Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கதவு திறந்தது
கதவு திறந்தது
கதவு திறந்தது
Ebook106 pages37 minutes

கதவு திறந்தது

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"நில்லுடி!"
 ரஞ்சனி நின்றாள். திரும்பி லாரன்ஸை ஒருமுறை பார்த்தாள். இந்தப் பக்கம் திரும்பினாள்.
 "பதிவுத் திருமணத்தை முடிச்சிட்டு நேரா வர்றோம். உங்கிட்ட ஆசீர்வாதம் வாங்கத்தான் வந்தோம்!"
 கற்பகம் வாய் திறக்க,
 கவிதா படக்கென கையைப் பிடித்தாள்.
 "அத்தே! உள்ளே வாங்க."
 "இரு கவிதா. நான் கொஞ்சம் இவகிட்ட பேசணும். என்னைப் பேச விடு!"
 "பேசுங்க அத்தை! உங்க மகள்கிட்ட பேசற உரிமை உங்களுக்கு நிறையவே இருக்கு. ஒரே ஒரு நிமிஷம் உள்ளே வாங்க. ப்ளீஸ்!"
 ஏறத்தாழ மாமியாரைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.
 "என்ன கவிதா இது? என்னை விடு. ஆசீர்வாதம் வாங்க வந்திருக்காளாம். நான் குடுப்பேன்னு நினைச்சாளா?"
 "நீங்க தப்பா எதுவும் பேசிடக் கூடாதுனுதான் உங்களை நான் உள்ளே இழுத்துட்டு வந்தேன்."
 "என்ன சொல்ற நீ?"
 "அவ செஞ்சது தப்புத்தான். ஒரு தாய் மனசைப் போட்டு உடைச்சிருக்கா. ஆனாலும் நீங்க பத்து மாசம் சுமந்து பெத்த மகள் ரஞ்சனி. ஒரு தாய் மனசு வெந்து, அதுலேருந்து ஒரு வார்த்தை வந்தாக்கூட பலிச்சிடும் அத்தே! வேண்டாம். உங்க விரல் அவ கண்களைக் குத்தக் கூடாது அத்தே! உங்க மனசு பூ மாதிரி. அதுலேருந்து வாழ்த்துக்கள் மட்டும்தான் வரணும். வேற எதுவும் வந்துடக் கூடாது!கற்பகம் அழுது விட்டாள்.
 "எங்கிருந்தோ வந்த நீ, எப்படி இந்த அளவுக்கு என்னைப் புரிஞ்சுகிட்டே? என் மகளுக்கு ஏன் அந்த சக்தி இல்லை?"
 "அத்தே! ஆசை, பாசத்துக்கு திரை போடுது. யதார்த்தம் புரியும் போது மூடின திரை விலகும்!"
 "கவிதா! ராஜா இந்தக் குடும்பத் தலைவன். அவனுக்குக் கூட சொல்லாம இது நடந்திருக்கு. மாட்டேன்! அவளை நான் ஏத்துக்க மாட்டேன். நான் சாபம் போடலை. ஆனா அவ இந்த வீட்டுக்குள்ளே வரக்கூடாது!"
 குரல் உயர்ந்து விட்டது!
 வேகமாக கற்பகம் வெளியே வந்து விட்டாள்.
 கவிதா பின்தொடர்ந்து வந்தாள்.
 "இதப்பாரு! நீ எங்களை ஏத்துக்க மாட்டேன்னு தெரியும். அதுக்காக நான் கவலைப்படலை. என் மனசுக்குப் பிடிச்சவரோட தான் நான் வாழ முடியும். அதை மறுக்கற யாரா இருந்தாலும் உதற நான் தயார்!"
 கவிதா அருகில் வந்தாள்.
 "இதப்பாரு ரஞ்சனி! ஒரு பொண்ணுக்கு புருஷன் உசத்திதான். ஆனா நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்த தாயும் மட்டமில்லை."
 "உங்ககிட்ட நான் கேக்கலை!"
 லாரன்ஸ் குறுக்கிட்டான்.
 "தப்பு ரஞ்சனி! கவிதா ஒண்ணும் தப்பா பேசலை. ஏன் இப்படி நெருப்பை வாரிக் கொட்டறே?"
 "அது என் சுபாவம்!"
 லாரன்ஸ் திரும்பினான்!"ஆன்ட்டி என்னை வெறுப்பாங்க! அதுல தப்பில்லை! கவிதா! நீங்க புரிஞ்சுக்குங்க. நான் ரஞ்சனியை கட்டாயப்படுத்தி உங்க குடும்பத்துலேருந்து பிரிக்கலை. இந்த அவசரப் பதிவுத் திருமணத்துல எனக்கு உடன்பாடு இல்லை. பேசிப் பார்த்த பிறகு நடத்தலாம்னு சொன்னேன். ரஞ்சனி கேக்கலை."
 அம்மா திரும்பினாள்.
 "ரஞ்சனி ஒரு முடிவுக்கு வந்துட்டா மாத்திக்க மாட்டானு என்னை விட உங்க எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சிருக்கும். நானும் மறுத்துட்டு, ரஞ்சனி தப்பான முடிவுக்குப் போயிட்டா, நீங்க எல்லாரும் என்னைக் குற்றவாளிக் கூண்டுல நிக்க வைப்பீங்க!"
 "லாரன்ஸ்!"
 "இரு ரஞ்சனி! என் நிலையை நான் தெளிவுப்படுத்தியே ஆகணும்!"
 "எதுக்கு?"
 "எனக்கு அம்மா இல்லை. நான் குடுத்து வைக்கலை. இன்னொரு அம்மாவுக்கு என்னைப் புரிய வைக்கணும். ஆன்ட்டி! இப்ப எங்களை நீங்க ஏத்துக்கலைனாலும், இந்த உறவுகள் வேணும்னு நான் விரும்பறேன். நான் அன்புக்கு ஏங்கறவன் ஆன்ட்டி. கவிதா, நாங்க புறப்படறோம்."
 ரஞ்சனி வாசலில் இறங்கி விட்டாள்.
 கவிதா, லாரன்சிடம் ஓடி வந்தாள்.
 "வீடு பார்த்தாச்சா?"
 "இல்லைம்மா! ஒரு வாரம் கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல இருப்போம். அதுக்குள்ளே கிடைச்சிடும். வீடு பார்த்ததும் விலாசம் தெரிவிக்கறேன்."
 "சரி!"
 கார் புறப்பட்டுப் போய் விட்டது.
 கற்பகம் உடைந்து போய் உட்கார்ந்திருந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223811831
கதவு திறந்தது

Read more from Devibala

Related to கதவு திறந்தது

Related ebooks

Related categories

Reviews for கதவு திறந்தது

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கதவு திறந்தது - Devibala

    1

    மருமகள் கவிதாவுடன் கோயிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் அம்மா!

    ஆட்டோ கொண்டு வரட்டுமா அத்தே?

    வேண்டாம்மா! நடந்தே போயிடலாம்!

    பதினைஞ்சு நிமிஷம் ஆகுமே! உங்களுக்கு நடக்க முடியுமா?

    முடியும்மா. எனக்கும் ஒடம்புல வியாதிகள் இருக்கு! நடந்தா நல்லதுதானே?

    சரி அத்தே!

    வீட்ல என்னை எந்த வேலையும் நீ செய்ய விடறதில்லை! வர வர நான் சோம்பேறி ஆயிட்டேன் கவிதா!

    இத்தனை நாள் உழைச்சாச்சு! போதும். கொஞ்ச நாள் ஓய்வெடுங்க அத்தே!

    மருமகளைப் பார்த்து ஆனந்தப்பட்டாள் அம்மா!

    கல்யாணம் முடிந்து ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தது!

    கற்பகம்மாவுக்கு ராஜா ஒரு மகன். ரஞ்சனி ஒரு மகள். சிறுவயதில் கணவரை இழந்து தையல், சமையல் என பலவித வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு இடைவிடாது உழைத்து இரண்டு குழந்தைகளையும் கரையேற்றி விட்டாள் கற்பகம்!

    ராஜா பி.டெக்., எம்.பி.ஏ., - ரஞ்சனி எம்.ஏ., பிரமாதமாகப் படித்து உபகாரச் சம்பளம் வாங்கி, இருவரும் தாயின் கனவுகளை வீணாக்கவில்லை!

    இரண்டு பேருக்குமே பெரிய உத்யோகம் கிடைத்தது! பல ஆயிரங்கள் சம்பளம். ஒரே வருடத்தில் குடும்பத்தின் நிலை எங்கோ உயர்ந்து விட்டது! அடுத்த ஒரு வருடத்தில் மாறி மாறி இருவரும் வெளிநாட்டுக்குப் போனார்கள். பணத்தைக் குவித்தார்கள். இங்கு வந்து வீடு வாங்கினார்கள்.

    கற்பகம் பூரித்துப் போனாள்.

    மகனுக்கும், மகளுக்கும் கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என நினைக்க,

    ராஜா தன் முதல் நிபந்தனையை போட்டு விட்டான்.

    படிச்ச, பதவிசான பெண் வேணும். ஆனா வேலைக்குப் போக வேண்டாம். வீட்டோட இருந்து நிர்வாகத்தைப் பாக்கட்டும்!

    ஏண்டா ராஜா?

    நம்ம ரஞ்சனி பெரிய வேலை பாக்கறா. காலைல போனா, ராத்திரி 12மணி ஆகுது வீடு திரும்ப. இப்படி இருந்தா குடும்பத்தை எப்படி கவனிக்கறது?

    ரஞ்சனி குறுக்கிட்டாள்.

    கை நிறைய காசு வருதில்ல? வேலைக்கு ஆளைப் போட்டுக்கணும்!

    ஆட்கள் இருந்தாலும் பற்றுதலோடு செய்வாங்களா? கூலிக்கு மாரடிப்பாங்க!

    அம்மா! அதையெல்லாம் பார்த்தா முடியாது! வேலை நடக்கணும்!

    சரிம்மா! பெத்த அம்மா நான் கண்டுக்க மாட்டேன். உனக்கு மாமியார்னு வந்தா, இதை ஏத்துப்பாங்களா?

    விருப்பமிருந்து, எனக்கு அனுசரணையா இருந்தா இருக்கட்டும்! இஷ்டமில்லைனா, போகட்டும்!

    என்னடீ பேசறே? நீ போன மறுநாளே, மாமியாரை விரட்டுவியா? நான் பெத்த பெண்ணா நீ?

    நிறுத்தும்மா! நான் சந்தோஷமா வாழணும். அதுக்கு இடையூறா யார் வந்தாலும், விடமாட்டேன்!

    சரி விடும்மா! சூழ்நிலைக்குத் தக்க வேண்டியதை செஞ்சுகலாம்! ராஜா எதிலும் பட்டுக் கொள்ள மாட்டான். ஆனால் ரஞ்சனி முகத்தில் அடித்த மாதிரிப் பேசி விடுவாள்.

    சுயநலத்தின் மொத்த உருவம்!

    தன் மகளாக இருப்பதால் விட்டுத் தரவும் வழியில்லை!

    அம்மா தரகரை அழைத்து இரண்டு பேர் ஜாதகங்களையும் ஒப்படைத்தாள்.

    ராஜாவின் விருப்பப்படியே அம்மா வரன் பார்க்க, ஒரு ஜாதகம் பிரமாதமாகப் பொருந்தியது!

    எம்.சி.ஏ. படித்த கவிதா, நல்ல உத்யோகத்தில் இருந்தாள். அப்பா, அம்மா இருந்தார்கள். இவள் ஒரே பெண்.

    பெண் பார்க்கப் போனார்கள்.

    கவிதா அழகாக இருந்தாள். ராஜாவுக்குப் பிடித்து விட்டது!

    நான் மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறேன். நீ வேலைக்குப் போக வேண்டாம். ராஜினாமா பண்ணிடு!

    கலந்து பேச ஒரு நாள் அவகாசம் கேட்டார்கள்.

    என்னம்மா சொல்ற?

    நானும் மாசம் நாப்பதாயிரம் சம்பாதிக்கறேனேப்பா!

    பரவால்லைமா! நல்ல வரன் வருது! இப்ப ராஜினாமா பண்ணிடு. அப்புறம் ஒப்புக்கிட்டா, வேலை தேடிக்கோ! உனக்குத்தான் படிப்பு இருக்கே! நல்ல வரனை விடணுமா?

    சரிப்பா!

    தாம்பூலம் மாற்றப்பட்டது!

    தங்கைக்கும் ஒரு வரன் முடிவான பிறகு கல்யாணம் நடக்கட்டும் - என்றான் ராஜா!

    ரஞ்சனி சம்மதிக்கவில்லை!

    என்னை உன்னோட பிணைக்காதே! உன் கல்யாணம் நடக்கட்டும். எனக்கு அமையும் போது அமையட்டும்!

    அவர்கள் சம்மதித்து விட,

    ஒரே மகள் என்பதால் கவிதாவுக்கு பிரம்மாண்டமாக கல்யாணம் நடத்தினார்கள்.

    கவிதா மருமகளாக வலது காலை எடுத்து வைத்து விட்டாள். அவளது இயல்பான பேச்சும், பாசமும், குடும்பத்தில் ஒருத்தியாக தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதும் முதல் இரண்டு நாட்களில் அவளை உணர்த்தி விட்டது.

    தேனிலவுக்கு எங்கே போகலாம் என திட்டமிடும் நேரம், அலுவலக வேலையாக மூன்று மாதங்களுக்கு ஜெர்மனிக்குப் போகும் பணி ராஜாவுக்கு வந்து விட்டது.

    இதை நிறுத்த முடியாதா ராஜா? இப்பத்தானே கல்யாணம் நடந்திருக்கு?

    ரஞ்சனி குறுக்கிட்டாள்.

    என்னம்மா உளர்ற நீ? கல்யாணமாயிட்டா, பொண்டாட்டி முந்தானையைப் புடிச்சிட்டே நடக்கணுமா? அவனோட எதிர்காலம் முக்கியமில்லை?

    கற்பகம் முகம் மாறியது.

    கவிதா காபி கொண்டுவர உள்ளே போக,

    நீ இப்படி பேசினா, அவ என்ன நினைப்பா?

    உண்மையை நான் பேசும் போது, யார் என்ன நினைச்சாலும் எனக்குக் கவலையில்லை!

    கற்பகம் ஆடிப் போனாள்.

    அத்தே... அவர் போயிட்டு வரட்டும். நான் இங்கே சந்தோஷமா இருப்பேன்!

    ராஜா புறப்பட்டுப் போய் விட்டான்!

    கவிதா தான் வீட்டு வேலைகள் மொத்தத்தையும் செய்தாள். ரஞ்சனி ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டாள். படக் படக்கென பேசுவாள்!

    கற்பகம் பொறுக்க முடியாமல், அவ அப்படித்தான். நீ மனசுல வச்சுக்காதேம்மா!

    எனக்குப் புரியும் அத்தே! நீங்க கவலைப்படாதீங்க!

    ரஞ்சனிக்கும் வேகமாக வரன் பார்க்க,

    ஒருநாள் இரவு ரஞ்சனி, அம்மா - அண்ணி இருவரையும் அழைத்தாள்.

    எனக்கு வரன் பார்க்க வேண்டாம்!

    ஏன்?

    "என் கூடவே

    Enjoying the preview?
    Page 1 of 1