Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தொடாமல் நான் மலர்ந்தேன்!
தொடாமல் நான் மலர்ந்தேன்!
தொடாமல் நான் மலர்ந்தேன்!
Ebook134 pages47 minutes

தொடாமல் நான் மலர்ந்தேன்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஷூக்களுக்கு லேஸ் கட்டிக் கொண்டபின் நிமிர்ந்தான் அரவிந்தன்.
 "தம்பி! ஒரு நிமிஷம் இப்படி வா!"
 "என்னம்மா?"
 எழுந்து வந்தான்.
 "இந்த போட்டோவைப் பாரு!"
 அரவிந்தன் அம்மாவை முறைத்தான்.
 "மறுபடியும் தொடங்கிட்டியா?"
 "பாரேன்டா! பாக்கறதுல நஷ்டம் உண்டா?"
 "எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சும்மா! சாயங்காலம் வந்து நிதானமா பாத்துக்கறேன். இப்ப ஆளை விடு!"
 அப்பா பாத்ரூமிலிருந்து வெளியே வந்தார்.
 "ஒரு நிமிஷம் அதைப் பார்த்துட்டுப் போயேண்டா அர்விந்த். என்ன நஷ்டம் உனக்கு?"
 அர்விந்த் அந்த போட்டோவைக் கையில் வாங்கினான். வேண்டா வெறுப்பாகப் பார்த்தான்.
 ஒரு பெண்ணின் புகைப்படம்! எல்லோரையும் போல ஒரு பெண்! அவள் எப்படி இருக்கிறாள் என்றெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும் விருப்பம் அவனிடம் இல்லை.
 "எப்படி இருக்கா தம்பி?"
 அம்மா ஆர்வமுடன் கேட்க,
 "எனக்குப் பிடிக்கலை! இந்தா! ஆபீசுக்கு நேரமாச்சு!"அம்மாவிடம் அதைத் திணித்து விட்டு, வேகமாக நடந்தான். அவன் முதுகில் அம்மாவின் குரல்.
 "என்ன நினைச்சுகிட்டு இருக்கான் இவன்? இந்தப் பொண்ணோட ஜாதகம் பத்துப் பொருத்தமும் பொருந்தியிருக்கு. இவ நல்ல உத்யோகத்துல இருக்கா! நிறைய சீர் செனத்தி வரும். இவங்க குடும்பமும் வசதியான குடும்பம்! இவளை விட லட்சணமா இவனுக்கு இன்னொரு பொண்ணு கிடைக்குமா?"
 "நீ புலம்பறதை நிறுத்துடி! நீ புலம்பி என்ன உபயோகம்? அவன்தானே தாலி கட்டணும்?"
 "வயசு இந்த வைகாசி மாதம் முப்பத்தி மூணு! ஏன்தான் இப்படி நடந்துகறானோ? வயசான காலத்துல ஒரு பேரக் குழந்தையைக் கொஞ்ச யோகமில்லையா நமக்கு?"
 அம்மா தொடங்கிவிட்டால் நிறுத்த மாட்டாள்.
 பத்தரை மணி சுமாருக்கு சுசீலா வந்தாள். அவர்களது மூத்த மகள். ஆபீசில் இன்ஸ்பெக்ஷன் காரணமாக விடுமுறை என்பதால், அம்மாவைப் பார்க்க வந்துவிட்டாள்.
 அந்த வரனைக் கொண்டு வந்தது அவள்தான்.
 "அர்விந்த் என்னம்மா சொன்னான்?"
 "பிடிக்கலைனு சொல்லிட்டான்டி சுகி!"
 "ஏன்? கண்ணை மூடிட்டே போட்டோவை கையில வச்சிருந்தானா? என்னாச்சு இவனுக்கு?"
 "அதான் தெரியலை? யாரையாவது மனசுல வச்சிருக்கானா?"
 "நிச்சயமா இல்லைமா! என் ஸ்நேகிதி அவன் ஆபீஸ்லதானே வொர்க் பண்றா. உங்க தம்பி சரியான முசுடுங்க! யார்கிட்டேயும் பழக மாட்டார்னு சொல்றாளே!"
 "என்னடீ ஆச்சு இவனுக்கு?"
 அப்பா குறுக்கிட்டார்"அது அவன் சுபாவம்மா. வீட்ல இருக்கான். உங்கம்மா சளசளன்னு பேசுவா. நூறு வார்த்தைக்கு அரை வார்த்தை பதில் சொல்லுவான்! கையில ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வச்சிட்டு லைப்ரரி மாதிரி உட்கார்ந்துடுவான். பிறந்த முதலே தொடங்கின இந்த புத்தி இப்பவும் தொடருது!"
 "நாளைக்கு ஒருத்தி வந்து மாத்தட்டும்னு நான் பார்த்தா, பிடியே குடுக்கறதில்லைடி சுசி! வீடு எந்திரமயமா ஆயாச்சு! ஒரு கலகலப்பு, சந்தோஷம் வேண்டாமா?"
 "விடும்மா! ஞாயித்துக்கிழமை நான் வர்றேன். கொஞ்சம் உடைச்சுப் பேசலாம் அவன்கிட்ட!"
 "நாளை மறுநாள்டி ஞாயித்துக்கிழமை. அவனை சம்மதிக்க வைடி சுசி! இந்த வரனையே பாக்கலாம்!"
 "சம்மந்தி மரியாதைனு உங்கம்மாவுக்கு பட்டுப்புடவை கிடைக்கும். அதான பறக்கறா!"
 "போதுமே உங்க கிண்டல்!"
 சுசீலா சற்று நேரத்தில் புறப்பட்டு விட்டாள்.
 அர்விந்துக்கு அக்கா தங்கைகள் மூணு பேர். மூத்தவள் சுசீலா! அடுத்தவள் பத்மினி... அதன் பிறகு அர்விந்த்! கடைசியில் ஜெயந்தி! ஜெயந்தியின் கல்யாணம் போனவருஷம்தான் முடிந்தது. அவளுக்கும் அர்விந்துக்கும் ஆறு வயசு வித்யாசம். ஜெயந்திக்கு இருபத்தாறு வயதில் கல்யாணம். அப்பா மூன்று வருடங்கள் முன்பே ரிடையர்ட் ஆகி விட்டார். அர்விந்தின் வருமானம் பெரிய அளவில் குடும்பத்துக்கு அவசியமாக இருந்தது.
 நிறைய லோன்கள்... வெளியே கடன் என்று கல்யாணங்களுக்கு வாங்கிக் கொண்டேயிருந்தான்.
 இன்னும் அடைந்தபாடில்லை! பாக்கியிருக்கிறது.
 ஜெயந்தி கல்யாணம் முடியும் வரை அம்மா பேசவில்லை! அது முடிந்ததும் இவனுக்கு வரன் பார்க்கத் தொடங்கி விட்டாள்.
 அர்விந்த் பிடி கொடுப்பதே இல்லை!
 ஞாயிற்றுக்கிழமை விடிந்தது. அர்விந்த் தன் உடற்பயிற்சி, ஜாகிங் எல்லாம் முடித்துக் கொண்டு, ஒன்பது மணிக்குக் குளிக்கப் போனான் நிதானமாக

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223576310
தொடாமல் நான் மலர்ந்தேன்!

Read more from Devibala

Related to தொடாமல் நான் மலர்ந்தேன்!

Related ebooks

Reviews for தொடாமல் நான் மலர்ந்தேன்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தொடாமல் நான் மலர்ந்தேன்! - Devibala

    1

    ஷூக்களுக்கு லேஸ் கட்டிக் கொண்டபின் நிமிர்ந்தான் அரவிந்தன்.

    தம்பி! ஒரு நிமிஷம் இப்படி வா!

    என்னம்மா?

    எழுந்து வந்தான்.

    இந்த போட்டோவைப் பாரு!

    அரவிந்தன் அம்மாவை முறைத்தான்.

    மறுபடியும் தொடங்கிட்டியா?

    பாரேன்டா! பாக்கறதுல நஷ்டம் உண்டா?

    எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சும்மா! சாயங்காலம் வந்து நிதானமா பாத்துக்கறேன். இப்ப ஆளை விடு!

    அப்பா பாத்ரூமிலிருந்து வெளியே வந்தார்.

    ஒரு நிமிஷம் அதைப் பார்த்துட்டுப் போயேண்டா அர்விந்த். என்ன நஷ்டம் உனக்கு?

    அர்விந்த் அந்த போட்டோவைக் கையில் வாங்கினான். வேண்டா வெறுப்பாகப் பார்த்தான்.

    ஒரு பெண்ணின் புகைப்படம்! எல்லோரையும் போல ஒரு பெண்! அவள் எப்படி இருக்கிறாள் என்றெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும் விருப்பம் அவனிடம் இல்லை.

    எப்படி இருக்கா தம்பி?

    அம்மா ஆர்வமுடன் கேட்க,

    எனக்குப் பிடிக்கலை! இந்தா! ஆபீசுக்கு நேரமாச்சு!

    அம்மாவிடம் அதைத் திணித்து விட்டு, வேகமாக நடந்தான். அவன் முதுகில் அம்மாவின் குரல்.

    என்ன நினைச்சுகிட்டு இருக்கான் இவன்? இந்தப் பொண்ணோட ஜாதகம் பத்துப் பொருத்தமும் பொருந்தியிருக்கு. இவ நல்ல உத்யோகத்துல இருக்கா! நிறைய சீர் செனத்தி வரும். இவங்க குடும்பமும் வசதியான குடும்பம்! இவளை விட லட்சணமா இவனுக்கு இன்னொரு பொண்ணு கிடைக்குமா?

    நீ புலம்பறதை நிறுத்துடி! நீ புலம்பி என்ன உபயோகம்? அவன்தானே தாலி கட்டணும்?

    வயசு இந்த வைகாசி மாதம் முப்பத்தி மூணு! ஏன்தான் இப்படி நடந்துகறானோ? வயசான காலத்துல ஒரு பேரக் குழந்தையைக் கொஞ்ச யோகமில்லையா நமக்கு?

    அம்மா தொடங்கிவிட்டால் நிறுத்த மாட்டாள்.

    பத்தரை மணி சுமாருக்கு சுசீலா வந்தாள். அவர்களது மூத்த மகள். ஆபீசில் இன்ஸ்பெக்ஷன் காரணமாக விடுமுறை என்பதால், அம்மாவைப் பார்க்க வந்துவிட்டாள்.

    அந்த வரனைக் கொண்டு வந்தது அவள்தான்.

    அர்விந்த் என்னம்மா சொன்னான்?

    பிடிக்கலைனு சொல்லிட்டான்டி சுகி!

    ஏன்? கண்ணை மூடிட்டே போட்டோவை கையில வச்சிருந்தானா? என்னாச்சு இவனுக்கு?

    அதான் தெரியலை? யாரையாவது மனசுல வச்சிருக்கானா?

    நிச்சயமா இல்லைமா! என் ஸ்நேகிதி அவன் ஆபீஸ்லதானே வொர்க் பண்றா. உங்க தம்பி சரியான முசுடுங்க! யார்கிட்டேயும் பழக மாட்டார்னு சொல்றாளே!

    என்னடீ ஆச்சு இவனுக்கு?

    அப்பா குறுக்கிட்டார்.

    அது அவன் சுபாவம்மா. வீட்ல இருக்கான். உங்கம்மா சளசளன்னு பேசுவா. நூறு வார்த்தைக்கு அரை வார்த்தை பதில் சொல்லுவான்! கையில ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வச்சிட்டு லைப்ரரி மாதிரி உட்கார்ந்துடுவான். பிறந்த முதலே தொடங்கின இந்த புத்தி இப்பவும் தொடருது!

    நாளைக்கு ஒருத்தி வந்து மாத்தட்டும்னு நான் பார்த்தா, பிடியே குடுக்கறதில்லைடி சுசி! வீடு எந்திரமயமா ஆயாச்சு! ஒரு கலகலப்பு, சந்தோஷம் வேண்டாமா?

    விடும்மா! ஞாயித்துக்கிழமை நான் வர்றேன். கொஞ்சம் உடைச்சுப் பேசலாம் அவன்கிட்ட!

    நாளை மறுநாள்டி ஞாயித்துக்கிழமை. அவனை சம்மதிக்க வைடி சுசி! இந்த வரனையே பாக்கலாம்!

    சம்மந்தி மரியாதைனு உங்கம்மாவுக்கு பட்டுப்புடவை கிடைக்கும். அதான பறக்கறா!

    போதுமே உங்க கிண்டல்!

    சுசீலா சற்று நேரத்தில் புறப்பட்டு விட்டாள்.

    அர்விந்துக்கு அக்கா தங்கைகள் மூணு பேர். மூத்தவள் சுசீலா! அடுத்தவள் பத்மினி... அதன் பிறகு அர்விந்த்! கடைசியில் ஜெயந்தி! ஜெயந்தியின் கல்யாணம் போனவருஷம்தான் முடிந்தது. அவளுக்கும் அர்விந்துக்கும் ஆறு வயசு வித்யாசம். ஜெயந்திக்கு இருபத்தாறு வயதில் கல்யாணம். அப்பா மூன்று வருடங்கள் முன்பே ரிடையர்ட் ஆகி விட்டார். அர்விந்தின் வருமானம் பெரிய அளவில் குடும்பத்துக்கு அவசியமாக இருந்தது.

    நிறைய லோன்கள்... வெளியே கடன் என்று கல்யாணங்களுக்கு வாங்கிக் கொண்டேயிருந்தான்.

    இன்னும் அடைந்தபாடில்லை! பாக்கியிருக்கிறது.

    ஜெயந்தி கல்யாணம் முடியும் வரை அம்மா பேசவில்லை! அது முடிந்ததும் இவனுக்கு வரன் பார்க்கத் தொடங்கி விட்டாள்.

    அர்விந்த் பிடி கொடுப்பதே இல்லை!

    ஞாயிற்றுக்கிழமை விடிந்தது. அர்விந்த் தன் உடற்பயிற்சி, ஜாகிங் எல்லாம் முடித்துக் கொண்டு, ஒன்பது மணிக்குக் குளிக்கப் போனான் நிதானமாக.

    குளித்துவிட்டு வெளியே வர வாசலில் ஸ்கூட்டர் சப்தம்.

    சுசீலாவும், அவள் கணவரும்!

    வாங்க மாப்ளை! அப்பா வழியத் தொடங்கி விட்டார்.

    அம்மா கொஞ்சம் காபி குடு! அவருக்கு ஆபீஸ்ல இன்னிக்கு ஓவர் டைம் போகணும்!

    குழந்தைகளை கூட்டிட்டு வரலியா சுசி?

    அவங்க அத்தை வீட்டுக்குப் போயிருக்காங்க!

    வாங்க! அர்விந்த் வரவேற்றான்.

    எப்பக் கல்யாண சாப்பாடு போடப் போற?

    அர்விந்த் பதில் பேசாமல் சிரித்தான்.

    உன்னை ஒரு வழி பண்ணத்தான் இன்னிக்கு உங்கக்கா வந்திருக்கா காபியை குடித்து விட்டு எழுந்தார்.

    என்னங்க! சாயங்காலம் இந்த வழியால வந்து என்னை பிக்கப் பண்ணிட்டு போயிடுங்க!

    அவர் போய் விட்டார்.

    சாப்பிட்டியா சுசீலா?

    இல்லைமா!

    வா! சாப்பாடு சூடா இருக்கு! அர்விந்த்! நீயும் வாடா! மூன்று பேரும் - அப்பாவையும் சேர்த்துத்தான் - உட்கார்ந்தார்கள்.

    அர்விந்த்! இன்னிக்கு உன்னை நான் விடறதா இல்லை! ப்ரெய்ன் வாஷ் பண்ணத்தான் வந்திருக்கேன்!

    அவன் பதிலே சொல்லவில்லை!

    நான் சீரியஸா பேசறேன் அர்விந்த்! அப்பா, அம்மாவுக்கும் வயசாச்சு. எத்தனை நாள் குடும்பப் பொறுப்பை சுமக்க முடியும்? உனக்குனு ஒரு குடும்பம் வந்து நீதான் சகலமும் செய்யணும்!

    ……….!

    நீயும் குழந்தை இல்லை! உனக்கும் 33 வயசு ஆயாச்சு. இனிமேலும் தள்ளிப் போடறதுல என்ன லாபம்? சொல்லு பாக்கலாம்!

    போன வருஷம்தான் ஜெயந்தி கல்யாணம் ஆச்சு!

    அதனால?

    நான் தள்ளிப்போடலை! இத்தனை நாள் பாக்கலை! அப்பாவும், அம்மாவும் சடாரென நிமிர்ந்தார்கள்.

    நீ என்னப்பா சொல்ற?

    சின்னக்கா கல்யாணம் முடிஞ்சு ஆறு வருஷம் ஆச்சு! அப்ப எனக்கு வயசு இருபத்தேழுதான்!

    நாங்க பாக்கலைனு குற்றம் சொல்றியா? அப்பா சீறிக் கொண்டு புறப்பட்டார்.

    நான் யாரையும் குறை சொல்லலை! ஜெயந்தி எனக்குத் தங்கை! அவ கல்யாணத்தையும் முடிச்ச பின்னாலதான் எனக்குக் கல்யாணம்னு ஆயிட்டதால, முப்பத்தி மூணு வயசு ஆச்சுனு சொல்றேன்!

    வீட்ல பொண்ணை வச்சிட்டு பிள்ளைக்குக் கல்யாணம் செய்வாங்களா?

    செய்யணும்னு நான் சொல்லலைமா! நான் கேக்கவும் இல்லையே! வயசு கூடிப் போக இதுதான் காரணம்னு சொல்றேன்!

    எப்போதும் பேசாதவன் பளீரெனப் பேச அத்தனை பேரும் சன்னமாகத் தாக்கப் பட்டார்கள்.

    சுசீலா சட்டெனச் சிரித்தாள்.

    போகட்டும்! இனிமே எந்தத் தடையும் இல்லையே!

    இருக்கு அக்கா!

    நீ என்னப்பா சொல்ற?

    அப்பா ரிடையர்ட் ஆயாச்சு பென்ஷன் வருது! அதை அப்பா வீட்டுக்காக செலவழிக்கணும்னு நான் எதிர்பாக்கலை! இப்ப என் ஒருத்தன் சம்பளம்தான். நிறையக் கடன் இருக்கு! நாளைக்கே ஜெயந்திக்கு வளைகாப்பு, பிரசவம்னு வரும்! அதையெல்லாம் நான் மீட் பண்ணணும். இந்த நிலைமைல எனக்கொரு கல்யாணம் தேவையா?

    அம்மா முகம் வெளிறி விட்டது.

    "தம்பி! இப்பத்தான் உனக்குக் கல்யாணம் ரொம்ப அவசியம்! இந்த போட்டோல இருக்கற காயத்ரி உத்யோகம் பாக்கறா. ஏறத்தாழ உன் சம்பளம். அது கைக்கு வந்துட்டா,

    Enjoying the preview?
    Page 1 of 1