Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மம்மி-ரம்மி!
மம்மி-ரம்மி!
மம்மி-ரம்மி!
Ebook102 pages33 minutes

மம்மி-ரம்மி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூர்த்தி பல் தேய்த்து, முகம் கழுவிக் கொண்டு சோபாவுக்கு வந்தான்!
 வனஜா எதிரே வந்து நின்றாள்.
 "உங்களை சஸ்பெண்ட் பண்ணி, வார்னிங்கும் குடுத்திருக்கறதா கேள்விப்பட்டேன்!"
 அவனிடம் பதில் இல்லை!
 "இப்பக் கூட மோசம் போகலை! உங்க சேர்மனைப் போய்ப் பாருங்க! அவர்கிட்ட மன்னிப்பு கேளுங்க! இனிமே ஒழுங்கா வேலைக்கு வர்றேன்னு உறுதி குடுங்க! நிச்சயமா நடவடிக்கை எடுக்க மாட்டாங்க!
 "எதுக்கு? அவன் கால்ல போய் நான் எதுக்கு விழணும்?"
 "என்ன பேசறீங்க! மாசம் பத்தாயிரத்துக்கு மேல சம்பளம்! அதை உதறிட்டு வரலாமா? உங்களை நம்பி ஒரு பொண்டாட்டி, பொண்ணு இருக்காங்கனு ஒரு பொறுப்பு உங்களுக்கு வர வேண்டாமா?"
 மூர்த்தி பேசவில்லை!
 "இதப்பாருங்க! உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன். நடந்ததெல் லாம் போகட்டும். இனியாவது உங்க கெட்ட பழக்கங்களை ஒழிச்சுட்டு, திருந்துங்க! வேலைக்குப் போங்க! குடும்பப் பொறுப்புகளை நீங்க ஏற்று நடத்துங்க!"
 மூர்த்தி எழுந்து விட்டான்!
 "எனக்கு நீ புத்தி-மதி சொல்ல வேண்டாம்! புரியுதா...? எனக்கு என்ன செய்ய வேணும்னு தெரியும்!"
 "இதப்பாருங்க! இத்தனை நாள் சமாளிக்கவே நான் பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை"
 மூர்த்தி பதிலே பேசாமல் போய் விட்டான்.ஒரு மாத நோட்டீஸ் கொடுத்து, வேலையில் இருந்து அவர்கள் நீக்கிவிட்டார்கள்.
 வனஜா நொந்து போனாள்.
 அவனது பணம் கொஞ்சம் இருந்தது. அதற்கான காசோலையை அவன் வாங்கிக் கொண்டு வர, கடன்காரர்கள் சூழ்ந்து விட்டார்கள்.
 மூர்த்தியால் தப்பிக்க முடிய வில்லை!
 கொடுத்தே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது.
 இல்லாவிட்டால் ஆள் வைத்து அடிப்பார்கள். மாற்றிக் கொடுத்து விட்டான்!
 குடும்பத்துக்கு எதுவும் தேற வில்லை!
 பிறகென்ன? காலையில் போனால், இரவுதான் திரும்புவான். திரும்பவும் போதை!
 ஏது பணம்?
 சாப்பாடு வாங்கித்தர யாரும் வரமாட்டார்கள்.
 இதுபோல குடிப்பழக்கம் உள்ள வர்களுக்கு இலவசமாகக் கிடைத்து விடும்!
 கெட்டுக் கொண்டிருப்பவர்களை முழுமையாகக் கெடுக்க ஒரு கூட்டமே அலைகிறதே!
 குடித்துவிட்டு வந்து ஆர்ப்பாட்டம்.
 ஒரு நாள் அம்மா வாங்கி வைத்திருந்த சம்பளக் கவரைக் காணவில்லை!
 அந்த மாதம் அம்மா பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை!
 கடன் வாங்கி, எப்படியோ சமாளித்து ஒரு விதம் சரி செய்துவிட்டாள்.
 இருக்கும் சொற்ப நகைகளையும் லாக்கரில் வைத்துவிட்டாள்.
 மூர்த்தியின் மேலிருக்கும் நம்பிக்கை குறைந்துவிட்டது வனஜாவுக்குகுடும்பத்துக்கு எந்தவிதமான உபயோகமும் இல்லாத ஒருவனை, கௌரவத்துக்காகவேண்டி தாங்கிக் கொண்டாள்.
 கிரிஜாவுக்கு முழுமையாகத் தெரிந்துவிட்டது.
 அப்பா மேல் ஒரு வெறுப்பும், கசப்பும் அழுத்தமாக படிந்துவிட்டது. அப்பாவைப் பார்த்தாலே பிடிப்ப தில்லை!
 அம்மாவிடம் கிரிஜா எதுவும் கேட்பதில்லை!
 கேட்டு அம்மாவை ஏன் நோகடிக்க வேண்டும்?
 கிரிஜா நினைவுகளிலிருந்து விடுபட்டாள்.
 "கிரிமா... நீ இன்னும் குளிக்கப் போகலை?" வனஜா குரல் கொடுத்தாள்.
 "இதோம்மா! அஞ்சு நிமிஷத்துல வந்துர்றேன்!"
 கிரிஜா பாத்ரூமுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள்!
 வனஜா தன் ஜோலியில் இருந்தாள்.
 "அம்மா! இங்கே வாயேன்!"
 "என்னடீ? எதையும் சரியா எடுத்து வச்சுக்காம என் உயிரை எடுப்பா!"
 வனஜா வந்தாள்!
 "உள்ள வாம்மா!"
 "முதுகு தேச்சு விடவா? இன்னிக்கு நீயே தேச்சுக்கோ!"
 "ப்ளீஸ் வாம்மா!"
 வனஜா உள்ளே போனாள். சில நொடிகளில் லேசான கண்கலக்கத்துடன் வெளிப்பட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223718758
மம்மி-ரம்மி!

Read more from Devibala

Related to மம்மி-ரம்மி!

Related ebooks

Reviews for மம்மி-ரம்மி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மம்மி-ரம்மி! - Devibala

    1

    காலையில் பரபரப்பாக சமையல் கட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தாள் வனஜா!

    டிபன், சாப்பாடு சகலமும் ஏழரைக்குள் தயாராக வேண்டும்!

    டப்பாவுக்கு சகலமும் மாற்றி, டேபிள் மேல் கொண்டு வந்து வைத்தாள்!

    கிரிஜா படித்துக் கொண்டிருந்தாள்.

    கிரிஜா! டயமாச்சுமா! நீ போய்க் குளி! ஸ்கூலுக்கு நேரமாயிடும்!

    யூனிட் டெஸ்ட்மா! இன்றும் ரெண்டு ஸம்தான். முடிச்சிர்றேன்.

    குளிச்சு ரெடியானப்புறம் படிம்மா! நான் ஆபீசுக்கு புறப்பட வேண்டாமா?

    சரிம்மா!

    டவல், டிரஸ் எல்லாம் பாத்ரூம்ல இருக்கு கிரிஜா!

    பதின்மூன்று வயது கிரிஜா லேசாக சோம்பல் முறித்துவிட்டு பாத்ரூமை நோக்கி நடந்தாள்.

    நடக்கும்போது பக்கவாட்டில் பார்வையைப் போட்டாள்.

    பெட்ரூமில், கட்டிலில் அப்பா கவிழ்ந்து கிடப்பது தெரிந்தது.

    அம்மா! அப்பா எப்ப வந்தார்?

    வனஜா இதற்கு பதிலே சொல்லவில்லை!

    கிரிஜாவுக்கு சமீப காலமாக எல்லாமே தெரியத் தொடங்கிவிட்டது.

    வனஜா கூடுமானவரை மகளுக்குத் தெரியக்கூடாது என்று மறைத்துத்தான் பார்த்தாள்.

    முடியவில்லை!

    கிரிஜா வளர வளர சகலத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி விட்டாள்!

    குழந்தைக்காலம் தொட்டே கிரிஜா அம்மாவுடன்தான் அதிகம் இருப்பாள். காரணம், அப்பா மூர்த்தியிடம் நெருங்கும் வாய்ப்புகூட அவளுக்குக் கிடைத்ததில்லை!

    காலை ஏழு மணிக்கு மூர்த்தி புறப்படும்போது கிரிஜா விழித்தே இருக்கமாட்டாள். மூர்த்தி வீடு திரும்பும் நேரம் கிரிஜா உறங்கியிருப்பாள்.

    ஒரே வீட்டில் இருந்தாலும் அப்பாவை கிரிஜா நேருக்கு நேர் பார்க்க பல நாட்கள் ஆகிவிடும்!

    அப்படி பார்க்கும் போதும் மூர்த்தி கிரிஜாவை மடியில் வைத்துக் கொஞ்சவோ, வெளியே அழைத்துப் போகவோ, கேட்டதை வாங்கித் தரவோ செய்ததில்லை!

    அவளிடம் பாசம் காட்டியதே இல்லை!

    அந்த நேரத்திலும் மூர்த்தியைப் பார்க்க வீட்டுக்கு நண்பர்கள் வந்துவிடுவார்கள்!

    கிரிஜாவைப் பொறுத்தவரை அப்பா என்ற ஒரு மனிதர் அந்த வீட்டில் இருக்கிறார். அவ்வளவுதான்!

    எல்லாமே அம்மாதான்!

    மற்றவர்கள், அக்கம்பக்கத்தவர், உடன் படிப்பவர்கள் அப்பாவைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போது கிரிஜாவுக்கு ஏக்கமாக இருக்கும். தனக்கு மட்டும் இது ஏன் வாய்க்கவில்லை என்று தோன்றும்.

    தாள முடியாமல் அம்மாவிடம் ஒரு நாள் வாய்விட்டே கேட்டு விட்டாள்.

    மம்மி! ஏன் அப்பா எங்கிட்ட பாசமாவே இல்லை! மற்ற எல்லா அப்பாக்களும் தன் குழந்தைகிட்ட எத்தனை பாசமா இருக்காங்க?

    வனஜாவின் கண்கள் கலங்கி விட்டன.

    மம்மி! நீ ஏன் அழற? நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா?

    வனஜாவிடம் பதில் இல்லை!

    தன் கேள்வி அம்மாவை அழ வைத்ததால், கிரிஜா அப்பா பற்றிப் பேசுவதை விட்டுவிட்டாள்!

    பாட்டி அவ்வப்போது வருவாள்.

    அப்பா ஒரே பிள்ளை... ஆனால் அத்தைகள் மூன்று பேர் உண்டு. பாட்டி பெரும்பாலும் அத்தைகளிடம் தான் இருப்பாள். பாட்டிக்கு இங்கே இருக்கப் பிடிக்காது. எப்போதாவது வந்து ஒரு மாதம் தங்கும்போது அம்மாவிடம் சண்டை போடுவாள். அம்மாவைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பாள். கிரிஜாவுக்கு பாட்டி பேசுவதே புரியாது. ஆனால் அம்மா எந்த பதிலும் சொல்லமாட் டாள்.மௌனமாக இருந்து விடுவாள்.

    பாட்டியை ஏன் அம்மா எதிர்க்கக்கூடாது என்று ஆத்திரம் கிரிஜாவுக்கு வரும்!

    தாளமுடியாமல் அதை அம்மாவிடம் ஓரிருமுறை கொட்டும்போதுகூட வனஜா சிரித்து மழுப்பி விடுவாள்.

    கிரிஜாவுக்கு பத்து முடிந்து பதினொராவது வயது நடக்கும்நேரம், ஒரு நாள் இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். கிரிஜாவுக்கு திடீரென உறக்கத்திலிருந்து விழிப்பு வந்துவிட்டது!

    ஒரே சப்தமாக இருந்தது.

    பக்கத்தில் பார்த்தால் அம்மாவைக் காணவில்லை!

    கூடத்தில் விளக்கு எரிந்தது. பேச்சு சப்தம் உச்சத்தில் இருந்தது!

    கிரிஜா மெல்ல எழுந்து வந்து கதவருகில் நின்று கொண்டாள்.

    மூர்த்தி தள்ளாடியபடி நடந்து வந்து சோபாவில் பொத்தென விழுந்தான். சற்று தள்ளி பாட்டி நின்றாள்.

    தெனமும் மூக்கு முட்டக் குடிச்சிட்டு, ராத்திரி பதினொரு மணிக்கு வர்றார். பகல் நேரத்துல சீட்டு விளையாட்டு. மத்தியானத்துக்கு மேல குதிரைப் பந்தயம். வேலைக்கே போறதில்லை! அதனால சம்பளமில்லை! என்னிக்கு வேலையை விட்டுத் துரத்துவாங்களோ தெரியாது. ஊர் முழுக்கக் கடன். கண்டவனெல்லம் வீட்டு வாசல்ல வந்து நின்னு கடனைக் கேக்கறான். அக்கம் பக்கத்துல சந்தி சிரிச்சாச்சு. நான் எத்தனைதான் மூடி வச்சாலும், ஊருக்குத் தெரிஞ்சாச்சு! நான் தனி மனுஷியா இருந்தா, எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். இப்ப ஒரு பெண் குழந்தையைப் பெத்து வச்சிருக்கேனே! அவளோட எதிர்காலம் கேள்விக்குறி ஆயிடக் கூடாதுனு எல்லாத்தையும் பொறுத்துக்கறேன்! நான் வேலைக்குப் போகலைனா, நானும் என் குழந்தையும் இப்ப பிச்சை எடுத்துக்கிட்டிருப்போம்!

    பாட்டி எதுவும் பேசவில்லை!

    எல்லாரும் நல்லபடியா வாழும்போது எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?

    அம்மா அழத் தொடங்கினாள்.

    மூர்த்தியை எதுவும் பாதிக்கவில்லை! அவன் போதையில் ஏதோ உளறிக் கொண்டிருந்தான்.

    கிரிஜாவுக்கு பலத்த அதிர்ச்சி.

    உள்ளே வந்த வனஜா, தன் மகள் அங்கு

    Enjoying the preview?
    Page 1 of 1