Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poojai Naadum Malar
Poojai Naadum Malar
Poojai Naadum Malar
Ebook106 pages34 minutes

Poojai Naadum Malar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466862
Poojai Naadum Malar

Read more from Devibala

Related to Poojai Naadum Malar

Related ebooks

Related categories

Reviews for Poojai Naadum Malar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poojai Naadum Malar - Devibala

    1

    கார் வாசலில் வந்து நின்றது.

    நீளமான ஒரு படகு போல வாசலை அடைத்துக்கொண்டு நின்றது.

    ஆளவந்தாரும், அவர் மனைவியும் இறங்கி உள்ளே வர, கணேசன் ஓடி வந்து வரவேற்றார்.

    வராதவங்க வந்திருக்கீங்க! நான் கொடுத்து வச்சிருக்கேன்!

    எதுக்கு பெரிய வார்த்தைகள்?

    ஒக்காருங்க!

    இருவரும் உட்கார்ந்தார்கள்.

    உங்க மகள் சுசீலா, மருத்துவப்படிப்புல தங்க மெடல் வாங்கியிருக்கறதா கேள்விப்பட்டோம். அதான் வாழ்த்த - வந்திருக்கோம்!,

    கணேசனுக்கு பூரிப்பாக இருந்தது.

    சுசீலா.... சுசீ.... இப்படி வாம்மா!

    சுசீலா மெல்ல வெளியே வந்தாள்.

    கும்பிட்டாள்.

    வாழ்த்துக்கள்மா!

    சார் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ!

    சுசீலா அவர்கள் காலில் விழுந்தாள்.

    நல்லா இரும்மா! உன் உழைப்புக்குக் கிடைச்ச பெருமை இது! மேற்க்கொண்டு என்ன செய்யப்போறே?

    இன்னும் படிச்சாத்தான் ஸ்பெஷலிஸ்ட் பண்ண முடியும் ஆனா இப்போதைக்கு வேண்டாம். வேலைக்குப் போயிட்டு சின்னதா ஒரு க்ளினிக்கும் தொடங்கிக்கலாம்னு இருக்கேன்!

    உனக்கு பெரிய நர்ஸிங் ஹோமே நடத்த ஆசையா?

    நிச்சயமா! அதையெல்லாம் நான் நினைச்சுப் பாக்க முடியுமா?

    முடியும்! உனக்கு நான் நர்ஸிங் ஹோம் சகல வசதிகளோடயும் கட்டித் தர்றேன்! அதைச் சொல்லத்தான் இங்கே வந்தேன்!

    சுசீலாவும், அப்பா கணேசனும் ஆடிப்போனார்கள்.

    அதுக்குக் கோடிக்கணக்காக செலவாகுமே!

    ஆகட்டும்!

    "அப்பா! ஒரு நிமிஷம் உள்ள வாங்க!’’

    அப்பா வந்தார்.

    "என்னம்மா?’’

    தப்பா எடுத்துக்காதீங்க! மருத்துவப் படிப்புக்காக ஒரு கால கட்டத்துல நீங்க இவரைத் தேடிப் போய் உதவி கேட்டப்ப ஏதோ ஒரு சாக்கு சொல்லித் தட்டிக் கழிச்சார் தரலை.

    ஆமாம்!

    இப்ப நர்ஸிங் ஹோமே கட்டித் தர்றார்!

    நீ தங்க மெடல் வாங்கி, உன்னை நிரூபிச்சிட்டியே!

    அதுக்கு இவருக்கென்ன? அப்பா! இவர் பக்கா வியாபாரி. ஏதோ உள் நோக்கம் இருக்கு. இல்லாம வரமாட்டார். அது என்னானு நாசூக்கா தெரிஞ்சுக்கப் பாருங்க.

    எப்பவும் ஒருத்தரை தப்பாவே எடை போடக் கூடாதும்மா!

    நீங்க கேளுங்களேன். அவரை மதிக்காம இருக்கோமா, என்ன? சரி! நானே பேசறேன்!

    இருவரும் வெளியே வந்தார்கள்.

    என்னம்மா?

    "அதில்லை. உங்க அன்பைப் பார்த்து ரெண்டு பேரும் நெகிழ்ந்து இருக்கோம். ஆனா நர்ஸிங் ஹோம் வைக்கறது ரொம்பப் பெரிய செலவு! யாரோ ஒருத்திக்காக, இத்தனை தூாம் நீங்க செய்யறது எதுக்கு? நான் தப்பா கேக்கலை யதார்த்தமான கேள்வி இது!’’

    நீ புத்திசாலிம்மா! பாயின்டைப் புடிச்சிட்டே! அதான் கையில் தங்க மெடல்

    என்ன சொல்றீங்க?

    டிரைவர்! எல்லாத்தையும் எடுத்துட்டு வா! ஓங்கிக் குரல் கொடுக்க,

    தட்டுத் தட்டாக பழங்கள், தாம்பூலம், தேங்காய், இனிப்புகள், சேலை, நகைகள் என வந்து கொண்டே இருந்தன. கூடம் முழுக்கப் பரப்பப்பட்டது. கணேசன் மிரண்டார்!

    "எதுக்கு இதெல்லாம்?’’

    நான் சம்பந்தம் பேச வந்திருக்கேன். சுசீலா உன் கேள்விக்கு பதில் வருது யாரோ ஒருத்திக்காக நர்ஸிங் ஹோம் கட்டலை! என் வருங்கால மருமகளுக்காக அதை நான் கட்டப் போறேன். நீ வெளிநாடு போய் படிக்கற செலவும் இதுல அடங்கும்! இது என் பணமல்ல. என் குடும்பத்துக்கு நீ மருமகள் ஆயிட்டா, அது உன் பணம் சரியா?

    கணேசன் ஆடிப் போனார்.

    இப்பவே பாக்கு வெத்தலை மாத்திக்கலாம்! தேதியும் குறிச்சிடலாம்!

    கணேசன் மகளைப் பார்த்தார்.

    சுசீலா ஆளவந்தாரை நெருங்கினாள்.

    நான் ஒரு பிரபல டாக்டரா ஆகி என் தொழில் சூடுபிடிக்க இன்னும் சில மாசங்கள் ஆகும். அதுவரைக்கும் எனக்குக் கல்யாணம் வேண்டாம்!

    அம்மாடீ! உன் லட்சியத்துக்கு இந்தக் கல்யாணம் தடையா இருக்காது!

    நான் சொல்ல வேண்டாம்னு பார்த்தேன்!

    "சொல்லும்மா!’’

    ரொம்ப வருத்தத்தோட இதைச் சொல்றேன். நாளைக்கு நான் டாக்டரா மாறி லட்சக்கணக்கா சம்பாதிச்சாலும், அடிப்படைல நானும் ஒரு பெண் இல்லையா?

    நீ என்னம்மா சொல்ற?

    எந்த ஒரு பொண்ணுக்கும் தனக்கு வரப்போற புருஷன் நல்லவனா இருக்கணும்னு ஆசையிருக்கும் இல்லையா?

    ஆளவந்தார் முகம் கறுத்தது.

    உங்க பிள்ளைக்கு எந்த நல்ல குணமும் இல்லை! சகல தப்பான குணங்களுக்கும் அவர் சொந்தக்காரர்! இந்த நிலையில என் வாழ்க்கையை , நான் பணயம் வைக்க முடியுமா?

    கணேசன் பதறிவிட்டார்.

    சுசீலா.... என்னம்மா நீ?

    தப்பில்லைப்பா! யாரையும் நான் தாக்கிப் பேசலையே! என் வாழ்க்கை பாழாகக் கூடாதேனுதானே நான் கவலைப்படறேன்! அது தப்பா? அம்மா! நீங்களும் ஒரு பெண்! நான் தாயை இழந்தவள்! ஒரு பொண்ணு தனக்கு வரப்போற புருஷன், நல்லவனா இருக்கணும்னு. ஆசைப்பட்டா, அது தப்பா?

    ஆளவந்தார் எழுந்து விட்டார்.

    ஸாரிமா! நான் வர்றேன்!.

    நீங்க இந்த விஷயத்தை ஒரு வார்த்தை போன்ல கோடி காட்டிட்டு வந்திருக்கலாம்!

    ஆளவந்தார் திரும்பினார்.

    நான் சொல்றது சரியில்லைதான். ஆனாலும் சொல்றேன். உன்னை மாதிரி ஒரு படிச்ச, தெளிந்த பொண்ணுதான் என் பிள்ளையைத் திருத்த முடியும்னு நம்பி வந்தேன். தொந்தரவுக்கு மன்னிச்சிடும்மா!

    "நீங்க வந்ததுல தப்பே இல்லை! ‘உங்க மகனைத் திருத்த தன்

    Enjoying the preview?
    Page 1 of 1