Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saravedi
Saravedi
Saravedi
Ebook97 pages38 minutes

Saravedi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரவெடி..க்ரைம் த்ரில்லர்..ஏராளமான ட்விஸ்டுகள் நிறைந்த பரபரப்பான நாவல்
தள்ளு வண்டி உருக்கமான குடும்ப சென்டிமென்ட்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137406356
Saravedi

Read more from Shruthi Prakash

Related to Saravedi

Related ebooks

Related categories

Reviews for Saravedi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saravedi - Shruthi Prakash

    https://www.pustaka.co.in

    சரவெடி

    Saravedi

    Author:

    ஸ்ருதி பிரகாஷ்

    Shruthi Prakash

    For more books

    https://www.pustaka.co.in/home/author/shruthi-prakash

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    தள்ளு வண்டி!!!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பமாகி விட்டது! நோய், மழை, புயல் என இயற்கையும், மருத்துவமும் அவ்வப்போது பயமுறுத்தினாலும், நம் மக்களுக்கு பண்டிகை என்று வந்து விட்டால், சகலமும் மறந்து போகிறது! கொண்டாட, மனம் தயாராகி விடுகிறது!

    நம் நாயகன் வெங்கட், காலை ஏழு மணிக்கு இழுத்துப்போர்த்திக்கொண்டு உறங்க, வேகமாக வந்து சஞ்சனா, போர்வையை உருவினாள். வெங்கட் பதறி எழுந்தான்.

    ஏய்! நான் எப்படி படுத்திருக்கேன்னு தெரியாம, நீ பாட்டுக்கு போர்வையை உதறினா எப்படி?

    நான் உங்க பொண்டாட்டிதான்! இந்த வீட்ல நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கோம்! நீங்க எப்படி படுத்திருந்தாலும் தப்பில்லை!

    ச்சீய்! நீ ரொம்ப மோசம்! கெட்ட பொண்ணு! சொன்னபடி, அவளை இழுத்துப்போட,

    என்ன இது? நான் குளிச்சாச்சு! மறுபடியும் குளிக்கணுமா? விடுப்பா!

    நீ இனிமே குளிக்கவே கூடாதுனு, எங்கம்மா சொல்றாங்க! என்னை கண்டபடி பேசறாங்க! அவள் காதுமடலை அவன் கடிக்க, விட்ரா! வலிக்குது! போதும் கொஞ்சினது! நாளைக்கு தீபாவளி! நமக்கு தலைதீபாவளி! ஞாபகம் இருக்கா? இங்கிருந்து பத்து மணிக்கு காரை எடுத்தாத்தான், மதுரைல எங்கம்மா வீட்டுக்கு, சாயங்காலம் ஆறுமணிக்காவது போய் சேர முடியும்?

    இரு போகலாம்! நீ வா இப்படி!

    வேண்டாம்! பார்வையே சரியில்லை! ஆளை விடுங்க! பேக்கிங் இருக்கு! போய் குளிங்க! நான் டிபன் ரெடி பண்றேன்!

    வேண்டாம் சஞ்சனா! வழில, ஓட்டல்ல பார்த்துக்கலாம்! நான் குளிச்சிட்டு வந்திர்றேன்... அம்மணி! குளிப்பாட்டி விடறியா?

    அவள் உதைக்க வர, அவன் ஓட்டம் பிடிக்க, சஞ்சனா சந்தோஷமாக, பேக் செய்ய ஆரம்பித்தாள். மதுரையில் அவளது பிறந்த வீடு! இங்கே தனிக்குடித்தனம்! தலைதீபாவளிக்கு அம்மா வீட்டுக்கு போகிறார்கள். பிறந்த வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் புதுத்துணிகள், பலகாரங்கள், பட்டாஸ் வகையறாக்கள் என பார்சல் செய்து கொண்டு, பேக்கிங்கை முடித்து விட்டாள். அவள் என்ன சொன்னாலும், மறுபேச்சே இல்லாமல் நிறைவேற்றுவான் வெங்கட்! அப்படி ஒரு இணக்கமான தாம்பத்யம். சந்தோஷத்தின் உச்சியில் சஞ்சனா! வெங்கட், குளியல் முடித்து வந்து விட்டான்!

    பசிக்குது சஞ்சனா! மாவு இருந்தா, தோசை ஊத்திக்குடேன்!

    எனக்குத்தெரியும், உங்களுக்கு பசி பொறுக்காதுனு! கேட்டாத்தானே? அஞ்சே நிமிஷத்துல ரெடி பண்றேன்!

    நல்ல பொடி, மசால் தோசையா மொறு, மொறுனு போடு! அவன் கேட்டபடி செய்து தந்தாள்.

    சரி! பத்தே நிமிஷத்துல காரை எடுத்துடலாம்! ரெடியாயிடு! சொல்லும் போதே போன் வந்தது. எடுத்துப்பேச, முகம் மாறியது. ஒரிரு நிமிடங்கள் பேசினான்.

    சரி வர்றேன்! ஆனா அதிகபட்சம், ஒரு மணிநேரம்தான் இருப்பேன்!

    என்னாச்சு வெங்கட்?

    ஆஃபீஸ்ல ஒரு எமர்ஜென்சி சஞ்சனா! நான் போயே ஆகணும்!

    முடியாதுனு சொல்லுங்க! நாம மதுரைக்கு தலைதீபாவளிக்கு போகணும்!

    பொறுப்பான பதவில இருந்துட்டு, அப்படியெல்லாம் பேச முடியாது சஞ்சனா! உனக்கு என் வேலை பளு தெரியாதா? நான் போயிட்டு சீக்கிரம் முடிச்சிட்டு வந்திர்றேன்! அதிகபட்சம், ஒரு மணிக்கு காரை எடுத்தாக்கூட ராத்திரி ஒன்பது மணிக்கு மதுரைல இருக்கலாம். புரிஞ்சுகோம்மா! அவன் உடனே தயாராகி காரை எடுக்கும் நேரம், சஞ்சனாவுக்கு போன் வர, அவள் அவசரமாக உள்ளே போனாள். வெங்கட் காரை எடுத்தான்.

    ***

    ஆஃபீசுக்குள் வெங்கட் அவசரமாக நுழைந்தான். அவனது பி.ஏ. ரசிகா ஓடி வந்தாள்!

    நான் தலைதீபாவளிக்கு மதுரைக்கு கிளம்பிட்டே இருக்கேன்! இப்ப பார்த்து, பிரச்னையா? சஞ்சனா, கடுப்புல இருக்கா!

    சாரி சார்! இந்த பிரச்னையை, உங்களால மட்டும்தான் தீர்க்க முடியும்! அதான் வரச்சொன்னேன்!

    அடுத்த அரைமணியில் போன் கால்கள் பறந்தன! சிஸ்டம் முன்பு அமர்ந்து, அசுர வேகத்தில் அவளுக்கு உத்தரவுகளை, பிறப்பிக்கத் தொடங்கினான்! அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், ரசிகாவுக்கு நாக்கு தள்ளியது. இந்த நேரம், ரசிகாவுக்கு ஒரு போன் வர, அவள் பேச, அவள் முகமே மாறி விட்டது!

    அப்படியெல்லாம் பேசாதீங்க! யார் நீங்க? இடியட்! வைடா போனை!

    யாரு ரசிகா? யாரை திட்டறே?

    விடுங்க சார்! ஏதோ அனானிமஸ் கால்! நாம வேலையை பார்க்கலாம்! அடுத்த ஐந்து நிமிடங்களில், அடுக்கடுக்காக அழைப்புகள்! ரசிகாவுக்கு வியர்த்து, உடல் நடுங்க, கைகள் உதற, அப்போதும் அவன் கேட்டதற்கு பதில் இல்லை! நாலாவது முறையாக கால் வர, படக்கென, வெங்கட் போனை பறித்தான்!

    "அம்மாடி! செக்ரட்டரி! இந்த நேரம், உன் பாஸ் வெங்கட் சம்சாரம், கள்ளக்காதலனோட, எல்லாம் முடிச்சிருப்பா! தளதளன்னு காஷ்மீர் ஆப்பிள் கணக்கா இருக்கா!

    Enjoying the preview?
    Page 1 of 1