கண்மணி கண்டுபிடி..!
By Devibala
()
About this ebook
எடிட்டர் அறைக்குள் வசந்த் நுழைந்தபோது மாலை ஏழு மணி.
"வா வசந்த்! உட்காரு!"
"இன்னிக்கு போஸ்ட்ல வந்த லெட்டர் சார்!"
"யாருது?"
"நீங்களே எதிர்பாராத ஆள். படிச்சுப் பாருங்க!"
அதை வாங்கி தன் மேஜையின் மேல் வைத்த எடிட்டர், அவனைப் பார்த்தார்.
"கள்ளிப்பூ' படம் ஓடாததுக்கு நம்ம விமர்சனம்தான்னு ஒரு பேச்சு பரவலா இருக்கு வசந்த்!"
"அதனாலதான் டைரக்டருக்கு மாரடைப்பா?"
"நல்ல காலம் பிழைச்சிட்டார். அவர் உயிருக்கு ஆபத்து உண்டாகியிருந்தா, ஜனங்க நம்மைக் குற்றம் சாட்டுவாங்க!"
"போங்க சார். பத்திரிகைனா பாராட்டிகிட்டே இருக்க முடியுமா? படத்துல ஒண்ணுமில்லை சார். அண்ணாமலைகிட்ட சரக்கு தீர்ந்து போச்சு. லெட்டரை படிங்க."
கிழித்தார், பிரித்தார்.
நடிகை நர்மதா எழுதியிருந்தார்.
'உங்கள் விமர்சனத்தை படித்த மறுநாள் 'கள்ளிப்பூ' படம் பார்க்கும் வாய்ப்பு வந்தது.'
'என்ன ஒரு அற்புதமான படைப்பு. ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குனருக்கு தனித்தனியாக முத்தம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நல்ல படத்தை நான் பார்த்ததேயில்லை. பிரபல பத்திரிகையாக இருந்தும் ரசனையில்இத்தனை கீழே இருக்கும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ரசிகர்களை திசை திருப்பி விடும் உங்களை கலைஞர்களின் சார்பாக எச்சரிக்கிறேன் - நர்மதா.'
வசந்தைப் பார்த்தார் எடிட்டர்.
"நர்மதா ஸ்டில் இருந்தா போட்டு, இந்த லெட்டரையும் வெளியிடு! போஸ்டர்ல இதையே நியூசா போடு."
வசந்த் சிரித்தான்.
"இனி படத்துக்கு பப்ளிசிட்டி கிடைச்சு உபயோகமில்லை. தியேட்டரை விட்டுத் தூக்கியாச்சு."
"நர்மதா ஏன் இதுல தலையிடறா?"
"விளம்பரத்துக்குத்தான்!"
"இந்தச் செய்தி மூலம் நர்மதாவுக்கு விளம்பரம் தேடற அவசியம் இல்லை சார். நம்பர் ஒன் நடிகை. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கற ஸ்டார்."
"சரி விடு! அண்ணாமலையை போய் பார்த்தியா?"
"நான் போனப்ப தூங்கிட்டு இருந்தார்."
டெலிபோன் ஒலித்தது.
எடுத்தார் எடிட்டர்.
"சார் நான் திலிப் பேசறேன். டைரக்டர் அண்ணாமலையை பார்க்க நர்சிங் ஹோமுக்கு நர்மதா வந்திருக்காங்க."
"நடிகை நர்மதாவா? எப்ப?"
"இப்பத்தான் உள்ளே போய்க்கிட்டே இருக்காங்க..."
"சரி! ரெண்டு பேரையும் அங்கேயே வச்சு ஒரு ஸ்டில் எடுக்க முடியுமானு பாரு!."
"வசந்த் இருந்தா நல்லாருக்கும்.""வேண்டாம். வசந்த் 'பாரிஜாத' நிருபர்னு டைரக்டருக்குத் தெரியும். உன்னைத் தெரியாது நமக்குனா ஸ்டில் தரமாட்டாங்க. வேற ஏதாவது சொல்லி படம் எடு. முடிஞ்சா நர்மதாகிட்ட சின்னதா ஒரு பேட்டி வாங்கிடு."
எடிட்டர் - சொல்லிக் கொண்டிருந்த நேரம், நர்மதா டைரக்டரின் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.
டைரக்டரை சாய்த்து உட்கார்த்தி மருந்து கொடுத்துக் கொண்டிருந்தாள் நர்ஸ்.
"வணக்கம் சார்!"
"நீங்க... நீ..."
"நர்மதாவேதான்!"
அவருக்கு ஆச்சரிம் தாளவில்லை.
"அபி! அந்தச் பேனை போடு."
கட்டிலுக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள் நர்மதா.
வெளியே ரசிகர்களின் கூச்சலில் டாக்டர்கள் லேசாக முகம் சுளிக்கத் தொடங்கி விட்டார்கள்.
"நீ... எ... எப்படீம்மா?"
"ஏன் சார் வரக்கூடாதா? உங்க படத்துல நடிக்காம இருக்கலாம். ஆனா, உங்க ரசிகையாவும் இல்லாம இருக்கணுமா?"
"இ... இல்லைமா! அப்படி சொல்லலை நான்."
"நீங்க அதிகம் பேச வேண்டாம் சார். களைப்பு வந்திரும்." சொல்லிவிட்டு தன் கையில் இருந்த 'பொக்கே'யை அவரிடம் தந்தாள்
Read more from Devibala
அதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணகி - '96' Rating: 0 out of 5 stars0 ratingsபுது அவதாரம் Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsஊர்மிளா - '96' Rating: 0 out of 5 stars0 ratingsபல்லக்கில் ஏறு... Rating: 0 out of 5 stars0 ratingsசீதைக்கு ராமன் சித்தப்பா Rating: 0 out of 5 stars0 ratingsசின்ன மணிக் குயிலே! Rating: 0 out of 5 stars0 ratingsகோடைத் தள்ளுபடி Rating: 0 out of 5 stars0 ratingsகைகேயி - 96 Rating: 0 out of 5 stars0 ratingsபின்னர் அறிவிக்கப்படும்! Rating: 0 out of 5 stars0 ratingsமூச்சுவிட நேரமில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்ச(ம்) வா! Rating: 0 out of 5 stars0 ratingsசிரிக்காமல் விடமாட்டோம்! Rating: 0 out of 5 stars0 ratingsமேடைக்கு வாங்க! Rating: 0 out of 5 stars0 ratingsபுதிய அரசாங்கம்! Rating: 0 out of 5 stars0 ratingsவேண்டாம் விளையாட்டு! Rating: 0 out of 5 stars0 ratingsகோலாகலம்..! Rating: 0 out of 5 stars0 ratingsஆலயப் பூக்கள்... Rating: 0 out of 5 stars0 ratingsதிருமகள் தேடி வந்தாள்..! Rating: 0 out of 5 stars0 ratingsசரித்திரம் திரும்புகிறது! Rating: 0 out of 5 stars0 ratingsகண் பேசும் வார்த்தைகள்... Rating: 0 out of 5 stars0 ratingsஇப்போது இல்லை! Rating: 0 out of 5 stars0 ratingsசிறகுகள் விரியும்! Rating: 0 out of 5 stars0 ratingsஉள்ளத்தால் துடிக்கிறேன்! Rating: 0 out of 5 stars0 ratingsகோலம் இடும் மயிலே! Rating: 0 out of 5 stars0 ratingsபத்தி எரியுது! Rating: 0 out of 5 stars0 ratingsதாய் பிறந்தாள்! Rating: 0 out of 5 stars0 ratings
Related to கண்மணி கண்டுபிடி..!
Related ebooks
Kanmani Kandupidi Rating: 0 out of 5 stars0 ratingsவா, சுகி வாசுகி Rating: 0 out of 5 stars0 ratingsKaanum Vizhi Naan Unakku Rating: 0 out of 5 stars0 ratingsகாணும் விழி நான் உனக்கு! Rating: 0 out of 5 stars0 ratingsKannillatha Mugam Rating: 0 out of 5 stars0 ratingsIrudhi Oppantham Rating: 0 out of 5 stars0 ratingsNavarathinam Rating: 0 out of 5 stars0 ratingsமுகம் பார்க்கும் நிலவு Rating: 0 out of 5 stars0 ratingsMugam Paarkkum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Girahanam Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Grahanam Rating: 0 out of 5 stars0 ratingsCocktail Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsUlley Vaammaa Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsAthirchi Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsபுதிராக ஒரு பூ! Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Yaaro Oru X Rating: 0 out of 5 stars0 ratingsPoi Kaappalan Rating: 0 out of 5 stars0 ratingsNadigai Rating: 0 out of 5 stars0 ratingsNeengatha Nila Rating: 0 out of 5 stars0 ratingsMaranam Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Nee Oru Kadhal Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsSayangala Santhosangal Rating: 0 out of 5 stars0 ratingsPani Iravil Pullveliyil Rating: 3 out of 5 stars3/5Mudhal Moochu...! Rating: 0 out of 5 stars0 ratingsபனி வடியும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsPani Vadiyum Pookkal Rating: 5 out of 5 stars5/5
Reviews for கண்மணி கண்டுபிடி..!
0 ratings0 reviews