Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனசு ஒரு தினுசு!
மனசு ஒரு தினுசு!
மனசு ஒரு தினுசு!
Ebook95 pages45 minutes

மனசு ஒரு தினுசு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ர்த்தனா வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரமாகிவிட்டது. அவளிடம் வேலை தவிர வேறெதுவும் பேசவில்லை அமர். வேறு எங்கும் சுற்றாமல் அவனும் எட்டுமணி நேரத்துக்குமேல் ஒழுங்காக அலுவலகத்தில் இருக்கத் தொடங்கிவிட்டான். 


நண்பர் கூட்டத்துக்கு வயிற்றில் புளி. ஓட்டலில் தங்காமல் அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தங்க ஆரம்பித்தான் அமர்.


“அடேய், ஔவையாரை ப்ராக்கெட் போட அண்ணன் நடத்தற ஆரம்ப நாடகமாடா இது?” 


“சாவப் போறான். அது ஜடம்டா. மூஞ்சில ஒரு சிரிப்புகூட இல்லை. இந்த ஜென்மத்துல அது இவனைக் காதலிக்கும்னு நான் நம்பலை.” 


நண்பர்கள் அமரேஷை விமர்சிக்கும் நேரத்தில்தான் ரமணி தன் பெட்டி, தோள்பையுடன் நுழைந்தார் அலுவலகத்தில். 


விவரம் சொல்லி அனுப்பினார். 


“வரச் சொல்றார்.” 


ரமணி உள்ளே நுழைந்த சமயம், ஒரு கடிதத்தை நர்த்தனாவுக்கு டிக்டேட் செய்து கொண்டிருந்தான் அமர். 


“வாங்க அங்கிள்!” 


“நான் வந்தது தொல்லையா தம்பீ?” 


“இல்லையில்லை. நீங்க லெட்டரை டைப் பண்ணுங்க நர்த்தனா. உட்காருங்க அங்கிள். அம்மா எப்படி இருக்காங்க?”


“சௌக்யமா இருக்காங்க. இந்த லெட்டரை உங்ககிட்ட தந்தாங்க.” 


வாங்கிக் கொண்டான் அமர். 


“காப்பி சொல்லட்டுமா அங்கிள்?” 


“இப்ப அவசியமில்லை தம்பி.” 


பிரித்தான்அமர். 


‘கண்ணே அமர்! 


உன் அம்மா எழுதுகிறேன். உன்னை விட்டு வெகு நாட்களுக்குப் பிரிந்திருக்க இனி என்னால் இயலாது. நீ இங்கு வந்துவிடு. ஏழெட்டு வருடங்களாக உன் உல்லாச வாழ்க்கைக்கு நான் எந்த இடையூறும் தரவில்லை. இனி வாழ்க்கையில் நீ ஓரிடத்தில் உட்காரும் தருணம் வந்துவிட்டது. உனக்கொரு திருமணம் நடத்த வேண்டும் நான். அதுவும் நான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பெண்ணை. என் சொல்லை நீ மறுக்க மாட்டாய் என்று எப்போதும் நம்புகிறேன். மானேஜர் ரமணி உன்னோடு பத்து நாட்கள் இருப்பார். இது என் உத்தரவு. அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடு. விரைவில் உன்னை நான் சந்திக்க வேண்டும். - அம்மா. 


நிமிர்ந்தான் அமர். 


“என்ன தம்பீ?” 


“நான் இப்ப ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸ்லதான் இருக்கேன் அங்கிள். நீங்களும் என்னோட தங்கிக்கலாம்.” 


“நன்றி, தம்பி.” 


மணியடித்தான் அமர். 


ப்யூன் வர - 


“இவரை என்னோட கெஸ்ட் ஹவுஸுக்குக் கூட்டிட்டுப்போ. வேண்டிய வசதிகளைச் செஞ்சு குடு. நாம சாயங்காலம் பேசலாம். அங்கிள்.” 


“சரி, தம்பி.” 


வெளியே வந்தார் ரமணி. 


கெஸ்ட் ஹவுஸ் அலுவலகத்தின் பின்னாலேயே இருந்தது.


உள்ளே வந்தார். 


குளியல் முடித்து உடைமாற்றிக் கொண்டதும் சூடான உணவு வந்தது. சாப்பிட்டார். தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் கட்டிலில் சற்று நேரம் படுத்தார். 


'மாலை என்ன பேசப்போகிறான் அமர்?' 


'வெகு அடக்கமாக, நல்ல பிள்ளையாக குரல்கூட அதிராமல்தானே பேசுகிறான்?’


‘இதெல்லாம் நடிப்பா?' 


‘எனக்கு எல்லாம் தெரியும் என்பது இவனுக்குத் தெரியுமா? இல்லை, என்னிடமும் நடிக்கிறானா?' 


'பேசினால் தெரிந்துவிடும்.' 


ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தபோது மாலை மணி ஐந்தாகிவிட்டது. முகம் கழுவி, காப்பி குடித்தார். மாலைச் சிற்றுண்டி வந்தது. சாப்பிட்டார். 


அமர் உள்ளே நுழைந்தான். 


“எல்லாம் வசதியா இருக்கா அங்கிள்?” 


“இருக்கு தம்பி. நான் உங்ககூடத் தங்கறதுல தம்பிக்கு எதுவும்...?” 


“எனக்கென்ன கஷ்டம் அங்கிள்.” 


வெகுநேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இரவுச் சாப்பாடு ஆனது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
மனசு ஒரு தினுசு!

Read more from தேவிபாலா

Related to மனசு ஒரு தினுசு!

Related ebooks

Reviews for மனசு ஒரு தினுசு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனசு ஒரு தினுசு! - தேவிபாலா

    1

    "அம்மா!"

    சொல்லுங்க ரமணி.

    சின்னவர் பொறுப்பில்லாம இருக்கார். அவருக்கொரு பொறுப்பை உண்டாக்க வேண்டாமா?

    ஏன்? விளம்பரக் கம்பெனி நடத்திட்டுத்தான் இருக்கான், அமர்?

    என்னை மன்னிக்கணும் நீங்க.

    எதுக்கு?

    சின்னவர் லாபகரமா எதையும் நடத்தலை. விளையாட்டா வாழ்க்கை போயிட்டு இருக்கு. பணமும், வாலிமும் பர்மனென்டான ஒண்ணு இல்லையேம்மா.

    காந்திமதி புருவம் சுருக்கினாள்.

    தப்பான வழியில போறானா அமர்?

    அப்படி நான் சொல்லலைமா. இந்த வயசுல நீக்கு போக்கு இருக்கலாம். ஆனா நிரந்தரமா இருக்கக்கூடாதே.

    சொல்ல வந்ததை நேராச் சொல்லுங்க ரமணி.

    சின்னவருக்கு 24 வயசாச்சு. கல்யாணத்துக்கு பார்க்கலாம் இல்லையா?

    அவனைக் கேக்க வேண்டாமா?

    என்னன்னு?

    இப்பவே தயாரா இல்லையா?

    சொன்னா, ஒப்புக்கறார். பொண்ணை நீங்க பாருங்கம்மா.

    "நம்ம அந்தஸ்துக்குத் தகுந்த பொண்ணா இருக்கணும். இந்த விஷயத்துல நான் ரொம்பக் கடுமையா இருப்பேன். அதுக்கு முன்னால...

    சொல்லுங்க.

    நீங்க ஒரு வாட்டி மெட்ராஸ் போய் எப்படி இருக்கான் அமர்னு பார்த்துட்டு வந்துருங்களேன்.

    சரிம்மா.

    உடனே நீங்க வரவேண்டாம். அவனோட தங்கிட்டு அவனை கவனிங்க. நான் அவனுக்கு லெட்டர் தர்றன்.

    இங்கே...

    ஒண்ணும் குடிமுழுகிப் போயிராது. நீங்க நாளைக்கே புறப்படுங்க ரமணி.

    காந்திமதி எழுந்து போய்விட்டாள்.

    தன் பயணத்துக்கான டிக்கெட் ஏற்பாடு செய்துவிட்டு முக்கிய வேலைகளை முடித்துக்கொண்டு ரமணி வீட்டுக்கு வந்தார்.

    என்னங்க.

    என்ன ஆண்டாள்?

    நாளைக்கு என் தம்பி திருநீர்மலைல பால்குடம் எடுக்கறானாம். நீங்களும் என்னோட வர்றீங்களா?

    நான் மெட்ராஸ் போறேன்.

    எதுக்கு?

    சின்னவருக்குக் கால்கட்டுப்போட அம்மா ஆசைப்படறாங்க. அதுக்கு முன்னால மெட்ராஸ்ல என்ன நடக்குதுன்னு தெரிய வேண்டாமா? கூட இருந்து கவனிக்க நான் போறேன்.

    உங்களுக்கு ஏன் இந்த வேலை? மதிப்பான அந்த அமர், உங்களை?

    முப்பது வருஷமா அந்தக் குடும்பத்து உப்பைத் தின்னுட்டு வர்றவன் நான். அவன் வயசைவிட என் அனுபவம் அதிகம். நீ கவலைப்படாதே.

    நீங்க வர்ற விவரம் அவனுக்குத் தெரியுமா?

    இல்லை. தெரிவிக்காமப் போறதுல சில செளகர்யங்கள் இருக்கு. என் துணிமணிகளை எடுத்து வை.

    நீங்க என்கூட எங்கேயும் வரமாட்டீங்க.

    வருவேன். இப்ப இல்லை. காப்பி போட்டுக்கொண்டு வா, சூடா.

    ஆண்டாள் முகவாயைத் தோளில் இடித்தபடி நகர்ந்தாள் அங்கிருந்து.

    காந்திமதி தந்த கடிதம், செலவுக்கான பணம் எல்லாம் எடுத்து பெட்டிக்குள் பத்திரப்படுத்தினார் ரமணி.

    அமர் பட்டணத்தில் பொறுக்கித்தனமான வாழ்க்கை நடத்தும் விவரம் பலர் சொல்லி ரமணிக்குத் தெரியும். காந்திமதியிடம் அவர் அதைச் சொல்லவில்லை. சொன்னாலும் நம்பமாட்டாள் அவள்.

    ‘இவனை எந்தப் பெண் ஏற்றுக் கொள்வாள்?’

    ‘நிச்சயம் பணத்தின் பொருட்டு எவளாவது ஒருத்தி வரக்கூடும். அது அமருக்கு எந்த விதத்தில் பாதுகாப்பு? சொத்துக்களைக் குறி வைத்து ஒருத்தி வந்தால் அமரின் உயிருக்குக்கூட உலை வைக்கலாம் அல்லவா?’

    எல்லாவற்றையும் சரிசெய்து அமரேஷை ஒரு நல்ல மனிதனாக வாழ வைக்க முடியுமா?

    ‘வாழ வைக்க வேண்டும்.’

    அந்தத் தீர்மானம் பல எதிர்பாராத சிக்கல்களை உருவாக்கப் போவதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

    2

    நர்த்தனா வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரமாகிவிட்டது. அவளிடம் வேலை தவிர வேறெதுவும் பேசவில்லை அமர். வேறு எங்கும் சுற்றாமல் அவனும் எட்டுமணி நேரத்துக்குமேல் ஒழுங்காக அலுவலகத்தில் இருக்கத் தொடங்கிவிட்டான்.

    நண்பர் கூட்டத்துக்கு வயிற்றில் புளி. ஓட்டலில் தங்காமல் அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தங்க ஆரம்பித்தான் அமர்.

    அடேய், ஔவையாரை ப்ராக்கெட் போட அண்ணன் நடத்தற ஆரம்ப நாடகமாடா இது?

    சாவப் போறான். அது ஜடம்டா. மூஞ்சில ஒரு சிரிப்புகூட இல்லை. இந்த ஜென்மத்துல அது இவனைக் காதலிக்கும்னு நான் நம்பலை.

    நண்பர்கள் அமரேஷை விமர்சிக்கும் நேரத்தில்தான் ரமணி தன் பெட்டி, தோள்பையுடன் நுழைந்தார் அலுவலகத்தில்.

    விவரம் சொல்லி அனுப்பினார்.

    வரச் சொல்றார்.

    ரமணி உள்ளே நுழைந்த சமயம், ஒரு கடிதத்தை நர்த்தனாவுக்கு டிக்டேட் செய்து கொண்டிருந்தான் அமர்.

    வாங்க அங்கிள்!

    நான் வந்தது தொல்லையா தம்பீ?

    இல்லையில்லை. நீங்க லெட்டரை டைப் பண்ணுங்க நர்த்தனா. உட்காருங்க அங்கிள். அம்மா எப்படி இருக்காங்க?

    சௌக்யமா இருக்காங்க. இந்த லெட்டரை உங்ககிட்ட தந்தாங்க.

    வாங்கிக் கொண்டான் அமர்.

    காப்பி சொல்லட்டுமா அங்கிள்?

    Enjoying the preview?
    Page 1 of 1