Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வேண்டாம் விளையாட்டு!
வேண்டாம் விளையாட்டு!
வேண்டாம் விளையாட்டு!
Ebook108 pages1 hour

வேண்டாம் விளையாட்டு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உனக்கு விஷயம் தெரியுமா கங்கா?"
 படித்துக் கொண்டிருந்த கங்கா நிமிர்ந்து பார்த்தாள்.
 "என்ன விஷயம்?"
 "நாலு வருஷம் முன்னால ஒரு மாணவி இதே ஹாஸ்டல்ல தூக்குப் போட்டுகிட்டாளாம்!"
 "அதனால?"
 "அவ ஆவியா இந்த ஹாஸ்டல் முழுக்க சுத்தறாளாம்! நிறையப் பேர் மிரன்டு போயிருக்காங்க!"
 ராதா தன் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
 கங்கா புத்தகத்தை படக்கென மூடினாள்.
 "இதெல்லாம் சுத்த ஹம்பக்! எனக்குத் தெரிஞ்ச ஒரே ஆவி நீராவிதான்! யாரோ சொல்லிட்டாங்களாம். இவ நம்பிட்டாளாம். அடச்சீ, வேலையைப் பாரு"
 "இல்லைடி! வந்து...!"
 "தபாரு ராதா! யுனிவர்ஸிட்டி பரீட்சைகளுக்கு முழுசா, மூணு வாரம் இல்லை! உருப்படற வழியை பாரு!"
 "ஒரு வேளை நம்ம ரூமுக்கு அந்த ஆவி வந்தா?"
 "வரச் சொல்லு! பழைய மாணவிதானே பாடத்துல எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு. க்ளியர் பண்ணிக்கலாம்!"
 ராதா வெளியே போய் விட்டாள்.
 கங்கா சின்னதாகச் சிரித்தபடி விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினாள்கங்கா பணக்காரப் பெண். ஊட்டியில் எஸ்டேட் ஓனர் மகாலிங்கத்தின் மகள். சென்னையில் இது நல்ல பெண்கள் கல்லூரி என்பதால் இங்கு ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள்.
 ராதா நடுத்தர வர்க்கம்.
 பெற்றவர்கள் இல்லை. அண்ணனுக்கு ராதா என்றால் உயிர். அவன்தான் அவளைப் படிக்க வைக்கிறான்.
 கங்காவும், ராதாவும் எம்.காம் இரண்டாவது வருடம் படிக்கிறார்கள். பி.காம் முதலாண்டிலிருந்து ஐந்து வருடங்களாகப் பழகி உயிர்த் தோழியாகிவிட்டவர்கள்.
 நேரம் இரவு எட்டு மணி.
 ராதா சுற்றிவிட்டு உள்ளே நுழைந்தாள்.
 "ராதா! நீ எங்கே போயிட்டே? மெஸ் மூடிடுவான். உனக்காக நானும் சாப்பிடாம உட்கார்ந்திருக்கேன்!"
 "படிக்க போரடிக்குது கங்கா!"
 "சர்தான்! வா பசிக்குது!"
 இருவரும் மெஸ் போய் சாப்பிட்டு விட்டு அறைக்குத் திரும்பினார்கள்.
 "நீ இப்ப படிக்கப் போறியா கங்கா?"
 "இல்லை! காலை மூணு மணிக்கு அலாரம் வச்சிட்டேன்!"
 "ஒரு ரவுண்ட் செஸ் ஆடலாமா?"
 "நத்திங் டூயிங்! இப்பப் படுத்தாத்தான் காலைல எழுந்திருக்க முடியும். படு! உருப்படற வழியைப் பாரு!"
 "அடிக்கடி இதைச் சொல்லி அறுக்கற நீ!"
 "விளக்கை அணைச்சிட்டுப் படு!"
 கங்கா படுத்து, பத்தே நிமிடங்களில் உறங்கிவிட்டாள். ராதா எரிச்சலோடு அவளைப் பார்த்தபடி படுத்தாள். எத்தனை நேரம் போனதோ தெரியவில்லை... யாரோ தன்னைத் தட்டுவதைப் போல இருந்ததுகங்கா சடாரெனக் கண்களை விழித்தாள்.
 "யாரது?"
 "நான்தான் பார்கவியோட ஆவி!"
 கரகரப்பான குரல்.
 திக்கென்றது கங்காவுக்கு.
 "எ...என்னது? ஆ...ஆவியா...?"
 "ஆவியேதான்! இந்த ஹாஸ்டல்ல தூக்குப் போட்டுக்கிட்டு செத்தவ நான் இங்கேதான் சுத்திச் சுத்தி வருவேன்!"
 கங்காவுக்கு வெளிச்சத்துக்குக் கண்கள் பழக, ஒரு கறுப்பு உருவம் சற்று தூரத்தில் நின்றது.
 தரையை பார்க்க அதன் கால்களைக் காணாமல் கொலுசு மட்டும் அந்தரத்தில் நின்றது.
 அது மிதந்து மிதந்து மெல்ல அருகில் வர, கங்காவுக்கு மூச்சை அடைத்தது. கலவரத்தோடு ராதா கட்டிலைப் பார்க்க,
 தலையோடு கால் போர்த்திக் கொண்டு ஒரு மூட்டை போல கிடந்தாள் ராதா. ஆவி நெருங்கிவிட்டது.
 "கி...கிட்ட வராதே! நான் உன்னை என்ன செஞ்சேன்? வே...வேண்டாம்!"
 "உனக்கு ஆவின்னா பயமில்லைன்னு உன் தோழிகிட்டச் சொன்னியே!"
 "இ...இல்லை! எனக்கு பயமா இருக்கு! என்னை ஒண்ணும் செஞ்சிராதே!"
 அது நெருங்கிக் கட்டிலில் உட்கார்ந்தது.
 கங்காவுக்கு வியர்த்து ஊற்ற, நாக்கு எழும்பாமல் ஒட்டிக் கொள்ள, கண்கள் பீதியில் நிலை குலைய,
 குரல் இறங்கி தீனமான ஒலி வர,
 திடீரென விளக்கு எரிந்தது. கட்டிலுக்குகடியில் இருந்த பெட் ஷிவெட்சை கை அழுத்தியது.
 கங்கா அலற வாய் திறக்க

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223004417
வேண்டாம் விளையாட்டு!

Read more from Devibala

Related to வேண்டாம் விளையாட்டு!

Related ebooks

Reviews for வேண்டாம் விளையாட்டு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வேண்டாம் விளையாட்டு! - Devibala

    1

    "உனக்கு விஷயம் தெரியுமா கங்கா?"

    படித்துக் கொண்டிருந்த கங்கா நிமிர்ந்து பார்த்தாள்.

    என்ன விஷயம்?

    நாலு வருஷம் முன்னால ஒரு மாணவி இதே ஹாஸ்டல்ல தூக்குப் போட்டுகிட்டாளாம்!

    அதனால?

    அவ ஆவியா இந்த ஹாஸ்டல் முழுக்க சுத்தறாளாம்! நிறையப் பேர் மிரன்டு போயிருக்காங்க!

    ராதா தன் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொன்னாள்.

    கங்கா புத்தகத்தை படக்கென மூடினாள்.

    இதெல்லாம் சுத்த ஹம்பக்! எனக்குத் தெரிஞ்ச ஒரே ஆவி நீராவிதான்! யாரோ சொல்லிட்டாங்களாம். இவ நம்பிட்டாளாம். அடச்சீ, வேலையைப் பாரு

    இல்லைடி! வந்து...!

    தபாரு ராதா! யுனிவர்ஸிட்டி பரீட்சைகளுக்கு முழுசா, மூணு வாரம் இல்லை! உருப்படற வழியை பாரு!

    ஒரு வேளை நம்ம ரூமுக்கு அந்த ஆவி வந்தா?

    வரச் சொல்லு! பழைய மாணவிதானே பாடத்துல எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு. க்ளியர் பண்ணிக்கலாம்!

    ராதா வெளியே போய் விட்டாள்.

    கங்கா சின்னதாகச் சிரித்தபடி விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினாள்.

    கங்கா பணக்காரப் பெண். ஊட்டியில் எஸ்டேட் ஓனர் மகாலிங்கத்தின் மகள். சென்னையில் இது நல்ல பெண்கள் கல்லூரி என்பதால் இங்கு ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள்.

    ராதா நடுத்தர வர்க்கம்.

    பெற்றவர்கள் இல்லை. அண்ணனுக்கு ராதா என்றால் உயிர். அவன்தான் அவளைப் படிக்க வைக்கிறான்.

    கங்காவும், ராதாவும் எம்.காம் இரண்டாவது வருடம் படிக்கிறார்கள். பி.காம் முதலாண்டிலிருந்து ஐந்து வருடங்களாகப் பழகி உயிர்த் தோழியாகிவிட்டவர்கள்.

    நேரம் இரவு எட்டு மணி.

    ராதா சுற்றிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

    ராதா! நீ எங்கே போயிட்டே? மெஸ் மூடிடுவான். உனக்காக நானும் சாப்பிடாம உட்கார்ந்திருக்கேன்!

    படிக்க போரடிக்குது கங்கா!

    சர்தான்! வா பசிக்குது!

    இருவரும் மெஸ் போய் சாப்பிட்டு விட்டு அறைக்குத் திரும்பினார்கள்.

    நீ இப்ப படிக்கப் போறியா கங்கா?

    இல்லை! காலை மூணு மணிக்கு அலாரம் வச்சிட்டேன்!

    ஒரு ரவுண்ட் செஸ் ஆடலாமா?

    நத்திங் டூயிங்! இப்பப் படுத்தாத்தான் காலைல எழுந்திருக்க முடியும். படு! உருப்படற வழியைப் பாரு!

    அடிக்கடி இதைச் சொல்லி அறுக்கற நீ!

    விளக்கை அணைச்சிட்டுப் படு!

    கங்கா படுத்து, பத்தே நிமிடங்களில் உறங்கிவிட்டாள். ராதா எரிச்சலோடு அவளைப் பார்த்தபடி படுத்தாள். எத்தனை நேரம் போனதோ தெரியவில்லை... யாரோ தன்னைத் தட்டுவதைப் போல இருந்தது.

    கங்கா சடாரெனக் கண்களை விழித்தாள்.

    யாரது?

    நான்தான் பார்கவியோட ஆவி!

    கரகரப்பான குரல்.

    திக்கென்றது கங்காவுக்கு.

    எ...என்னது? ஆ...ஆவியா...?

    ஆவியேதான்! இந்த ஹாஸ்டல்ல தூக்குப் போட்டுக்கிட்டு செத்தவ நான் இங்கேதான் சுத்திச் சுத்தி வருவேன்!

    கங்காவுக்கு வெளிச்சத்துக்குக் கண்கள் பழக, ஒரு கறுப்பு உருவம் சற்று தூரத்தில் நின்றது.

    தரையை பார்க்க அதன் கால்களைக் காணாமல் கொலுசு மட்டும் அந்தரத்தில் நின்றது.

    அது மிதந்து மிதந்து மெல்ல அருகில் வர, கங்காவுக்கு மூச்சை அடைத்தது. கலவரத்தோடு ராதா கட்டிலைப் பார்க்க,

    தலையோடு கால் போர்த்திக் கொண்டு ஒரு மூட்டை போல கிடந்தாள் ராதா. ஆவி நெருங்கிவிட்டது.

    கி...கிட்ட வராதே! நான் உன்னை என்ன செஞ்சேன்? வே...வேண்டாம்!

    உனக்கு ஆவின்னா பயமில்லைன்னு உன் தோழிகிட்டச் சொன்னியே!

    இ...இல்லை! எனக்கு பயமா இருக்கு! என்னை ஒண்ணும் செஞ்சிராதே!

    அது நெருங்கிக் கட்டிலில் உட்கார்ந்தது.

    கங்காவுக்கு வியர்த்து ஊற்ற, நாக்கு எழும்பாமல் ஒட்டிக் கொள்ள, கண்கள் பீதியில் நிலை குலைய,

    குரல் இறங்கி தீனமான ஒலி வர,

    திடீரென விளக்கு எரிந்தது. கட்டிலுக்குகடியில் இருந்த பெட் ஷிவெட்சை கை அழுத்தியது.

    கங்கா அலற வாய் திறக்க,

    தன் கறுப்பு அங்கியை அவிழ்த்து வீசினாள் ராதா.

    நீ...நீயா? அப்பக் கட்டில்ல...?

    வெறும் தலைகாணிகள். வீராங்கனையோட லட்சணம் பாரு லிட்டர், லிட்டரா வேர்வை. இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடியிருந்தா மயக்கம் வந்திருக்கும் உனக்கு!

    கங்காவுக்கு அவமானமாகி விட்டது.

    அது கோபமாக மாறியது.

    எனக்கு உன் விளையாட்டு பிடிக்கலை ராதா!

    ச்சீ போ! அப்புறம் ஏன் பயமில்லாத மாதிரி நடிச்சே?

    கங்கா பேசவில்லை.

    ராதா அருகில் வந்தாள்.

    ஏன் மூஞ்சியைத் தூக்கி வச்சிக்கிட்டிருக்கே? சிரிடீ

    முடியாது!

    சரி! நான் இப்ப டாக்டராம். உன் இதயத் துடிப்பை பரிசோதிப்பேனா மூச்சை நல்லா இழுத்து விடு -இப்படித்தான் ஒரு டாக்டர் பேஷண்ட்கிட்ட மூச்சு விடுங்க விடுங்கன்னு தொந்தரவு பண்ணி, தாங்க முடியாம அந்த பேஷண்ட் மூச்சை ஒரேடியா விட்டுட்டாராம்!

    கங்கா குபீரெனச் சிரித்து விட்டாள்.

    யப்பா! பொழச்சேன் நான்! இனி தூக்கத்தைவிட்ட எடத்திலேருந்து புடிக்கலாம்!

    என் தூக்கத்தைக் கெடுத்துட்டே! காலைல எழுந்து எப்படி படிப்பேன்?

    விட்றி! பத்து மார்க் குறையட்டுமே! நீ பாஸ் பண்ணி வேலைக்கா போக போறே?

    அப்படியில்லை ராதா! படிக்கறதுக்கு ஒரு அர்த்தம் வேண்டாம்?

    பாடங்களை விட்டுட்டு மனுஷங்களைப்படி! அதுதான் அவசியமான பாடம் புரியுதா?

    அறுக்காதே! ஆளை வுடு தாயே!

    கங்கா ஓடிப் போய் கட்டிலில் விழுந்தாள்.

    கங்கா!

    சொல்லித் தொலை.

    எக்ஸாம் முடிச்சிட்டு, நானும் உன் கூட உங்க எஸ்டேட் வரப்போறேன்.

    நிஜம்மாவா சொல்ற?

    ஆமாம்! அண்ணனுக்கு எழுதிட்டேன்! ரெண்டு பேரும் பிரிஞ்சு எப்ப போகப் போறமோ? ஒண்ணா இருக்க, இதை விட்டா எப்ப சந்தர்ப்பம்?

    "என்னால

    Enjoying the preview?
    Page 1 of 1