Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பல்லக்கில் ஏறு...
பல்லக்கில் ஏறு...
பல்லக்கில் ஏறு...
Ebook100 pages40 minutes

பல்லக்கில் ஏறு...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சம்பளத்தைக் கையில் வாங்கியதுமே டென்ஷனாக இருந்தது சேகருக்கு!
 ஏற்கனவே ஏகப்பட்ட பிடித்தம். பத்தாயிரத்துக்குமேல் சம்பளம் என்று பேர். பிடித்தம் போக அதில் பாதிகூட வருவதில்லை!
 பிராவிடண்ட் ஃபண்ட் லோன், சொசைட்டி லோன், பண்டிகை அட்வான்ஸ் என்று ஏராளமான 'கட்' போக கையில் வருவது நாலாயிரத்துச் சொச்சம்!
 அவசர செலவு குடும்பத்தில் என்று போன மாசக் கடைசியில் வாங்கிய ஆயிரம் ரூபாய் கடனும் வசூலாகிவிட்டதில்... கையில் மூவாயிரத்து முந்நூத்தி ஐம்பது ரூபாய்தான் இருந்தது!
 இதோடு வீட்டுக்குப் போனால் பிரேமாவிடம் சண்டை போடத்தான் சரியாக இருக்கும்!
 புறப்பட்டான்.
 வண்டிக்கு பெட்ரோலைப் போட்டுக்கொண்டு, வழியில் நிறுத்திப் பூவும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரும்போது மணி ஏழு!
 டீவி அலறிக்கொண்டிருந்தது.
 மகள் (12 வயது) வர்ஷா அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
 "அம்மா வந்தாச்சா வர்ஷா?"
 "சமையல் கட்டுல இருக்காங்க டாடி!"
 ஏழு வயது மகன் சசி உள்ளே அழுதபடி ஓடி வந்தான். விளையாடப் போய் விழுந்து வாரியதில் முழங்காலில் அடி!
 பிரேமா அவன் காயத்தை சுத்தம் செய்து மருந்துபோட்டாள்.வர்ஷா! டீவியை நிறுத்திட்டு போய்ப்படி! போடி!"
 "அம்மா! மெட்டி ஒலி பாத்துர்றேன்!"
 "தேவையில்லை. படிச்சு ஒழுங்கா உருப்படு! டீவி சீரியல் அப்புறமா பாக்கலாம். என்னங்க! கேபிள் கட் பண்ணுங்க!"
 "விடு பிரேமா! ஒரேடியா வறுத்தெடுக்காதே! அதுங்களுக்கும் ரிலீஃப் வேணுமில்லையா?"
 "உங்களுக்கு அண்ணாமலையும், குங்குமமும் பாக்கணும்!"
 "ஆமாம்... அப்படித்தான் வச்சுக்கோயேன். வெளில சினிமாவுக்குப் போறதை நிறுத்தி மாசக் கணக்காச்சு!"
 "தப்பில்லை! ஒரு படத்துக்குப் போனா, முந்நூறு ரூபா செலவு! டிக்கெட் விலை அம்பது ரூபா - நாலு பேருக்கு டிக்கெட். தவிர கேக், ஐஸ்க்ரீம் அது இதுன்னு புள்ளைங்க இழுத்து விடும்! நிடுத்தரக் குடும்பத்துக்கு தாங்குமா?"
 "அதனாலதான் டீவி சீரியலைப் பாக்கறோம்!"
 "சரி! சீரியல விட புள்ளைங்க படிப்பு ஒசத்தியில்லையா?"
 "சரிடி! பாக்கலை! நான் சந்தோஷப்பட்டா, ஒனக்குப் பொறுக்காது!"
 பிரேமா எழுந்தாள்.
 "சம்பளம் வந்தாச்சா?"
 "இரு தர்றேன். இப்பத்தானே உள்ளே வந்தேன்! ஓடியா போகப்போறேன்? முகத்தைக் கழுவிட்டு வர்றேன்!"
 சில நொடிகளில் முகம் கழுவி, உடைமாற்றி, நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டு வந்தான்.
 சம்பளக் கவரை அவளிடம் தந்தான்.
 எண்ணிப் பார்த்தாள்.
 "இந்த மாசம் எப்படித்தான் நான் சமாளிக்கப் போறேனோ?"
 "எல்லா மாசமும் நீ புலம்பிக்கிட்டுத்தான் இருக்கே! ராத்திரி சம்பாத்தியா?"இல்லை! மாவு தீர்ந்து போச்சு! காலைல வச்ச சோறு இருக்கு! சுட வச்சிடலாம். ரசமும் இருக்கு!"
 "சிப்ஸ் ஏதாவது இருக்கா?"
 "இங்கே ஹாட் சிப்ஸ் கடையா நடத்தறேன் நான்? அப்படியே சாப்பிடுங்க!"
 இரவு உணவு முடிந்து குழந்தைகளும் உறங்கிய பிறகு பிரேமா டயரியுடன் வந்தாள்.
 "என்னது?"
 "குடும்ப பட்ஜெட்!"
 "எங்கிட்ட வராதே! நீதான் குடும்பத் தலைவி! நான் சம்பளக் கவரோட குடுத்தாச்சு! ஆளை விடு!"
 "அப்படி நழுவ முடியுமா? விட்டுடுவேனா? இப்படி உக்காருங்க!"
 அவன் எரிச்சலுடன் உட்கார்ந்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 14, 2023
ISBN9798223783497
பல்லக்கில் ஏறு...

Read more from Devibala

Related to பல்லக்கில் ஏறு...

Related ebooks

Related categories

Reviews for பல்லக்கில் ஏறு...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பல்லக்கில் ஏறு... - Devibala

    1

    சம்பளத்தைக் கையில் வாங்கியதுமே டென்ஷனாக இருந்தது சேகருக்கு!

    ஏற்கனவே ஏகப்பட்ட பிடித்தம். பத்தாயிரத்துக்குமேல் சம்பளம் என்று பேர். பிடித்தம் போக அதில் பாதிகூட வருவதில்லை!

    பிராவிடண்ட் ஃபண்ட் லோன், சொசைட்டி லோன், பண்டிகை அட்வான்ஸ் என்று ஏராளமான ‘கட்’ போக கையில் வருவது நாலாயிரத்துச் சொச்சம்!

    அவசர செலவு குடும்பத்தில் என்று போன மாசக் கடைசியில் வாங்கிய ஆயிரம் ரூபாய் கடனும் வசூலாகிவிட்டதில்... கையில் மூவாயிரத்து முந்நூத்தி ஐம்பது ரூபாய்தான் இருந்தது!

    இதோடு வீட்டுக்குப் போனால் பிரேமாவிடம் சண்டை போடத்தான் சரியாக இருக்கும்!

    புறப்பட்டான்.

    வண்டிக்கு பெட்ரோலைப் போட்டுக்கொண்டு, வழியில் நிறுத்திப் பூவும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரும்போது மணி ஏழு!

    டீவி அலறிக்கொண்டிருந்தது.

    மகள் (12 வயது) வர்ஷா அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    அம்மா வந்தாச்சா வர்ஷா?

    சமையல் கட்டுல இருக்காங்க டாடி!

    ஏழு வயது மகன் சசி உள்ளே அழுதபடி ஓடி வந்தான். விளையாடப் போய் விழுந்து வாரியதில் முழங்காலில் அடி!

    பிரேமா அவன் காயத்தை சுத்தம் செய்து மருந்துபோட்டாள்.

    வர்ஷா! டீவியை நிறுத்திட்டு போய்ப்படி! போடி!

    அம்மா! மெட்டி ஒலி பாத்துர்றேன்!

    தேவையில்லை. படிச்சு ஒழுங்கா உருப்படு! டீவி சீரியல் அப்புறமா பாக்கலாம். என்னங்க! கேபிள் கட் பண்ணுங்க!

    விடு பிரேமா! ஒரேடியா வறுத்தெடுக்காதே! அதுங்களுக்கும் ரிலீஃப் வேணுமில்லையா?

    உங்களுக்கு அண்ணாமலையும், குங்குமமும் பாக்கணும்!

    ஆமாம்... அப்படித்தான் வச்சுக்கோயேன். வெளில சினிமாவுக்குப் போறதை நிறுத்தி மாசக் கணக்காச்சு!

    தப்பில்லை! ஒரு படத்துக்குப் போனா, முந்நூறு ரூபா செலவு! டிக்கெட் விலை அம்பது ரூபா - நாலு பேருக்கு டிக்கெட். தவிர கேக், ஐஸ்க்ரீம் அது இதுன்னு புள்ளைங்க இழுத்து விடும்! நிடுத்தரக் குடும்பத்துக்கு தாங்குமா?

    அதனாலதான் டீவி சீரியலைப் பாக்கறோம்!

    சரி! சீரியல விட புள்ளைங்க படிப்பு ஒசத்தியில்லையா?

    சரிடி! பாக்கலை! நான் சந்தோஷப்பட்டா, ஒனக்குப் பொறுக்காது!

    பிரேமா எழுந்தாள்.

    சம்பளம் வந்தாச்சா?

    இரு தர்றேன். இப்பத்தானே உள்ளே வந்தேன்! ஓடியா போகப்போறேன்? முகத்தைக் கழுவிட்டு வர்றேன்!

    சில நொடிகளில் முகம் கழுவி, உடைமாற்றி, நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டு வந்தான்.

    சம்பளக் கவரை அவளிடம் தந்தான்.

    எண்ணிப் பார்த்தாள்.

    இந்த மாசம் எப்படித்தான் நான் சமாளிக்கப் போறேனோ?

    எல்லா மாசமும் நீ புலம்பிக்கிட்டுத்தான் இருக்கே! ராத்திரி சம்பாத்தியா?

    இல்லை! மாவு தீர்ந்து போச்சு! காலைல வச்ச சோறு இருக்கு! சுட வச்சிடலாம். ரசமும் இருக்கு!

    சிப்ஸ் ஏதாவது இருக்கா?

    இங்கே ஹாட் சிப்ஸ் கடையா நடத்தறேன் நான்? அப்படியே சாப்பிடுங்க!

    இரவு உணவு முடிந்து குழந்தைகளும் உறங்கிய பிறகு பிரேமா டயரியுடன் வந்தாள்.

    என்னது?

    குடும்ப பட்ஜெட்!

    எங்கிட்ட வராதே! நீதான் குடும்பத் தலைவி! நான் சம்பளக் கவரோட குடுத்தாச்சு! ஆளை விடு!

    அப்படி நழுவ முடியுமா? விட்டுடுவேனா? இப்படி உக்காருங்க!

    அவன் எரிச்சலுடன் உட்கார்ந்தான்.

    வீட்டு லோன் நாலாயிரம் ரூபா போகுது!

    தெரியுமே! வீட்டைக் கட்டாம இருந்தா, இந்தப் பிரச்னையே இல்லை!

    வாடகையா இதுக்கு மேல குடுத்துக்கிட்டே இருப்போம். வீடும் சொந்தமில்லை! பிடிவாதம் புடிச்சு இந்த வீட்டைக் கட்டின காரணமா தப்பிச்சோம். ஒரு சொத்துனு இருக்கு! உங்கம்மா இதைத் தடுத்து நிறுத்த என்ன பாடு பட்டாங்க? நீங்களும் அவங்க கூடச் சேர்ந்துகிட்டு... அப்பப்பா! அந்த நேரத்துல நான் போராடின போராட்டம்... மறக்குமா?

    சரி விடு! பழைய கதை எதுக்கு? பட்ஜெட்டை முடி!

    நாலாயிரம் வீட்டு லோன், தவிர என்னோட ரெகுலர் பிடித்தங்கள் ரெண்டாயிரத்து ஐநூறு... மொத்தம் ஆறாயிரத்து ஐநூறு ஆச்சா? நகை, பாத்திர சீட்டுக்கள் ஆயிரம்...!

    இதையெல்லாம் நிறுத்து பிரேமா!

    எதுக்கு நிறுத்தணும்? பெண் குழந்தை இருக்கு நமக்கு. எட்டு வருஷம் திரும்பிப் பார்க்கறதுக்குள்ளே ஓடிடும். கல்யாணம் பண்ணணும். கைல அந்த நேரத்துல எதுவுமே இல்லைனா, யார் குடுப்பாங்க? நம்ம குழந்தையை நாமதான் கறையேத்தணும்! இதப்பாருங்க! எல்லாத்தையும் வேண்டாம்னுதான் நீங்க சொல்லுவீங்க! அது உங்க குடும்ப பழக்கம்!

    எதுக்கு என் குடும்பத்தை இழுக்கறே?

    சரி! நம்ம சண்டை அப்புறமா! இதுவும் சேர்த்து ஏழாயிரத்து ஐநூறு! தவிர வாங்கின கடனுக்கு வட்டி ஆயிரம்!

    என்ன கடன்?

    ரெண்டு புள்ளைங்களுக்குமா புத்தகம், யூனிஃபார்ம், ஸ்பெஷல் ஃபீஸ் எல்லாம் சேர்த்து பதினஞ்சாயிரம் ஆகியிருக்கு. பள்ளிக்கூடம் திறந்தாச்சு! அதுக்காக இருபதாயிரம் ரூபாய் வெளியில கடன் வாங்கினேன்! உங்கக்கா பொண்ணுக்குக் கல்யாணம்னு தாய்மாமன் சீர்னு அதுல அஞ்சு ரூபா காலி! மறந்து பேச்சா?

    சேகர் பேசவே இல்லை!

    "கைல எனக்கு வர்றது பத்தாயிரத்து நானூறு. அதுல எட்டாயிரத்து ஐநூறு ரூபா

    Enjoying the preview?
    Page 1 of 1