Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்துடைப்பு
கண்துடைப்பு
கண்துடைப்பு
Ebook111 pages39 minutes

கண்துடைப்பு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அஞ்சலி கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.
செக்ஷன் ஆபீசர் வந்தார். பார்த்தார்.
“அஞ்சலி! இன்னிக்கு அதிக நேரம் இருந்து பண்ணிடுங்க! நாளைக்குக் காலைல ஏழு மணிக்கே வந்துடுங்க! நாளைக்கும் முழு நாள் வேலை செஞ்சாத்தான் இது முடியும்! நாளைக்கு டெஸ்பாட்ச் பண்ணியாகணும்!”
“சரிங்க சார்!”
போன் அடித்தது! அஞ்சலி எடுத்தாள்! முருகன்தான்!
“உன் ‘கால்’ பார்த்தேன். கூப்பிட்டியா அஞ்சலி!”
“ஆமாங்க! ஒன்பது மணிவரைக்கும் ஆபீஸ்ல வேலை இருக்கு!”
“நான் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்! கவலைப்படாதே! ஏதாவது சாப்பிடும்மா! ஒடம்பு கெட்ரப் போகுது!”
“சரிங்க!”
வைத்து விட்டு வேலையைத் தொடர,
“அம்மா!”
அஞ்சலி நிமிர்ந்தாள். அப்பா வீட்டு பழைய டிரைவர்!
“அடடா! வாங்க சின்னசாமி! என்ன இவ்ளோ தூரம்?”
“வெளில கார்ல பெரியம்மா இருக்காங்க! உங்களைப் பாக்க வந்திருக்காங்க!”
“அம்மாவா? என்னைப் பாக்கவா?”அஞ்சலிக்கு குபீரென முகம் மலர்ந்தது.
தற்காலிகமாக கம்ப்யூட்டரை நிறுத்தி விட்டு, வேகமாக வெளியே வந்தாள். கார் கம்பெனிக்குள் நின்றது!
அஞ்சலி ஓடி வந்தாள்!
அம்மா பின்கதவைத் திறந்தாள்!
“அம்மா!”
“உள்ளே வந்துடு அஞ்சலி!”
அஞ்சலி காருக்குள் நுழைந்தாள்!
“என்னம்மா?”
“நீ எப்படீடா இருக்கே? இளைச்சு, கறுத்துப் போயிட்டியேம்மா?”
“இல்லைம்மா! நான் நல்லாத்தான் இருக்கேன். நம்ம வீட்ல இருந்த மாதிரிதான் இருக்கேன். பணக்கார ரத்னவேலு மனைவிதான் இளைச்சிருக்கே!”
அம்மா பேசவில்லை.
“சொல்லும்மா! நாளை மறுநாள் உன் வீட்ல நடக்கப் போற உன் மகள் ஸ்நேகா நிச்சயதார்த்தத்துக்கு எல்லாரும் வந்து சேர்ந்தாச்சா?”
“அஞ்சலி?”
“என்னம்மா... ஊருக்கே தெரிஞ்சிருக்கு! மீடியா கவரேஜ் கூட இருக்கு! எனக்கு மட்டும் தெரியாதா?”
அம்மா அஞ்சலியை ஆழமாகப் பார்த்தாள்!
“அஞ்சலி! உன் தங்கச்சி நிச்சயத்துக்கு நீயும் வரணும்மா! உன்னை அழைக்கத்தான் வந்தேன்.”
“அப்பா - ஸாரி - உன் புருஷனுக்கு சொல்லிட்டு வந்தியா? இல்லை, சொல்லாம திருட்டத்தனமா வந்தியா?”
“அவர் சம்மதத்தோடதான் வந்தேன்மா!”“வீட்டுக்கு வந்து கூப்பிட்டா, என் புருஷனையும் கூப்பிடணும். அதை நீங்க யாரும் விரும்பலை. அதனால இங்கே வந்துட்டியாக்கும்?”
“அஞ்சலி!”
“ஸாரிம்மா! நான் வரப்போறதில்லை! முதலாவதா, ஆபீஸ்ல எனக்கு லீவு இல்லை. அடுத்தபடியா, அவர் வேண்டாம் - நான் மட்டும் போதும்னு நினைக்கறவங்க வீட்டுக்கு நான் வர விரும்பலை! ஸ்நேகாவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடும்மா!”
“ஏம்மா எங்கிட்ட கோவப்படற? நீ எப்பவும் வேணும்னு நினைக்கற இந்தம்மாவை நீயும் புண்படுத்தினா எப்படி அஞ்சலி?”
கல்யாணி அழுதாள்!
“உன்னை நான் புண்படுத்தலைமா! நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை அவமானப்படுத்தறது உனக்குப் புரியலையா?”
“அஞ்சலி! என்னைப் பேச விடு! முருகனைக் கூப்பிட எனக்கு விருப்பம்தான். எப்ப உன் புருஷன் ஆயாச்சோ, அப்பவே முருகனை என் மாப்ளையா நான் அங்கீகரிச்சிட்டேன். ஆனா நான் கூப்பிட்டு, அந்த வீட்டு விழாவுக்கு முருகன் வந்தா என்ன நடக்கும்னு உனக்குத் தெரியாதா அஞ்சலி?”
“தெரியும்! அவரை உன் புருஷன் உட்பட எல்லாரும் அவமானப்படுத்துவாங்க!”
“அது உன் கண் முன்னால நடக்கணுமா?”
“அம்மா! அவமானம் அவருக்கு மட்டுமில்லை! நான் தனியா வந்தாலும், எனக்கும் அது நிகழும்! என்னையும் கேவலப்படுத்தாம விடுவாங்களா! சொல்லு!”
கல்யாணி பேசவில்லை

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
கண்துடைப்பு

Read more from தேவிபாலா

Related to கண்துடைப்பு

Related ebooks

Reviews for கண்துடைப்பு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்துடைப்பு - தேவிபாலா

    1

    ‘ஸ்நேகாவின் நிச்சயதார்த்த அழைப்பிதழ் தயாராகி விட்டது!

    ஏறத்தாழ எல்லாருக்கும் கொடுத்தாகி விட்டது!

    நாளை மறுநாள் வெள்ளிக் கிழமை நிச்சயத்தார்த்தம்!

    ரத்னவேலு பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

    கடைசி மகளின் நிச்சயதார்த்தம். பிஸினஸ் வட்டாரத்தில் உள்ள அனைவரையும் அழைத்திருந்தார்!

    ரத்னவேலுவின் பங்களா பெரிதாக இருந்தபடியால் அதில் வைத்தே நிச்சயதார்த்தம் நடத்த முடிவாகியிருந்தது!

    மாப்ளை பையனும் பெரிய அந்தஸ்த்து!

    மிகப்பெரிய கிரானைட் இண்டஸ்ட்ரியின் முதலாளி வராகமூர்த்தியின் ஒரே மகன் ஈஸ்வர்! பெரிய படிப்பு படித்து வெளிநாட்டுக்கெல்லாம் போய் தொழில்சட்டம் கற்றுக் கொண்டு வந்தவன்! ஒரே பிள்ளை! கோடிக் கணக்கான சொத்து!

    ரத்னவேலுவின் மூத்த மகள் அர்ச்சனா லண்டனில் இருக்கிறாள். அவளது கணவர் அங்கு கணிப்பொறி வல்லுநர். இன்று இரவு விமானம் மூலம் தங்கையின் நிச்சயத்துக்கு அர்ச்சனா வருகிறாள்!

    வெளியூரிலிருந்து நிச்சயத்துக்கு வரும் மிக நெருங்கிய நண்பர்கள், உறவுக்காரர்களை ஓட்டலில் தங்க வைக்க ரத்னவேலு ஏற்பாடு செய்திருந்தார்!

    பத்திரிகை, மீடியாக்களுக்கு அழைப்பு இருந்தது!

    அரசியல், பொது வாழ்வில் ஈடுபட்ட பல பெரிய புள்ளிகள் முக்கிய விருந்தினர்கள்.

    காலையில் மூத்த மகள் அர்ச்சனா, மாப்ளை ராஜேஷ், குழந்தைகள் வந்து விட்டார்கள்.

    குடும்பமே ஆரவாரமாக இருக்க ஒரே ஒரு ஜீவன் முகத்தில் மட்டும் சிரிப்பு தொலைந்து போயிருந்தது!

    யாரது?

    கல்யாணி!

    மணமகள் ஸ்நேகாவின் அம்மா!

    எந்திர கதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் கடுகளவும் உற்சாகம் இல்லை.

    ரத்னவேலு அருகில் வந்தார்.

    நடக்கப் போறது நம்ம பொண்ணோட நிச்சயதார்த்தம். உன் முகம் இப்பிடி இருந்தா, நாலுபேர் நாலு விதமா பேசுவாங்க! நீ புரிஞ்சுகவே மாட்டியா?

    மூத்தவள் அர்ச்சனா அருகில் வந்தாள்.

    ஆமாம்மா! அப்பா சொல்றது நியாயம்தான்! ‘அவர்’ கேக்கவே தொடங்கிட்டார். நீ உன்னை மாத்திக்கணும்!

    அவ மாறமாட்டா! காரணம் யாருனு உனக்குத் தெரியுமா அர்ச்சனா?

    தெரியும்பா! அஞ்சலி!

    கல்யாணி விசுக்கென திரும்பினாள் - கண்கள் கலங்க.

    ஏம்மா! அஞ்சலி ஒரு ஓடுகாலி! அப்பா கௌரவத்தை குழிதோண்டிப் புதைச்சிட்டுப் போனவ! அந்த அவமானத்திலேருந்து அப்பா மீள ஒரு வருஷம் புடிச்சிருக்கு! உனக்குத் தெரியாதா இதெல்லாம்?

    கல்யாணி பேசவில்லை!

    அவ பேசமாட்டா அர்ச்சனா! அவளோட நோக்கம் என்ன தெரியுமா? அந்த ஓடுகாலி இந்த விழாவுக்கு வரணும்!

    எப்படீம்மா முடியும்! அஞ்சலி ஓடிப் போனது எல்லாருக்கும் தெரியும்! இப்ப அவ வந்து நின்னா, எல்லாரும் நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்க?

    அதைப் பத்தி உங்கம்மா கவலைப்படமாட்டா! அவளோட செல்ல மகள் வரணும்! இவளைக் கட்டிக்கிட்டு என்னால மாரடிக்க முடியலை! நீயே பேசும்மா!

    அர்ச்சனா அருகில் வந்தாள்.

    நீ ஏம்மா இப்பிடி இருக்கே! அஞ்சலி படிச்சவ! அழகான பொண்ணு! கோடீஸ்வரன் மகள்! என்ன செஞ்சா? அப்பாகிட்ட வேலை பாக்கற டிரைவர் முருகனைக் காதலிச்சு, அவன் கூட ஓடிப் போனா! ஊரே சிரிக்கலை? அப்பாவோட குனிஞ்ச தலை இன்னும் நிமிரலை! நாங்க எல்லாரும் அவளை மறந்தாச்சு. நீ மட்டும் மறக்கலை!

    நான் அவளைப் பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாடி!

    ரத்ன வேலு பாய்ந்து வந்தார்!

    அதுக்காக அவ செஞ்சது நியாயமா?

    நான் நியாயம்னு சொல்லலியே? முதல்ல எதிர்த்தவ நான் தானே? அதை நான் ஆதரிச்சேனா? சரி - யாராலும் கட்டுப்படுத்த முடியலை. அவளும் மேஜர். முடிவெடுத்துட்டா. அதுக்காக அவளை யாரும் இந்த வீட்ல சேக்கலை. அவளுக்கு எந்த உரிமையும் தரணும்னு நான் சொல்லவும் இல்லை. ஆனா சொந்தத் தங்கை நிச்சயதார்த்தம்! பேர் தெரியாதவங்களைக் கூட அழைக்கறோம். அஞ்சலி விரோதி இல்லையே? அவகிட்ட ஒரு வார்த்தை சொன்னா தப்பா?

    அர்ச்சனா அப்பாவைப் பார்த்தாள்!

    அவளுக்கு மட்டுமா? இல்லை, டிரைவர் மாப்ளைக்கும் சொல்லணுமா?

    சொன்னா தப்பில்லை! உங்கப்பாகிட்ட இப்ப டிரைவரா இருக்கற அத்தனை பேரும் கலந்துக்கப் போறாங்க. வீட்டு வேலைக்காரங்க சாப்பிடப் போறாங்க. அப்படி இருக்க, முருகனைக் கூப்பிட்டா என்ன தப்பு?

    கேட்டியா அர்ச்சனா! மத்தவங்க கதை வேற அர்ச்சனா! முருகன் உள்ளே நுழைஞ்சா என்ன பேசுவாங்க? டிரைவர் மாப்ளைக்கும் அழைப்பானு என் காதுபட கேப்பாங்க. புது சம்பந்திக்கும் இந்தக் கதை தெரியும். அவங்க முகம் சுருக்குவாங்க! மூத்த மாப்ளை ராஜேஷ் என்ன நினைப்பார்? எல்லாரும் நிக்கற சபைல இவனுக்கு நிக்கற யோக்கயதை இருக்கா? கேளு அர்ச்சனா!

    அம்மா! அப்பா சொல்றது நியாயம்தான்! அசிங்கமா போயிடும்! முருகன் வரக் கூடாது! வேணும்னா ஒண்ணு செய்!

    என்ன?

    அஞ்சலியை மட்டும் கூப்பிடு!

    கல்யாணி திரும்பினாள்.

    அப்பா! இதையும் நீங்க விரும்பமாட்டீங்க! அவ ஆயிரம்தான் ஆனாலும் இந்த வீட்ல பொறந்தவ! அவ வரட்டும்பா! இல்லைனா, அம்மா இப்பிடித்தான் இருப்பாங்க!

    ரத்னவேலு பேசவில்லை!

    அவரை அர்ச்சனா தனியாக இழுத்து வந்தாள்!

    அப்பா! கூப்பிட்டாலும் அவ வரமாட்டா! ரோஷக்காரி! அதனால கூப்பிடலைனு இருக்க வேண்டாமே!

    ரத்ன வேலு யோசித்தார்!

    சரிம்மா!

    வெளியே வந்தார்கள்!

    அஞ்சலி வர்றதைப் பற்றி எனக்குத் தடையில்லை! ஆனா நான் கூப்பிடமாட்டேன்!

    வேண்டாம்பா! அதை நாங்க பார்த்துக்கறோம்!

    ரத்ன வேலு அகன்றார்.

    அம்மா! நாங்க யாரும் கூப்பிட வர மாட்டோம். எங்க வீட்டுக்காரர் கொன்னே போட்டுடுவார். நீ காரை எடுத்துட்டு அவ வீட்டுக்குப் போய் கூப்பிடறியா?

    கல்யாணி யோசித்தாள்!

    இந்த தர்ம சங்கடமே வேண்டாம்! போன்ல சொல்லிடு!

    இல்லை அர்ச்சனா! அவ மூணாவது மனுஷி இல்லை. நேர்லதான் கூப்பிடணும்!

    சரி! போய்க் கூப்பிடு!

    அவ வீட்டுக்குப் போயிட்டு ‘நீ மட்டும் வா அஞ்சலி’னு எப்படிடீ கூப்பிட முடியும்? முருகன கூப்பிடாம விட்டா அது மரியாதையா?

    "என்னம்மா பேசற? அவன் என்ன மாண்புமிகு மாப்ளையா? அப்பாவை அசிங்கப்படுத்தி, அஞ்சலி மனசைக்

    Enjoying the preview?
    Page 1 of 1