Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பட்டாசு பட்டம்மா..!
பட்டாசு பட்டம்மா..!
பட்டாசு பட்டம்மா..!
Ebook120 pages40 minutes

பட்டாசு பட்டம்மா..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலையில் கோவிலுக்குப் போய் விட்டு வந்தான் சிவா!


“அம்மா! அம்மா!”


“தோ வந்துட்டேண்டா சிவா!”


அம்மா ஓடி வந்தாள்.


“அப்பா எங்கே?”


“குளிச்சிட்டு சந்தியாவந்தனம் பண்ணிண்டு இருக்கார்!”


“இன்னிக்கு என்னோட ஓவியக் கண்காட்சி நடக்கப் போறது!”


“தெரியுமே! நான் கார்த்தால ஆறு மணிக்கே போய் அம்பாளுக்கு உன் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்தாச்சு!”


அப்பா வந்தார்!


“ரெண்டு பேரும் நில்லுங்கோப்பா! நமஸ்காரம் .பண்ணிக்கறேன்!”


அவன் அவர்கள் காலில் விழ,


“நன்னா இருடாப்பா! நீ பல சாதனைகளை ஓவியத்துல பண்ணணும்! பகவான் உன்கூட இருந்து, உன்னை எல்லாத்துலேயும் ஜெயிக்க வைக்கணும்!”


அம்மாவின் கண்கள் கலங்கி விட்டன.


“உன் பிள்ளைக்கு வயசு முப்பதாச்சு! சீக்கிரமா அவனுக்கொரு கல்யாணம் ஆகணும்னு அம்பாளை... வேண்டிக்க மாட்டியா?”


“நான் வேண்டிக்காமலா? அவன் மனசு வெக்கணுமே!”


“அம்மா! கல்யாணம் கால்கட்டு! எனக்கு அதுல ஈடுபாடு இல்லை! கம்பெனில எனக்கு ஏன் பெரிய உத்யோகம் தந்திருக்கா? நானொரு ஓவியன்ங்கற காரணமா! எனக்குப் பேரும், பெருமையும் கிடைச்சா, கம்பெனிக்குக் கௌரவம்!”


“சரிடாப்பா! கல்யாணம் அதுக்குக் எந்தவிதத்துல தடங்கல்?”


“பொண்டாட்டி, குழந்தைனு ஆயிட்டா, டென்ஷன் வரும்! குடும்ப ரீதியா கவனம் சிதறும்!”


“பொண்டாட்டினு வந்தாத்தானா? அப்படீன்னா அம்மா-அப்பா மேல உனக்கு ஆசையில்லையா?”


“அய்யோ! அம்மா நீ புரிஞ்சுக்கலை! என்னைப் புரிஞ்சுண்டு நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒத்துழைக்கற மாதிரி வர்றவ இருப்பானு என்ன நம்பிக்கை?”


“அப்படிப்பட்டவளைத் தேர்ந்தெடுக்கணும்! இதப்பாரு பொம்மனாட்டியை நீ ஓவியமா வரையற! நான் அம்மாதான்! ஒரு புள்ளைகிட்ட இந்த அளவுக்கு, வெளிப்படையா பேசப்படாதுதான்! ஆனாலும் பேச வேண்டியிருக்கு. ஒரு பொம்மனாட்டி கூட வாழ்ந்து எல்லாத்தையும் உணர்ந்தா, உன் ஓவியத்துல சிருங்கார ரசம் கூடும். கற்பனையை விட எந்த ஒரு கலைஞனுக்கும் அனுபவம் அதிகமான மெருகைத் தரும்!”


அப்பா கை தட்டினார்!


“உங்கம்மா கலக்கறாடா! அனுபவம்னு அவ சொல்றது எதைத் தெரியுமா?”


“அய்யோ! நிறுத்துங்கோ! குழந்தை அவன்! கண்டதைப் பேசாதீங்கோ!”


சிவா சிரித்தபடி உள்ளே போனான்!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
பட்டாசு பட்டம்மா..!

Read more from தேவிபாலா

Related to பட்டாசு பட்டம்மா..!

Related ebooks

Reviews for பட்டாசு பட்டம்மா..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பட்டாசு பட்டம்மா..! - தேவிபாலா

    1

    நியாயத்தைத்தான் எப்பவுமே பேசுவா இந்தப் பட்டம்மா அ...ஆங்!

    எதிரே நின்ற அந்தப் பெண் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.

    இன்னாத்துக்கு இப்ப நீ அழுவுற? பொம்பளை கண்ணைக் கசக்கிட்டு நிக்கறதாலதான், அல்லாருக்கும் ஏத்தம்! பிரியுதா?

    அவள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

    அந்தப் பெண்ணின் அம்மா அருகில் வந்தாள்.

    பட்டம்மா! ஜோதிக்குக் கல்யாணம் முடிஞ்சு முழுசா ஆறு மாசம் கூட ஆகலை! அதுக்குள்ள அதோட புருசன் அதைத் தள்ளி வச்சுட்டான்!

    எதுக்கு?

    அவனுக்கு வேற ஒரு பொம்பளை கூட தொடுப்பு இருக்குதாம்!

    நெசம்மாவா?

    ஆமா பட்டம்மா! இவளோட நகைகளைப் புடுங்கிட்டுப் போயி, அந்த முண்டைக்குப் போட்டிருக்கானாம்!

    கோவலன் கதையா?

    அவன் யாரையோ வச்சுக்கட்டும். ஆனா இவளைத் தள்ளி வச்சா என்னா அர்த்தம் பட்டம்மா?

    ஆரையோ இன்னாத்துக்கு வச்சுக்கோணும்? இவதானே தாலி கட்டின பொஞ்சாதி?

    சரி பட்டம்மா! அவன்தான் பாதை மாறிப் போறானே?

    பால்மாறிப் போற பேமானிகளை வுட்ரலாங்கறியா?

    விடாம? அட, போயாச்சு! இவளுக்கு வேண்டியதைத் தந்துட்டு, இவளையும் நல்லபடியா வாழ வச்சா அது போதும் பட்டம்மா!

    ஒனக்கு வெக்கமால்லை ஆத்தா?

    பட்டம்மா!

    எதுல வுட்டுத் தர்றதுனு இல்லையா?

    பட்டம்மா! காலங்காலமா இந்த பூமில நடக்கறதுதானே இந்த சங்கதி? கண்ணகி கூட கோவலனை எதிர்த்தாளா?

    நிறுத்துமே! கண்ணகி, அன்னிக்கே அந்தக் கோவலனை செருப்பால நாலு சாத்து சாத்தியிருந்தா, அந்த நாயி மாதவி வூட்டுக்குப் போயிருக்குமா? நான் கண்ணகியா இருந்தா, கோவலனைக் கதறிட்டு என் கால்ல வந்து வுழ வச்சிருப்பேன்!

    அது முடியாது பட்டம்மா! அப்புறமா அவன்கூடத்தானே குடித்தனம் நடத்தணும்?

    இன்னாத்துக்கு? அப்பிடி ஒரு ஆம்பளை இல்லைனா, பொளைக்க முடியாதா? கஸ்மாலம் தா... சோதி... உம் புருசன் எங்கே இப்ப?

    அவ வூட்ல இருப்பாருக்கா!

    அவ வூடு எங்கே? தெரியுமா ஒனக்கு?

    தெரியும்கா!

    வா என்னோட!

    அக்கா வேணாம்!

    ஏண்டீ வேணாம்? பொம்பளைக்கு தெகிரியம் இல்லைனா, ஆம்பளை ஆட்டித்தான் பாப்பான்! நீ வருவியா?

    ‘ஜோதி! பட்டம்மாகூடப் போ! பல பேருக்கு நல்லது செஞ்சவ பட்டம்மா. அவ ராசிக்காரி! நான் எதுக்கு உன் பிரச்னையை பட்டம்மா கிட்ட வந்து சொன்னேன்? அவளால தீர்த்து வைக்க முடியும்னு தானே! போடீ!"

    ஜோதி பட்டம்மாவுடன் புறப்பட்டாள்.

    எம்புட்டு தூரம்?

    நாலு கிலோ மீட்டருக்கா!

    நடந்தே போயிரலாம் வா!

    பட்டம்மா ஜோதியுடன் புறப்பட்டு விட்டாள்.

    அவள் போகும் நேரம் பட்டம்மா பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு விடுங்கள்!

    திருவான்மியூர் அருகில் கடற்கரையை ஒட்டி, பன்னீர்குப்பம் என்றால் தெரியாதவர் இல்லை!

    அங்குள்ள குடிசைகளில் ஒன்றில் வாழ்பவள் பட்டம்மா!

    பட்டம்மா என்பதை என்பதை விட ‘பட்டாசு பட்டம்மா’ என்றால் அந்தப் பிரதேசத்தில் பிரசித்தம். படபடவென வெடித்துத் தீர்த்து விடுவாள்!

    அந்தக் குப்பத்துக்கே பட்டம்மாதான் நாட்டாமை!

    எந்தப் பிரச்னையையும் வழ வழா கொழகொழா எனக் கையிலெடுக்க மாட்டாள்.

    நேராக விஷயத்துக்கு வந்து விடுவாள்.

    யாருக்கும் பயப்பட மாட்டாள். அதிரடியாகத் தீர்ப்பைச் சொல்லி விடுவாள்!

    அதிரடி மட்டுமல்ல, அடிதடிக்கும் அஞ்சியவள் அல்ல!

    தொகுதிப் பக்கமே தேர்தலுவக்குப் பிறகு வராத எம்.எல்.ஏ ஒருவர், மறு தேர்தல் உடனே நெருங்க, ஓட்டுக்காக வந்தபோது எதிரே நின்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வதைப் போல கேள்வி கேட்டவள் இதே பட்டம்மாதான்.

    கோபம் தாளாமல் அந்த எம்.எல்.ஏ. இவளை ஏதோ பேச, அவன் சட்டையைப் பிடித்திழுத்துப் பல பேர் முன்னிலையில் பட்டம்மா அறைந்ததை ஒரு விஷமக்காரப் பத்திரிகைப் புகைப்படக்காரர் படமெடுக்க, மாற்றுக் கட்சிப் பத்திரிகை அதைப் பிரசுரித்து விட, அரசியல்வாதி கடுப்பாகி, இரவில் ஆளை வைத்துப் பட்டம்மாவுக்குத் தொல்லை கொடுக்க, அத்தனை பேரையும் பட்டம்மா அடித்து நொறுக்கிய கதை தமிழகம் முழுக்கத் தெரியும்!

    பட்டம்மாவுக்கு வயது இருபத்தி எட்டு!

    இதுவரை கல்யாணம் ஆகவில்லை!

    மதுரைச் சுங்கிடிச் சேலையை கொஞ்சம் வித்யாசமான முறையில் கட்டியிருப்பாள்.

    புள்ளி போட்ட ரவிக்கை! வாயில் சதா கும்பகோணம் வெற்றிலை!

    தூக்கிக் கட்டிய ஏடாகூடமான கொண்டை!

    நெற்றியில் நாலணா சைஸுக்குக் குங்குமம்!

    தலையில் மீன் கூடை!

    ஆம்! பட்டம்மா ஒரு மீன் வியாபாரி!

    தபாரு நைனா! இந்த பட்டம்மா வந்தாலே நாறும்தான்! ஆனா மனசு மணக்கும்! நாட்ல ரொம்பப் பேருக்கு உடம்புல மணம்! மனசு நாறிக் கெடக்குது!

    பட்டம்மா அவ்வப்போது உதிர்க்கும் பொன்மொழி இது!

    ஜோதி சொன்ன அந்த வீட்டு பட்டம்மா வாசலில் போய் நின்றாள்.

    அக்கா! எனக்கு பயம்மா இருக்கு!

    இன்னாத்துக்கு? நீ போய்க் கதவைத் தட்டு! போ!

    ஜோதி கை நடுங்கக் கதவைத் தட்டினாள்.

    சில நொடிகளில் கதவு திறந்தது. திறந்தவள் ஒரு பெண்! ஹாலில் உள்ள சோபாவில் லுங்கியோடு ஒரு ஆண் அமர்ந்திருப்பது இங்கிருந்தே தெரிந்தது.

    கதவைத் திறந்த பெண் முகத்தில் சிரிப்பு மறைந்தது.

    என்ன வேணும்?

    அவரை நான் பாக்கணும்!

    அவர் இப்ப யாரையும் பாக்கறதா இல்லை! நீ போகலாம்!

    ஜோதி கண்ணீருடன் பட்டம்மாவைப் பார்த்தாள்.

    பட்டம்மா படி ஏறி வந்தாள்.

    சோதி...! இதுதான் அந்த அதுவா?

    ஆமாக்கா

    பட்டம்மா அந்தப் பெண்ணை நெருங்கி நின்றாள். உள்ற இருக்கறது உம் புருசனா?

    நீ யாரு?

    அட, நா ஆருங்கறது அப்புறம்! அந்தக் கம்மனாட்டி கட்டின தாலி இருக்குதா கண்ணு?

    ஏய்... நீ யாரு? அதைச் சொல்லு!

    பட்டம்மா அவளை சுவாதீனமாகத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

    ஏய்! உள்ள போகாதே!

    வூடு தொறந்திருந்தா, எது வேணும்னா உள்ற வரும். பிரியுதா? சோதி ! நீ வா கண்ணு!

    அவன் இப்போதுதான் திரும்பிப் பார்த்தான்!

    வண்க்கம் அண்ணாத்தே!

    வணக்கம்! நீ யாரும்மா?

    உன் சம்சாரம் சோதி இருக்கே! அதோட சிநேகிதி!

    அவன் முகம் மாறியது!

    "ஜோதி உன்னை

    Enjoying the preview?
    Page 1 of 1