Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Meenakshi!
Meendum Meenakshi!
Meendum Meenakshi!
Ebook81 pages33 minutes

Meendum Meenakshi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603243
Meendum Meenakshi!

Read more from Devibala

Related to Meendum Meenakshi!

Related ebooks

Reviews for Meendum Meenakshi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Meenakshi! - Devibala

    http://www.pustaka.co.in

    மீண்டும் மீனாட்சி!

    Meendum Meenakshi!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    ராதிகா நீ இன்னும் ரெடியாகலை?

    குரல் கேட்டு ராதிகா தன் தலையைத் திருப்பினாள். கண்களை மெல்லச் சிமிட்டிச் சிரித்த அவள், மறுபடியும் கண்ணாடியின் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

    அவளது அலங்காரம் முடியும் தருவாயில் இருந்தது.

    சீக்கிரம் புறப்படும்மா. பிரதாப் வரப் போற ப்ளைட் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துரும். நம்ம கார் ரெடியா இருக்கு. கம்மான் சீக்கிரம்!

    சொல்லி விட்டு அம்மா வாசலுக்கு வந்தாள் அவசரமாக.

    விமலா கொஞ்சம் நில்லு!

    சடாரென கழுத்தை ஒடித்துத் திரும்பினாள்.

    என்னா? அவள் கேள்வியில் வெறுப்பும், நெருப்பும் இருந்தது.

    விமலா நான் உன் புருஷன்!

    தெரியும்!

    ராதிகா நம்ம பொண்ணு!

    அப்படியா? தேங்க்ஸ்!

    நான் உன்கூடக் கொஞ்சம் பேசணும்!

    என்ன பேசணும்? இப்ப எனக்கு எதுவும் நேரமில்லை என் தம்பி பிள்ளை பிரதாப் ரெண்டு வருஷம் கழிச்சு லண்டன் லேருந்து வர்றான். அவனை வரவேற்க நானும் என் மகளும் போகணும். நேரமாச்சு வழியை விடுங்க!'

    அது விஷயமாத்தான் நான் உன்கூடப் பேசணும்!

    ஸாரி... அப்புறம் பேசலாம். டிரைவர் வண்டியை ரெடி பண்ணு ராதிகா நீ ரெடியா?

    வந்துட்டேன் மம்மீ!

    குரலைத் தொடர்ந்து ஏராளமான அலங்காரத்தோடு ஒரு தேர் போல அசைந்து வந்தாள் ராதிகா.

    அப்பாவே கண்களைத் தழைத்துக் கொள்ளும் அளவு அப்பட்டமாக இருந்தாள்.

    இருவரும் அவரிடம் சொல்லிக் கொள்ளவில்லை.

    கார்க் கதவு அடித்துச் சாத்தப்படும் ஓசை... தொடர்ந்து தெருமுனையில் கார் புள்ளியானது.

    அவர் பெருமூச்சு விட்டார். லேசாகக் கசிந்த கண்ணீரை கண்களைச் சிமிட்டி அடக்கிக் கொண்டார். தன் அறைக்குள் நுழைந்து கட்டிலில் சரிந்தவர் மல்லாந்து படுத்து கண்களை மூடிக் கொண்டார்.

    அவரது உதடுகள் அந்தப் பெயரை மெலிதாக உச்சரித்தன பலமுறை...

    அது...

    மீனாட்சி...

    ###

    2

    விமான நிலைய லவுன்சில் விமலா ஒரு தவிப்புடன் உட்கார்ந்திருந்தாள். விமானம் வந்து சேர இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன.

    ராதிகா ஏதோ ஒரு ஆங்கில புத்தகத்தை மேய்ந்தபடி பார்வையை அடிக்கடி சுழற்றிக் கொண்டிருந்தாள்.

    மம்மீ!

    என்னடா?

    பிரதாப்போட ஆபீஸ் ஆட்கள் யாரும் வரலியா அவரை ரிசீவ் பண்ண?

    தெரியலியே! ஆபீஸ்லேருந்து பயிற்சிக்கு அனுப்பித்தானே, ரெண்டு வருஷமா லண்டன்ல இருக்கான். கண்டிப்பா வந்திருப்பாங்க. நமக்குத் தெரிஞ்சிருக்காது!

    விமானம் வந்து கொண்டிருப்பதாக அறிவிப்பு வர-

    விமலா எழுந்தாள் அவசரமாக.

    ஆகாயத்தில் ஒரு அலுமினியப் புள்ளி தென்பட்டது சன்னமாக. ராதிகாவும் எழுந்திருக்க, லவுன்சில் நாலைந்து பேர் அவளது மார்பை ஆங்கிலத்தில் அலசிக் கொண்டிருந்தார்கள் அவசரமாக.

    விமானம் தரை தொட்டு, எஸ்கலேட்டர் இணைக்கப்பட்டு, கதவு திறந்ததும்-

    எட்டாவது நபரா உச்சியில் உதித்தான் பிரதாப்.

    விமலா கையை அசைத்தாள் வேகமாக.

    செக்யூரிட்டி செக் முடித்து, தன் உடைமைகளைச் சேகரித்துக் கொண்டு பிரதாப் வெளிப்பட்டதும்-

    விமலா ஓடி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

    ஹாய் ஆன்ட்டி!

    மாலையைப் போடு ராது!

    ராதிகா அவனுக்கு மாலை போட, விமலா சின்னதாக கைதட்டினாள்.

    பிரதாப் கண்கள் அவசரமாக லவுன்சில் அலைந்தன.

    யாரைப்பா பாக்கறே?

    எங்க ஆபீஸ்லேருந்து யாரும் வரலியே! ஏன்?

    Enjoying the preview?
    Page 1 of 1