Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஜில்லுனு ஒரு கப் இளமை!
ஜில்லுனு ஒரு கப் இளமை!
ஜில்லுனு ஒரு கப் இளமை!
Ebook100 pages36 minutes

ஜில்லுனு ஒரு கப் இளமை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டேவிட் வீட்டுக்கு வந்து விட்டான்.
ஜோவை உட்கார வைத்து ஜென்னி பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
டேவிட் முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்தான்.
“அம்மா பசிக்குது!”
“சப்பாத்தி சூடா இருக்குடா ராஜா. சாப்பிடலாம்.”
ஜோ ஓடி வந்து டேவிட்டின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
“டாடி. வீக் எண்ட்ல கிஷ்கிந்தா போகலாமா?”
“சரிடா கண்ணா.”
“அடுத்த மாசம் எங்க ஸ்கூல்ல ஊட்டிக்கு எக்ஸ்கர்ஷன் கூட்டிட்டு போறாங்களாம். என்னை நீ அனுப்புவியா?”
“போயிட்டு வாயேன்.”
“மம்மி ‘வேண்டாம்’னு சொல்லுது.”
“மம்மி கிட்ட நான் பேசறேன். சரியா?”
“டாடி...! நான் சைக்கிள் கத்துக்கணும். என் வயசுப் பசங்க எல்லாரும் ஓட்டறாங்க!”
ஜென்னி வெளியே வந்தாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நம்ம வீடு மெயின் ரோட்ல இருக்கு. ட்ராபிக் அதிகமாயிருக்கு. நீ சைக்கிளை சரியா ஓட்டலைனா, நான் மடில நெருப்பைக் கட்டிட்டு இருக்கணும்.”
“பாருங்க டாடி, நீ போம்மா. டாடிதான் நல்லவங்க. எதுக்குமே தடை சொல்றதில்லை. நீ மோசம்.“சரி, சரி! சாப்பிட வா!”
“எனக்கு வேண்டாம்.” ஜோ முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள,
“வாடா! கோவத்தை சாப்பாட்டு மேலே காட்டாதே. நீ நெனச்சதெல்லாம் நடக்கும். வா. வர வர உனக்கு செல்லம் அதிகமாயிடுச்சு.”
மூவரும் சாப்பிட உட்கார -
வழக்கம் போல டேவிட்தான் ஜோவுக்கு ஊட்டினான்.
பாதி சாப்பிடும் போதே ஜோவுக்கு உறக்கம் வந்து விட்டது. ஜென்னி கை கழுவி விட்டு, ஜோவை அணைத்துப் பிடித்து படுக்கைக்கு கொண்டு போனாள்.
படுக்க வைத்தாள். உறங்கி விட்டான்.
தளதளப்பான உடம்பு. குண்டுக் கன்னம். உருண்டை முழி. வசீகரமான சிரிப்பு. நல்ல பளிச் நிறம்.
பார்த்தவுடன் அள்ளிக் கொண்டு போகும் அழகு.
ஜோவை யார் பார்த்தாலும் விடமாட்டார்கள்.
வெளியே வந்தாள். சமையல்கட்டை சீராக்கி, கதவைப் பூட்டி விட்டு வர இரவு பத்தாகி விட்டது.
“இப்ப கோபமெல்லாம் அடங்கி தெளிவுக்கு வந்துட்டியா ஜென்னி?”
“எனக்குக் கோபமே இல்லை. நான் தெளிவாகத்தான் இருக்கேன்.”
“உன் எண்ணம் மாறிடுச்சா!”
“இல்லீங்க. கலைக்கறதுல நான் தீர்மானமா இருக்கேன். முடிவே பண்ணிட்டேன்.”
“என்ன பேசற நீ?”
“இந்த அழகான ஜோதான் நமக்கு முதலும், கடைசியும். இவனுக்கு போட்டியா ஒருத்தர் வரக் கூடாது.ஜென்னி! என்ன பேசற? இது தப்பு. அவன் மேல நாம வச்ச பாசம் கடுகளவு கூடக் குறையப் போறதில்லை. அவனுக்கு துணைக்கு ஒரு தம்பியோ, தங்கையோ வரட்டுமே. ஏன் ஜென்னி தடுக்கற?”
“இல்லீங்க. அது சரியா வராதுனு என் அடி நெஞ்சுல ஆழமா, அழுத்தமா படிஞ்சாச்சு.”
“அந்த எண்ணத்தை நான் மாத்தறேன்!”
“அந்த கடவுளே வந்தாலும் அதை மாற்ற முடியாது.”
“நான் இத்தனை சொல்லியும், நீ பிடிவாதமா இருக்கறது நியாயமா ஜென்னி?”
“என்னை மன்னிச்சிடுங்க! என் எண்ணம் மாறாது.”
படக்கென எழுந்து விட்டான் டேவிட்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
ஜில்லுனு ஒரு கப் இளமை!

Read more from தேவிபாலா

Related to ஜில்லுனு ஒரு கப் இளமை!

Related ebooks

Reviews for ஜில்லுனு ஒரு கப் இளமை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஜில்லுனு ஒரு கப் இளமை! - தேவிபாலா

    1

    காலை எழுந்தது முதலே தலை சுற்றல் அதிகமாக இருந்தது ஜென்னிக்கு. பொருட்படுத்தவில்லை. குளித்து விட்டு வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.

    டேவிட்டை ஏழு மணிக்கு எழுப்பினாள்.

    குழந்தையை எழுப்பி, ரெடி பண்ணுங்க. கொஞ்சம் படிச்சிட்டு குளிக்கப் போகட்டும்.

    ஜோ! எந்திரி ராஜா. முகம் கழுவிட்டு படிக்க வேண்டாமா?

    காலையில் ஜோவை எழுப்புவது அத்தனை சுலபமான செயல் அல்ல. அதற்கு அசாத்திய பொறுமை வேண்டும்.

    ஜென்னி சமையல்கட்டில் காலை உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் நேரம், இவர்கள் குடும்பம் பற்றிய ஒரு அறிமுகம்!

    டேவிட்டுக்கு வயது 34. ஒரு நிதி நிறுவனத்தில் டேவிட் ஜூனியர் அதிகாரி. ஐந்து இலக்கச் சம்பளம். வசதியான அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பம். மனைவி ஜென்னிக்கு வயது 30. ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் தலைமை நர்ஸ். ஒரே மகன் ஜோ - ஒன்பது வயது. சின்னக் குடும்பம். ஆனால் சீரான குடும்பம். இது சொந்த வீடு. மாருதி 800 கார் ஒன்று உண்டு. காலையில் இருவரும் வேலைக்குப் போய் விட்டால் மாலைதான் வருவார்கள். ஜென்னி நர்ஸ் என்பதால் சில சமயம் இரவு ட்யூட்டி கூட உண்டு.

    டேவிட், மகனை அந்த நேரம் பார்த்துக் கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்து கொள்வார்.

    ஜோவை ஒரு மாதிரி எழுப்பி குளிப்பாட்டி காலை உணவை ஊட்டி விடுவதற்குள் எட்டரை மணியாகி விட்டது.

    இருவரும் பரபரப்பாக புறப்படும் சமயம், ஜென்னி தாளமாட்டாமல் ‘கொட கொட’வென வாந்தியெடுக்க, அப்பா, மகன் இருவருமே பதறிப் போனார்கள்.

    ஜென்னிக்கு மயக்கமே வந்து விட்டது.

    புறப்படும்மா! உங்க ஆஸ்பத்திரில பெரிய டாக்டர்கிட்ட காட்டிடலாம்.

    இல்லீங்க! நான் பாத்துக்கறேன். நீங்க ‘ஜோ’வை விட்டுட்டு ஆபீஸ் புறப்படுங்க. நான் கொஞ்சம் லேட்டா ஆட்டோல கிளம்பறேன்.

    வேண்டாம்! நான் லீவு போட்டுட்டு உன் கூட வர்றேன்.

    ஜென்னி எழுந்து விட்டாள்.

    காரை எடுத்துக் கொண்டு முதலில் குழந்தையை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு நேராக இருவரும் ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள்.

    அங்குள்ள லேடி டாக்டரிடம் வந்தார்கள்.

    ஜென்னி வணங்கினாள். விவரத்தைச் சொன்னாள். டாக்டர் பரிசோதித்தார்.

    நாள் தள்ளியிருக்கா?

    ஆமாம் டாக்டர்!

    யூரின் டெஸ்ட் எடுத்துப் பார்த்துடலாம்.

    அரைமணி நேரத்தில் அந்த டாக்டர் கை குலுக்கினாள்.

    கர்ப்பமா இருக்கீங்க ஜென்னி!

    டேவிட் துள்ளி விட்டான்.

    நிஜம்மாவா டாக்டர்? ஜென்னி கேட்டாள்.

    என்ன சந்தேகம்? க்ளியர் பாஸிட்டிவ்! வாழ்த்துக்கள். பலவீனமா இருக்கீங்க. டானிக் எழுதித் தர்றேன்.

    பெரிய டாக்டர்கிட்ட போய் லீவு எழுதிக் குடுத்துட்டு, வீட்டுக்குப் போங்க. ஒரு மாசம் பெட் ரெஸ்ட்ல இருங்க. மிஸ்டர் டேவிட் கிட்ட இருந்து பார்த்துக்குங்க. தாமதமா வந்திருக்கற கர்ப்பம். எச்சரிக்கையா இருக்கணும்.

    ஜென்னி ஒரே ஒரு நாள் லீவு எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.

    போதுமா ஜென்னி?

    என்னை வீட்ல விட்டுட்டு, நீங்க ஆபீசுக்கு புறப்படுங்க

    மாட்டேன்!

    என்னங்க நீங்க... லீவை வீணாக்காதீங்க.

    எப்பவுமே கடமை உணர்வோட இருக்காதே ஜென்னி. எப்பேர்ப்பட்ட சந்தோஷம் இது! வாய் விட்டு சிரிக்க வேண்டாமா? சீரியஸா இருக்கியே!

    அவள் பேசவில்லை.

    இருவரும் வீடு திரும்பி விட்டார்கள்.

    நீ ஒக்காரு. நான் ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வர்றேன்.

    டேவிட் சொன்னபடி செய்தான்.

    பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

    இப்படி ஒரு நாளை நான் கற்பனை கூட செஞ்சு பார்க்கலை ஜென்னி. நம்ம ஜோவோட அதிர்ஷ்டம் தாமதமா வேலை செய்யுது. ஜோ ஒரு பையன் இருக்கறதால, இந்த முறை உன்னை மாதிரி ஒரு அழகான பெண் குழந்தைதான் வேணும் எனக்கு.

    ஜென்னி பேசவே இல்லை.

    அதுக்கு ‘ஆலிஸ்’னு பேரு கூட நான் யோசிச்சுட்டேன்.

    பதிலே இல்லை.

    நீ தனியா கஷ்டப்பட வேண்டாம். கை நிறைய சம்பாதிக்கறோம். எல்லா வேலைகளையும் கவனிக்க வீட்டுக்கு ஒரு வயசான அம்மாவை நியமிச்சிடலாம். நீ ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடக் கூடாது.

    ஜென்னி அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

    என்னம்மா? ரொம்ப சோர்வா இருக்கா? இல்லைனா நீ கொஞ்சமும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சில வாயடைச்சுப் போயிட்டியா? சொல்லு ஜென்னி?

    நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

    இல்லீங்க. நான் ரொம்பக் கவலைல இருக்கேன்.

    என்ன கவலை? இந்த பிரசவம் நல்லபடியா நடக்கணுமேங்கற கவலையா?

    அதில்லை!

    இத்தனை வருஷம் கழிச்சு புள்ளை உண்டான காரணமா யாராவது கேலி பண்ணுவாங்கனா? முப்பது வயசுல கர்ப்பம் தரிக்கறதுல தப்பே இல்லைம்மா.

    அதுவும் இல்லை.

    பின்ன என்ன ஜென்னி..? உன் மனசை எதுவோ உறுத்துது. கர்ப்பம்னு தெரிஞ்சதும் உன்கிட்ட மலர்ச்சி இல்லை. பளிச்சுனு ஒரு வெளிச்சம் வரலை. ஆழமா நீ கவலைப்படறே. எனக்கு ஒண்ணும் புரியலை.

    ஜென்னி எழுந்தாள்.

    நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் டேவிட்!

    என்ன?

    இந்த கர்ப்பத்தை நான் கலைச்சிடப் போறேன்.

    எ... என்னது?

    ஆமாம் டேவிட்.

    டேவிட் முகத்தில் ஆவேசக் கொந்தளிப்பு. வேகமாக அவளை நெருங்கினான்.

    என்ன டேவிட்? என்னை அடிக்கணும்னு கை துடிக்குதா?

    ஆமாம்! தாய்மை அடைஞ்சிருக்கே! அதுதான் என்னைத் தடுக்குது இல்லைனா உன்னை...?

    ஜென்னி லேசாக சிரித்தாள்.

    "எப்படி ஜென்னி? இந்த மாதிரிப் பேச உனக்கு வாய் கூசலை? கேட்டுட்டு நான் துடிச்சுப் போய் நிக்கறேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1