Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

போர் மேகங்கள்!
போர் மேகங்கள்!
போர் மேகங்கள்!
Ebook103 pages33 minutes

போர் மேகங்கள்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"என்னங்க! நம்ம ஜோதி ஜாதகம், ஒரு பணக்கார வரனுக்கு பிரமாதமா பொருந்தியிருக்காம்!"
 ராஜப்பா திரும்பினார்.
 "அறிவிருக்கா உனக்கு?"
 "ஏன் இப்படி கேக்கறீங்க?"
 "மாப்ளை முரளி ரெடியா கைல இருக்கும்போது, எதுக்கு இன்னொரு வரன்?"
 "அதில்லீங்க!"
 "அக்காவும், நானும் முடிவெடுத்து இருபது வருஷமாச்சு! இது உனக்குத் தெரியாதா?"
 ஜோதி ஆபீசுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.
 "ரெண்டு பேருக்கும் என்ன சண்டை?"
 "விடும்மா! சில சமயம் உங்கம்மா உளறுவா! உனக்கு வரன் வருதாம். முரளி இருக்கும்போது வேற யார் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாக முடியும்?"
 ஜோதி எதுவும் பேசவில்லை!
 "டிபன் குடும்மா! டயமாச்சு!"
 "ஜோதி! நீ எதுவுமே பேசலியே?"
 "அப்பா! நீங்க பெரியவங்க! உங்க குரலுக்கு எதிர்க்குரல் எப்ப எழுப்பியிருக்கேன்?"
 அவருக்கு உற்சாகம்!

என்னங்க! ஜோதிக்கும் இருபது முடிஞ்சாச்சு! முரளியாவே இருந்தாலும் சரி, அவங்கக்கிட்ட பேசிட்டு சீக்கிரம் நாள் குறிங்க! இனிமே தள்ளிப் போடக் கூடாது! புரியுதா?"
 "சரி! இன்னிக்கே அக்கா வீட்டுக்குப் போறோம்! ஜோதி! அரை நாள் லீவு போட்டுட்டு வர்றியாடா?"
 "வேண்டாம்பா! ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு! நான் வீக் எண்ட்ல போறேன். நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க!"
 "சரிம்மா! அக்கா கூடப் பேசி, எல்லாம் சரிப்பட்டா நிச்சயம் பண்ணி டலாமா?"
 "என்னப்பா என்னைக் கேக்கறீங்க?"
 "நீ படிச்சு, பொறுப்பான ஒரு வேலைல இருக்கே! கேக்கறது என்னோட கடமை இல்லையா?"
 "நீங்க என்னை எதுவும் கேக்க வேண்டாம். முடிவே எடுத்துக்கலாம்!"
 "தேங்க்யுமா!"
 ஜோதி புறப்பட்டுப் போய்விட்டாள்.
 ஜோதி எடுத்த எடுப்பில் பன்னிரண்டாயிரம் சம்பளம் வாங்குகிறாள்.
 அதீத புத்திசாலி. ஆனால் அடக்கமாக இருப்பாள். பதட்டமே படமாட்டாள். அதிர்ந்து, அவள் பேசிக்கூட யாரும் கேட்டிருக்க முடியாது!
 வீட்டு வேலைகளை பிரமாதமாகச் செய்வாள்.
 வெல்லமாகச் சமைப்பாள்.
 தெரியாதது இல்லை! வித்யாசமான பெண்!
 சிறு வயது முதல் சொல்லிச் சொல்லி, முரளியிடம் ஒரு ஈடுபாடு உண்டு.
 பள்ளிப்படிப்பு முடியும் வரை முரளியுடன் விளையாடுவது, சண்டை போடுவது எல்லாம் இருந்தது.
 அதன்பிறகு மேல் படிப்புக்கு அவன் போனதும், எல்லாம் குறைந்துவிட்டதுஆனாலும் மனசுக்குள் அவன் அழுத்தமாகப் பதிந்துவிட்டான்! அதற்குப் பெரிய காரணம் அத்தை!
 எந்த நேரமும் அவனைப் பற்றியே ஜோதி மனதில் ஏற்றிக் கொண்டிருந்தாள்.
 ராஜப்பா, மனைவியுடன் பிற்பகல் 3 மணிக்கு அக்கா வீட்டுக்குள் நுழைந்தார்.
 சிவகாமி இருவரையும் எதிர்பார்க்கவில்லை!
 தம்பியின் வரவுக்காக எப்போதும் பூரிக்கும் சிவகாமிக்கு இப்போது தம்பி ஏன் வந்தான் என்றுகூடத் தோன்றியது!
 "அக்கா! ஒடம்பு சரியில்லையா? முகம் ரொம்ப வாடியிருக்கு?"
 "ஆகஸ்ட் மாசத்துல கூட வெயில் கொளுத்துதே! அதான்!" சமாளித்தாள்.
 "அத்தான் எப்ப வருவார்?"
 "அவர் அஞ்சரைக்கு வந்துடுவார். முரளி வர லேட்டாகும்!"
 "சரிக்கா! நான் விஷயத்துக்கு வர்றேன்!"
 "சொல்லுப்பா!"
 "முரளி - ஜோதி கல்யாணப் பேச்சை இனிமே தொடங்கலாமே!"
 சிவகாமிக்கு 'திக்'கென்றது.
 எதை அவர்கள் பேசக் கூடாது என்று நினைத்தாளோ, அதே பேச்சு வருகிறது!
 "ராஜா! அத்தான் வந்துட்ட பிறகு பேசலாமே!"
 "என்னக்கா நீ? அத்தான் இல்லாம பேசுவேனா? இதுல பேச என்ன இருக்கு? தேதி குறிக்க வேண்டியது தானே! அத்தான் வந்ததும் நல்ல நாளை அவரே தேர்ந்தெடுத்துத் தரட்டும்!"
 சிவகாமியால் உட்கார முடியவில்லை!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223692249
போர் மேகங்கள்!

Read more from Devibala

Related to போர் மேகங்கள்!

Related ebooks

Related categories

Reviews for போர் மேகங்கள்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    போர் மேகங்கள்! - Devibala

    1

    ரஞ்சனியை தான் காதலிப்பதை படக்கென போட்டு உடைத்துவிட்டான் முரளி!

    அம்மாதான் முதலில் ஆடிப் போனாள்.

    தன் தம்பி மகள் ஜோதியைத் தான் அம்மா மனதில் வைத்திருந்தாள். ஜோதி வளர்ந்ததே இங்குதான். சரி! கல்யாணப் பேச்சை எடுக்கும் நாளில் இதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தாள்.

    ஜோதி, முரளியைவிட ஏழு வயது இளையவள். இப்போதுதான் படிப்பை முடித்து ஒரு நல்ல உத்யோகத்தில் சேர்ந்திருந்தாள்.

    ஜோதி பிறந்ததுமே முரளிக்குத்தான் என்று எல்லாரும் பேசினார்கள். பத்து வயது வரை இந்தப் பேச்சு நீடித்தது! பிறகு அப்பாதான் தடை போட்டார்.

    ‘குழந்தைகள் வளரத் தொடங்கிய பிறகு இந்த மாதிரிப் பேச்சு வேண்டாம். ஆசைகளை வளர்த்துவிட்டு அவஸ்தை கூடாது! நாளைக்கு யாருக்கு யாரை தெய்வம் முடிச்சு போட்டிருக்குமோ தெரியாது’ என்றார்.

    அது சத்ய வாக்காகிவிட்டது!

    முரளி இன்ஜினியரிங் முடித்து, கணிப்பொறி சம்பந்தப்பட்ட வேறு சில படிப்புகளையும் முடிக்கும் போதே இருபத்தி நாலு வயசு!

    வெளிநாட்டுத் தொடர்புள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை! ஆறு மாதம் கழித்து அமெரிக்கப் பயணம். அங்கே ஒரு வருடம். இதோ திரும்பி வந்து ஒரு வருடம் ஆகிறது!

    சரி! இருபத்தி ஏழை கடப்பதால் கல்யாணம் பேசலாம் என அம்மா நினைத்தாள்.

    பேச்சை ஆரம்பித்தாள்.

    ரஞ்சனியை தான் காதலிப்பதை முரளி சொல்லிவிட்டான்.

    அவளும் என்ஜினியர்.

    வெளிநாட்டுக்கு வந்தவள். அங்கேயே நட்புதொடங்கி வளர்ந்து காதலாகிவிட்டது.

    இங்கு வந்த பிறகும் அது வளர்கிறது.

    ரஞ்சனியின் அக்கா கல்யாணம் முடியட்டும் என்று ரஞ்சனி காத்திருக்கிறாள்.

    அக்கா கல்யாணம் முடிவாகி விட்டது.

    அது முடிந்த பிறகு பேசலாம் என முரளி நினைக்க, அம்மா தொடங்கி விட்டாள்!

    அம்மா அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயிருந்தாள்.

    அப்பா வந்ததும் அழுதே விட்டாள்!

    ஜோதியைத்தான் கட்டிப்பான்னு நினைச்சேனே! இப்படி போட்டு உடைச்சிட்டானே!

    அப்பா பேசவில்லை!

    என் தம்பி முகத்துல எப்படி நான் முழிப்பேன்? ஜோதிக்கு நான் என்ன சமாதானம் சொல்லுவேன்?

    .......!

    நான் புலம்பிக்கிட்டே இருக்கேன். நீங்க பேசாமலே இருந்தா எப்படீங்க?

    என்ன பேசறது? அவன் வேறொரு பொண்ணை விரும்பிட்டான். வாழப் போறது அவன்தான். அவன் விருப்பம் முக்கியமில்லையா?

    என்ன பேசறீங்க? ஜோதிதான் என் மருமகள்னு நான் முடிவெடுத்திருந்தேன்!

    நிறுத்து சிவகாமி! உன் மகனைக் கேக்காம முடிவெடுக்கற உரிமையை உனக்கு யார் குடுத்தது?

    நான் அவனைப் பெத்த அம்மா!

    அதுக்காக? அவன் மடில படுத்துட்டு பால் குடிக்கற குழந்தை இல்லை! பருவம் வந்த பையன். அவன் மனசுக்குப் புடிச்சதைத்தான் தேர்ந் தெடுக்க முடியும்!

    ஜோதிகிட்ட என்ன குறை?

    நிறுத்து சிவகாமி! அவனுக்கு வேற ஒருத்தியைப் புடிச்சிருந்தா, நீ சொல்ற வளை கட்டிப்பானா? குழந்தை மாதிரி பேசறியே!

    நீங்களும் என்னைப் புரிஞ்சுகலை! உங்க மகன் பக்கம்தான் இருக்கீங்க!

    அப்பா எரிச்சலானார்.

    நீ பாட்டுக்கு பேசிட்டே போறியே! புத்தியிருந்தா யோசனை பண்ணு! குழப்பத்தை உண்டாக்காதே! நாளைக்கு அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு வாழ வரணும்! முரளி நமக்கு ஒரே மகன். நீ ஜோதியை மனசுல வச்சுகிட்டு இவளை சரியா நடத் தலைனா, போர் மேகங்கள் சூழும்! குடும்பம் யுத்த களமாகும். எல்லார் நிம்மதியும் அழியும்! தேவைதானா?

    அம்மா முகத்தில் கலக்கம்!

    குழந்தைங்க ஒரு முடிவை எடுத்துட்டா, நாம அதுக்கு தலை வணங்கறதுதான் விவேகம். இல்லைனா, கடைசி காலத்துல மிஞ்சறது கசப்புதான்!

    ......!

    முரளிகிட்ட மேற்கொண்டு பேசி, ஆக வேண்டியதைப் பார்க்கலாம்!

    அப்பா எழுந்து போய்விட்டார்.

    அம்மாவால் ஜீரணிக்க முடியவில்லை! எல்லாமே புரிந்தது. புத்தியில்லாதவள் இல்லை! ஆனால் மனசுக்குள் ஒரு கோட்டையைக் கட்டிவிட்டு, அதை மகனே வந்து இடித்து நொறுக்கும்போது, அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை!

    ‘ஜோதிக்கு நான் என்ன சொல்லுவேன்?’

    ‘இப்ப அவசரப்பட வேண்டாம்!’

    ‘நிதானமாக அவள் மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட பிறகு செயல்படலாம்!’

    2

    "என்னங்க! நம்ம ஜோதி ஜாதகம், ஒரு பணக்கார வரனுக்கு பிரமாதமா பொருந்தியிருக்காம்!"

    ராஜப்பா திரும்பினார்.

    அறிவிருக்கா உனக்கு?

    ஏன் இப்படி கேக்கறீங்க?

    மாப்ளை முரளி ரெடியா கைல இருக்கும்போது, எதுக்கு இன்னொரு வரன்?

    அதில்லீங்க!

    அக்காவும், நானும் முடிவெடுத்து இருபது வருஷமாச்சு! இது உனக்குத் தெரியாதா?

    ஜோதி ஆபீசுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    ரெண்டு பேருக்கும் என்ன சண்டை?

    விடும்மா! சில சமயம் உங்கம்மா உளறுவா! உனக்கு வரன் வருதாம். முரளி இருக்கும்போது வேற யார் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாக முடியும்?

    ஜோதி எதுவும் பேசவில்லை!

    டிபன் குடும்மா! டயமாச்சு!

    ஜோதி! நீ எதுவுமே பேசலியே?

    அப்பா! நீங்க பெரியவங்க! உங்க குரலுக்கு எதிர்க்குரல் எப்ப எழுப்பியிருக்கேன்?

    அவருக்கு உற்சாகம்!

    "என்னங்க! ஜோதிக்கும் இருபது முடிஞ்சாச்சு! முரளியாவே இருந்தாலும் சரி,

    Enjoying the preview?
    Page 1 of 1