Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sayangala Santhosangal
Sayangala Santhosangal
Sayangala Santhosangal
Ebook93 pages21 minutes

Sayangala Santhosangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603251
Sayangala Santhosangal

Read more from Devibala

Related to Sayangala Santhosangal

Related ebooks

Reviews for Sayangala Santhosangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sayangala Santhosangal - Devibala

    http://www.pustaka.co.in

    சாயங்கால சந்தோஷங்கள்

    Sayangala Santhosangal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    அந்த ஓட்டல் அறையில் தனது உதவி டைரக்டர்களுக்கு கழுத்து வலியை உண்டாக்கிக் கொண்டிருந்தார் டைரக்டர் பல்ராம்.

    கதை விவாதம் முடிவுக்கு வந்துவிட்டது ஏறத்தாழ. கணேஷ்!சொல்லுங்கண்ணே!

    அவரது இணை இயக்குநர் ஓடிவந்து அவர் அருகில் நின்றான்.

    சப்ஜெக்ட் எப்படி வந்திருக்கு?

    உங்க சப்ஜெக்டை ஒருத்தர் விமர்சனம் பண்ண முடியுமாண்ணே? அதுக்கு யாருக்கு இங்கே யோக்யதை இருக்கு?

    என்னை ஏத்தி வச்சே கவுத்துறாதேடா!

    என்னண்ணே இது?

    சரி! இதுல ஹீரோயின் வேஷத்துக்கு யாரைப் பண்ணலாம்?

    சுகன்யா சரியா வரும்னு நினைக்கறேன்.

    இன்னொரு உதவியாளன் குறுக்கிட்டு 'நக்மா' என்றான்.

    வேண்டாம் சிவா. இதுல க்ளாமர் ரோல் இல்லை. எமோஷனல் காரக்டர் ரோல்.

    சிலுக்கு! - இது குமார்.

    பல்ராம் அவனை முறைத்தார்.

    அலைகள் ஓய்வதில்லைல பாரதிராஜா.... அவன் இழுக்க,

    அது பதினைந்து வருஷம் முன்னாலடா. நம்ம கௌரி மனோகரி சரியா வருவாளா? இப்ப நல்ல பிசினஸ் அவளுக்கு.

    அண்ணே ஒரு நிமிஷம்.

    சொல்லு கணேஷ்.

    மனோகரி தொந்தரவு தர்றான்னு தகவல்.

    எதுல?

    ஷுட்டிங்ல. அப்புறமா டப்பிங்!

    டப்பிங் அவ எதுக்கு? வேற வாய்ஸ் போட்டுக்கலாம்.

    அதுக்கு அவ ஒப்புக்கறதில்லையாம். நான்தான் பேசுவேன்னு பிடிவாதம் பிடிக்கறாளாம். ஆனா ஒழுங்கா வராம படுத்தறாளாம். சினிமா வட்டாரத்துல அவஸ்தைப் பட்டவங்களோட அனுபவம்.

    ஓ....!

    பலராம் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தார். புகைத்தபடி அந்த அறையின் பரப்பளவைக் கால்களால் அளந்தார்.

    ஹீரோயின் சப்ஜெக்ட். சரியாச் செய்யணும்.

    அண்ணே!

    கணேஷ் தயக்கமாக அழைத்தான்.

    என்ன?

    புதுமுகம் தாங்குமா?

    ஹெவி ரோல் கணேஷ். தாங்குமா?

    நீங்களா இதைக் கேக்கறது. இப்ப உள்ள நட்சத்திரங்கள் பல பேரோட வேர் நீங்கதானே?

    அது வந்த புதுசுல இருந்த நேரம். இப்ப பிசினஸ் பயம் வந்தாச்சு. ரிஸ்க் எடுக்க பயமா இருக்கு.

    நீங்க பாருங்கண்ணே.

    இது வித்தியாசமான காரக்டர். அண்டர்கரன்ட்ல ஓடற காரெக்டர். தாங்கணுமே புதுமுகம்.

    கணேஷ் பேசவில்லை.

    சரி! நாளைக்குக் காலைல பாக்கலாம்.

    அவர்கள் அத்தனை பேரும் புறப்பட்டுப் போய் விட்டார்கள். பல்ராம் சினிமாவில் நுழைந்து பதினாறு வருடங்கள் முடிந்து விட்டன.

    வருடத்துக்கு இரண்டு படங்கள் என்ற கணக்கு. இதுவரை வந்த இருபத்தியெட்டு படங்களில் இருபது படங்கள் நூறு நாட்கள். மூன்று வெள்ளி விழா... பத்து படங்கள்தான் தோல்வி. அதுவும் வியாபார ரீதியான தோல்விதான். தரத்தில் எதுவுமே சறுக்கவில்லை. அவன் அறிமுகப்படுத்திய பலபேர் இன்று முன்னணி நட்சத்திரங்கள். அதனால் ஸ்டார் மேக்கர் என்ற தகுதி பெற்றவர். வயது நாற்பது.

    அவரே நடிக்கக் கூடாதா என்று மற்றவர்கள் கேட்குமளவுக்கு வசீகரமாக இருப்பார். சிகரெட், மது, அவ்வப்போது தொட்டுக் கொள்ள பெண்கள் என்று சகல கல்யாண குணங்களும் உண்டு. அதனால் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. பல முன்னணி கதாநாயகிகள் முதல் நேற்றைய புதுமுகம் வரை இவரை நிரந்தரமாக வளைக்க நினைத்து தோற்றுத்தான் போனார்கள். கல்யாணம் வேண்டாம் என்பதில் தீர்மானமானவர்.

    கொஞ்சம் மதுவை வரவழைத்து அதை டீபாயில் பரப்பிக் கொண்டு உட்கார்ந்தார். அவரது கவனம் முழுவதும் தன் புதிய கதாபாத்திரத்திலேயே இருந்தது.

    'கணேஷ் சொல்வது போல ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்திப் பார்க்கலாமா?’

    'ஏன் கூடாது!’

    'அது எனக்கொன்றும் புதிதல்லவே?’

    'அப்படியானால்.யார்?'

    ஒரு லார்ஜ் உள்ளே போனதும் சுறுசுறுப்பு வந்தது. டெலிபோனை எடுத்தார்.

    "சொல்லையா... புதுசா ஆல்பம் இருக்கா? இன்னும் அரைமணி நேரத்துல

    Enjoying the preview?
    Page 1 of 1