Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kodu
Kodu
Kodu
Ebook150 pages1 hour

Kodu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதில் வரும் எல்லாக் கதைகளும், பெண்ணையும், அவளது பிரச்சனைகளையும் மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கின்றன. தற்கால சூழ்நிலையை அனுசரித்து, ஒரு குடும்பத்தின் ஏற்றமும் தாழ்வும், பெண்ணின் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. புராணக் கதைகள் இரண்டு கலந்திருக்கின்றன. எல்லாருக்கும் தெரிந்த கதைகள் என்றாலும், ஒரு கதையில், உலகம் போற்றும் உத்தமி அவளறியாமல் செய்த பிழையைச் சுட்டிக்காட்டுகிறது. மற்றொரு கதை, வறுமையின் சூழ்நிலையிலும், கணவனின் உயர்ந்த கொள்கைக்கு பங்கம் ஏற்படாமல் உறுதுணையாக நின்ற துணைவியின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580132608298
Kodu

Read more from Kamala Sadagopan

Related to Kodu

Related ebooks

Reviews for Kodu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kodu - Kamala Sadagopan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கோடு

    சிறுகதைத் தொகுப்பு

    Kodu

    Sirukathai Thoguppu

    Author:

    கமலா சடகோபன்

    Kamala Sadagopan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kamala-sadagopan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. இருப்பில் இறப்பும் இறப்பில் இருப்பும்

    2. அம்மா, உனக்கு வழி தெரியல்லியா?

    3. ஜனக ராகம்

    4. துறவு

    5. பெண்ணாகப் பிறந்தால் போதும்

    6. உருகுவதெல்லாம் மெழுகுவர்த்தியல்ல!

    7. கோடு

    8. சுனச்சேபன்

    9. ஆறுதல் பரிசு

    10. தற்காப்பு

    11. மாலை மயக்கம்

    12. சுசீலையின் கனவு

    முன்னுரை

    ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தான் எழுதிய முதல் சிறுகதை அல்லது முதல் நாவல் என்ற பெருமை கடைசி வரையில் மனதில் நிலைத்து இருக்கும்.

    சிறுகதை எழுதப்பட்ட காலத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது என்பதை சிறிது விளக்கினால் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

    நடுத்தரக் குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு கல்லூரியில் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்படிப் படிப்பதும் ரொம்ப அபூர்வம். அதைப் பெரிதாக நினைத்து ஆச்சரியமாகப் பேசிக் கொள்வார்கள். பள்ளியில் இறுதி வகுப்பு முடிந்தவுடன் திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விடுவார்கள்.

    எனக்கும் அந்த மாதிரி சூழ்நிலை ஏற்பட்டது திடீரென்று கதை எழுதும் ஆசை எனக்கு ஏற்பட்டது. குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல், பேப்பர் வாங்க காசும் இல்லாத நிலையில், காலண்டர்களின் பின் பக்கம் எனக்குத் தோன்றியதை எழுதினேன். நானே எதிர்பாராதவிதத்தில் அது சிறந்த முறையில் வளர்ந்தது. நடிகையின் நெஞ்சம் என்ற தலைப்பில் ஒரு சிறுகதை வளர்ந்தது. பள்ளியில் பதிவு செய்யப்பட்ட என் உண்மைப் பெயரான தி. கமலாதேவி என்ற சொந்தப் பெயரில் எழுதினேன். பத்திரிகை பக்கங்களிலும் எழுதி, தபால் தலையும் புக்போஸ்ட்டு என்று குறிப்பிட்டு ஒட்டி அனுப்பினேன்.

    எப்படியோ போய்ச் சேர்ந்து, பிரசுரித்தும் விட்டார்கள். வெளிவந்த தேதி 7-12-56. வீட்டில் அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். பேப்பருக்கும் காசு தாராளமாகக் கிடைத்தது. ஆனால் கண்டிப்புடன் சொந்த பெயரில் எழுதக் கூடாது என்று என் அம்மா உத்தரவு போட்டு விட்டாள். ஏனெனில் கதை எழுதினால் கல்யாணம் நடக்காது என்று பயம்.

    பலன், சாரக்ராகி என்ற பெயர் வை.மு. கோதைநாயகி அம்மாள் அவர்களால் எனக்கு புனைப்பெயராக வைக்கப்பட்டு, கலைமகள், சுதேசமித்திரன், ஜெகன்மோகினி பத்திரிகைகளில் தொடர்ந்து என் சிறுகதைகள் வெளிவந்தன.

    என் திருமணத்தைத் தவிர வேறு ஒன்றும் நினைத்துப் பார்க்காத என் அம்மா ஒவ்வொரு கதை வெளிவந்த போதும் நடுங்கினாள். நான் கல்யாணத்தைக் கூட மறுத்துவிட்டு, இதில் என்னைப் புதைத்துக் கொள்ளும் அளவிற்கு ருசி கண்ட பூனையாகி விட்டேன்.

    ஆனால் துரதிருஷ்டவசமாக சிறுகதைகளைத் தொகுத்து நூலாக அமைக்க முடியும் என்ற விஷயம் அப்பொழுது எனக்குத் தோன்றவில்லை. அதை யோசனையாகக் கூறும் அனுபவம்மிக்கவர்களும், எனக்குக் கிடைக்கவில்லை.

    திரு. இராமநாதன் அவர்கள்தான் எனக்கு அறிவுறுத்தினார். கலைமகள், அமுதசுரபி, மங்கை பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளைத் திரட்டினேன். கோடு என்ற இந்த நூல் பிறந்தது.

    இதில் வரும் எல்லாக் கதைகளும், பெண்ணையும், அவளது பிரச்சனைகளையும் மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கின்றன. தற்கால சூழ்நிலையை அனுசரித்து, ஒரு குடும்பத்தின் ஏற்றமும் தாழ்வும், பெண்ணின் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. புராணக் கதைகள் இரண்டு கலந்திருக்கின்றன. எல்லாருக்கும் தெரிந்த கதைகள் என்றாலும், ஒரு கதையில், உலகம் போற்றும் உத்தமி அவளறியாமல் செய்த பிழையைச் சுட்டிக்காட்டுகிறது. மற்றொரு கதை, வறுமையின் சூழ்நிலையிலும், கணவனின் உயர்ந்த கொள்கைக்கு பங்கம் ஏற்படாமல் உறுதுணையாக நின்ற துணைவியின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.

    இலக்கிய நூல்களின் சரணாலயமாக விளங்கும் அதிபர் திரு. இராமநாதன் அவர்களுக்கும், வழக்கம்போல் எனக்கு ஆதரவு அளித்து உதவியதற்காக, என் நன்றியைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வணக்கம்.

    கமலாசடகோபன்

    1. இருப்பில் இறப்பும் இறப்பில் இருப்பும்

    உமா தவித்தாள். அவளால் உட்காரவும் முடியவில்லை. எழுந்து நடக்கவும் முடியவில்லை. இதுதான் பிரசவ வலியின் ஆரம்ப நிலையா?

    அச்சமயத்தில் ஹாலுக்கு வந்த அவளது தாய் கல்யாணி அவளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.

    என்னம்மா? என்ன செய்யறது? வலி ஆரம்பிச்சிடுத்தா?

    என்னவோ பண்றதும்மா... இது இராத்திரி வேளை. எதுவா இருந்தாலும் பொழுது விடிஞ்சு பார்த்துக்கலாம்... இது வெறும் ஃபால்ஸ் பெய்னாகக் கூட இருக்கலாம்.

    பொழுது விடியறதாவது... இது தலைச்சன் பிரசவம். முன்னாடி போறதே நல்லது. பாதி ராத்திரியிலேயே வலி அதிகமானா நான் என்னடி செய்வேன்?...

    அங்கே சுவிட்ச் போர்டில் இருந்த காலிங்பெல் சுவிட்சை அழுத்தினாள்.

    மாடியிலிருந்து அவள் கணவர் சபேசனும், பிள்ளை ஆனந்தும் பரபரப்புடன் இறங்கி வந்தார்கள்.

    ஆனந்த், உமாவுக்கு வலி எடுத்திருக்கு... ஷெட்டிலிருந்து காரை எடு. நான் நர்சிங் ஹோமுக்கு முன்னாடியே போன் பண்றேன். கல்யாணி பரபரப்புடன் போனை நெருங்கினாள்.

    சபேசன் உமாவின் அருகில் சென்று அவளது கரத்தை எடுத்து பரிவுடன் தடவினார்.

    கவலைப்படாதேம்மா... எல்லாம் நல்லபடியா முடியும்.

    அப்பா அவள் தந்தையின் முகத்தைத் தயக்கத்துடன் பார்த்தாள். அவர் புரிந்து கொண்டார்.

    புரிஞ்சுது உமா, நானே உங்க வீட்டுக்கு போன் செய்யறேன்.

    அதற்குள் நர்சிங்ஹோமுக்கு போன் செய்துவிட்டு வந்த கல்யாணி அவர் சொன்னதைக் கேட்டு விட்டாள்.

    உங்க பொண்ணு என்ன சொல்றா?

    அவ ஒண்ணும் சொல்லல்லே... நான்தான் சொல்றேன். சம்பந்திக்குத் தெரிவிக்க வேண்டாமா?

    ரொம்ப அவசியம்தான் அவள் வெறுப்புடன் கூறினாள்.

    அம்மா உமா ஆத்திரத்துடன் கத்தினாள்.

    உஷ் கல்யாணி, இது நம்ம கடமை. உமாவின் குழந்தையானாலும் அவர்களுக்குத்தான் சொந்தம். பிறக்கப் போறது அவர்களுடைய வம்ச விளக்கு...

    ஆனந்தன் காரை போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

    அப்பா, நீங்க உங்க சம்பந்திக்கு போன் செய்துட்டு வாங்க... நானும் அம்மாவும் உமாவை காரில் உட்கார்த்தி வைக்கிறோம்...

    காரில் உட்கார்ந்திருந்த உமா தந்தையின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

    சபேசன் வாசலுக்கு வந்ததும், அங்கே நின்ற வாட்ச்மேனிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு,

    காரில் ஏறி உமாவின் பக்கத்தில் உட்கார்ந்தார்.

    ஆனந்த் ஏற்கனவே டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தான்.

    கார் புறப்பட்டதும், உமா தந்தையின் முகத்தைப் பார்த்தாள்.

    அப்பா!

    உங்க மாமியார்தான் போனை எடுத்தாள். உடனே புறப்பட்டு வருவதாகச் சொன்னாள்.

    அப்படின்னா இவர் கதி!

    உங்க மாமனாரை வைச்சிட்டுதாம்மா வரா. அவளே டிரைவ் செய்துண்டு காரிலே வராம்மா...

    ஆனந்த் நக்கலாகக் கூறினான் ஆமாமா, அந்த வீட்டிலே யாருமே இல்லாமெ, உன் புருஷன் மோகனை தனியா விட்டுட்டு வந்தாலும் கவலையில்லே... அங்கே இருக்கிற எத்தனையோ அசையாத பொருள்கள் மாதிரி இவனும் அசையாமெ கட்டிலில் கிடப்பான்... நீதான், இன்னும்... அவர், அவர்னு துடிக்கிறே... அது...னு சொன்னாதான் பொருந்தும்.

    ஷட்அப் ஆனந்த், அம்மாவும் பிள்ளையுமா அவளை மாத்தி மாத்தி சித்ரவதை செய்யறீங்களே

    அவரது தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டு குரலைவிட்டு அழுத உமாவை, அவர் முதுகைத் தடவி சமாதானம் செய்தார்.

    உமாவும் மோகனும் நல்ல விதமாகத்தான் திருமணம் செய்துகொண்டனர். மிகவும் விமரிசையாக அமர்க்களமாகத்தான் அவர்களுடைய திருமணம் நடந்தது.

    ஆறுமாதங்கள் எந்தவிதமான கருத்து வேறுபாடோ, கசப்பான சம்பவங்களோ இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

    ‘இந்த ஆறு மாதங்களுக்குள் எல்லா இன்பங்களையும் அனுபவித்துக் கொள். அதற்குப் பிறகு உனக்கு எதுவுமே கிடைக்காது’... என்று கடவுள் கூறாமல் கூறி விட்டார். ஆம், அவள் விதியை மிகவும் குரூரமாக அவர் அமைத்திருந்தார்.

    உமாவுக்கு நாட்கள் தள்ளியது. மகிழ்ச்சியில் திளைத்த மோகன். ஆபீஸிலிருந்து வரும்போது ஸ்வீட்டுடன் வருவதாகவும், வெளியில் எங்காவது இருவரும் போகலாம் என்று மனைவிக்கு பெரிய ப்ரோக்ராம் ஒன்றைச் சொல்லிவிட்டு ஸ்கூட்டரில் ஆபிஸிற்குப் புறப்பட்டான்.

    உமாவிடம் பேசிய அந்த வார்த்தைகள்தான் அவன் மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தைகளாக நின்றது.

    மோகன் ஆபீஸிற்குப் போய்ச் சேரவில்லை. லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் தலையில்

    Enjoying the preview?
    Page 1 of 1