Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mookkuthi Poo Meley
Mookkuthi Poo Meley
Mookkuthi Poo Meley
Ebook322 pages2 hours

Mookkuthi Poo Meley

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 9, 2016
ISBN6580100601402
Mookkuthi Poo Meley

Read more from Devibala

Related to Mookkuthi Poo Meley

Related ebooks

Reviews for Mookkuthi Poo Meley

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mookkuthi Poo Meley - Devibala

    http://www.pustaka.co.in

    மூக்குத்திப் பூ மேலே

    Mookkuthi Poo Meley

    Author :

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    மூக்குத்திப் பூ மேலே

    1

    புதிய சுடிதார் உடையில் தன்னை மேலும் கீழுமாக ஒரு முறை பார்த்துக் கொண்டாள் ஜோதி. அழகாகவே இருந்தது.

    முழு உருவத்தையும் பார்க்க டிரெஸ்ஸிங் டேபிள் வேண்டும். அல்லது சுபத்ரா வீட்டில் பீரோவில் கண்ணாடி பதித்திருக்கும். அது போல வேண்டும். நம் வீட்டில் இரண்டும் இல்லை.

    கையகலக் கண்ணாடி. அதுவும் ரசம் போனது. அதில் முகம் பார்த்து, பவுடர், பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பாதி நாள் வீட்டில் மின்சாரமும் இருக்காது. பகலில்கூட இருட்டைப் பூசிக் கொண்ட வீடு.

    ஜோதி! சாப்பிட வர்றியா? அம்மாவின் குரல்.

    வந்துட்டேன்மா. அடுக்கலைக்குள் நுழைந்தாள்.

    உட்காரு- நேரமாச்சு- சாப்டுட்டு நீ புறப்படச் சரியா இருக்கும்.

    தட்டில் பழைய சாதத்தைப் பிழிந்து, கொஞ்சம் உப்பும் போட்டு, தண்ணீராக மோர் ஊற்றினாள் அம்மா.

    வேணி வீட்டில் காலை உணவாகச் சூடாக இட்லி, இடியாப்பம் என்று தயாராகும். அதையும் மேஜை மேலே பீங்கான் தட்டுகளில் நாசூக்காகக் கொண்டு வந்து பரப்புவாள் வேணியின் அம்மா.

    மாவடு போடட்டுமா?

    ம்-வேறென்ன இருக்கு நம்ம வீட்ல?

    அலுத்துக்காதே ஜோதி, பசிக்குச் சாப்பிடணும். அதுதான் முக்கியம். இந்த அளவுக்கு நம்ம வாழ்கை அமைஞ்சிருக்கிறதே புண்ணியம்!

    ஜோதி பேசவில்லை. எரிச்சல் வந்தது. அலுப்பு சலிப்பு கூடாது. அதிகம் உறங்குவது தவறு. அது வேண்டும் இது வேண்டும் என்ற ஆசைகள் வரக் கூடாது. அம்மா அசாத்தியக் கண்டிப்பு. ஒரு தபஸ்வினி போல அம்மாவால் வாழ முடியும். எல்லாரும் அப்படி வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? சாப்பிட்டு முடித்தாள்.

    சரி. நேரமாச்சு புறப்படு. பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் நான் வரட்டுமா?

    வேணாம் எனக்கு தெரியும்.

    நீ கேட்டியேனு இந்தச் சுடிதார் வாங்கினேன். நல்லாவா இருக்கு. அழகா பாவாடை, தாவணி கட்டினா இன்னும் அம்சமா இருக்காது?

    அம்மா மாதிரி, மனசுக்குள் சொல்லிக் கொண்டாள் ஜோதி. சரி. ஏழரை ஒன்பது ராகுகாலம். புறப்பட்டு, ஜாக்கிரதையா போயிட்டு வரியா?

    சரிம்மா.

    ஜோதி கல்லூரியில சேரும் நாள்.

    அன்று முதல் நாள் ஆனதால் கையில் ஒரே ஒரு நோட்டுப்புத்தகம் மட்டும் வைத்திருந்தாள். சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பி.காம். படிப்பில் இடம் கிடைத்திருக்கிறது ஜோதிக்கு.

    பள்ளியிறுதியில் ஏறத்தாழத் தொண்ணூறு சதவீதம் மதிப்பெண்கள் பெற்று விட்டாள். அதனால், இடப் பிரச்சனை இல்லை. கேட்ட க்ரூப் சுலபமாகக் கிடைத்து விட்டது.

    இன்று புதிதாகக் கல்லூரியில் சேரும் நாள். கொஞ்சம் படபடப்பாக, சந்தோஷமாக, பயமாக இப்படியெல்லாம் கலந்து வந்தது.

    வீட்டிலிருந்து பதினைந்து நிமிடங்கள் நடந்தால், பஸ் ஸ்டாப்.

    நடந்தாள்.

    மீனா நின்று கொண்டிருந்தாள். இவளுடன் படித்தவள். மார்க் குறைவு. அதனால் வேறு கல்லூரியில் பி.ஏ. கிடைத்திருக்கிறது.

    உனக்கு எந்த பஸ் ஜோதி?

    25ஸி! அது போகும்.

    அம்பேத்கரில் கூட்டம் தொங்கிக் கொண்டு வந்தது. ஜோதி முண்டியடித்து ஏறி விட்டாள்.

    அன்று எல்லா கல்லூரிகளும் திறக்கும் நாள். படிகளிலிருந்து முன்னேறி உள்ளே வந்து விட்டாள்.

    புது ஃபிகர்டா மச்சி!

    ஒரு குரல் கேட்டது. ஜோதி திரும்ப வில்லை.

    சுடிதார் சங்கடம்டா ராஜா.

    ஏன்?

    பாவாடை தாவணிதான் எனக்கு வசதி!

    எப்படி?

    இடுப்புல ஒரு ஸ்வீட் பன்ச் தரணும்னா சுடிதார்ல வழியே இல்லையே!

    குபீரென்ற சிரிப்பு.

    கண்டக்டர் கண்டு கொள்ளவில்லை. தன் பணியில் மும்முரமாக இருக்க, சில பெரிசுகள் முகம் சுளித்தன. விமர்சனம் வேறு புறப்பட்டது.

    கஷ்டப்பட்டு பெத்தவங்க வாயைக் கட்டி வயித்தைக் கட்டி பணம் கட்டறாங்க. இந்தத் தறுதலைங்க கெட்டு அலையுதுங்க. கலிகாலம்!

    பெரிசு! நீ சைட்டே அடிச்சதில்லையா?

    ஜொள்ளு கூடவா விட்டதில்லை? இன்னொருவன்.

    ஜொள்ளு வழியுது பாருடா பெரிசுக்கு.

    அது வெத்தலைச் சாறுடா மச்சி. ஜொள்ளு அடிக்கிற வயசா இது? ஜொள்ளு புடிச்ச பெரிசு!

    அந்த மனிதர் வாயை இறுக மூடிக் கொண்டார்.

    இந்தத் தலைமுறையிடம் பேச முடியாது. பேசுவது நம் மரியாதையைக் குறைக்கும் என்று வாயைச் சாத்தி விட்டார்.

    தன் கல்லூரி நிறுத்தம் வர, ஜோதி இறங்கிக் கொண்டாள். உடம்பை முறுக்கிப் பிழிந்ததைப் போல் இருந்தது.

    சுடிதார்களும் இன்ன பிற நாகரீக உடைகளுமாகப் பெண்கள் பட்டாளம் கல்லூரிக்குள் நுழைந்து கொண்டிருந்தது.

    ஜோதி தனியாக நுழைந்தாள்.

    அலகாப்படிப்பா!

    ஒரு சீனியர் மாணவி ஓடிவந்து ஜோதியைக் கவ்விக் கொண்டாள். இன்னும் நாலைந்து பேர் சேர்ந்து கொண்டார்கள்.

    பேரென்ன?

    ஜோதி!

    ஆனந்த ஜோதியா?

    இல்லை. வெறும் ஜோதி!

    இனிஷியலே இல்லையா உனக்கு?

    இருக்கு டி.ஜோதி!

    டீயா? ஸ்ட்ராங்கா? லைட்டா?

    சர்க்கரை தூக்கலா? குறைச்சலா?

    ஜோதிக்கு அழுகையே வந்து விட்டது. அவர்களைக் கலவரத்துடன் பார்த்தாள்.

    எப்ப வயசுக்கு வந்தே?

    கேள்வி ஒரு மாதிரியாக இருந்தது.

    தெரியலை!

    அடி சக்கை! அது கூடவா தெரியாது? சரி வுடு! என்ன வயசு உனக்கு?

    பதினேழு.

    யாரையாவது லவ் பண்றியா?

    இல்லை!

    ஏன் பண்ணலை? இது தான் லவ் பண்ற வயசு தெரியுமா? நாளைலேர்ந்து யாரையாவது நீ லவ் பண்ணியே ஆகணும். புரியதா? லவர் இல்லாம காலேஜூக்கு நீ தனியா வந்தே, கொன்னுடுவோம்!

    ஜோதிக்குத் தாள முடியவில்லை.

    அழத் தொடங்கி விட்டாள்.

    அடடா-இந்தப் பொண்ணு லாயக்கில்லை. விட்ருப்பா. அங்க பாரு அவளை! குலுங்கிக் குலுங்கி வர்றா. ப்ரா போடலை போலிருக்கு. ஒரு கை பாத்துடலாம்!

    மொத்தக் கூட்டமும் சிதறி வேறு பக்கம் ஓட, ஜோதி தப்பித்தோம், பிழைத்தோம் என்று உள்நோக்கி ஏறத்தாழ ஓடவே தொடங்கினாள்.

    நில்லு!

    அவள் தோளில் கை விழுந்தது.

    அடுத்த கலாட்டாவா?

    திரும்பினாள்.

    சேலையுடன் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.

    எதுக்கு நீ அழறே?

    எ...எனக்குப் பயமா இருக்கு!

    என்ன பயம்? இவங்கள்லாம் புலி, சிங்கமா? ஆரம்ப நாள்ல கொஞ்சம் கலாட்டா இருக்கத்தான் செய்யும். அதிக பட்சம் நாலஞ்சு நாள் நீடிக்கலாம் இதெல்லாம் உற்சாகம். புது உலகத்துக்கு வந்துட்ட குதூகலம் அழலாமா?

    இல்லக்கா!

    அக்கா எல்லாம் வேண்டாம். ஐ யாம் சித்ரா. பிகாம். பைனல் இயர் போறேன்.

    நான் ஜோதி. பி.காம் தான் சேர்ந்திருக்கேன்!

    மணியடித்தது.

    நான் இப்ப எங்கே போகணும்?

    நீ எந்த செக்ஷன்?

    ஈ செக்ஷன்!

    அந்த நோட்டீஸ் போர்ட்ல போட்டிருக்கும் முதல் வருட பி.காமுக்கு எந்த ரூம்னு. வா! நான் சொல்லித் தர்றேன்!

    ஜோதிக்குச் சித்ராவைப் பிடித்து விட்டது. கல்லூரியில் முதலில் தோழமை காட்டிய பெண்.

    அவள் காட்டிய நோட்டீஸ் போர்டைப் பார்த்து விட்டு, அவள் காட்டிய வழி நடந்தாள். பக்கவாட்டில் இருந்தது காமர்ஸ் ப்ளாக்.

    அந்த வகுப்பில் நுழைய, எல்லாரும் புதிய பெண்கள். சிலர் மிரட்சியுடன், சிலர் ஒட்டாமல், வேறு சிலர் ராங்குகள். அந்தக் கல்லூரியில் படித்ததைப் போல அபார அரட்டை.

    லெக்சரர் வர, மௌனமானார்கள்.

    ஜோதி வழக்கம் போல முன் பெஞ்சில் உட்கார்ந்து விட்டாள்.

    இன்னிக்கு வகுப்பெல்லாம் கிடையாது. அறிமுகப்படுத்திக்கலாம். கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்.

    நீங்க எப்பவும் சாரிதான் கட்டுவீங்களா மேடம்?

    சில சமயம் அது கூடக் கட்ட மாட்டேன்!

    குபீர்ச் சிரிப்பு புறப்பட்டது.

    உங்களுக்கு எத்தனை வருஷம் மேடம் சர்வீஸ்?

    நாப்பது வருஷம்.

    எ...என்னது? அப்படீன்னா உங்க வயசு?

    முப்பது!

    அதெப்படி?

    எங்கம்மா இந்தக் காலேஜ்ல பேராசிரியரா இருக்கும் போது நான் அவங்க கர்ப்பத்துல இருந்தேனே! அதையும் சேர்த்துக்கிட்டேன்!

    அந்த அறையே சிரிப்பால் குலுங்கியது.

    உங்களுக்குக் கல்யாணம் ஆயாச்சா மேடம்?

    இல்லை!

    எத்தனை குழந்தைங்க?

    ரெண்டே ரெண்டு!

    உங்க பேரென்ன மேடம்?

    ஜெயா! என் கெட்ட நேரம். உங்களை மாதிரிப் பொண்ணுங்ககிட்ட மாட்டிக்கிட்டு பேய் முழி முழிக்கறேன்பாரு!

    நீங்க பேயைப் பார்த்ததுண்டா மேடம்?

    உங்களை யெல்லாம் பாக்கறேனே-போதாதா?

    திரும்பவும் வெடிச் சிரிப்பு.

    மணியடித்தது.

    ஏன் மேடம் மணியடிக்கிறாங்க?

    உங்களையெல்லாம் அடிக்க வழியில்லை. மணியையாவது அடிப்போம்னுதான். வெல் ஸ்டூடண்ட்ஸ், இன்னிக்கு காலேஜ் அவ்ளோதான். ஹேவ் எ குட் டே!

    அவள் அழகாக நடந்து போனாள்.

    அவளுடன் சேர்ந்து கொண்டு ஒரு மாணவியர் கும்பல் பின்னால் போனது.

    ஜோதி வெளியே வந்து விட்டாள். சித்ராவைக் காணவில்லை. அவளைக் கலாட்டா செய்த கும்பல் கேட் அருகே நின்றது.

    பயந்து பயந்து ஜோதி கடந்து வெளியே வந்து விட்டாள். முடிச்சு முடிச்சாக மாணவிகள். சாலை கடந்து பேருந்துக்காக ஒடிக் கொண்டிருந்தார்கள்.

    வீட்டுக்குப் போனால் அம்மா இருக்க மாட்டாள்.

    வீட்டுக்குப் போகவும் பிடிக்கவில்லை.

    ‘எங்கே போவது?’

    ‘சங்கரி வீட்டுக்கு.’

    ‘அவள் இருப்பாளா? அவளுக்கு நாளைக்குத்தான் கல்லூரி திறக்கிறது!’

    ‘வேண்டாம். வெளியே போயிருந்தால்?’

    பஸ் ஸாண்டில் வந்து நின்றாள்.

    நல்ல கூட்டம் இருந்தது. நாலைந்து பேருந்துகள் பிதுங்கிக் கொண்டு ஒரு பக்கமாகச் சாய்ந்து நிற்க, மேலும் பல பேர் அதில் ஏற முயற்சித்தார்கள்.

    கூட்டம் ஓயட்டும் என்று சற்று ஒதுங்கி நின்றாள் ஜோதி.

    நாலு பஸ்களை விட்டு விட்டாள்.

    அந்த பஸ் ஸ்டாப்பில் மாணவி என்று அவள் மட்டுமே இருந்தாள்.

    ரொம்ப நேரமா நிக்குதடா! அயிட்டமா?

    ஒரு குரல் பின்னால் கேட்டது.

    பார்த்தா அப்படித் தெரியலைடா. மூஞ்சில் பால் வடியுது!

    இன்னும் கொஞ்சம் உயரம் இருந்திருந்தா, உனக்கு வாட்டம்டா மகேஷ். இல்லைன்னா உனக்கு அவஸ்தை?

    என்ன கஷ்டம்? மனுஷ வாழ்க்கைக்கு உயரமா முக்கியம்?

    தலைவா! தத்துவம் பேசாதே! தாங்கிக்கமாட்டம்!

    அடுத்த பஸ் வர, அதிலும் கடைசிப் படிவரை ஆட்கள். ஜோதிக்கு அழுகையாக வந்தது.

    ‘இங்கே நின்றால், இவர்களது கலாட்டா தொடரும். பஸ்ஸில் ஏறவும் முடியவில்லை!’

    அந்தப் பேருந்து நகர,

    ஹாய் ஜோதி!

    குரல் கேட்டுத் திரும்பினாள்.

    சொப்னாவின் அண்ணன் ஸ்ரீ காந்த் மொபட்டை நிறுத்தி தரையில் கால்களை ஊன்றியிருந்தான்.

    காலேஜ் முடிஞ்சு போச்சா?

    ம்.

    வீட்டுக்குத்தானே? நான் ட்ராப் பண்ணட்டுமா?

    ஜோதி தயங்கினாள்.

    இதுவரை இது மாதிரி யார் வண்டியிலும் பயணம் செய்ததில்லை. ஆனால் பின்னால் நிற்கும் ரோமியோக்களின் கூட்டம் அச்சமூட்டியது.

    என்ன வர்றியா இல்லையா?

    ம்! வர்றேன்.

    ஏறிக்கோ!

    அவள் ஒரு பக்கமாக உட்கார முயற்சிக்க,

    சுடிதார்தானே போட்டிருக்கே! காலை மாற்றிப் போட்டு ஆண்கள் மாதிரி உட்காரு. வசதியா இருக்கும்.

    அப்படி உட்கார என்னவோ போலிருந்தது. ஆனாலும் உட்கார்ந்தாள்.

    போகலாமா?

    சரி!

    காதல் வாகனம் புறப்பட்டாச்சுடா மாமா. ஸ்ரீகாந்த்! உன் கையில் என் கண்களையே நான் ஒப்படைக்கறேன்! பாசமலர் வசனம் பேசினான் ஒருவன்.

    கண்களைக் கையில குடுத்துட்டு தடவிட்டு நடப்பியாடா தலைவா?

    முதுகில் சிரிப்பு மோத, ஆற்காடு சாலையில் வேகம் பிடித்தான் ஸ்ரீகாந்த்.

    அதுதான் முதல் மொபெட் பயணம் ஜோதிக்கு. ஸ்ரீகாந்த் நல்ல வேகத்தில் போனதால், கொஞ்சம் கலவரமாக இருந்தது.

    மெதுவா ஓட்டு ஸ்ரீகாந்த்!

    ஏன் பயமா இருக்கா? பயமா இருந்தா என் தோளைப் புடிச்சுக்கோ!

    வடபழனி சிக்னலில் சட்டென வண்டி நிற்க, அவன் முதுகில் மோதினாள் ஜோதி. அவள் கைகள் பயத்தில் அவன் இடுப்பைச் ‘சிக்’கெனப் பிடித்துக் கொண்டு விட்டன.

    மொபெட் ஓடத் தொடங்கியது.

    ஜோதிக்கு அந்த சவாரி, மெல்லிய உரசல்கள், காற்றில் பறக்கும் அவனது கேசம் எல்லாம் புதிதாக இருந்தது.

    சுகமாகவும் இருந்தது.

    அவளது வீட்டு வாசலில் மொபெட்டைக் கொண்டு வந்து நிறுத்தினான் ஸ்ரீகாந்த்.

    கதவு திறந்தே இருந்தது. அம்மா வெளிப் பட்டாள். ஸ்ரீகாந்தின் தோளைப் பிடித்துக் கொண்டு மொபெட்டிலிருந்து இறங்கும் மகளைப் பார்த்தாள்.

    ஸி யூ ஜோதி!

    அவன் அரை வட்டமடித்து வண்டியைத் திருப்பி வந்த வழியே போக, ஜோதி படியேறி வந்தாள். உள்ளே நுழைந்தாள்.

    வெகு நெருக்கமாக வந்து நின்ற அம்மா,

    பளாரென அறைந்தாள் ஜோதியை!

    2

    அம்மா அறைந்த வேகத்தில் நிலை தடுமாறிப் போய்க் கதவைப் பிடித்துக் கொண்டாள் ஜோதி.

    குழந்தையாக இருந்த போது அம்மாவிடம் அடி வாங்கிய ஞாபகம் மங்கலாக இருந்தது. வயதுக்கு வந்த பிறகு அம்மா அடித்ததில்லை. ஆத்திரம் வந்தால் கூச்சல் போடுவாள். அதுவும் உடனே மாறி விடும்.

    இப்போது அடித்து விட்டாள். ஜோதிக்கு உடனே அழுகை வரவில்லை. மாறாகச் சீற்றம் வந்தது. ஒரு தப்பும் செய்யாமல் ஏனிந்த அடி?

    முறைத்தாள்! கன்னத்தை ஒரு கையால் பிடித்தபடி தன்மானம் மிதிபட்டதைப் போல ஒரு ஆக்ரோஷம் கிளம்பியது.

    என்னடீ முறைக்கிறே... செய்யறதையும் செஞ்சிட்டு?

    நான் என்னம்மா தப்பு செஞ்சேன்?

    யாருடி அவன்?

    எவன்?

    அதான் தோளைப் புடிச்சிட்டு சுவாதீனமா வந்து இறங்கினியே மோட்டார்லே, அவனைக் கேக்கறேன்.

    ஸ்ரீகாந்த்

    ஓ... முன்னமே தெரியுமா அவனை?

    சொப்னாவோட அண்ணன். சொப்னா என் கூடப் படிச்சவள்தானே? காலேஜ் விட்டாச்சு... பஸ்ல ஏற முடியாம கூட்டம். பசங்க நாலு பேர் பின்னால நின்னு கலாட்டா பண்ணிட்டு இருந்தாங்க. ஆபத்பாந்தவனா இந்த ஸ்ரீகாந்த் வந்தான். ட்ராப் பண்ணட்டுமா வீட்டுலன்னு கேட்டான். சரின்னேன்... இதுல என்ன தப்பு? நீ அடிக்கிற அளவுக்கு என்ன நேர்ந்து போச்சு?

    அம்மா பேசவில்லை.

    எனக்குக் காலேஜ் போகப் பிடிக்கலை... நாளைலேர்ந்து நான் போகலை.

    ஏண்டி?

    பொண்ணுங்க ராகிங் பண்றாங்க. ரௌடிப் பசங்க விமர்சனம் பண்றாங்க. வீட்ல வந்தா நீ அடிக்கிறே! அதுக்கு மேல பேச முடியாமல் உடைந்து போய் அழத் தொடங்கினாள் ஜோதி.

    அம்மாவுக்கு என்னவோ போலாகி விட்டது.

    ‘ச்சே. நாம்தான் அவசரப்பட்டு விட்டோம். இது பயந்த பெண். அவசரத்துக்குத் தெரிஞ்ச பையன் உதவி செய்ய, உடன் வந்து விட்டாள்! என்ன தப்பு! ஏன் நான் அடித்தேன்?’

    ‘அத்தனை சின்னப் புத்தி படைத்தவளா நான். ஒரு பையனுடன் மகள் வந்து இறங்கியதும், தப்பாக் கணக்குப் போடும் அளவுக்கு எப்போது தாழ்ந்தேன்?’

    கதவைச் சாத்திவிட்டு வந்தாள். மகளின் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

    ஸாரிடா ஜோதி.

    அவள் முகவாயைத் தொட்டு நிமிர்த்தினாள்.

    ச்சீ...போ

    இப்படி நீ சொன்னா ரொம்ப அழகா இருக்கே!

    எதுக்காக என்னை அடிச்சே?

    சொல்லட்டுமா? உன் மேலே உள்ள அதீத பாசம். அதனாலதான் அடிச்சேன். நீ நல்லா வாழணும்னு எதிர்பார்ப்பு. நானே உன் உயரத்தை அண்ணாந்து பார்க்கணும்.

    உன் பொண்ணு அவ்ளோ உசரமா இருந்தா அசிங்கமா இருக்கும்மா!

    போடி போக்கிரி... கிண்டலா பண்றே?

    அம்மா, ஜெயா மேடம் என்ன ஜாலியாக இருக்காங்க தெரியுமா? வார்த்தைக்கு வார்த்தை ஜோக்கு!

    இன்னிக்குப் பாடம் தொடங்கிட்டாங்களா?

    இல்லைமா... உடனே விட்டுட்டாங்க. நீ வேலைக்குப் போகலையா?

    இன்னிக்கு வேலை இல்லையாம். அப்புறம், நம்ம பேங்க் அய்யர் வூட்ல சொல்லியிருக்கேன். உனக்குப் புத்தகங்கள் எல்லாம் அவங்க வாங்கித் தந்துருவாங்க. ஒரு வாட்டி உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க.

    சரிம்மா.

    நான் போய் வடகத்தைப் பிழியறேன்.

    அம்மா போய்விட, தன் சுடிதாரை மாற்றிவிட்டு பழைய வெளிறிப் போன பாவாடை, தாவணிக்கு மாறினாள் ஜோதி.

    அம்மா நாலு வீடுகளில் சமையல் வேலை செய்து பிழைப்பவள். தவிர இது மாதிரி வடகம் கல்யாணப் பலகாரங்கள் எல்லாம் செய்து கொஞ்சம் சம்பாதிக்கிறாள். அந்தப் பணத்தில்தான் கௌரவமாகக் குடித்தனம் நடக்கிறது.

    ஜோதிக்குப் பசித்தது. பானையிலிருந்து குளிர்ந்த நீரை இரண்டு டம்ளர் மொண்டு குடித்தாள்.

    காலை ஒரு உணவு. இரவு ஒரு உணவு. அவ்வளவு தான்!

    அதற்கு மேல் வழியில்லை. அம்மா ஒருத்திதான் உழைத்தாக வேண்டும்.

    ஜோதி கண்களை விழித்த நாளிலிருந்து அப்பாவைப் பார்த்ததில்லை. கொஞ்சம் விபரம் தெரியத் தொடங்கியதும் மற்றக் குழந்தைகளுக்கு அப்பா என்ற ஒரு உறவு இருப்பதை அறிந்து கொள்ள,

    ஒரு நாள் கேட்டே விட்டாள்.

    என்னோட அப்பா எங்கேம்மா?

    "மிலிட்டிரில

    Enjoying the preview?
    Page 1 of 1