Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மந்திரப் புன்னகை
மந்திரப் புன்னகை
மந்திரப் புன்னகை
Ebook108 pages38 minutes

மந்திரப் புன்னகை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலையில் - முதலில் ஜோதி எழுந்து விட்டாள்! ரங்கநாயகி அதற்கு முன்பே எழுந்து அவளுக்கு உதவிகள் செய்தாள்!
ஜோதி குளித்து விட்டு வருவதற்குள் ரங்கநாயகி காபியுடன் தயாராக நின்றாள்.
“அய்யோ! என்ன ஆன்ட்டி நீங்க? பெரியவங்க!”
“தப்பே இல்லை! எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி நீ! காலைல என்ன சாப்பிடுவே?”
“எனக்கு இதுதான் வேணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை ஆன்ட்டி.”
“உன் அப்பா, அம்மா எங்கே இருக்காங்க?”
“ரெண்டு பேருமே இல்லை ஆன்ட்டி. எனக்கு பதினொரு வயசா இருக்கும் போது, ஒரு விபத்துல போயிட்டாங்க! அப்புறமா சித்தப்பா ஆதரவுல வளர்ந்து பி.டெக். முடிச்சு, வெளிநாட்டுக்குப் போனேன்! இப்ப ஆராய்ச்சிக்காக இங்கே வந்திருக்கேன்! ஆறுமாசம்! அது முடிஞ்சதும் திரும்பப் போயிடுவேன்! அங்கே இருந்தப்ப பாபு நண்பரானார்! பாபு எனக்கு செஞ்ச உதவிகள் கொஞ்சமில்லை! உங்க மகனைப் போல ஒருத்தரைப் பார்க்க முடியாது!”
“நீ என்ன ஜாதி?”
“பெண் ஜாதிம்மா!” சொல்லிக் கொண்டே பாபு வந்தான்!
“யாருக்கு பெஞ்சாதி?” -- அங்கு வந்த நடராஜன் ஜோக்கடிக்க, ரங்கநாயகி கடுப்பானாள்.
“ஜோதி! நீ டிபன் சாப்பிட வா! வெளில போகணுமில்லையா?”
“அம்மா! நான்தான் ஜோதியைக் கூட்டிட்டுப் போகணும்! எனக்கும் டிபன் எடுத்துவை! குளிச்சிட்டு வந்துர்றேன்! ஜோதி! அதுக்குள்ள என் ரூம்ல போய், சிஸ்டத்துல கொஞ்சம் மெயில் செக் பண்ணிடேன்!“சரி பாபு! ஆன்ட்டி! பாபுவோட ரூம் எது?”
“நீ வா ஜோதி! நானே காட்டறேன்!” - அவனே அழைத்துப் போக,
கோகிலா அம்மாவிடம் வந்தாள்!
“என்னம்மா! வீட்டுக்கு வந்து நம்மகிட்டயெல்லாம் ஒக்காந்து பேசக்கூட அவனுக்கு நேரமில்லை! அவளையே கட்டிட்டு அழறானே..! இது சரியாப்படுதா ஒனக்கு?”
“பிடிக்கலைதான்! உடனே பேசினா, பிரச்னை வரும்!”
“ஏம்மா! வேற, ஏதாவது இருக்குமா?”
“பிச்சிடுவேன்! அனாதைப் பொண்ணு! யாருமில்லை! எந்த ஜாதினு தெரியாது! குலம்,கோத்ரம், தெரியாது! பெத்தவங்களை வாரிக் குடுத்தவ! என் மருமகளாக முடியுமா! விட்ருவாளா இந்த ரங்கநாயகி?”
நடராஜன் உள்ளே வந்தார்!
“அப்படி அவன் சொன்னானா? எதுக்கு தேவையில்லாம அவன்தலையை உருட்டறீங்க?”
“இல்லைப்பா! பாபு ஒருத்தன் மட்டும்தான் அவளுக்கு நெருக்கம்னு ஆகுது!”
முகுந்தன் உள்ளே வந்தார்!
“அக்கா! நான் புறப்படறேன்!”
“என்னடா தம்பி? டிபன் சாப்பிட்டுப் போ!”
“இல்லைக்கா. வேலை நிறைய இருக்கு!”
“தம்பி! இங்கே வா! உன் முகமே சரியா இல்லை!”
“எப்படீக்கா இருக்கும்? முகம் மட்டுமில்லை... என் மனசும் சரியா இல்லை! இனிமே எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கக் கூடாது! நான் புறப்படறேன்!”நில்லுடா! என்ன பேசற நீ? இவ யாரோ! உன் பொண்ணு பூமிகாதான் என் மருமகள்! அதைக் கடவுள் வந்தாலும் மாற்ற முடியாது! புரியுதா?”
முகுந்தன் புறப்பட்டுப் போய்விட,
குளித்து விட்டு பாபு வந்தான்!
“மாமா எங்கே?”
“போயாச்சு!”
“ஏன் எங்கிட்ட சொல்லாமப் போனார்! அவங்க எல்லாருக்கும் நிறைய வாங்கிட்டு வந்திருக்கேன்! பூமிகாவுக்கு ஒரு புது ஐ- பாட் வாங்கிட்டு வந்திருக்கேன்!”
“சரி விட்ரா! மாமா வீட்டுக்குப் போய் இன்னிக்கு சாயங்காலம் குடுத்துட்டு வந்திடலாம்.”
ஜோதி வெளியே வந்தாள்!
“மெயில் பாத்துட்டேன் பாபு!”
“சரி! சாப்பிட்டு நாம கிளம்பலாம்! அப்பா! கார் இருக்கில்லையா?”
“இருக்குப்பா!”
இருவரும் சாப்பிட்டார்கள்! புறப்பட்டு விட்டார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
மந்திரப் புன்னகை

Read more from தேவிபாலா

Related to மந்திரப் புன்னகை

Related ebooks

Reviews for மந்திரப் புன்னகை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மந்திரப் புன்னகை - தேவிபாலா

    1

    ரங்கநாயகி பரபரப்பாக இருந்தாள்! ரத்த அழுத்தம் உச்சத்துக்கு ஏறியிருந்தது!

    மகள் கோகிலா இரண்டு நாட்கள் முன்பே தன் குழந்தையுடன் வந்துவிட்டாள்!

    நீ ஏம்மா இத்தனை பதட்டமா இருக்கே?

    என்னடீ இப்படி கேக்கற? ரெண்டு வருஷமா என் பிள்ளையைப் பிரிஞ்சு இருக்கேன்! நாளைக்கு வெளிநாட்லேருந்து அவன் வரப்போறான்! எப்படி இருக்கும் எனக்கு?

    சரிம்மா! அதுக்காக நீ ரொம்பப் படபடத்து அவன் வர்ற நேரத்துல ஆஸ்பத்திரியில இருக்கும்படியா வச்சுக்காதே! அப்பா பாரு! எந்தவித பதட்டமும் இல்லாம இருக்காரு!

    உங்கப்பா கல்லுளிமங்கன்!

    பாத்தியாம்மா? இத்தனை நாள் நான் தேவைப்பட்டுது! இப்ப பிள்ளை வர்றான்! என்னைக் கழட்டி விடப் பாக்கறா! உங்கம்மா சரியான கிரிமினல் கோகிலா!

    பாவம்பா! ஏன் அப்படி சொல்றீங்க?

    அப்படித்தான்மா! பிடிவாதம், நினைச்சதை சாதிக்கற குணம், டாமினேஷன் எல்லாம் சேர்ந்தவ உங்கம்மா! கிட்டத்தட்ட முப்பது வருஷமா குடித்தனம் நடத்துறேன்! எனக்குத்தான் அந்தக்கஷ்டம் தெரியும்!

    ரங்கநாயகி அருகில் வந்தாள்!

    இதப்பாருங்க! யார்கிட்ட... என்னைப் பற்றி... தப்பாப் பேசறீங்க? என் பொண்ணு கோகிலா கிட்ட! அவ ஒப்புக்குவாளா? இவளும் சரி... நாளைக்கு வரப்போற என் பிள்ளை பாபுவும் சரி.... எப்பவுமே அம்மா பக்கம்தான்! புரியுதா?

    கோகிலா சிரித்தாள்.

    ரங்கநாயகி கண்களில் கர்வமும், பெருமிதமும்!

    நடராஜன் முகம் நொடியில் கறுத்து பின் யதார்த்த நிலைக்கு வந்தது.

    நடராஜன் அரசாங்க உத்யோகம். கைநிறையக் காசு! ஓய்வு பெற இன்னும் இரண்டு வருஷங்கள் பாக்கி!

    ரங்கநாயகி அந்தக்கால பட்டதாரி! பள்ளிக்கூடத்தில் டீச்சராக இருந்து, கட்டாய ஓய்வு பெற்றவள்! அதன் பிறகு இருபது பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுத்து சம்பாத்தியம்! நல்ல சங்கீத ஞானம். பார்க்கவும் மகாலக்ஷ்மி போன்ற களை! தன்னம்பிக்கை! நடராஜனின் உறவுக்காரர்களை நெருங்கவிடாமல் செய்து விட்டாள்!

    ஆரம்பம் முதலே நடராஜன் அப்பிராணி!

    எதிர்த்துப் பழக்கமில்லாதவர்.

    நிர்வாகத் திறன் போதாது! அதனால் ஒதுங்கிவிட்டார்!

    ரங்கநாயகி, சாதுர்யமாக குடித்தனம் நடத்தி, இந்த வீட்டைக் கட்டி, பிள்ளைகளைப் படிக்க வைத்து, குடும்பத்தை நிலைநிறுத்தி விட்டாள்!

    அதனால் பிள்ளைகள் இருவருக்கும் அம்மா மேல் அபரிமிதமான மரியாதை! அம்மா செய்தால்தான் எதுவும் சரியாக இருக்கும் என்ற கணிப்பு!

    கோகிலா எம்.காம். முடித்தாள்! தனியார் வங்கியில் வேலையும் கிடைத்துவிட்டது! ஒரு வருடத்துக்குள் நல்ல வரனாக பாஸ்கர் வர, கல்யாணம் நடந்து விட்டது!

    கல்யாணம் முடிந்து ஆறே மாதத்தில் கோகிலா உண்டாகிவிட, அவளை வேலைக்குப் போக விடாமல் ரங்கநாயகி தடுத்து, ராஜினாமா செய்ய வைத்து, மகளைத் தன் கூடவே வைத்து பிரசவத்துக்குள் ஆடிய ஆட்டத்தில், பாஸ்கரின் அப்பா, அம்மா வெறுத்து, பிரச்னை பெரிதாக, ரங்கநாயகி, மகளை ஊதிவிட்டு ஊதிவிட்டு மாப்பிள்ளை மனசைக் கலைத்து, குழந்தை பிறந்த ஆறே மாதத்தில் தனிக்குடித்தனம் வரும்படி செய்து விட்டாள்!

    கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை!

    அதனால், கோகிலா வேலைக்குப் போக முடியாது!

    மகனும் வெளிநாட்டில் என்பதால், ரங்கநாயகி பெரும் பகுதி நாட்கள் கோகிலா வீட்டில்தான்!

    நடராஜனுக்கு சோத்துக்கு திண்டாட்டம்!

    மாப்பிள்ளையை பெற்றவர்களிடமிருந்து பிரித்தது நடராஜனுக்கு அறவே பிடிக்கவில்லை!

    நாசூக்காக சொல்லிக் கூடப் பார்த்தார்.

    தர்க்கம், விவாதம் - தன் பக்கத்தை நியாயப்படுத்த மற்றவர்களின் மேல் பழி...

    நடராஜன் சோர்ந்து விட்டார்!

    மாப்பிள்ளை பாஸ்கருக்கும் நடராஜனின் நிலைதான்!

    பெற்றவர்களைப் பிரிந்த ஏக்கம் ஒரு புறம்! மீற முடியாத சூழ்நிலை ஒரு புறம்.

    ஒருமாதிரி சலிப்புடன் வாழத் தொடங்கிவிட்டான்!

    குழந்தைக்கு மூன்று வயது!

    இதோ... பாபு நாளை வரப்போகிறான்! வீடே விழாக் கோலம் பூண்டிருக்க, கோகிலா பாஸ்கரையும் வரச் சொல்லி விட்டாள்!

    ரங்கநாயகிக்கு உள்ளூரில் ஒரு தம்பி உண்டு. முகுந்தன்! தனியாரில் வேலை! அவர் மனைவி மாநில அரசாங்க உத்யோகம்! ஒரே மகள் பூமிகா! பி.ஈ.படித்து முடித்து தனியாரில் பெரிய வேலை!

    ரங்கநாயகிக்கு மிகவும் ஒட்டுதலான தம்பி!

    நாளை பாபு வரப் போகிறான் என தம்பிக்கும் சொல்லிவிட, முகுந்தன் வந்து விட்டார்!

    ஜெயாவும் பூமிகாவும் வரலியாப்பா?

    இல்லைக்கா! பூமிகாவுக்கு நைட் ட்யூட்டி!

    ஒரு நாள் லீவு போடலாமே?

    சொன்னேன்! லீவு இல்லைனா!

    சரி விடு ! நாளைக்கு வரட்டும்!

    ஏம்மா! ஏர்போர்ட்டுக்கு யாரெல்லாம் போகணும்?

    நீ கைக்குழந்தைக்காரி! நடுராத்திரி பிளைட் வரும். நீ கண் முழிக்கக் கூடாது! அப்பா உனக்குத் துணையா இங்கே இருக்கட்டும்! மாப்ளையும் இருக்கார்! நானும் மாமாவும் போயிட்டு வர்றோம்!

    நடராஜன் எரிச்சலானார்!

    ரங்கம்! அவன் எனக்கும் பிள்ளைதான்!

    அதை ஏர்போர்ட்ல நிரூபிக்கணுமா! இங்கே ஒரு ராத்திரி கார்ல நாங்க வரும்போது கேட் திறந்து பொறுப்பா பாத்துக்குக்க நீங்கதான் வேணும்!

    "அதாவது... வாட்ச்மேன் வேலை...!’

    தன் வீட்டுக்கு ஒரு ஆம்பிளை எப்படி வேணும்னாலும் இருக்கலாம்.

    உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது!

    நள்ளிரவு ஒரு மணிக்கு விமானம்! செக்யூரிட்டி செக் எல்லாம் முடிந்து திரும்ப, பின்னிரவு 2 மணியாகும் என்றார்கள்!

    12 மணிக்கு வீட்டை விட்டு ரங்கநாயகியும், மாமா முகுந்தனும் புறப்பட்டு விட்டார்கள்!

    தம்பி! பூமிகா எப்பிடி இருக்கா?

    நல்லாருக்கா! ஏன்க்கா?

    பாபு வர்றான்! வந்து இங்கே செட்டில் ஆகட்டும்! கல்யாணத்தை முடிச்சிடலாம்!

    பாபு என்ன மனநிலைல வர்றானோ தெரியலியேக்கா?

    புரியலை... இதுக்கு என்ன அர்த்தம்?

    ரெண்டு வருஷம் வெளி நாட்ல இருந்திருக்கான்! அவனும் வாலிப வயசு!

    "வாயை மூடு! யாரைச் சொல்ற? என் பிள்ளை சொக்கத்தங்கம். எத்தனை வருஷங்கள் எங்கே இருந்தாலும் இந்த அம்மா விருப்பத்தை மீறி எதுவும் நடக்காது! உன் பொண்ணு பூமிகா பிறந்தப்பவே பாபுவுக்குத்தான் அவள்ன்னு நீயும்,

    Enjoying the preview?
    Page 1 of 1