Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனசுக்கு மட்டும்!
மனசுக்கு மட்டும்!
மனசுக்கு மட்டும்!
Ebook145 pages37 minutes

மனசுக்கு மட்டும்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“என்னடீது? நீயும் வந்திட்டியே! அவன்கூட யார் இருக்காங்க?” 


“பொறுப்பானவங்களை உட்கார வச்சிட்டுத்தான் வந்திருக்கேன். நீ கவலைப்படாதே! எனக்கு தலைவலியா இருக்கு. காபி குடு! அக்கா எங்கே?” 


“மாடில இருக்கா!” 


“நீ வா! உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்!” 


“இரு! வர்றேன்!” அம்மா காபியுடன் வந்து எதிரே உட்கார்ந்து கொண்டாள்.


“ஏன்மா? டாக்டர் ஏதாச்சும் சொன்னாரா? பிரச்னை எதுவும் இல்லையே?”


“உன்பிள்ளை பூரணமான ஆரோக்யத்தோட இருக்கான்!” 


“வேற என்ன? பணப் பிரச்சனையா?” 


வந்தனா அம்மாவை ஆழமாகப் பார்த்தாள். 


“அது இனிமேலதான் வரப்போகுது நமக்கு!” 


“புரியும்படியா பேசுடி!” 


“அம்மா நீ அதிர்ச்சி அடையாதே! பொறுமையாக் கேட்டுக்கோ! நேரடியா நான் விஷயத்துக்கு வர்றேன்!” 


அம்மா முகத்தில கலவரம். 


'என்ன சொல்லப் போகிறோள் இவள்?’ 


வந்தனா டாக்டர் சொன்னது - அந்த நீரஜாவின் அப்பா பேசியது... நீரஜாவின் விளக்கம் எல்லாம் சொன்னாள். 


அண்ணனின் எதிர்பார்ப்பையும் சொல்லிவிட்டாள். 


“உனக்கு வெக்கமால்ல?” 


“இதுல நான் வெக்கப்பட என்னம்மா இருக்கு?” 


“எங்க குடும்பத்துல மூத்தவன் அவன். எங்களை விட்டுட்டு அவனுக்காக ஒரு வாழ்க்கை அமைச்சுக்க முடியாதுனு அந்த பெரிய மனுஷன்கிட்ட படக்குனு நீ சொல்ல வேண்டியதுதானே!” 


“அம்மா! அதைச் சொல்ல வேண்டியது நானில்லை! உன் பிள்ளை!” 


“சொல்லமுடியாம மனசு புழுங்கித்தாளே மயக்கம் வந்திருக்கு!” 


“அவர்கிட்ட சொல்ல முடியாம அண்ணனுக்கு மனசு புழுங்கலை நம்மகிட்ட சொல்ல முடியாம தவிக்கறான்!” 


“அப்படியா சொல்ற?” 


“ஏறத்தாழ உன் பிள்ளையே இதை அப்பட்டமா எங்கிட்ட சொல்லியாச்சும்மா!” அம்மாவின் கண்களில் அதிர்ச்சி எட்டிப்பார்த்தது. 


அருண் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டான். 


நீரஜாவின் அப்பா வந்து பில் கட்டிவிட்டார். வந்தனாதான் கூட இருந்தாள். அருணைப்பிடித்து வந்து நீரஜா காரில் ஏற்ற, வந்தனாவையும் ஏறிக்கொள்ளச் சொன்னார். 


கார் அருண்வீட்டு வாசலில் நின்றது. 


வந்தனா இறங்கினாள் 


“உள்ள வாங்க!” வரவேற்றாள். 


இருவரும் வர, “உட்காருங்க! அம்மா! காபி போடு!” 


அம்மா கடுப்புடன் உள்ளே வந்தாள். 


“அது ஒண்ணுதான் குறைச்சல்!” 


“ஷ்! சொன்னதைச் செய்மா!” 


“நீங்க போய் படுங்க அருண்! ஹெல்ப் பண்ணும்மா!” 


நீரஜா அவனுடன் வந்தாள். அவனைப் படுக்க வைத்துவிட்டு திரும்பிவர, அம்மா காபியுடன் வந்தாள். 


ட்ரேயை நீரஜாவிடம் நீட்ட, 


அவள் காபியை எடுப்பதற்குள், திடீரென குறுக்கே புகுந்த கீர்த்தனா, காபியை எடுத்துவிட்டாள். 


அவள் அதை எடுத்த வேகத்தில் கோப்பையில் காபி வேகமாகத் தளும்பி, நீரஜாவின் சுடிதாரில் கொட்டிவிட்டது. 


“இடியட்!” 


நீரஜா பளாரென கீர்த்தனாவை அறைந்தாள். 


Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
மனசுக்கு மட்டும்!

Read more from தேவிபாலா

Related to மனசுக்கு மட்டும்!

Related ebooks

Reviews for மனசுக்கு மட்டும்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனசுக்கு மட்டும்! - தேவிபாலா

    1

    "அம்மா! நான் ஆபீஸ் போயிட்டு வர்றேன்!"

    வந்தனா புறப்பட்டாள்.

    பெரியவள் கீர்த்தனா உட்கார்ந்து எங்கோ பராக்கு பார்த்தபடி இட்லியை உருட்டிக் கொண்டிருந்தாள்.

    வந்தனா! கொஞ்சம் உள்ள வா!

    என்னம்மா?

    அருண் நாலஞ்சு நாளா சரியா சாப்பிடறதில்லை! காலை சீக்கிரமே புறப்பட்டு போயிர்றான். நேரம் கழிச்சே வீடு திரும்பறான். முகத்துல சிரிப்பே இல்லை! ஏண்டீ?

    எங்கிட்ட கேட்டா? உள் பிள்ளைதானே? நீயே கேளேன்!

    தோளுக்கு உசந்த பிள்ளை! சுள்ளுனு ஒரு வார்த்தை வந்து விழுந்துட்டா, என்னால் தாங்கிக்க முடியுமா?

    அப்பப் பேசாம. இரு. அண்ணனே சொல்லும்போது கேட்டுக்கோ! புறப்பட்டுவிட்டாள்.

    அவள் போய் அரைமணி நேரத்தில் அருண் ஆபீசிலிருந்து ஒருவன் வந்தான்.

    அருண் ஆபீஸ்ல மயங்கி விழுந்துட்டார். அவரை ஆஸ்பத்திரில் சேர்த்திருக்கோம்!

    அய்யோ என்னாச்சு என் அருணுக்கு?

    என்னோட வர்றீங்களா?

    அம்மா திகைத்தாள்.

    கீர்த்தனாவை தனியாக விட்டுவிட்டுப் போக வழியில்லை! இதுவரை போனதும் இல்லை!

    அந்த ஆஸ்பத்திரி விலாசம் குடுங்க தம்பி! நாள் வந்து சேர்ந்துடறேன்!

    அவள் தந்து விட்டுப் போக, எதிர் வீட்டுக்கு வந்து, அவசரமாக வந்தனாவுக்கு போன் செய்தாள். விபரம் சொன்னாள்.

    வீட்டுக்குள் வர,

    அம்மா! தலையைப் பின்னி விடு!

    போடி! உனக்கு அலங்காரம் ஒரு கேடா? பேசாம இரு!

    கீர்த்தனா முகம் வாட, அம்மா உள்ளே போக, அரை மணி நேரத்தில் வந்தனா வந்து விட்டாள்.

    அம்மா அழத் தொடங்க,

    நீ ஏம்மா இப்ப அழற, அண்ணனுக்கு எதுவும் ஆகாது! அக்காவை வச்சுப் பூட்டிட்டு போயிடலாம்!

    அவ கதவைத் தட்டி ரகளை பண்ணினா?

    பண்ணமாட்டா, நான் பக்குவமா சொல்லிக்கிறேன். நீ வேண்டியதை எடுத்து வச்சுவிட்டு தயார் பண்ணிக்கோ!

    அக்காவிடம் வந்தாள் வந்தனா.

    அக்கா!

    அய்! சாயங்காலம் ஆயாச்சா?

    ஆமாம்! நாளைக்கு உனக்குப் பிறந்த நாள். ஸ்வீட் பண்ணி, புதுத்துணி எடுக்கணும் இல்லையா? நானும், அம்மாவும் கடைவீதி வரைக்கும் போயிட்டு வந்துடுறோம். வெளிய பூட்டிட்டுப் போறோம்! நீ ஆர்ப்பாட்டம் பண்ணாம பத்திரமா இருப்பியா?

    நானும் வர்றேண்டீ!

    சரி வா! ஆனா கடைவீதில நிறைய பலூன் இருக்குமே!

    அவள் முகத்தில் உடனே மிரட்சி!

    வேண்டாம்! நான் வரல!

    அப்ப நாங்க போயிட்டு வரட்டுமா?

    சரி

    இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.

    மருத்துவமனையை அடையும்போது ஊசி மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தான் அருண். ட்ரிப்ஸ் போய்க் கொண்டிருந்தது. வந்தனா டாக்டரின் கேபினுக்குள் வந்தாள்.

    அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

    ஏன் டாக்டர்? என்ன ஆச்சு?

    மயங்கி விழுந்துட்டார்னு கொண்டு வந்து சேர்த்தாங்க! ரத்த அழுத்தம் நிறைய இருக்கு, டென்ஷன்படுவாரா?

    இல்லையே!

    ஆனா ஏதோ சுமை இருக்கு அவர் மனசுல! அது வெளில வரலைன்னா, ஹார்ட் அட்டாக்கே வரலாம்!

    அய்யோ!

    மூணு நாள் இங்கே இருக்கட்டும்! ஆபத்து எதுவும் இல்லை!

    மாலை ஆறு மணி சுமாருக்கு அருண் சுமாராகத் தெளிந்து உட்கார, வந்தனா அருகில் வந்து உட்கார்ந்தாள்.

    ஏன் திடீர்னு மயக்கம்? என்ன டென்ஷன் உனக்கு?

    அருண் பதில் சொல்லாமல் அவளையே பார்க்க,

    அருண் என்னாச்சு உங்களுக்கு? கேட்டபடி பதட்டமாக உள்ளே நுழைந்தாள் நீரஜா. பின்னால் அவள் அப்பா.

    வந்தனா எழுந்து நின்றாள்.

    நீரஜா சுவாதீனமாகக் கட்டிலில் வெகு நெருக்கமாக அவனருகில் உட்கார்ந்து கொண்டாள்.

    உங்களைப் பற்றி நாலு நாளா ஒரு தகவலும் இல்லையேனு உங்க ஆபீசுக்கு போன் பண்ணினேன்! விவரம் சொன்னாங்க!

    அப்பா அந்த அறையைப் பார்த்தார்.

    ரூம் ரொம்ப சுமாரா இருக்கே! ஏஸி ரூம் இருக்கானு நான் விசாரிக்கறேன்மா! அங்கே மாத்திடுவோம்!

    அருண் தடுத்தான்.

    எனக்கு ஒண்ணுமில்லை சார், நாளை மறுநாள் டிஸ்சார்ஜ்!

    நான் டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்மா! நீ பேசிட்டு இரு!

    அவர் வெளியேற,

    நீரஜா திரும்பி வந்தனாவை பார்த்தாள்.

    நீங்கதான் அருணோட செகண்ட் சிஸ்டரா?

    ஆமாம்!

    நான் அருண்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்!

    வந்தனா சட்டென எழுந்து வெளியே வந்தாள். வராண்டாவில் நின்றபடி சாலையைப் பார்த்தாள்.

    கனைப்புச் சப்தம் கேட்டது.

    திரும்பினாள்.

    நீரஜாவின் அப்பா!

    நீதான் அருணோட ரெண்டாவது சிஸ்டராம்மா?

    ஆமாம் சார்

    வேலை பாக்கறியாக்கும்?

    ம்! தனியார்ல!

    போன வாரத்துல வீட்ல அருண் ஏதாவது பேசினாரா?

    ஏதாவதுன்னா?

    ஓக்கே! பேசலைனு நினைக்கிறேன். மனசுக்குள்ள புழுங்கியிருக்கார். அதுலதான் ரத்த அழுத்தம் எகிறி மயக்கம். டென்ஷன் கூடியிருக்குனு டாக்டர் சொன்னது கரெக்ட்!

    வந்தனா பேசவில்லை.

    அருண் இன்னமும் பேசுவார்னு எனக்குத் தோணலை! உன் மூலமா செய்தி தெரியட்டும்மா!

    என்ன செய்தி?

    என் மகள் நீரஜாவும், அருணும் காதலர்கள். உங்க குடும்ப சூழ்நிலையை நான் தெரிஞ்சுகிட்டேன். என் மகள் காதலைப் பிரிக்க எனக்கு உடன்பாடில்லை! அதே சமயம் பிரச்சனை நிறைந்த உங்க குடும்பத்துல அவளை அனுப்பிவைக்க எனக்கு சம்மதமும் இல்லை! அருணுக்கு ஏதாவது ஒண்ணுதான் கிடைக்கும். தாயும், சகோதரிகளும் வேணும்னா, என் மகளை மறக்கட்டும். இல்லை, காதலிதான் பெரிசுனா, உங்களைவிட்டு வரணும்! நிரந்தரமா பிரியச் சொல்லலை! அப்பப்ப வந்து பார்த்துக்கட்டும். பணம் பத்தலைனா, உதவட்டும்!

    வந்தனா பேசவில்லை!

    நீரஜாவை உங்களுக்காக அருண் இப்ப உதறலாம். தற்சமயம் அது நியாயமாக்கூட இருக்கலாம். ஆனா எத்தனை நீரஜாக்களை விலக்க முடியும்? வீட்ல ஒரு மெண்டல் பேஷன்ட் இருக்கானு இவர் வாழாம போகமுடியுமா? மன உளைச்சல்ல இவரும் உன் அக்கா போல ஆகணுமா? சொல்லும்மா!

    "……….....!’

    நான் யதார்த்தமான பக்கங்களை புரட்டிக்காட்டிட்டேன் அவருக்கு! அதன் காரணமா ரொம்ப யோசிக்க, நிறையக் குழம்பிப் போயிருக்கார். நீ ஒரு சகோதரி அவருக்கு. உன் அண்ணன் வாழணும்னு நீ நினைச்சா, ஏதாவது நல்லது செய்மா!

    நீரஜா வெளியே வந்தாள்

    போலாமாப்பா?

    சரிம்மா! அருணைச் சந்திக்க உள்ளே வந்தார். தோளில்தட்டிக் கொடுத்தார்.

    எல்லாம் சரியாகும் அருண்! நாங்க வர்றோம்! போய்விட்டார்கள்.

    அவர்கள் வாங்கி வந்த ஏராளமான பழங்கள், ஹார்லிக்ஸ், பிஸ்கட்ஸ் எல்லாம் ஷெல்பில் இருந்தன.

    ஸாரி வந்தனா!

    "எதுக்குண்ணா?’

    பர்சனலா பேசணும்னு உன்னை நீரஜா வெளியே அனுப்பினதுக்கு! கதவைச் சாத்திவிட்டு வந்தனா அருகில் வந்து உட்கார்ந்தாள்.

    அவனையே பார்த்தாள்.

    ஏம்மா அப்படி பார்க்கற?

    நீரஜாவை நீ ரொம்ப ஆழமா காதலிக்கறே இல்லையா?

    அவளோட அப்பா சொன்னாரா?

    அவர் சொன்னாத்தானா? அவ நெருக்கத்தை ஆஸ்பத்திரில காட்டிட்டாளே! அருண் பேசவில்லை!

    உனக்கு அவளை விட முடியலை! எங்களையும் உதறமுடியலை! வெளிய சொல்லவும் தயக்கம்! எந்த முடிவுக்கும் வர முடியலை! அதனால் மன உளைச்சல். டென்ஷன்... இங்கே கொண்டு வந்து விட்டிருக்கு!’

    ஒரே வாக்கியத்தில் பிரச்சனை மொத்தத்தையும் வந்தனா சொல்லிவிட்டதால் அதிர்ந்து போயிருந்தான் அருண்.

    அண்ணா! நீ எந்த முடிவை எடுத்தாலும், அதுக்கு நாங்க கட்டுப்படுவோம்! நாங்கனு சொன்னது நான், அம்மா! கீர்த்தனாவை நீ கணக்குல எடுத்துக்க வேண்டாம்!

    வந்தனா! நீ நிஜம்மாத்தான் சொல்றியா?

    ஆமாம்!

    அம்மா இதை ஒப்புக்கணுமே!

    "ஒப்புக்கிட்டுத்தான் ஆகணும். நீரஜா வேண்டாம்... நாங்கத்தான் பெரிசுணு நீ முடிவு எடுத்திருந்தா, உனக்கு நோயும் இல்லை! இந்த ஆஸ்பத்திரி அனுமதி அவசியமே இல்லை! அவதான் உசத்தினு எங்களை உதறிட்டுப்போக

    Enjoying the preview?
    Page 1 of 1