெண் மாணவர் தலைவியானால், எல்லாருக்கும் நல்லது என்ற அபிப்ராயம் உண்டானது.

    மாணவர்களிலும் பலர் அவள் பால் ஈர்க்கப்பட்டு அவளை ஆதரிக்கத் தொடங்க,

    தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது.

    மூன்றாவது வருடம் படிக்கும் தாமு அப்பட்டமான ரௌடி என்பது கல்லூரியில் சகலருக்கும் தெரியும்.

    பேராசிரியர், ஏன் முதல்வருக்குக் கூட தாமு விஷயத்தில் கொஞ்சம் பயம் உண்டு. காரணம் அந்தப் பிரதேசத்து தாதாவின் மகன் தாமு. கொலை, கொள்ளைகளை அஞ்சாமல் செய்துவிட்டு, சட்டம் தொட அஞ்சும் தாதாவின் மகன்!

    அதனால் அவனிடம் யாரும் வம்பு வளர்க்க மாட்டார்கள்.

    அவன்தான் தேர்தலில் வெற்றி பெறுவான் என்று தீர்மானித்தே இருந்தார்கள்.

    ரேஷ்மா குறுக்கே புகுந்து விட்டாள்.

    ஏன் தாமு? உங்கிட்ட பணமா இல்லை? அந்தக் குட்டி வாரி விடுது! நீ விளம்பரத்துக்காக எதுவும் செய்யலையே? ஏன்?

    அடப் போடா! ஒரு பொடிசுக்கு பயந்துகிட்டு, நான் ஏன் செலவு செய்யணும்?

    அவளுக்குக் கூட்டம் சேருது தாமு!

    அதனால?

    ஜெயிச்சிரப் போறா!

    சொன்னவனின் முன் பல் இரண்டும் அடுத்த நொடியே கைக்கு வந்தது. ரத்த வாயுடன் நின்றான்.

    இந்த தாமுவை ஜெயிச்சிட்டு, காலேஜ் அனெக்ஸ்ல நடமாடிட முடியுமா அவளால? முதல்ல ஜெயிக்கறாளா பாரு?

    ரேஷ்மாவுக்கு எச்சரிக்கை போனது!

    தாதா மகன் தாமு! அவனைப் பகைச்சுக்காதே ரேஷ்மா. விபரீத விளைவுகள் நிறைய வரும்!

    போங்கடி! அதையும்தான் பாக்கலாமே!

    விடிந்தால் தேர்தல்.

    ரேஷ்மா அலட்டிக் கொள்ளவே இல்லை! காலை சீக்கிரமே எழுந்து குளித்து விட்டாள்.

    அப்பா ஒரு வாரமாக ஊரில் இல்லை! வர்த்தக நிமித்தம் லண்டன் போயிருக்கிறார். திரும்ப இன்னும் ஒரு வாரமாகும்!

    அம்மா சமூகசேவகி!

    காலையில் போனால் வீடு திரும்ப நள்ளிரவு ஆகி விடும். ஒரே வீட்டில் இருந்து கொண்டு அம்மாவைப் பார்த்தே பத்து நாட்கள் ஆகி விட்டது.

    வேலைக்காரர்கள் ராஜ்யம்தான்.

    ஒரே பெண் ரேஷ்மா. ஏகப்பட்ட பணம்!

    புறப்பட்டு விட்டாள்.

    கல்லூரிக்கு அவள் வர, வாக்குப் பதிவு தொடங்கி விட்டது. உள்ளே போய் உட்கார்ந்தாள். மாலைக்குள் முடிந்து விட்டது. அன்று இரவே எண்ணத் தொடங்கி விட்டார்கள்.

    மறுநாள் காலை எட்டரை மணிக்கு முடிவு வெளியானது.

    ஏறத்தாழ ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கும் கல்லூரி அது!

    எண்பது சதவீத வாக்குகளைப் பெற்று ரேஷ்மா அமோக வெற்றி பெற்றிருந்தாள்.

    தாமுவுக்குப் படுதோல்வி!

    மாணவிகள் உற்சாக மிகுதியில் ரேஷ்மாவை அப்படியே தூக்கிக் கொண்டு கல்லூரி வளாகத்துக்குள் சின்னதாக ஒரு ஊர்வலமே விட்டார்கள்.

    முதல்வரும் முக்கியப் பேராசிரியர்களும் அவளை உள்ளே

    Enjoying the preview?
    Page 1 of 1