Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பொட்டு வச்ச வட்ட நிலா
பொட்டு வச்ச வட்ட நிலா
பொட்டு வச்ச வட்ட நிலா
Ebook122 pages41 minutes

பொட்டு வச்ச வட்ட நிலா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்திரன் இன்னமும் மயக்க நிலையில்தான் இருந்தான். உயிர் வாயுக்கருவி, இன்னும் பிற மருத்துவக் கருவிகள் உடலின் சகல பாகங்களையும் சொந்தம் கொண்டாட, தலைக்கு மேல் இதயத் துடிப்பை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கும் கணிப்பொறி.
ஆண்டாள் அவன் கால் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.
நேற்று இங்கு வந்தது முதல் அவனைவிட்டு அவள் அசையக்கூட இல்லை.
அவனுக்குத்தான் இன்னமும் விழிப்பே வரவில்லை.
“உங்கள் மனைவி வந்திருக்கிறேன். உங்கள் மரணத் தேதி தெரிந்தும் இன்னமும் உயிருடன் உங்கள் எதிரில் உட்கார்ந்திருக்கிறேன்! என்னைப் பார்க்க மாட்டீர்களா ஒரு முறை?”
ஊகூம்! விழிக்கவில்லை சந்திரன்.
விடிந்து வெகுநேரமாகிவிட்டது. முதல் நாளே சந்திரனின் அப்பா தந்தி கொடுத்தபடியால் அவனுடைய அக்கா, தங்கை இருவரும் அலறியடித்துக் கொண்டு அதிகாலையிலேயே வந்துவிட்டார்கள், தங்கள் கணவன்மாருடன்.
பெரிய மாப்பிள்ளை மாமனாரை நெருங்கினான்.
“மாமா! நான் கேக்கறேன்னு தப்பா நினைக்கக்கூடாது. சொத்து விவகாரங்கள் முடிவு பண்ணியாச்சா?”
“என்னங்க நீங்க? எந்த நேரத்துல எதைப் பேசறதுன்னு இல்லையா? தம்பியைவிட பெரிய சொத்து எங்க குடும்பத்துல என்ன உண்டு?”
“நான் அதுக்குச் சொல்லலை. எப்படியும் உன் தம்பியின் உயிர் நிலைக்கப் போறதில்லை. அப்புறம் மற்ற விஷயங்களைப் பற்றி இப்பவே முடிவு செய்யறது நல்லது இல்லையா?“அப்பாவுக்கு அவன் ஒரே ஆண் பிள்ளை. எல்லா சொத்துக்களும் அண்ணனைத்தானே சேரணும்!” தங்கையின் குரலில் கொஞ்சம் ஆதங்கம் ஒளிந்திருந்தது.
அவள் கணவன் முன்னால் வந்தான்.
“அதெப்படி? லாரி தொழிலை நடத்திட்டு இருந்தது உங்கள் அப்பா தானே! அவரால முடியாம போனபிறகு உங்கண்ணன் நடத்தறார். அப்பா சம்பாதிச்ச சொத்துல பொண்ணுகளுக்கும் உரிமை உண்டு.”
“அட, இருங்க சகலை! ஏன் மாமா ...இப்போது சொத்துக்கள் யார் பேர்ல இருக்கு?”
“நாலு லாரி ஓடிட்டு இருக்கு. ரெண்டு லாரியை சந்திரன் பேருக்கு மாத்தி போன ஆண்டுதான் எழுதி வைச்சேன். மீதி இரண்டு என் பேர்ல இருக்கு”
“உங்க வீடு?”
“அதுவும் சந்திரன் பேர்லதான்!”
“ஏன் அவசரப்பட்டு எழுதினீங்க?”
“என்ன மாப்பிள்ளே நீங்க? சந்திரன் என்னோட பிள்ளைனே உங்களுக்கு மறந்து போச்சா?” அவர் குரலில் கோபம் எட்டிப் பார்த்து விட்டது.
“மறக்கலை... இப்ப நிலைமை தலைகீழாக மாறிப் போச்சு இல்லையா?”
“புரியலை!”
“திடீர்னு புற்றுநோய் வந்து உங்கள் பிள்ளைக்கு மரணத் தேதி குறிச்சாச்சு. அவர் மூச்சு நிக்கிற நேரம் வந்தாச்சு. ரெண்டு லாரியோட மதிப்பு கிட்டத்தட்ட மூணு இலட்ச ரூபாய்க்கு மேல. இந்த வீட்டோட மதிப்பு அஞ்சு இலட்ச ரூபாய். வங்கில என்ன இருக்கு?”
“ரெண்டு இலட்சத்துக்கு மேல!”
“யார் பேர்ல?”
“சந்திரன் பேர்லதான்!”ஏறத்தாழ பத்து இலட்ச சொத்து மதிப்பு, அப்படியே அந்த ஆண்டாள் தட்டிட்டுப் போகப் போறா! அவசியம்தானா இது?”
மாமியார் குறுக்கிட்டார்.
“அதுதானே நியாயம் மாப்பிள்ளை. ஆண்டாள் அவன் மனைவி. அவனோட எல்லாமே அவளைத்தானே சேரணும். சட்டம் கூட அதைத் தானே பேசும்?”
“சட்டம் ஆயிரம் பேசும். மூணு வருடத்துல முத்து மழை. அந்தப் பொண்ணுக்கு மச்சம். முப்பது வருடமா சந்திரனைப் பராமரிச்ச பெத்தவங்களுக்கோ, அவனோட வளர்ந்த சகோதரிக்களுக்கோ ஒண்ணுமில்லையா?”
“நீங்க என்ன சொல்றீங்க?”
“இதோ பாருங்க மாமா! நமக்கு சந்திரன் முக்கியம். மறுக்கலை. அவனே இல்லைனு ஆனபின்னால யாரந்த ஆண்டாள்?”
“என்னங்க!”
“நீ சும்மார்றி! மாமா... பிள்ளையை வைச்சுத்தான் மருமகள் உறவு. உங்க வம்சம் விளங்க ஒரு பிள்ளையைக்கூட ஆண்டாள் இதுவரைக்கும் தரலை... உண்மை தானே?”
“ம்...!”
“அப்புறம் எல்லாத்தையும் அவள் தட்டிட்டுப் போறதுல என்ன நியாயம்?”
“மாப்பிள்ளை?”
“சொத்துக்கள் இத்தனையித்தனை... இன்னார் பேர்ல-இந்த விவரங்களெல்லாம் ஆண்டாளுக்குத் தெரியுமா?”
“எதுவும் தெரியாது. வீட்டு நிர்வாகத்துல எப்பவுமே அவ தலையிட்டதில்லை. சந்திரன் எங்களைக் கேட்டுத்தான் செய்வான்.
“நல்லது! இதுதான் உங்களுக்கு சாதகமான ஒண்ணு! உபயோகப்படுத்துங்க.”

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
பொட்டு வச்ச வட்ட நிலா

Read more from தேவிபாலா

Related to பொட்டு வச்ச வட்ட நிலா

Related ebooks

Reviews for பொட்டு வச்ச வட்ட நிலா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பொட்டு வச்ச வட்ட நிலா - தேவிபாலா

    1

    இரவு பத்து மணி!

    ஆண்டாள் கவலையுடன் கடிகாரத்தை ஏறிட்டாள். கதவைத் திறந்தாள். வாசலுக்கு வந்தாள்.

    வெளியே இருட்டு அப்பிக் கிடந்தது. அன்றைக்குப் பார்த்துத் தெரு விளக்குக்கூட எரியவில்லை. நாயின் ஊளைச் சத்தம் பயங்கரமாக செவியைத் தாக்கியது.

    இன்னும் சந்திரன் வரவில்லை.

    காலையில் வெளியே போகும்போதே சற்று சோர்வாக இருந்ததால் அவன் முகமெல்லாம் வாடிக் கிடந்தது.

    என்ன வேலையிருந்தாலும் இரவு எட்டு மணிக்கெல்லாம் வந்துவிடுவான். அப்படி முடியாமல் போனால் தொலைபேசியில் காரணத்தைச் சொல்லிவிடுவான். ஒரு நாள் கூட வெளியில் அவன் தங்கியதில்லை.

    கவலையுடன் ஆண்டாள் உள்ளே வந்தாள்.

    சந்திரனின் அப்பா, அம்மா உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடு முடித்து ஏழரைக்கு உறங்கப் போய் விடுவார்கள். யாரைப் பற்றியும் கவலைப்படாத மனிதர்கள்.

    ‘யாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பற்றி விசாரிப்பது?’

    நேரம் பத்தரை!

    ஆண்டாளுக்கு மூச்சை அடைத்தது.

    ‘ஏன் என்னாயிற்று அவருக்கு? ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும்.’

    ‘ஒரு வாரமாக அவர் சரியாக இல்லை. அவரிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை.’

    நேற்று முன் தினம் கேட்டே விட்டாள் ஆண்டாள்.

    ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?

    இ... இல்லையே ஆண்டாள்! நான் நல்லாத்தானே இருக்கேன்!

    இல்லை... அப்படி இருக்கிறதாத் தெரியலை. முகமெல்லாம் பேயறைஞ்ச மாதிரி இருக்கு, அவன் நெற்றி, கழுத்து என்று கை வைத்துப் பார்த்தாள்.

    அவன் சிரித்தான்.

    தொழில்ல ஏதாவது கஷ்டமா? நஷ்டம் உண்டாகியிருக்கா? எனக்கு சொல்லக்கூடாதா?

    இல்லைம்மா! உங்கிட்ட எதை நான் மறைச்சிருக்கேன் ஆண்டாள். வேலை அதிகம். அதனாலதான் சோர்வு.

    அதற்குமேல் அவள் கேட்கவில்லை.

    சந்திரனின் கைவசம் நாலு லாரி இருந்தது. சரக்கு லாரிகள். அப்பா கவனித்து வந்த தொழில். அவரால் முடியாமல் போக, சந்திரனே நாலைந்து ஆண்டுகளாக கவனித்து வருகிறான். சந்திரன் பட்டதாரிதான். மற்ற வேலைகளை விட லாரியில் அதிக வருமானம் இருந்ததால் இதில் நிலைத்துவிட்டான்.

    சொந்த வீடு, சகல வசதிகள் என்று எல்லாமே இருந்தன. பெற்றவர்களுக்கு ஒரே ஆண் பிள்ளை. கூடப் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தங்கை மட்டும். இருவரும் திருமணமானவர்கள்.

    ஆண்டாளை சந்திரன் மணந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. குழந்தைகள் இல்லை.

    நேரம் பதினொன்று அடித்தது.

    ஆண்டாளால் நிற்கக்கூட முடியவில்லை.

    ‘இனி அத்தை, மாமாவை எழுப்ப வேண்டியதுதான். அவருக்கு ஏதோ ஆபத்து!’

    அவர்கள் இருந்த அறையை நோக்கி நடந்தாள்.

    அந்த நேரம் வாசலில் ஆட்டோ வந்து நின்றது.

    இரண்டு இளைஞர்கள் இறங்கினார்கள் ஆட்டோவை விட்டு.

    சந்திரன் வீடு இதுதானா?

    ஆமாம். அவருக்கு என்ன?

    நீங்க அவருக்கு என்ன வேணும்?

    நான் அவரோட மனைவி. என்னாச்சு அவருக்கு?

    மன்னிக்கணும். உங்க கணவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்.

    ஏன்? அலறினாள் ஆண்டாள்.

    எட்டு மணிக்கு இரத்தம் இரத்தமாக வாந்தி எடுத்தார் சந்திரன். அப்படியே மயங்கி விழுந்தார். அவரை மருத்துவனைக்கு எடுத்துட்டுப் போய் வேண்டிய ஏற்பாடுகளை செஞ்சிட்டு உங்களைத் தேடி வர தாமதமாயிடுச்சு!

    உள்ளே ஓடினாள் ஆண்டாள்.

    அத்தே... அத்தே! குலுங்கினாள்.

    மாமியார் மிரண்டு விழித்தாள்.

    இவள் விவரம் சொன்னதும் மாமாவும் அவசரமாக எழுந்துவிட-

    மூவரும் பதறியபடி வாசலுக்கு வந்தார்கள்.

    இளைஞர்களில் ஒருவன் வேறொரு ஆட்டோ கொண்டு வந்துவிட்டான் அதற்குள்.

    ஆண்டாள் அழத் தொடங்கிவிட்டாள்.

    எப்படி இருக்கார் அவர்?

    என் பிள்ளை உயிருக்கு ஆபத்து ஒண்ணுமில்லையே? அம்மா அங்கலாய்க்கத் தொடங்கிவிட்டாள்.

    மருத்துவமனையை வண்டி அடைய, இறங்கி ஓடினார்கள் மூவரும்.

    இதோ... இது டாக்டரின் அறை!

    உள்ளே நுழைந்தாள் ஆண்டாள் புயல் போல்!

    டாக்டர் என்னாச்சு அவருக்கு?

    நீங்க யாரம்மா?

    சந்திரன் மனைவி!

    ஆங்... உட்காருங்க! நீங்க ரெண்டு பேரும் அவரைப் பெற்றவங்களா?

    ஆமாம்!

    எப்படி இத்தனை நாள் கவனிக்காம இருந்தீங்க?

    எதை டாக்டர்?

    சந்திரனுக்கு இரத்தப் புற்றுநோய். அதுவும் முற்றிய நிலை!

    டாக்டர்! அலறிவிட்டாள் ஆண்டாள்.

    அதனால்தான் வாந்தி எடுத்திருக்கிறார் இரத்தம் இரத்தமாக.

    இப்ப அவர்...

    இருங்க! நானே கூட்டிட்டுப் போறேன். மயக்க ஊசி போட்டு வெச்சிருக்கோம். கடந்த சில நாட்களா அவருக்கு ஏதாவது நோய் அறிகுறி தெரிஞ்சிருக்கா?

    நோய்னு எதுவும் இல்லை. ரெண்டு வாரமாக முகமெல்லாம் சோர்வா இருந்தார். சரியா சாப்பிடலை... தூங்கறதில்லை. நான் இதை விசாரிச்சேன். தொழில் சுமைனு ஒதுக்கிட்டார்!

    காரணம் அது இல்லைமா. அவர் இரத்தத்துல புற்று நோய்க் கிருமிகள் கலந்தாச்சு. அது அசுர வேகத்துல வளர்ந்து இப்ப அவரை விழுங்கிட்டிருக்கு!

    ரெண்டு வாரத்துல... எ... எப்படி டாக்டர்?

    "மருத்துவத்திலும் பல செய்திகள் இப்பல்லாம் எங்களுக்கே பிடிபடறதில்லை. வேகமாக இரத்தத்துக்குள் புற்றுநோய் பரவ முடியும். சந்திரனுக்குப் பரவியிருக்கு.

    டாக்டர்!

    உங்ககிட்டே நான் பொய் சொல்ல விரும்பலை. உங்களை எதுக்கு நான் ஏமாற்றணும்? சந்திரனை மரணம் வேகமாக நெருங்குது. எந்த நேரமும் அது நிகழலாம். அதனால் சொந்த பந்தங்களை நீங்க அழைச்சுக்கலாம். சொத்து விவகாரங்களை சரி செஞ்சுக்கலாம். நான் ரொம்ப வருத்தப்படறேன்மா!

    ஆண்டாளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.

    ‘உன் கணவனின் மரணம் உன் கண் முன்னாலேயே நிகழப் போகிறது! அதுவும் விரைவில்!’

    அந்த செய்தி அவள் உடலில் மின்சார இழையாக இறங்க, மயங்கிச் சரிந்தாள் அதே இடத்தில்.

    2

    சந்திரன் இன்னமும் மயக்க நிலையில்தான் இருந்தான். உயிர் வாயுக்கருவி, இன்னும் பிற மருத்துவக் கருவிகள் உடலின் சகல பாகங்களையும் சொந்தம் கொண்டாட, தலைக்கு மேல் இதயத் துடிப்பை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கும் கணிப்பொறி.

    ஆண்டாள் அவன் கால் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.

    நேற்று இங்கு வந்தது முதல் அவனைவிட்டு அவள் அசையக்கூட இல்லை.

    அவனுக்குத்தான் இன்னமும் விழிப்பே வரவில்லை.

    உங்கள் மனைவி வந்திருக்கிறேன். உங்கள் மரணத் தேதி தெரிந்தும் இன்னமும் உயிருடன் உங்கள் எதிரில் உட்கார்ந்திருக்கிறேன்! என்னைப் பார்க்க மாட்டீர்களா ஒரு முறை?

    ஊகூம்! விழிக்கவில்லை சந்திரன்.

    விடிந்து வெகுநேரமாகிவிட்டது. முதல்

    Enjoying the preview?
    Page 1 of 1