Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marupakkam
Marupakkam
Marupakkam
Ebook148 pages51 minutes

Marupakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465445
Marupakkam

Read more from Devibala

Related to Marupakkam

Related ebooks

Reviews for Marupakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marupakkam - Devibala

    15

    1

    விக்னேஷ் ஆபீசுக்குள் நுழைந்த போது ஜீயெம் உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தார்!

    விக்னேஷ் தன் இருப்பிடத்தில் வந்து அமர்ந்தான். டேபிளை துடைத்து, கம்ப்யூட்டரை இயக்கினான்!

    ஆபீஸ் பாய் குடிக்க தண்ணீர் கொண்டு வந்தான்!

    என்ன பிரச்னை?

    நம்ம ஆபீஸ்ல நவீன் தவிர வேறென்ன பிரச்னை?

    கேட்டு விட்டு அவன் போய் விட்டான்!

    இன்டர்காமில் ஜீயெம் அழைத்தார்.

    விக்னேஷ் உள்ளே நுழைந்தான்! ஜீயெம் எதிரே தலைகுனிந்து நவீன் நின்றான்!

    பாருங்க விக்னேஷ் உங்க நண்பரை! பிஎஃப், சொசைட்டி, அது இதுன்னு ஏகப்பட்ட லோன் வாங்கியாச்சு! பிடித்தம் போக கால்வாசி சம்பளம் கூட கைக்கு வராது! பிடித்தத்துக்கும் ஓரளவு இருக்கு! சட்டப்படி கைல கொஞ்சமாவது குடுக்கணும்! மாசத்துல ஒரு வாரம் கூட ஆபீசுக்கு வர்றதில்லை! வரும் போது குடிச்சிட்டு, முழு போதைல வர்றார்! இவரால கம்பெனிக்கு எந்த ஒரு லாபமும் இல்லை! தண்டச் சம்பளம்! அந்தப் பதவி பொறுப்பான பதவி வேற! அவர் வேலைகள் மொத்தத்தையும் நீங்க இழுத்துப் போட்டுச் செய்யறீங்க! இனிமேலும் பொறுக்க முடியாது விக்னேஷ்! மத்தவங்க என்னைக் கேள்வி கேக்கத் தொடங்கிட்டாங்க! நான் பதில் சொல்லலைனா, மேலிடத்துக்கு என் மேல புகார் போகும்! இவரால நான் கெட்ட பேர் எடுக்க முடியாது! அதனால...!

    அதனால?

    நிறைய வார்னிங் குடுத்து, எடுத்துச் சொல்லி எச்சரிக்கை செஞ்சும் நவீன் திருந்தலை! கிட்டத்தட்ட ரெண்டு வருஷ அவகாசம் தந்தாச்சு! இப்பவும் கடன் கேட்டு வந்து நிக்கறார். இனி வேலையை விட்டுத் தூக்கறதைத் தவிர வேற வழியில்லை!

    விக்னேஷ் அதிர்ந்தான்.

    இல்லை விக்னேஷ்! நீங்கதான் என்னை நடவடிக்கை எடுக்க விடாம தடுக்கறீங்க! இனிமே பொறுத்துக்க முடியாது! இது கடைசி எச்சரிக்கை. அவர் மனைவிகிட்ட போய்ச் சொல்லுங்க! அவங்க இங்கே வரணும்! ஒரு மாச நோட்டீஸ். கடைசி சந்தர்ப்பம். அவர் ஒரு நாள் கூட லீவு போடாம, குடிக்காம வேலைக்கு வந்தா, கன்ஸிடர் பண்ணலாம்! பேசுங்க! கூட்டிட்டு போங்க!

    சரி சார். வாடா நவீன்!

    பிடித்து இழுத்து வந்தான் விக்னேஷ்!

    கான்ஃபரன்ஸ் அறைக்கு கூட்டி வந்து கதவைச் சாத்தினான்!

    இனிமே பொறுத்துக்க மாட்டாங்க! உனக்கு கெடு வச்சாச்சு! உனக்காக நான் போராடிப் பார்த்தாச்சு! இனிமே என் சொல்லுக்கு மரியாதை இல்லை!

    இல்லைடா விக்னேஷ்... வந்து...!

    இப்பக் கூட குடிச்சிட்டு வந்து போதைல பேசறே நீ! நல்லா இருக்கா! நீ தனி மனுஷனா இருந்தா ஒழிஞ்சு போன்னு விட்ரலாம்! மனைவி, நாலஞ்சு வயசுல பெண் குழந்தை ரெண்டும் இருக்கு! அவங்க ஒரு பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பாக்கற காரணமா, குடும்பம் பட்டினி இல்லாம ஓடுது! இது நியாயம் இல்லை! உன் குடிப்பழக்கம் காரணமா, குடும்பத்துல, ஆபீஸ்ல, வெளில எல்லா இடத்துலேயும் உன் மரியாதை சரிஞ்சாச்சு! உன்னை இப்பவும் மதிச்சுப் பேசறவன் நான் ஒருத்தன்தான்! இது கடைசி எச்சரிக்கை! நானும் உன்னைக் கை விட்டுட்டா, உன் கதி என்னடா?

    நவீன் படக்கென அவன் கைகளைப் பிடித்தான்.

    நான் நல்லவன்டா! என்னை நம்புடா! விதி என் வாழ்க்கைல விளையாடுது!

    என்னடா உளர்ற? உனக்கென்ன கஷ்டம்! நல்ல பதவில இருக்கே! ஒழுங்கா உழைச்சிருந்தா கை நிறைய சம்பளம்! நீ சீர்கெட்டுப் போய் எதுவும் கைக்கு வரலைனா, அது யார் தப்பு! சின்னக்குடும்பம்! ரெண்டு வருமானம். என்ன பிரச்னை? இதை விட சொர்க்கம் என்ன இருக்கு?

    இல்லைடா!

    என்ன இல்லை! சரி! என்ன பிரச்னை உனக்கு? எங்கிட்ட சொல்லு! நான் தீர்த்து வைக்கறேன்!

    சொல்ல முடியலைடா!

    தப்பு! குடிப்பழக்கத்துக்கு நீ ஆளாயிட்டே! அது கெட்டியா உன்னைப் புடிச்சு, உன்னை ஆக்ரமிச்சு, இப்ப அழிவுப் பாதைக்குக் கொண்டு போகுது!

    அதுக்கு என்ன காரணம் தெரியுமா?

    வாயை மூடு! குடிகாரன் சொல்ற எந்த ஒரு காரணத்துக்கும் நியாயம் இல்லை! போதைல புரண்டு எழ ஆயிரம் காரணம் கிடைக்கும்! ஒரு ஆம்பிளையா பொறந்துட்டா, அவனுக்குனு ஒரு கடமை உண்டு! சம்பாதிக்கணும். குடும்பத்தை காப்பாத்தணும்! உன் மனைவி, குழந்தைக்காக நீ என்ன செஞ்சே? கால் சம்பளம் கைக்கு வருது! அதையும் நீ குடிச்சு கரைப்பே! வீடு எப்படி நடக்கும்? கேட்டியா?

    நவீன் பேசவில்லை!

    குடும்ப சங்கதி உன் பர்சனல் சங்கதினு இன்னிவரைக்கும் நான் தலையிடலை! உன் வீட்டுக்கும் வரலை! ஆனா இனி தலையிட வேண்டிய நேரம் வந்தாச்சு! இப்ப நீ புறப்படு! இன்னிக்கு சாயங்காலம் நான் உன் வீட்டுக்கு வர்றேன்!

    வேண்டாம்! நீ வர வேண்டாம்!

    ஏன்? உன் வண்டவாளத்தை உன் மனைவி முழுக்க உரிக்கப் போறானு பயமா? அதனால தடுக்கறியா?

    அதில்லைடா!

    அப்படீன்னா திருந்து! குடியை இந்த நிமிஷம் விட்டேன்னு சத்யம் பண்ணு! நாளை முதல் ஒழுங்கா வேலைக்கு வா! ஒரே நாள்ல நீ திருந்தினா ஒரு மாசத்துல உனக்காக நான் ஜீயெம்கிட்ட கெஞ்சி, அவங்க முடிவை மாத்திக்கச் சொல்றேன். ஆனா இப்ப நீ திருந்தணும்! செய்வியா?

    நவீன் பேசவில்லை!

    சரின்னு சொல்ல, நீ தயாரா இல்லை!

    அப்படி இல்லைடா!

    ஸாரி! இனி உனக்காக நான் பேசமாட்டேன். கடவுள் விட்ட வழி! உன் தலைல என்ன எழுதியிருக்கோ, அதன்படி நட! நான் போராடி லாபமில்லை!

    விக்னேஷ் வெளியே வர,

    டேய்! நில்லுடா! எனக்காகப் பேசறவன் நீ ஒருத்தன்தான்டா! நீயும் கோவப்பட்டா எப்படி!

    "ஆதரிக்கவும் எல்லையிருக்கு! அதையெல்லாம் நீ கடந்தாச்சு! இனி

    Enjoying the preview?
    Page 1 of 1